காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பிறமொழிச் சொற்களைத் தமிழில் ‘ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்? (http://www.kamalogam.com/new/showthread.php?t=61018)

anabayan 11-01-14 11:44 AM

Quote:

Originally Posted by eros (Post 1270195)
இந்த தளத்தில் இந்த ஆதங்கம் தேவையில்லை என்பது என் கருத்து. இங்கு நாம் தமிழை போற்ற வாழவைக்க வரவில்லை. காமத்தை அலச, ரசிக்க, அனுபவிக்க ... இதற்கு எந்த நடையில் எழுதினால் சுவையாய் இருக்கிறதோ அதுவே சரி.

ம்.......இதுவும் சரிதான்.

udhayam72 09-02-14 12:30 AM

நண்பரே...தூய தமிழில் கதை எழுதுவது ஒரு கலை ...
கதையில் யதார்த்தத்தை கொண்டுவர பிறமொழியை பயன்படுத்துவதும்...
கதையை படிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் ...
பிறமொழி கலப்பில்லாமல் எந்த மொழியும் இல்லை .

இந்த காமலோக தளத்தில் எத்தனை நண்பர்கள் தமிழில் கையெழுத்து போடுபவர்கள் ...??? சொல்லுங்கள் .....


நண்பரே உங்களுடைய தமிழ் தொண்டு தொடர என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ...நன்றி ...

ஐந்து நட்சத்திர வாழ்த்துகள்

kaamapootham 14-02-14 11:40 PM

மிகவும் விவாதிக்க படவேண்டிய மற்றும் வருத்த பட வேண்டிய விஷயம்...
முதலில் இதை விரிவாக விவாதத்துக்கு தந்தமைக்கு நன்றி..

இன்றைய காலகட்டங்களில் தமிழ் இறந்து போய் விட்டது என்று கூட கூறலாம்..

நிறைய தமிழ் வார்த்தைகளை தொலைத்து விட்டு, தமிழ் யாதென்று அறியாமல் தமிழன் என்று சொல்லி கொண்டு திரிகின்றோம்..

" திரை படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தல் வரி சலுகை என்று அறிவித்து தமிழை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..'.......

எங்கே போனது எனது தமிழ் .. எப்படி இறந்து கொண்டு இருக்கின்றது எனது தமிழ்... இன்றைய தின பத்திரிகைகளை வாங்கி பாருங்கள்.. அதிலும் கூட ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதும் பழக்கம் வந்து விட்டது..

அய்யகோ படிக்கும் போதே என் நெஞ்சமெல்லாம் பதறும்.. இதை தான் என் வருங்காலம் படித்து கொண்டு தமிழ் என்று சொல்லி திரிய போகின்றதா..

இதற்கு ஒரு விடிவு காலம் இல்லையா..

இலக்கணம் தொலைத்து விட்டோம் என்றோ...
இன்று நடை முறை தமிழையும் தொலைத்து கொண்டு இருக்கின்றோம்..

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்பது போயி..
என்று கேட்கும் எங்கள் தமிழின் ஓசை என்று கேட்கும் நிலை வந்து விடுமோ ...

kudimagan 13-04-14 04:07 PM

அன்பரே

உங்கள் வருத்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் காலத்தின் உண்மையான கோலம் என்ன என்றால் எல்லா மொழிகளிலும் பிற மொழி சொல் கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஒவ்வரு வருடமும் ஆங்கில அகராதியில் பல புது சொற்கள் சேர்க்க படுவதே இதற்கு சான்று . மேலும் ஆங்கில மொழி மிகப் பரவலாக பேசப்படும் மொழி என்பதால் அதன் பாதிப்பு எல்லா மொழிகளிலும் நிச்சியமாக இருந்தே தீரும்.

குடிமகன்

vjagan 15-07-14 03:41 PM

ஊக்கமூட்டும், சிறப்பான பின்னூட்ட வரிகள் எழுதிய நண்பர் kudimagan, kaamapootham, udhayam72, anabayan, eros, Mathan, Kanchanadasan, Nallavan1010, venkat8, redchilli, அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் மிகுந்தநன்றியறிதலுடன் !

kamam_2015 27-01-15 12:08 PM

அழகா தமிழ்ல பஸ்னு புரியற மாரி சொல்வியா, அதை வுட்டுட்டு பேரை உந்து ஊரை உந்துனு சொல்றியே என கிராமத்து மக்களே பஸ்ஸை தமிழாக ஏற்றுக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் இந்த ஒலி பெயர்ப்பு தவிர்க்க முடியாததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

vjagan 28-01-15 03:54 PM

Quote:

Originally Posted by kamam_2015 (Post 1322976)
அழகா தமிழ்ல பஸ்னு புரியற மாரி சொல்வியா, அதை வுட்டுட்டு பேரை உந்து ஊரை உந்துனு சொல்றியே என கிராமத்து மக்களே பஸ்ஸை தமிழாக ஏற்றுக் கொன்டிருக்கிற காலகட்டத்தில் இந்த ஒலி பெயர்ப்பு தவிர்க்க முடியாததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய புதிய நண்பர் kamam_2015, அவர்கள் அவருடைய மிகவும் அழகான தமிழில் அவருடைய மிகவும் தரமான் பின்னூட்டத்தை நன்றாக செவிட்டில் அடித்தாற் போல தெரிவித்து விட்டார் அய்யா அம்மணி !

அது அவருடைய உரிமை அய்யா அம்மணி !

அவருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவரின் பங்களிப்புக்கள் மேலும் மேலும் சிறந்து அவர் மேலும் மேலும் வளர என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

padithoraipandi 30-01-15 10:33 PM

நாம் வழக்கதில் உபயோகிக்கும் சொல்லை பயன்படுத்தினால் கதையை நம்மோடு தொடர்புபடுத்திக்கொள்ள உதவி செய்யும். இல்லை என்றால் ஒரு இலக்கியம் படிப்பதுபோல் தோன்றும். இதை கதை ஆசிரியரின் விருப்பத்திற்கு விடுவதே சிறந்தது.

vjagan 06-04-15 10:29 AM

நாம் வழக்கதில் உபயோகிக்கும் சொல்லை பயன்படுத்தினால் கதையை நம்மோடு தொடர்புபடுத்திக்கொள்ள உதவி செய்யும். இல்லை என்றால் ஒரு இலக்கியம் படிப்பதுபோல் தோன்றும். இதை கதை ஆசிரியரின் விருப்பத்திற்கு விடுவதே சிறந்தது.
சிறந்த பின்னூட்டமிட்ட நண்பர் padithoraipandi, அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அன்பு 21-08-15 05:26 PM

நம்முடைய அன்றாட வாழ்விலே தூய தமிழை நூற்றுக்கு நூறு சதவீதம் பயன்பாட்டிற்கு வந்தாலே தவிர இங்கு அதுபோன்ற ஒலிபெயர்ப்பு இல்லாத கதைகள் படிப்பது சாத்தியம் என்பதே என் கருத்து.

மக்கள் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில், பிறமொழிக்கலப்பில்லாத சொற்களை சரளமாக பேசும் தொகுப்பாளரை கண்டு வியப்பேன்.

இல்லை என்பதையே இல்ல என்றும்,

அப்படி, அப்படி என்பதை அப்டி, இப்டி,

வந்த உடனே என்பதை வந்தோனே

கொண்டு வா என்பதை கொண்டா

வைத்து விட்டுப்போ என்பதை வச்சிட்டுப்போ

இப்படி பல சொற்கள் தூய தமிழே எழுதுவதில்லை, பேச்சுவழக்கில் இருப்பதுவே எழுதப்படுகிறது. நடைமுறையில் இருப்பது போன்றே படிக்கும்போதுதான் படிப்பதற்கும் நன்றாக உள்ளது என்று அப்படியே எழுதி வருகிறது.

தற்போது தமிழில் மிக அதிகமான பிறமொழிச் சொற்கள் உள்ளன. என்னிடம் முன்பு அதுபோன்ற சொற்களில் பட்டியல் ஒன்று இருந்தது. கிடைத்தால் பிறகு வந்து பதிக்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 04:41 PM.

Powered by Kamalogam members