காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   விடை பெறுகிறேன் நண்பர்களே ! (http://www.kamalogam.com/new/showthread.php?t=68935)

mouni 14-07-16 10:24 AM

விடை பெறுகிறேன் நண்பர்களே !
 
காமலோக பயணத்தில் பத்து வருடம் கழித்து விட்டேன். இந்த பத்து ஆண்டும், லோகத்திற்காக உண்மையாக பாடுபட்டேன். வெறும் கதைகள் எழுதுவது மட்டுமில்லாமல், கதை பற்றிய எல்லா விவாதங்களிலும் என் பங்கு உண்டு! காமலோகத்தை வளமை படுத்த, என்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்தேன் என்பது உண்மை.

ஆனால் எல்லா பயணங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவு இப்போது எனக்கு வந்து விட்டது என உணர்கிறேன்.

காமலோக பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். பத்து ஆண்டுகளில் என்னை ஆதரித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி!

காமலோகம் வளரட்டும். பெஸ்ட் ஆஃப் லக்!

அன்புடன்
மௌனி

JACK 14-07-16 12:31 PM

எனக்கும் அப்பப்போ லோகத்தின் மீது அலுப்புதட்டும், நண்பர்களுடன் மன கசப்பு ஏற்படும், லோகத்தின் மீது பற்று இல்லாமல் போகும். அந்த மாதிரி நேரங்களில் லோகத்தை விட்டு வெளியேரலாம் என்று தோன்றும். ஆனால் முழுமையாக விலக இயலவில்லை, அதனால் எனக்கு எப்போதெல்லாம் அந்த மாதிரி நடக்கிறதோ அப்போதெல்லாம் லோகத்தில் இருந்து நீண்ட விடுமுறை எடுத்துவிடுவேன். மனம் சமாதானம் ஆன பிறகு மீண்டும் லோகத்தில் ஐக்கியமாகிவிடுவேன்.

தோழி மௌனியின் இந்த முடிவு தற்காலிகமானதாக அமைய வேண்டுகிறேன்

anabayan 14-07-16 01:01 PM

Quote:

Originally Posted by JACK (Post 1395209)
ஆனால் முழுமையாக விலக இயலவில்லை,

அதுதான் இந்த லோகத்தின் / நட்பு வட்டத்தின் மகிமை ஜாக்

Quote:

Originally Posted by JACK (Post 1395209)
தோழி மௌனியின் இந்த முடிவு தற்காலிகமானதாக அமைய வேண்டுகிறேன்

எனது அவாவும் அதே........கொஞ்சம் ரிலாக்ஸாகிட்டு திரும்பவும் வாருங்கள் சகோதரி.

Myboy 14-07-16 02:33 PM

தோழி
தங்களின் சிறப்பான கதைக்கும் எழுத்துக்கும் தீவிரமான ரசிகன் நான்

நண்பர்கள் சொன்னது போல் சிறிது காலம் கழித்து மீண்டும் காமலோகம் வர வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள் பல;

killingkavitha 14-07-16 03:39 PM

அன்பிற்குறிய தோழியே, உங்களின் கதைகளில் வடிவேல் கதையும், குஷ்பு கதையையும் ரசித்து படித்திருக்கிறேன். அருமையான கதைகளைக் கொடுத்து மகிழ்ந்த உங்களின் இந்த முடிவு தற்காலிகமானதாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்....

msvasan 14-07-16 05:06 PM

தங்களது இந்த முடிவு மிகவும் வருத்தமாக இருக்கிறது நண்பி , மன வருத்தத்துடன் பிரிவதாக இருந்தால் அது மிகவும் வருத்தமான முடிவு , இல்லை கால சூழ்நிலை பிரியவேண்டியது இருந்தால் அவர் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்

vjagan 14-07-16 07:07 PM

தங்கள் ஆற்றிய பணி அளப்பரியது மௌனி அம்மணி அவர்களே !
தங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்மிகுந்த நன்றியறிதலுடன் மௌனி அம்மணி அவர்களே !பிரிவோம் சந்திப்போம் மௌனி அம்மணி அவர்களே !
இந்தப் பிரிவு தற்காலிகம் என்று என் உள்மனம் சொல்கிறது மௌனி அம்மணி அவர்களே !
அந்த என் நினைப்பு பொய்யாகக் கூடாது என்று பிரார்த்திருக்கிறேன் மௌனி அம்மணி அவர்களே !

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் பிரிவோம் சந்திப்போம் மௌனி அம்மணி அவர்களே !
இந்தப் பிரிவு தற்காலிகம் என்று என் உள்மனம் மீண்டும் மீண்டும் சொல்கிறது மௌனி அம்மணி அவர்களே !
அந்த என் நினைப்பு பொய்யாகக் கூடாது என்று மீண்டும் மீண்டும் பிரார்த்திருக்கிறேன் மௌனி அம்மணி அவர்களே !

ricky414 14-07-16 07:31 PM

சற்று இடய்வேளக்கு பின் மீண்டும் வருக வாழ்க வளமுடன், நன்றி வாழ்த்துக்கள்.

tamilxxx 14-07-16 08:44 PM

மௌனி அவர்களே !!!!

உங்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை.............. காமலோகத்தில் தொடர்ந்து உலாவ வேண்டுகிறேன்........

sinna vaaththiyaar 14-07-16 08:44 PM

என்னது..?...நீங்களுமா?

சிறிது ஓய்வெடுத்துவிட்டு திரும்பி வாருங்கள்..அதுவரை உங்கள் கதைகளோடு நமது உறவு நீடிக்கட்டும்..


All times are GMT +5.5. The time now is 02:06 AM.

Powered by Kamalogam members