காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பாரதியார் பிறந்ததினம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=53223)

subbukannan 12-12-09 08:52 PM

பாரதியார் பிறந்ததினம்
 
இன்று ரஜினி பிறந்தநாள். எல்லா ஊடகத்திலும் அவரைப் பற்றிய நிகழ்ச்சிகள், செய்திகள். மகிழ்ச்சிதான். நேற்று டிசம்பர் 11 ஆம் தேதி மகாகவி பாரதியார் பிறந்ததினம். நாட்டிற்கும் தமிழுக்கும் சமுதாய முற்போக்கு சிந்தனைகளுக்கும் அவரது தொண்டுகள் எத்தனை எத்தனை. ஆனால் எந்த ஊடகத்திலும் அவரை யாரும் நினைவு படுத்தவில்லை. ஏனோ மனசு வலித்தது.

oshoviji 12-12-09 09:31 PM

இந்த தகவலை நீங்கள் நேற்றே பதிந்திருக்கலாமே நண்பரே. எதற்கு இன்றைக்கு வரைக்கும் காத்திருக்கவேண்டும்.

நேற்றைக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைந்த தினம் என்பது உங்களுக்கு தெரியுமா ? அதற்காகவும் சிறப்பாக எதுவும் நடக்கவில்லை தான். அதற்காக வருத்தப்படுகிறீர்களா?
நேற்றைக்கு விஸ்வநாதன் ஆனந்தின் பிறந்தநாள் என்பது உங்களுக்கு தெரியுமா ? செஸ் விளையாட்டில் இந்தியாவை அசைக்கமுடியாத உயரத்துக்கு கொண்டு சென்றவருக்கு சிறப்பாக எதுவும் செய்யப்படவில்லை தான். அதற்காக வருத்தப்படுகிறீர்களா ?

இன்றைய மீடியாக்களுக்கு மக்களை விட விளம்பரங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வருகின்றன என்பதுதான் முக்கியம். அது போலவே நமக்கு சில முக்கியமாக தெரியும் அளவுக்கு மற்றவர்கள் தெரிவதில்லை. இதெல்லாம் சகஜம் நண்பரே. இதற்கெல்லாம் வருத்தப்படுவதால் என்ன ஆகப்போகிறது. நீங்கள் பாரதி பிறந்தநாளை அடுத்த வருடம் மறக்காமல் நினைவில் கொண்டு அவருடைய கருத்துக்களில் ஒன்றையாவது செயலாக்க முயலுங்கள்.

லலிதாதாசன் 13-12-09 08:21 AM

வாழ்ந்த காலத்திலேயே உரிய அங்கீகாரம் கிடைக்காத கவிஞனுக்கு செத்தபின்னா தரப்போகிறார்கள்?:(

ஒவ்வொரு பிறந்தநாளுக்கு அவனை நினைவில் கொண்டுவந்து பாலாபிஷேகம் செய்யவேண்டாம். குறைந்தது அவன் சொன்ன கருத்துக்களையாவது பின்பற்ற முயலுங்கள்.:)

asho 13-12-09 09:26 AM

இதெல்லாம் ஏட்டிக்கு போட்டியான விசயம் நண்பரே. உங்களை திரி ஆரம்பிக்க வேண்டாம் என்று யார் சொன்னது,. இதே போல ஒவ்வொரு மறைந்த/உயிருடன் உள்ள தலைவர்களுக்கு திரி ஆரம்பித்தால் லோகம் என்ன ஆவது?.

உங்களுக்கு தேவை என்றால் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி திரி ஆரம்பித்து கொள்ளுங்கள்.

இந்த திரி ஆரம்பிக்க ஏற்ற இடமல்ல இது, விரைவில் உரிய இடத்திற்கு மாற்றப்படும்.

udhayasuriyan 13-12-09 11:03 AM

பாரதி பிறந்த தினம் எனக்கு மறக்காது..
பத்திரிகைகளிலும் பார்த்தேன்.. அரசு சார்பில் மரியாதை விழாக்களும் நடந்தன..

திசம்பர் 11 என்னுடைய வளர்த்த பிள்ளைக்கும் பிறந்த நாள்..

அது சரி இவ்வளவு விஷயம் நடந்து உள்ளது அந்த செய்திகளை படிக்காமல்.. பத்திரிகைகளின் மசாலா செய்திகளுக்கு ஏன் முக்கியதுவம் கொடுக்கிறீர்கள்..

கெட்டவர்களை விட நல்லவர்களுக்கு அங்கிகாரம் கிடைக்க ரொம்ப கஷ்ட படனும்..

எனவே பாரதியார் நினைவை போற்றுவோம்..

அனைவரது வீட்டினுள்ளும்..
திருக்குறள் அனைவரும் பார்க்கும் படிக்கும் இடத்தில் இருக்கட்டும்..

பாரதியாரின் கவிதைகளை.. உங்களின் புத்தக பொக்கிஷங்களில் இருக்கட்டும்..
அவரின் நினைவு உங்கள் நெஞ்சங்களில் இருக்கட்டும்..
ஊடகங்களை இப்பொழுது மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள்..
கவலை வேண்டாம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

vjagan 13-12-09 03:28 PM

தமிழ் இலக்கிய வரலாறு: பாரதிக்கு முன்/பாரதிக்கு பின் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம் ! 39 வயதில் நம்மை விட்டு பிரிந்த அந்த மேதையை -அவரின் மரணத்தில் கலந்துகொண்டது பத்து பன்னிரண்டு பேர்கள்தான் ! ஆனால் அவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் கயவர்கள் பலர் ! அவர் பாடல்களுக்கு ஓரளவு மரியாதை கொடுத்தவர் ஏவிஎம் அவர்கள்தான். பாரதியின் குடும்பத்தார் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா ?

nandabalan 13-12-09 07:13 PM

பாரதியாரின் மகள் வயிற்றுப் பேரன் ராஜ்குமார் பாரதியை பொதிகை தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்க்கலாம். பாரதியின் புகழ் என்றும் மங்காது. அவர் ஒரு சூரியன். அவர் ஒளி படாத இடம் உண்டோ? வறுமையிலும் கர்வம் தொலைக்காது யாருக்கும் அடிபணியாதவன் அல்லவா இந்த முண்டாசுக் கவிஞன்.

inianin 13-12-09 10:56 PM

பாரதியார் ஒரு மகத்தான பொக்கிஷம், அந்த கவிஞ்சனது வரிகள் பசுமரத்தாணி போல நீங்காது என் நெஞ்சை விட்டு
, எனது 300வது பதிப்பை சமர்ப்பிக்கிறேன் அந்த சான்றோனுக்கு

wgi_removed 12-12-10 02:27 AM

Quote:

Originally Posted by லலிதாதாசன் (Post 918853)
வாழ்ந்த காலத்திலேயே உரிய அங்கீகாரம் கிடைக்காத கவிஞனுக்கு செத்தபின்னா தரப்போகிறார்கள்?:(

ஒவ்வொரு பிறந்தநாளுக்கு அவனை நினைவில் கொண்டுவந்து பாலாபிஷேகம் செய்யவேண்டாம். குறைந்தது அவன் சொன்ன கருத்துக்களையாவது பின்பற்ற முயலுங்கள்.:)

எப்போதும் நீ நீங்கள் என்று கூறாதிர் நண்பரே, நன் நாம், நாங்கள் என்று சொல்லுங்கள்.

redchilli 09-01-14 01:31 AM

நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்,

கிழக்காசிய நாடுகள் வரை இருந்த தமிழகம் இன்று சுருங்கிக் கொண்டே வருகிறது.

தமிழர்களோ மொடாக் குடியர்களாக, கூத்தாடிகளுக்கு கொடி பிடிக்கும் வீணர்களாக இருக்கிறார்கள்.


All times are GMT +5.5. The time now is 10:00 PM.

Powered by Kamalogam members