காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2011 : முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60252)

பச்சி 29-02-12 07:42 PM

சிறந்த காமலோக விமர்சகர் 2011 : முடிவுகள்
 
சிறந்த காமலோக விமர்சகர் (2011) - முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gif xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2011 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல் சென்ற வருடத்திற்கான (2011) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 43 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 24 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 98 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட குறைவு தான்.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


!!! போட்டி முடிவுகள் !!!


http://www.kamalogam.com/new/customa...tar16755_3.gif oolvathiyar அவர்கள் 30 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2011-ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற oolvathiyar அவர்களுக்கு 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif மற்றும் பரிசு தொகையாக 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

இவர் 2008-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக 'சிறந்த விமர்சகர் விருதை' பெறுகிறார். பாராட்டுக்கள் oolvathiyar!


வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:


1. oolvathiyar - 30

2. KANNAN60 - 21

3. RasaRasan - 11

4. PUTHUMALAR - 8

5. anabayan - 7

5. ராசு - 7

6. tdrajesh - 4

6. dreamer - 4

7. niceguyinindia - 3

7. Hermi - 3



! நன்றி !

nana2003 29-02-12 08:06 PM

வெற்றி பெற்ற வாத்திக்கு என் மனமார்ந்த வாழ்துகள்.

dreamer 29-02-12 08:14 PM

சிலர்போல் சில குறிப்பிட்ட பகுதிகளின் எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொளளாமல் எங்கு காணினும் ஓள்வாத்தியாரின் பின்னூட்டம் என்று இயங்கும் இவரைப் பாராட்டுகிறேன். இவர் பின்னூட்டங்கள் தகவல் களஞ்சியம். யாரையும் புண்படுத்தாமல் ஊக்குவிக்கும் டானிக்.

வாழ்க வாத்தியாரையா.

gemini 29-02-12 08:22 PM

வெற்றி பெற்ற ஓல் வாத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட கண்ணன், ராசராசன் அவர்கட்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

KANNAN60 29-02-12 09:21 PM

சரியான தேர்வு! சிறந்த விமரிசகரான நண்பர் ஓல்வாத்தியார் இந்தப் பரிசைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன்.

எனக்கு இரண்டாமிடம் அளித்த அன்பு நண்பர்/நண்பிகளுக்கு நன்றி.

மூன்றாமிடம் பெற்ற நண்பர் இராசராசனுக்கு வாழ்த்துகள்!

போட்டியில் இடம் பெற்ற அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் பாராட்டுகள்!

வாக்கெடுப்பை அருமையாக நடத்திய நண்பர் பண்பாளர் பச்சி உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு நன்றிகளும், பாராட்டுகளும்!

Nisadasan 29-02-12 09:33 PM

பலரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் முதலிடம் பெற்ற ஓல்வாத்திக்கு என் வாழ்த்துக்கள்.

முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற கண்ணனுக்கும், ராசராசனுக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் பல காமலோக நண்பர்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

குறிப்பு : இது எனது 2000ம் பதிப்பு

RasaRasan 01-03-12 12:13 AM

நான் எதிர்பார்த்தது போலவே நண்பர் ஓல் வாத்தியார் வெற்றி பெற்றுள்ளார். தளத்தின் எல்லா இடங்களிலும் சென்று பின்னூட்டம் இட்டவர் ஓல் வாத்தியார்தான். ஆதலால் சிறந்த ஒருவரைத்தான் தள நண்பர்கள் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுத்துள்ளனர். வாத்திக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நவரச நாயகன் நண்பர் கண்ணன் அவர்களும் தன் பின்னூட்டத்தினால் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தவர். நண்பர் கண்ணனுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அடுத்ததாக ராசராசனாகிய நான் 3 ம் இடம் வந்துள்ளேன். தளத்தின் எல்லா இடங்களிலும் அதிகம் பின்னூட்டம் இடாவிட்டாலும், நண்பர்களின் மனம் கவர்ந்தவர்களில் நானும் ஒருவனாய் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வாக்களித்த 11 நண்பர்களுக்கும் என்னை பரிந்துரை செய்த அன்பு நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

என்னை தொடர்ந்து வந்த புது மலர், அநபாயான், ராசு, ராஜேஷ், ட்ரீமர், நைஸ்கய் இன் இண்டியா, ஹெர்மி, ஆகிய நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே... மீண்டும் தொடர்ந்து பின்னூட்டங்களை தந்து படைப்பாளிகளை மகிழ்ச்சி படுத்துவோம்.

HERMI 01-03-12 03:55 AM

லோகத்தில் இருக்கும் எல்லா வாசல்களிலும் நுழைந்து பின்னூட்டமிட்டு பலரின் மனதை கொள்ளைகொண்டு, இப்போது சிறந்த விமர்சகராக வெற்றி பெற்றிருக்கும் திரு. ஓல்வாத்தியாருக்கு என் பாராட்டுக்கள்.

அடுத்தடுத்த இடம் வந்த நண்பர்/நண்பிகளுக்கும் என் வாழ்த்துக்கள். நீங்களும் அயராது பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன்.(என்னையும் சேர்த்து தான்)

களம் அமைத்து வாய்ப்பு வழங்கிய நிர்வாகத்திற்கும், அதை செவ்வனே நடத்தி முடித்த நண்பர் திரு. பச்சி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

spiderman 01-03-12 07:01 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vaasan 01-03-12 07:15 AM

இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வாத்திக்கும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் . . .

இப்படி எல்லா வழிகளிலும், காமலோக உறுப்பினர்களை கெளரவிக்கும் தள அமைப்பாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் . . .


All times are GMT +5.5. The time now is 05:00 AM.

Powered by Kamalogam members