காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32840)

xxxGuy 18-02-07 11:06 AM

2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம்
 
எனதருமை காமலோக நண்பர்களே.. நண்பிகளே...!

2007 மார்ச் 4-ம் தேதி 6வது பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்தில் பல மாற்றங்கள் வர உள்ளன. நமது லட்சியங்கள் நீண்டு கொண்டே போகும் போது, நாம் தொட வேண்டிய மைல் கற்களையும் தூரமாக்கி வைக்க வேண்டும். அது போல இந்த வருட லட்சியம், தரமான கருத்துக்களை அடைவதாக வைத்துள்ளேன்.

தரமான கதைகளை படைப்பதில் நமது படைப்பாளிகள் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள், இனி தரமான கருத்தில் கவனம் செலுத்த இருப்பதால், காமலோக பகுதிகளின் அனுமதிக்கு வேண்டிய கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டப் பட்டுள்ளது.

இது புதியவர்கள் பலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை தோழர்களே.. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் இருக்கிறோம். அத்துடன் நமது காமலோக படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமையும்.

அனுமதிக்கான தமிழ் பதிப்புகள்

தமிழ் வாசல்-க்கு = 20 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 10 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* கதைகள் படைத்திருந்தால் 10 தமிழ் பதிப்புகள் போதுமானது.
(கவனிக்க! கதைகளின் சராசரி அளவு: 50 வரிகள்)

காமக் கதை வாசல் = 40 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 20 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 20 தமிழ் பதிப்புகள் போதுமானது.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தீ.தகாத உறவு வாசல் = 60 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 30 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 30 தமிழ் பதிப்புகள் போதுமானது.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

வெண்கல வாசல் = 300 தமிழ் பதிப்புகள்
--* 3 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 200 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 150 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 5 கதைகள் படைத்தவர்கள் (50 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் = 1000 தமிழ் பதிப்புகள்
--* 5 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 800 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 500 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 10 கதைகள் படைத்தவர்கள் (200 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

தங்க வாசல் = 3000 தமிழ் பதிப்புகள்
--* 10 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2000 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 1500 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 20 கதைகள் படைத்தவர்கள் (500 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் வரை எளிதில் முன்னேறி விடலாம், ஆனால் தங்க வாசல் அனுமதி உங்கள் பதிவுகளை தீவிரமாய் ஆராய்ந்த பின்னரே, பங்களிப்பின் அடிப்படையில் கொடுக்கப் படுகிறது. உபயோகமான திரிகள் துவக்காதவர்களின் தங்க வாசல் அனுமதி தாமதப் படுத்தப் படும்.

நான் பழைய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளது, எங்களுடன் Nov. 2000 - Mar. 2002 வருடங்களில் நமது குழுக்களில் பங்கு கொண்டிருந்தவர்களையும், பிறகு March 2002 *- Dec. 2004 வருடங்களில் பழைய திஸ்கி மன்றத்தில் இருந்தவர்களையும் குறிக்கும்.

சிலர் மொத்தமே 5 பதிப்புகள் செய்து விட்டு அதில் 3 கதைகள் பதித்து விட்டதால் வெண்கல வாசல் அனுமதி வேண்டும் என்று விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதைகள் பதிப்பதோடு மற்றவர்கள் கதையையும் படித்து கருத்துக்கள் கூற வேண்டும் என்பதற்காக, வெண்கல வாசல் முதல் கதைகள் பதிப்பவர்களும் குறைந்த பட்சம் கருத்துக்கள் கூறயிருக்க வேண்டும் என்று பதிப்புகள் எண்ணிக்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

வெண்கல, வெள்ளி, தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் வருடம் தோறும் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகளாவது செய்தல் வேண்டும், அல்லது அவர்கள் அனுமதிகள் குறைக்கப் படும். ஏதாவது தவிர்க்க சூழ்நிலை காரணமாக பதிக்க முடியாமல் போனால், அந்த வருடம் முடிவதற்கு முன் நிர்வாகியிடம் தெரிவித்தால், பரிசீலனை செய்யப் படும்.

முன்பு பங்களித்தவர்கள் தொடர்ந்து 4 மாதங்கள் வராமல் இருந்தால் அவர்கள் கணக்கு "செயல்படா நிலை"-யில் (Inactive Mode) வைக்கப் படும். அவர்கள் நிர்வாகியிடம் தெரிவித்து அனுமதி பெற்று சென்றிருந்தால், அதே அனுமதி திருப்பி வழங்கப் படும். அல்லது ஒரு நிலை குறைவாக அனுமதி திருப்பி கொடுக்கப் படும்.

இந்த திருத்தங்கள் அனைத்தும், நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. அதை உணர்ந்து பெயரளவில் எண்ணிக்கைக்காக பதிக்காமல், மனம் திறந்து உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

சிறப்பான, தரமான கருத்துக்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள், சீனியர் உறுப்பினர்கள் உங்களுக்கு காமலோக வெகுமதி பணமான "ஐகேஷ்" அளிப்பார்கள்.

இவை அனைத்தும் மார்ச் 4-ம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றன.

உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

நன்றி..

கமல் 18-02-07 11:38 AM

நன்றி தலைவரே !

நீங்கள் கேட்டுக்க கொண்டவாறே செயல் படுகிறோம்.

இந்த அனுமதிகளை சீக்கிரம் அளித்தால் அனைவரும் பயன் பெறுவோம்.

நன்றி ! மிக்க நன்றி !!

தமிழ்உலகம் 18-02-07 12:00 PM

எமது காமலோகம் இப்பொழுது உள்ளதுபோல் எப்பொழுதும் சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் நீங்கள் கூறுவதுபோல் இப்படி சில இறுக்கங்கள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். எனவே நாங்கள் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க தரமான படைப்புகளை வழங்குகிறோம்.
வாழ்த்துக்கள்.

__DELETED USER__ 18-02-07 12:56 PM

தளம் மென்மேலும் சிறப்படைய எடுக்கப்பட்ட ஒரு தரமான, சரியான முடிவு. கதை எழுதுபவர்களை ஊக்குவிப்பது வாசகர்களின் பதில்களே என்பதை அனைவருக்கும் ஆணித்தரமாக எடுத்துரைப்பது போன்ற ஒரு முடிவு. வெறுமனே படித்துவிட்டு ஓரிரு வரிகள் கூட பதில் தராமல் செல்லும் பலர் இதன் மூலமாவது மாறினால் நல்லது தான்.

sreeram 18-02-07 12:57 PM

நமது தளம் இனிமேல் நல்ல விதமாய் இப்பொழுது இருப்பதைவிட பலமடங்கு மேம்படும் என்பது உண்மை.....

jack2006 18-02-07 03:11 PM

மேற்குறிப்பிட்டுள்ள கோட்பாடுகளை எட்டும் நோக்கத்தோடு வீருநடைபோட்டு போடுவோமாக.

Mdalif75 18-02-07 04:24 PM

கதை படிபவர்கள் அந்தக்கதை பற்றி கருத்துக்களை கூறினால் தான் கதை எழுதுபவர்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக இருக்கும் உங்களின் யோசனை சரியே

rina 18-02-07 04:45 PM

ஆக்க பூர்வமான மாற்றங்கள் நமது தலத்தை உயிர்ப்பூட்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நன்றி வாழ்த்துக்கள்.

mayakrishnan 18-02-07 04:47 PM

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்றார் கார்ல் மார்க்ஸ். மாறாமல் இருப்பவை தேங்கி கிடக்கும் சாக்கடை போல. அதுவும் இணைய உலகில் புது தொழில்நுட்ப வளர்ச்சியும் சிறந்த ஆக்கப்பூர்வமான கருத்துகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. காமலோகம் தன் வடிவத்தை மாற்றுவதும் புதுபுது கட்டுபாடுகளை புகுத்துவதும் பாராட்டுதக்கதே. அடிக்கடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிறுத்தபடுவதற்கு காரணம் பணமும் அதிக அளவிலான நிர்வாக தேவைகளே காரணம் என அறிவேன். பணக்காரர்கள் மனம் திறந்து நன்கொடை வழங்க முன் வந்தால் இன்னும் சிறப்பான காமலோகத்தை காண முடியும் என்பது என் எண்ணம்!

eluthaalan 18-02-07 05:17 PM

கதைகள் மட்டும் அல்ல, கருத்துக்களும் தான் இந்த தளத்தின் தரத்தை உயர்த்தும் என்று கூறியுள்ளது, உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு நிலை.

இந்த முடிவை எடுத்த தள தலைவர்(களுக்கு) என் பாராட்டுக்கள்.

mythili 18-02-07 05:22 PM

நல்ல முடிவு. வரவேர்கிறேன்

JM 18-02-07 05:30 PM

அப்படியென்றால் தங்கவாசலை எனக்கு இப்போது திறக்கமாட்டீர்கள்...! அதைப் பார்க்க இன்னும் எவ்வளவு நாளாகுமோ? காமலோகத்தின் வளர்ச்சிக்காக பொருத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த முடிவு மற்ற உறுப்பினர்களை சோர்வடைய வைத்துவிடக்கூடாது.

ஆதி 18-02-07 05:41 PM

Quote:

Originally Posted by JM (Post 486064)
ஆனால் இந்த முடிவு மற்ற உறுப்பினர்களை சோர்வடைய வைத்துவிடக்கூடாது.

இது ஊக்கம் கொடுக்கும் பதிப்பல்லாவா?

willykarur 18-02-07 05:42 PM

ஐயா.....
தங்கள் முடிவு மிக நன்மையே.


நம்தளத்தின்...... முத்துமணிகளே
கதைகள்தான்.
ஆனால்..... பதிவுகள் செய்து முன்னேறி
தங்கவாசல் வந்தால்..... அங்கே
கதைகள் இல்லை.

எனவே..... தங்க வாசலில் ''களஞ்சியம்''
என்னும் புதிய பகுதி துவங்கி
அதிக பாராட்டைப் பெற்ற
முழுமையாய் எழுதுப்பட்ட
நட்சத்திரக் கதைகளை....
காஞ்சனாதாசன்..... ராதிகா.....
போன்றோரின் அறிய படைப்புகளை

அங்கே சேமித்து வைத்தால்
தங்கவாசலுக்கு வரும்
உந்துசக்தியால் புதியவர்கள்
நிறைய பங்களிப்புச் செய்வர்.
இது என்னுடைய கனவு....
நிறைவேற்றுவீர்களா?

xxxGuy 18-02-07 06:32 PM

வில்லி,

நல்ல ஆலோசனை தான். உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி..

இந்த முறை வெள்ளி வாசலுக்கு உயிர் கொடுத்துள்ளோம், அடுத்த முறை தங்க வாசலுக்கு புத்துயிர் கொடுப்போம். இது பற்றிய அனைவருடைய ஆலோசனைகளும் வரவேற்க்கப் படுகின்றன. (ஆலோசனைக்கென்று இப்போது தனி பகுதியே தலை வாசல் Support Center-ல் உள்ளது, அதை பயன் படுத்தவும்.)

ஆறு வாசல்களிலும் கதைகளையே படித்து வந்தவர்கள், 7வது வாசலிலும் கதையே விரும்புவார்களா அல்லது வித்தியாசமாக விரும்புவார்களா என்று தான் காமப் படங்கள் மற்ற மசாலாக்களுக்காக தங்க வாசல் உருவாக்கப் பட்டது. தங்க வாசல் வந்தடைந்த பின் பாதி பேருடைய பங்களிப்பு மற்ற பகுதிகளிலும் குறைந்து விடுகிறது, அல்லது தூங்கி விடுகிறார்கள். அவர்களை அடுத்த மாறுதலின் போது விழிப்படையச் செய்வோம்.

Quote:

Originally Posted by willykarur (Post 486070)
ஐயா.....
தங்கள் முடிவு மிக நன்மையே.

நம்தளத்தின்...... முத்துமணிகளே
கதைகள்தான்.
ஆனால்..... பதிவுகள் செய்து முன்னேறி
தங்கவாசல் வந்தால்..... அங்கே
கதைகள் இல்லை.

எனவே..... தங்க வாசலில் ''களஞ்சியம்''
என்னும் புதிய பகுதி துவங்கி
அதிக பாராட்டைப் பெற்ற
முழுமையாய் எழுதுப்பட்ட
நட்சத்திரக் கதைகளை....
காஞ்சனாதாசன்..... ராதிகா.....
போன்றோரின் அறிய படைப்புகளை

அங்கே சேமித்து வைத்தால்
தங்கவாசலுக்கு வரும்
உந்துசக்தியால் புதியவர்கள்
நிறைய பங்களிப்புச் செய்வர்.
இது என்னுடைய கனவு....
நிறைவேற்றுவீர்களா?


mas 18-02-07 07:17 PM

தலைவரே... தங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்......

இனிமேல் காமலோகம் இன்னும் சிறாப்பாய் கதைகளை கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை....... ஆனாலும் அதிக பதிப்புகள் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வ கோளாரினால் ஒருவரி பதிப்புகள் அதிகமாக பெருகிவிடும் அபாயம் இருக்கிறது..... அதற்கும் ஒரு வழி வைத்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்....

jayvijay 18-02-07 11:50 PM

காமலோக தளத்தை மென்மேலும் சிறப்புறச்செய்ய தாங்கள் கொண்டுவரவிருக்கும் மாற்றங்களை வரவேற்கிறேன். அயராத உங்கள் உழைப்பும்,முயற்சியும் பூரண வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

rkasso 19-02-07 07:49 AM

காமலோகம் மேலும் மேலும் சிறப்பு பெற அனைத்து வழிகளிலும் உங்களுக்கு துணை நிற்போம்

sujatha 19-02-07 08:12 AM

நல்ல முடிவு..இது பல கதைகளை படைக்க உதவும்.

niceguyinindia 19-02-07 09:11 AM

புதிய மாற்றங்கள் அனைத்தும் நன்மைக்கே
தளம் மென்மேலும் சிறப்படைய இது வழி வகுக்கும்

skumar78 19-02-07 09:23 AM

தூங்கி கொண்டு இருக்கும் கழக கண்மணிகளை தட்டி எழுப்ப நல்ல முடிவு வரவேற்க தக்க முடிவு இதனால் நமது தளம் மேலும் மேலும் மெருகேரும் என்பதில் துளியும் ஐய்யமில்லை

sudu 19-02-07 09:31 AM

தர நிர்ணயம் ஒரு முக்கியமான விஷயம். அதற்கு முக்கியத்துவம் தேவைதான். அதே நேரத்தில், தூரம் அதிகம் கடக்க வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வாசலிலும் கதைகளின் வாழ்நாள் நீட்டித்தால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு, தமிழ் வாசலில் நான்கு முதல் ஆறு மாதம் வரை பழைய கதைகள் இருந்தால் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

வேண்டுதலை பரிசீலிக்கவும்

seeyes80 19-02-07 09:44 AM

தளம் தலையால் மென்மேலும் மெருகூட்டப்பட்டு வருகிறது


வாழ்த்துக்கள்

Mauran 19-02-07 09:57 AM

காமலோகத்தை.. ஒரு தரமான இணையமாக மாற்றத்துடிக்கும் நம் தலைவருக்கும் தரமான கதைகளை தரும் நம் படைப்பாளிகழுக்கும் என் வாழ்த்துக்கள்..

kamakalaingan 19-02-07 10:30 AM

தளத்தை சிறப்பாக நடத்துவதற்கு தலைவர் எடுக்கும் முயற்சிளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். எல்லாம் நமது நன்மைக்கே....

geethaanz 19-02-07 11:06 AM

உற்ச்சாகமூட்டும் அறிவிப்பு
 
இப்புதிய மாற்றங்கள் மேலும் தரமான பல கதைகளை தளத்திற்க்கு வழங்க இந்த புதிய முயற்சி உதவும்
கீத்

namsec 19-02-07 11:13 AM

கட்டளைகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு திரில் இருக்கிறது படிப்படியாக பதவிஉயர்வுகிட்டி தங்க வாசல் அனுமதி கிடைக்க பெட்றபின் உயர்பதவி அடைந்த நிம்மதி அத்துடன் ஒய்ந்து விடுகிறோம் அப்படி ஒயாமல் இருக்க இது ஒரு நல்ல வழி.

பாரட்டுக்கள் மேலும் வளர்ச்சி பெற எம்முடைய ஒத்துழைப்பு என்றும் இருக்கும்

வளர்க நம் காமலோகம்

oolvathiyar 19-02-07 11:42 AM

மாற்றம் ஒன்று மட்டுமே
என்றும் மாறாமல் இருக்கும்
அவ்வபோது குப்பைகளை கழைந்து, தரமான பதிப்பு வர
தலைவர் தலைய பிய்த்து கொள்வது எங்களுக்கு புரிகிறது
இந்த வகையில் நாம் தலைவருக்கு உதவ உறுதி எடுப்போம்
தரம் என்பதை நிர்னையிப்பது கடினம்தான்,
அது படைப்பவன், படிப்பவனை பொருத்து அமையும்
இந்த தினத்திலிருந்து நாம் எடுக்கும் ஒரு முக்கிய சபதம்
முடிந்தவரை தரமானதை தருவோம், அப்படி முடியா விட்டாலும்
தரமில்லாத குப்பைகளை பதிய மாட்டோம் என்று

sharanya 19-02-07 11:56 AM

தலைவரின் ஆணைக்கு தலைவணங்குகிறோம்

sreeram 19-02-07 12:06 PM

வில்லியார் சொன்ன யோசனை நன்றாக இருக்கிறதே....! வாழ்த்துக்கள் வில்லி,,,,

hi2chat2003 19-02-07 12:52 PM

அருமையான திட்டங்கள், தலைவர் சொலவது போல் அனைவரும் சிறந்த கதை மட்டும் இல்லாமல் தரமான விமர்சனத்தையும் கொடுத்து வெகுமதிகளை பெற வாழ்த்துகிறேன்.

இத்தகைய மாற்றங்கள் மன்றத்தை மட்டும் இல்லாமல் இங்கு பதியபடும் பதிவுகளின் தரத்தையும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை

sairaa 19-02-07 01:27 PM

நம் தலைவரின் புதிய மாற்றங்களை நாங்களும் மதித்து அதன் படி நடந்து கொள்ளுவோம் என்று நம்பிக்கையோடு குறுகின்றோம்.......

ravi2007 19-02-07 01:57 PM

உரிய வாசலுக்கு அனுமதி
 
தலைவர் அவர்களுக்கு,
இந்தத்தளத்தை கட்டுப்பாட்டுடனும், தரத்துடனும் நடத்த எடுக்கும் முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்பொழுதும் உண்டு. அதேசமயம், பழைய முறைப்படி கருத்துக்கள், கதைகள் பதித்த எங்களைப்போன்ற உறுப்பினர்களுக்கு எங்களது வேண்டுகோளைப்பரிசீலித்து உரிய வாசலுக்கு அனுமதி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மார்ச் 4 முதல் வேண்டுகோள் விடுக்கும் உறுப்பினர்களுக்கு புதிய விதிகள் அமுலுக்கு வரட்டும். உங்கள் ரவி2007

sittu 19-02-07 02:47 PM

நண்பர் வில்லியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..

தங்க வாசலில் சிறந்த கதைகள் இடம்பெற வேண்டும்.. அங்கே வெறும் படம்தான் என்ற அலுப்பு தட்டாமல் இருக்கவேண்டும்... நம் லோகத்தின் வெற்றிக்கு காரணம் கதைகள்தாம்...

நான் இப்போதும் அடிக்கடி நம் பழைய யாகூ குழும கதைகளைத்தான் படித்துக் கொண்டிருப்பேன்.. அந்த பொற்காலம் மீண்டும் திரும்பவேண்டும்.. நிறைய கதைகள்.. அந்த தரத்தில் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்./.புதிதாக எழுதுபவர்களால் இது முடியும்.. ஆனாலும்.. ஒரு கதை எழுத வேண்டுமென்ற கடைமைக்காக சிலர் சுருக்கென முடித்துவிடுகிறார்கள்... ராதிகா, இந்தியன், மனிதா, பப்பி, கா.தா, வாசுகி.. போன்றோரின் படைப்புகள்போல இன்னும் பலர் படைக்க முன்வரவேண்டும்..

வாழ்த்துக்கள்... ஆறாம் ஆண்டில் மட்டுமல்ல.. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டும் தாண்டும்!!

nita_chat2005 19-02-07 04:19 PM

நல்ல முடிவு , என் போன்ற பழைய உருப்பினர்களை மனதில் வைத்து சில சலுகைகளை தந்து இருப்பது. மகிழ்சியளிக்கிறது.

sherin_lv 19-02-07 05:29 PM

உங்களின் புதிய அனுகு முறைகளை வரவேற்கிறேன். அதே சமயத்தில் என்னுடைய பதிப்புகள் கணக்கு குறைவாகக் காட்டுகிறது. காரணம் புரியவில்லை. புரிய வைப்பீர்களா தயவுசெய்து.

raveen72 19-02-07 05:47 PM

சரி தலைவா
தலைவர் சொன்னா மறு பேச்சு கிடையாது

kalpanaaS 19-02-07 06:59 PM

இணையத்தில் நான் கண்ட தளங்களிலேயே மிகவும் சிறப்பாய் நீண்ட காலமாய், இலவசமாய், தரமானதாய், மிகவும் எளிதாய் இருக்கும் ஒரே தளம் நமது காமலோகமாகத் தான் இருக்கிறது.

இது குறித்து இதன் உறுப்பினர்களாகிய நாம் பெருமைக் கொள்வோம். தளத்தை மேலும் சிறப்பாக நடத்த புதுப்புது விதிகளையும், நடத்தைகளையும் அவ்வப்போது கொடுத்து வரும் நிர்வாகி அவர்களுக்கும், அவருக்கு துணையாக இருக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தளம் மேலும் சிறப்பாய் பல்லாண்டுகள் வாழ எனது வாழ்த்துகள்.

xxxGuy 19-02-07 08:46 PM

Quote:

Originally Posted by sherin_lv (Post 486785)
உங்களின் புதிய அனுகு முறைகளை வரவேற்கிறேன். அதே சமயத்தில் என்னுடைய பதிப்புகள் கணக்கு குறைவாகக் காட்டுகிறது. காரணம் புரியவில்லை. புரிய வைப்பீர்களா தயவுசெய்து.

http://www.kamalogam.com/new/showthread.php?t=32638

உங்களைப் போன்றவர்களை புரிய வைக்கத் தான் இந்த திரியை இங்கே அறிவிப்பு பகுதியில் கொடுத்துள்ளேன்.
அதை பார்க்காமல் விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

bsrkumar 19-02-07 09:16 PM

சரியான தீர்வு.நல்ல கருத்து காமத்தின் நல்ல மருந்து.அனைவரும் பின்பற்லாம்.நல்ல கருத்துக்களை பதிக்கவும் நண்பர்களே.

cembi 20-02-07 05:54 AM

உங்கள் புது விதிமுறைகள் சிறிது கடினமானவை
ஆனால் தளத்தின் தரத்தை கூட்டும்படியானவை

நன்றி

hanifa 20-02-07 11:47 AM

காமலோகத்தில் ஒரு விதிமுறை வந்தால் அது சரியனடாகவே இருக்கும், எல்லாம் லோகத்தின் தரம் உயர்வதற்கே

VIJAY_YAJIV 20-02-07 12:24 PM

தரம் உயர மாற்றம் கண்டிப்பாக தேவை என்பதில் சந்தேகமே இல்லை
ஏனென்றால் இது நமது காமலோகத்தின் வளர்ச்சிக்கு நன்மை
அதே நேரதில் இன்னும் வாசல்களை அடைய எவ்வளவு தூரம் செல்ல வெண்டும் என்பதை நினைத்தால் மலைப்பாக இருகிறது

ஆனால்
தலைவர் சொன்னது போல்
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை

msvasan 20-02-07 12:33 PM

நல்ல முயற்ச்சி இது அனைவருக்கும் ஊக்கப்படுத்துவது இது தான்

gam2312 20-02-07 03:02 PM

வெங்கல வாசலுக்கு300-ம், வெள்ளி வாசலுக்கு 1000-ம், தங்க வாசலுக்கு 2000-ம் என்று நிர்ணயத்துள்ளீர்கள். அதை முறையெ 300,750,1500 என்று மாற்ற முடியுமா என பாருங்கள். ஏன் எனில் இப்பொது நிர்ணயக்கப்பட்ட இடை வெளி அதிகமாக உள்ளது.

XXXGirl 20-02-07 03:33 PM

நல்ல திட்டம் தான்..... தலைவருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

Narayan 20-02-07 03:46 PM

தலைவர் சுட்டிக்காட்டியிருக்கும் விதி முறைகள் எல்லோருமே கடை பிடிக்க முடிய கூடியது தான். தங்க வாசலுக்கு அனுமதி பெற்றவர்கள் ஆண்டுக்கு பத்து படைப்பு கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு சிறு சந்தேகம் இருக்கிறது. குறைந்த பட்சம் நான்கு பாகங்கள் கொண்ட மூன்று கதைகள் தளத்தில் பதித்தால் விதி முறைக்குள் வருமா.

அடியேன் கடந்த பல மாதங்களாக ஒரு கதை கூட பதிக்கவில்லை. எழுத ஆசை இல்லாமல் அல்ல சைய்யும் பணியை செவ்வன உருவாக்க அலுவலக பிடுங்கல் தடை சைய்வதால் இந்த துர்பாக்கியகரமான நிலை. இருந்தாலும் நம் அருமையான தளத்தில் வந்ததில் இருந்து கிடைக்கும் சந்தோஷம் வீண் போகாமல் தடுக்கவும் கிடைத்த அந்தஸ்தை காப்பாற்றவும் கண்டிப்பாக ம்யற்ச்சிப்பேன். வணக்கம்

நாரா

udhayasuriyan 20-02-07 06:19 PM

முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

ஆனால் நாங்கள் தங்க வாசலை அடைய இன்னும் ரொம்ப காலம் கடக்க வேண்டுமோ...

இணைய தள மைய கட்டணம் எகிறுதுங்கோ...

தலைவா.. கரிசனம் கிடையாதா...என் மேல்..????

வாழ்க தமிழ்

realman 20-02-07 07:07 PM

நிச்சயம் வெல்வோம்

soosi4002 20-02-07 08:02 PM

என்ன தலைவரே!
இப்படி பண்ணீட்டீங்களே?
6-வது பிறந்த நாளுக்கு பரிசளிப்பீர்களென்று பார்த்தால், அதிர்ச்சியளித்து விட்டீர்களே?
இருந்தாலும் நமது காமலோக உறுப்பினர்கள் அனைவரும் (நான் உட்பட) சளைத்தவர்கள் அல்ல. தொடர்ந்து பட்டையை கிளப்புவார்கள், அவ்வப்போது சிறு இடைவெளி விட்டாலும்.

புதிய விதிமுறைகளை வரவேற்கிறேன்.

mims 21-02-07 10:15 PM

நமது காமலோகம்...
பலாச்சுலை : பலா முள்ளுக் குத்தி... கஷ்டப்பட்டால் தான் பலாச் சுலையை சுவைக்க முடியும்...
ரோஜாப் பூ : ரோஜாச் செடியில் உள்ள முள்ளுக்கு அஞ்சினால் ரோஜாவைப் பறிக்க முடியாது...

என்றும் பெறுமதி வாய்ந்தவை சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை...

தலைவரின் எந்த விதமான முடிவையும் ஏற்கத் தயராக இருக்கிறோம்.

taninbaa 21-02-07 10:32 PM

நெருக்கிட்டீங்க தலைவா. நொறுங்கி பொயிட்டோம்.

kadalkanni 21-02-07 11:17 PM

நல்ல தரமான நிலைக்கு காமலோகத்தை உயர்த்த தலைவர் அவர்கள் எடுத்த முடிவுக்கு சிரம் தாழ்த்துகிறேன்...புதியவர்களுக்கு இது சிறு சுமையாக இருந்தாலும் காமலோகம் இதனால் மேன்மேலும் வளரும் என்பதால் இதை இன்பச்சுமையாக கருதுகிறேன்....

fifa 22-02-07 12:26 AM

தலைவர் அவர்கள் ஒவ்வொரு முறை சீர்திருத்தங்கள் செய்யும் போதும் நமது தளத்தின் மெருகு கோடிக்கொண்டே தான் வந்துள்ளது. அது போலவே இம்முறையும் இம்மாற்றங்கள் நமது தள உறுப்பினர்களை இன்னும் சிறப்பாக செயல்படவைக்கும் என்பதில் ஐயமில்லை.

keith 22-02-07 04:23 AM

தளத்தை மேன்படுத்த தலைவர் எடுத்த முடிவு சரிதான். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு விண்ணப்பம் இங்கே வைக்கலாமா? நான் 2003லிருந்து உறுப்பினர் 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் செய்திருந்தேன், ஆனால் சமீபத்தில் சடாரென குறைக்கப்பட்டு விட்டன, காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள எழுதினேன் பதிலில்லை. தலைவர் தயவு செய்து நான் என்ன செய்தேன் இவைகள் குறைக்கப்பட்டுவிட்டன என் தெரிவித்தால் சந்தேகங்கள் தீரும். நன்றிகள் பல.
கீத்

maran 22-02-07 05:57 AM

காமலோகத்தின் தலைமைக்குழுவால் எடுக்கப்படும் எந்த மாற்றங்களும், தளத்தை தரப்படுத்துவதற்காகவும் அதில் பங்குபற்றுபர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவருபையாகவும் இருக்கும். முன்பு பல மாற்றங்கள் செய்யப்பட்டபோது எவ்வாறு ஒத்துழைத்தோமோ அதேபோன்று இனிவருங்காலங்களிலும் நாம் செயற்படுவோம்.
நன்றி
அன்புடன் மாறன்

காமாசாமா 22-02-07 07:24 AM

ஹூம்ம் இன்னும் கொஞ்சம் நாளில் தங்க வாசல் சென்று சொர்ணமால்யா மற்றும் பலரை பார்க்கலாம்னு இருந்தேன் இப்படி சொல்லிப்புட்டீங்களே... கொஞ்சம் ஏமாற்றமா தான் இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை.

anbu1973 22-02-07 07:32 AM

ஐயா! நல்ல மாறுதல்கள். ஆனால் என்னை போன்ற புதியவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். ஆனால் காமலோக உறுப்பினனாகிய பிறகு இதற்கு நான் சலைக்க மாட்டேன். வெகு நாள் தேடலுக்கு பிறகு தான் இந்த நல்ல தமிழ் தளத்தை நான் கண்டுபிடித்துள்ளேன். எனவே நான் என் போன்ற இளைய மெம்பர்களின் சார்பில் எங்கள் பதிப்புகளின் எண்ணிக்கையும் தரத்தையும் கூட்டுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

sirikki 22-02-07 10:36 AM

நிர்வாகி அவர்களே!
பழைய உறுப்பினர், புதிய உறுப்பினர் என்று குறிப்பிட்டு உள்ளீர்களே!

அதற்கு என்ன அளவு கோல் வைத்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?

என்ன திகதிக்கு முன்னர் இணைந்தவர்கள் பழையவர்கள் அப்படி ஏதாவது?

selvenselvi 22-02-07 12:45 PM

ஒவ்வொரு முறையும் புதிய புதிய விதிமுறைகளையும், வசதிகளையும் அறிமுகப் படுத்தி எங்களை அசத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.

monkeyman 22-02-07 01:04 PM

கதை படிபவர்கள் அந்தக்கதை பற்றி கருத்துக்களை கூறினால் தான் கதை எழுதுபவர்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக இருக்கும் உங்களின் யோசனை சரியே

redblack 23-02-07 10:07 AM

என்னோடு தளத்தில் நுழைந்த அரசனோ மிக குறுகிய காலத்தில் தங்க வாசலை எட்டி இப்பொழுது காணாமலே போய் விட்டார். அவருக்கு கிடைத்த அதிருஸ்டம் என்றாவது கிடைக்கும் என நம்பி இருந்த வேளையில் இந்த அறிவிப்பு தங்க கனவாகி விட்டது. எப்பொழுது இன்னும் 10 கதைகள் எழுதுவது அல்லது 2000 பதிப்புகளை பதிப்பது. அதற்க்குள் துபாய் மெட்ரோ புராஜெக்டே முடிந்துவிடும் போல இருக்கிறதே! (2010).

m_thirunathan 23-02-07 09:56 PM

தலைவர் அவர்களே எனக்கு தமிழ் வாசலுக்கு
அனுமதி வழங்குமாறு தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்...................

r2r2r2 23-02-07 10:25 PM

தங்கள் உத்த்ரவு தலைவரே

ravizapper 23-02-07 10:27 PM

தங்க வாசல்லுகான தகுதியும் தங்கத்தின் விலை போல உயர்ந்துவிட்டது

rajamuthu123 24-02-07 12:04 AM

:lol:

noyesmall 24-02-07 12:19 AM

தொடரும் சீர்திருத்தங்கள் தளம் மேன்மையுற வழிகாட்டுகின்றன. வழிகாட்டுதல்களை உறுதியாக பின்பற்றி பயன்பெற தயாராக இருக்கிறோம். எல்லாம் எங்கள் நன்மைக்குத்தானே. தலைவருக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை.

xxxGuy 24-02-07 12:28 PM

Quote:

Originally Posted by keith (Post 488307)
சமீபத்தில் சடாரென குறைக்கப்பட்டு விட்டன, காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள எழுதினேன் பதிலில்லை. தலைவர் தயவு செய்து நான் என்ன செய்தேன் இவைகள் குறைக்கப்பட்டுவிட்டன என் தெரிவித்தால் சந்தேகங்கள் தீரும். நன்றிகள் பல.
கீத்

இதுபற்றி எனக்கு எழுத வேண்டிய அவசியமே இல்லை. இங்குள்ள அட்மின் அறிவிப்புகளை தவறாமல் படித்து, அதன்படி நடந்து கொண்டாலே போதும்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=32638

புதிய உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய, பழைய உறுப்பினர்களே அறிவிப்புகளை படிக்காமல் இப்படி கேள்விகள் கேட்டால், புதிய உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள்?

suja19 25-02-07 08:34 AM

மேலும் மேலும் சிறப்பு பெற அனைத்து வழிகளிலும் உங்களுக்கு துணை நிற்போம்

manmatan 25-02-07 12:39 PM

நம் தலைவருக்கு நன்றி,

இந்த திருத்தங்கள் அனைத்தும், நமது தளத்தை மேம்படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. அதை உணர்ந்து தரமான கதைகளை பதிக்கவேண்டும்

sherin_lv 25-02-07 07:13 PM

தலைவர் அவர்களே! வணக்கம். எனது பதிப்புகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டுகிறது. காரணம் ஒன்றும் விளங்க வில்லை. தெரியப் படுத்தினால் மனம் சமாதானம் ஆகும். நன்றி.

testing_arvind 27-02-07 12:41 AM

தனிப்பட்ட அளவில் அனுமதிகளுக்கான பதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதில் எனக்கு ஏமாற்றமே :( ஆனால், இது பலரை கதை எழுதவும் இன்னும் முனைப்புடன் மறுமொழி அளிக்கவும் தூண்டலாம் என்று நினைக்கிறேன். தளத்தை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கு பாராட்டுக்கள்

nicman_1954 27-02-07 01:42 AM

இது போன்ற தர மேம்பாட்டு நடவடிக்கைகள் காமலோகத்தின் தரத்தை மேம்படுத்தி எல்லோருக்கும் இன்பமளிக்க வாழ்த்துக்கள்

rasigansri 28-02-07 06:07 PM

இது சரியான முடிவு தான். இங்கே எல்லோருடைய பங்களிப்பும் தேவை. இனியாவது எல்லோரும் கருத்து சொல்வார்கள் என நம்பலாம்

athith703 28-02-07 08:59 PM

ஐயா, நான் இப்பொழுதுதான் நிறைய நாளுக்கு பிறகு இங்கு வருகிறேன்.
20 பதிவுகளுடன் காமக்கதை வாசல் செல்லலாம்தானே?

junaam 01-03-07 03:37 PM

நல்ல முடிவை அறிவித்துள்ளீர்கள். ஆனால் என்னைபோன்றவர்களுக்கு சற்று கடினம். ஏனெனில் ஆர்வமுடைய நான் நேரமின்மயால் அதிக பஙளிப்பை தர முடியவில்லை. ஆயினும் முயற்சிக்கிறேன்.

rajarajashree 01-03-07 06:25 PM

தமிழன் நிர்வாகத்தில் சிறந்தவன் என நிருபிக்கும் தளம் காமலோகம்

தமிழ் நம் பலம்

Remy 02-03-07 09:54 PM

Quote:

வெண்கல, வெள்ளி, தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் வருடம் தோறும் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகளாவது செய்தல் வேண்டும்,
நிர்வாகிக்கு. இங்கு பதிப்புகள் என்று குறிப்பிடப்படுவது கதையா அல்லது கருத்துகளா என விளக்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். தவறாயின் மன்னிக்கவும்.

redbricks555 02-03-07 10:27 PM

ஆறாவது பிறந்த நாளா? வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி

kani 02-03-07 10:32 PM

நண்பர்களே, இனி நோகாம நொங்கு திங்க முடியாது!!! நல்லா எழுதுங்க... நல்லா படிங்க. :) சந்தோசமா இருங்க.

aerikarai 03-03-07 12:50 AM

ஆறு வருடம் ஆகிப்போய் விட்டதா? உங்களது உழைப்புக்கு என் பணிவான வாழ்த்துக்கள். நல்ல கருத்துக்கள் எழுதுவது படைப்பாளிக்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

மீனாமீனா 03-03-07 12:54 AM

வரவேற்க தக்க நல்ல முடிவு தங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

xxxGuy 03-03-07 01:27 PM

Quote:

Originally Posted by remi (Post 494407)
நிர்வாகிக்கு. இங்கு பதிப்புகள் என்று குறிப்பிடப்படுவது கதையா அல்லது கருத்துகளா என விளக்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.


திரிகள், தலைப்புகள் என்றால் Threads, அவற்றில் கதைகளும் அடங்கும்.

பதிப்புகள் என்று குறிப்பிடுவது Posts, அதாவது கருத்துக்கள் / பதில்கள்.

தரமான கருத்துக்கள் என்று குறிப்பிடுவது, குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகள் உள்ள கருத்துக்கள்.

maran 04-03-07 06:17 AM

பல புதிய முறைகளைக் கையாண்டு காமலோகத்தை சொர்க்க லோகமாக்கும் முயற்சியிலிருக்கும் அனைத்து நிர்வாகத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள். காமலோகம் பல புதிய வடிவங்களைக் கொண்டு மேலும் மேலும் வளர்ச்சிபெறவேண்டும் என்பதே எனது ஆசை.

bedroom_salak 04-03-07 08:16 AM

தங்களின் வழியை பின்பற்றி, நம் தளம் வீறு நடை போடும்,..உங்களின் புதிய முயற்சியால் இன்னும் எழுச்சி நடை போடும்

manekan2000 04-03-07 09:09 AM

நன்றி தலைவரே இந்த புதிய முயற்ச்சிக்கு நான் மிகவும் உறுதுனையாக இருப்பேன்.

athith703 04-03-07 10:10 AM

வாழ்த்துக்கள்.
 
தளத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய நடைமுறை கொஞ்சம் கடினமாகத் தோன்றினாலும்... போட்டிபோட்டு முட்டி மோதி முன்னேறத் துடிப்பவர்களுக்கு நல்லதொரு சவாலாக அமையும். வாழ்த்துக்கள்.

:twisted: காமம் சிலந்திவலை போன்றது... நாம் நிலந்திகளாவோம்!!!

villan1976 04-03-07 10:30 AM

நன்றி ! மிக்க நன்றி !!

பாண்டி 04-03-07 12:42 PM

முடிவில் முனைவர் பட்டம் பெருவேன் என கருதுகிறேன்

csiyer 05-03-07 09:54 AM

தள விதி முறைகளை சிறிது தளர்த்தி, எல்லோரையும் ஊக்குவிக்கலாமே?

m_vaanan 05-03-07 10:12 AM

மன்ற அங்கத்தினர் அனைவரையும் பங்களிக்க வைத்து, காமலோகத்தை மென்மேலும் சிறப்பானதாக்க நிர்வாகி அவர்களின் முயற்சி வெற்றிபெற எல்லோரும் ஒத்துழைப்போம்..

லோகத்தை வளமாக்குவோம்.

nanban32 06-03-07 03:20 AM

தலைவரின் முயற்சிகளுக்கு நன்றி. தரமான பங்களிப்புகளுடன் காமலோகம் வளரட்டும்

kamalogapriyan 06-03-07 04:33 PM

தங்களின் முடிவு கண்டிப்பாய் நமது மன்ற உறுப்பினர்களிடையே நல்ல உழைப்பையும் அதன் பலனையும் ஏற்படுத்தும். கஷ்டப்பட்டுகிடைக்கும் உணவே உழைப்பின்றி கிடைக்கும் உணவைவிட சுவையானது.

roomar 07-03-07 06:51 PM

உங்கள் முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துக்கள். உங்களுக்கு என்றும் துணை நிற்ப்போம்.

allbutonein 07-03-07 10:45 PM

எனக்கு தமிழ் வாசல் அனுமதி உண்டா?

திராவிடன் 08-03-07 01:43 AM

கதை எழுதுபவர்களுக்கு இது உட்சாகமானாதாக இருந்தாலும் கதை எழுதமுடியாத கருத்துக்களை மட்டும் எழுதுபவர்களுக்கு மற்ற வாசல்கள் எட்டாக்கனியாக இருக்கும்.பல காலம் காத்து இருக்க வேண்டியிருக்கும்.தலைவர் மறு பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.இது கண்டிப்பாக புதியவர்களை சோர்வடையச்செய்யும்.

sub 08-03-07 03:05 AM

வரவேற்க்கத்தக்க முடிவு!

Renuka 08-03-07 05:22 AM

காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

pict4me 08-03-07 06:01 AM

புதிய மாற்றங்களை வரவேற்கிறேன். என்னுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எப்பொழுதும் இருக்கும்

வாழ்த்துக்கள்

maalaa 09-03-07 11:00 AM

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் காமலோகத்திற்க்கு என் வாழ்த்துக்கள் இத்தனை வர்டம் இது குறித்து அறியாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


All times are GMT +5.5. The time now is 10:09 PM.

Powered by Kamalogam members