காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பெனசிர் புட்டோ கொல்லப்பட்டார். (http://www.kamalogam.com/new/showthread.php?t=41220)

RasaRasan 27-12-07 08:04 PM

பெனசிர் புட்டோ கொல்லப்பட்டார்.
 
ராவல்பிண்டி: பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ சென்ற பேரணியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாக் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார் .
http://www.bagthatpic.com/images/0058/SFY69905.jpg

ராவல்பிண்டி: பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ சென்ற பேரணியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாக் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார் . மேலும் அங்கு பேரணியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசி முடித்து விட்டு திரும்பிய சில மணி துளிகளில் 50 மீட்டர் தூரம் சென்ற பின்னர் பெரும் சப்தத்துடன் குண்டு வெடித்ததாக பாக்., மக்கள் கட்சி பிரமுகர் தெரிவித்தார். பரக்கத்துல்லா கூறுகையில் பெனசிர் புறப்பட்டதும் குண்டு வெடித்தது. ஆனால் அவர் தப்பி விட்டார் என நினைத்தோம் தொடர்ந்து அவர் காயமடைந்ததாக கூறப்பட்டதும் பெரும் பதட்டம் அடைந்தோம் என்றார். ராவல்பிண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது கழுத்து , மார்பு மற்றும் தலை பகுதியில் துப்பாக்கியால் சுட்ட காயம் இருந்தது. பெனசிர் இறந்ததை அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியினரும் உறுதி செய்துள்ளனர்.

பெனசிர் சுட்டு கொல்லப்பட்டதாக பாக்., டி. வி., முதலில் தெரிவித்தது. முதலில் லேசான காயம் ஏற்பட்டதாக இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் பின்னர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதே நேரத்தில் நவாஸ் ஷெரீப் பங்கேற்ற பேரணியில் சென்ற அவரது ஆதரவாளர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ சுட்டு கொல்லப்பட்ட தகவல் நாடு முழுவதும் பரவியது. துப்பாக்கியால் சுடப்பட்ட பெனசிர் உடல் ராவல்பிண்டி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலை பார்க்க முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி:தினமலர்.

பின்னர் பதிக்கப் பட்டது. - நீலக்கண்
பெனாசிர் கார் மேற்கூரை கம்பி இடித்து இறந்ததாக புது தகவல்
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007

புதியத் தகவல் இங்கே

அனு 27-12-07 08:10 PM

ஓ அப்படியா.. இதை பார்க்கும்போதுதான் விசித்தை தெரிந்துக்கொண்டேன்..
அட பாவமே இப்படி பண்ணிட்டான்களே...

rohini 27-12-07 08:11 PM

மிகவும் அநியாயம். அப்பாவை அந்தகாலத்திலே போட்டாங்க. பொண்ணை இப்பொ போட்டுட்டாங்க. என்ன ஊருடா அது

hard bang 27-12-07 08:36 PM

அவரது மரணம் பரிதாபத்திற்க்கு உரியது..

vaaliban 27-12-07 08:48 PM

அட பாவமே ! என்ன கொடுமை சார் இது ! பாவம் லண்டன்ல யாவது நிம்மதியா இருந்திருப்பாங்க அந்த அம்மா ?

இப்படி ஒரு நாட்டையே குட்டி சுவர் ஆக்கிட்டு இருக்காங்களே?

ராசராசன் உங்க செய்தி பார்த்துதான் இந்த விஷயமே தெரிஞ்சு கிட்டேன் ...... வெல் டன் !

kalpanaaS 27-12-07 08:56 PM

மறைந்த அந்த, உலகத்தின் முதல் இஸ்லாமிய பெண் பிரதம மந்திரிக்கு என் இதய அஞ்சலிகள்.

ஏற்கனவே அமெரிக்கன் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவத்தால் அடக்க முடியவில்லை. அதனால் அமெரிக்க ராணுவமே நேரடி களத்தில் இறங்கும் என இரண்டொரு தினங்களுக்கு முன் அறிக்கை விடப்பட்டது. அந்நிலையில் இப்படியொரு சம்பவம். பாகிஸ்தான் இன்னொரு இராக் தான் போங்கோ.

அண்டை நாடான நமக்கும் இதனால் தொல்லைகளே. அகதிகளாக எத்தனை அப்பாவி பாகிஸ்தான் நாட்டு மக்கள் இந்தியாவில் தஞ்சம் அடையப் போகிறார்களோ?

இரகசியன் 27-12-07 09:00 PM

இப்படியே போச்சுனா, எங்க போய் முடியுமோ?

மிகவும் துக்கமான செய்தி.

koothappan 27-12-07 09:08 PM

பாக்கிஸ்தான் என்றால் உலக அகராதியில் பாய்ஸன் என்று நிரூபித்து விட்டார்கள்.என் தாயே இறந்து விட்டதுபோல் என் இதயம் விம்மி புடைத்து விட்டது.இருந்தாலும் அவர்கள் சகோதரியை அவர்களே கொலைசெய்து விட்டார்கள்.
வாழ்க சகோதர முழக்கமும்; கலாச்சாரமும்.

ventri 27-12-07 09:19 PM

மிக துக்கமான செய்தி. பாக்கில் உள்ள தலிபான்களை வெளியேற்றிவிட்டாலே போதும். அந்த நாடு உருப்படும். மேலும், இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளை விட்டு விட்டு, அந்நாட்டு முன்னெற்றத்தில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

rose1604u 27-12-07 10:01 PM

மிகவும் வேதனையான செய்தி...

அந்த குண்டு வெடிப்புக் காட்ச்சியை டி.வியில் பார்த்த பொழுது மிகவும் வேதனைப் பட்டேன்... பெனசிர் அம்மையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி...


All times are GMT +5.5. The time now is 09:20 PM.

Powered by Kamalogam members