Quote:
நண்பர்களே, படைப்பாளிகளே ! மீண்டும் பழைய முறைப்படி.. புதிதாய் ஜனவரி '15-ல் துவங்க இருக்கும், டிசம்பர் '14-க்கான மாத சிறந்த கதைப்போட்டி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோக படைப்பாளிகள் கதைகள் பல படைத்து போட்டியை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். நன்றி. டிசம்பர் '14 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: அறிவிப்பு (டிசம்பர் 01 முதல் 31 வரை 'முடிவுற்ற' அனைத்து கதைகளுக்கான போட்டி) நீண்ட நாட்களாக... 'முடிக்கப்படாமல்' இருக்கும் கதைகளையும் அந்தந்த படைப்பாளிகள், அவ்வப்போது முடித்து வைத்து... மாத போட்டிகளில் அவைகளை இடம்பெறச் செய்யவும் கேட்டுக் கொள்கிறோம். |
மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது.
அதிலும் குறிப்பாக நன்மை பயக்கும் மற்றத்தையே தலைவர் எப்போது அறிவித்து வருகிறார். எனவே இந்த மாற்றமும் நன்மை மட்டுமே தரும் என்று நிச்சயமாக நம்புகிறேன். - ராஜ் - |
எல்லா மாதமும் எல்லா கதைகளும் ஒன்றாக வரும்போது நன்றாகவும் இருக்கும் அதே நேரத்தில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது...
புதிய மாற்றத்தை வரவேற்கிறேன்... |
நிச்சயமாக
நிச்சயமாக. ஆனால் :027:
|
வரவேற்க தக்க முடிவு
|
படித்த, படிக்காமல் தவற விட்ட, படிக்க முடியாத எல்லாக் கதைகளையும் ஒரு சேரப் போட்டியில் இணைப்பதன் மூலம், வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.
இதுவே, அதிகப்படியான அளவில் வாசகர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஒரு தூண்டுதலாகவும் அமையும். போட்டியும் களை கட்டும். முன்னரே கூறியது போல, காமக்கதை ஆசிரியர்களும், தங்கள் திறமைகளை மேலும் மெருகூட்டி, சிறந்த கதைகளை வாரி வழங்குவார்கள் என நம்பலாம். ஆகக்கூடி, எல்லா விதத்திலும் இது ஒரு சிறந்து முடிவாகவே படுகிறது -- ஆங்கிலத்தில் வின்-வின் என்று கூறுவார்களே அதுபோல. |
நிர்வாகி அவர்களின் இந்த முடிவு அவரது தொடர்ந்த கண்காணிப்பினாலும், புதிய உத்திகளைத் திறமையாகக் கையாளும் தகுதியாலும் விளைந்தது என்றே நம்புகிறேன். கண்டிப்பாக இது நமது காமலோகத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் என நம்புவதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றிக்காட்டுவது என் போன்ற வாசகர்கள் மற்றும் படைப்பாளிகளின் கடமை எனவும் உணர்கிறேன்.
Quote:
|
விதிமுறைகள் மாற்றப் படும்போது மாற்றங்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது நல்லது.
லேடஸ்ட் மாற்றம் கீழ்கண்ட திரியில் உள்ளது.. கடைசி பாராவில் http://www.kamalogam.com/new/showthread.php?t=67718 |
Quote:
|
நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் நிர்வாகத்தினர் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும்..
நிர்வாகத்தின் எண்ணமெல்லாம் தளத்தின் தரத்தை உயர்த்துவதே என்பது நன்கு தெரிகிறது.. என் போன்ற வாசகர்களுக்கு மேலும் அறுசுவை விருந்து கிடைக்க போகிறது என்பது மட்டும் உறுதி |
All times are GMT +5.5. The time now is 09:43 PM. |
Powered by Kamalogam members