காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   பாஸ்வேர்ட் மாற்றுவது அவசியம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52678)

xxxGuy 02-11-09 09:56 AM

பாஸ்வேர்ட் மாற்றுவது அவசியம்
 
நண்பர்களே,

ஏற்கனவே உங்களுக்கு பல முறை அன்புடன் கூறியுள்ளோம், மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

உங்கள் காமலோக கணக்கை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பாஸ்வேர்டை யாரும் கணிக்கமுடியாத "எண்-எழுத்து" (alpha-numberic) கொண்ட கடினச் சொற்களாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது, அவற்றை திருட அலையும் கூட்டங்களிடம் நீங்கள் தோற்றுப் போக நேரிடும் என்பதற்காகவே உங்களை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

மேலும், உங்கள் கணக்கின் பாஸ்வேர்டை குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை நிச்சயம் மாற்றுங்கள். குறிப்பாக மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை பாஸ்வேர்டை மாற்றுவது அவசியம்.

நம் உறுப்பினர்களில் பலர் வருடக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டையே உபயோகித்து வருகிறார்கள், இதனால் அவர்கள் பொது இடங்களில் காமலோகத்தை காணும் சமயத்தில், அவர்களுடைய கணக்கு "லாக்-அவுட்" ஆகாமல் மாதக் கணக்கில் அங்கேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளது. அடுத்து வருபவர் உங்கள் கணக்கை தனதாக்கவும், நமது படைப்புகளை திருடி மற்ற தளங்களில் பதியவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதனால், இன்று முதல் மாதம் தோறும் உங்களை பாஸ்வேர்ட் மாற்ற நினைவூட்டும் படி செய்யப் பட்டுள்ளது.

நமது தளத்தின் பாதுகாப்புக்காகவும், நமது உறுப்பினர்களின் நன்மைக்காகவும் எடுக்கப் பட்ட இந்த நடவடிக்கை உங்களுக்கு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், அவற்றின் நன்மை கருதி பொருத்துக் கொள்ளுவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..!!!

annan 02-11-09 10:12 AM

தலைவரே, இது ஒரு நல்ல நடவடிக்கையே. வரவேற்கிறேன்

jayjay 02-11-09 10:17 AM

மிக பாதுகாப்பான நடவடிக்கை தலைவரே...
நேற்றுதான் என்னுடையை பாஸ்வேர்டை மாற்றினேன்... கதையை திருட காத்திருக்கும் கூட்டத்திற்கு பாஸ்வேர்ட் திருட்டுதான் முதல் வேலை... பாஸ்வேர்டை மாற்றி உங்களின் கணக்கை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. சரியான நேரத்தில் அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி...

எண் மற்றும் எழுத்துக்கள் இரண்டையும் இணைத்தாற்போல பாஸ்வேர்ட் உபயோகித்தால் யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. உதாரணமாக kSio586, maed7854, 2008hai2009,

வெளியில் நெட் கேப் உபயோகிப்பவர்கள் சரியாக லாக் அவுட் செய்துவிட்டோமா என்று உறுதி செய்துவிட்டு போங்கள்.

தலைவருக்கு நன்றி.... வாழ்க தலைவர்... வளர்க காமலோகம்...

niceguyinindia 02-11-09 03:54 PM

இது போல ஏதாவது செய்தால் தான் பாஸ்வேர்ட் மாற்றும் எண்ணமே வருகிறது நினைவு படுத்தியமைக்க்கு நிர்வாகிக்கு நன்றி

sajid80 02-11-09 06:29 PM

தளத்தின் மேல்,உறுப்பினர்கள் மேல் தலைவர் காட்டும் அக்கறை பாராட்ட படவேண்டியது நேற்று எனக்கும் பாஸ்வர்ட் மாற்ற சொல்லி தகவல் வர.... மாற்றினேன்..
இனி மாதா மாதம் மாற்றி விடுவேன்...

shobana_rv80 03-11-09 09:34 PM

காலத்துக்கேற்ற மாற்றங்களை கொண்டுவருவதிலும்
நம் தளத்தின் நன்மைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை..
நம் தளத்தின் நன்மைக்காக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் கண்டிப்பாக ஆதரித்து பின்பற்றுவோம். தக்க சமயத்தில் அறிவுறுத்தியதற்கு நன்றி...

MACHAN 03-11-09 10:33 PM

என்னடா திடீரென்று லாக் இன் செய்ய முடியாமல் பாஸ்வேர்டு மாற்ற அறிவிப்பு வந்திருக்கிறதே என்று நேற்றைக்கு குழம்பியே போய்விட்டேன். இன்று இந்த அறிவிப்பை படித்த பிறகுதான் எவ்வளவு நல்ல விஷயத்தை தலைவர் அவர்கள் நமக்காகவும் லோக நன்மைக்காகவும் செய்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் வரவேற்புக்குரிய நடவடிக்கை தலைவர் அவர்களே...! நன்றி.

JACK 03-11-09 10:43 PM

Quote:

Originally Posted by UN MACHAN (Post 906909)
என்னடா திடீரென்று லாக் இன் செய்ய முடியாமல் பாஸ்வேர்டு மாற்ற அறிவிப்பு வந்திருக்கிறதே என்று நேற்றைக்கு குழம்பியே போய்விட்டேன்.

எனக்கும் இந்த குழப்பம் ஏற்ப்பட்டது

ஆனால் சரியாக் பாஸ்வேர்டை மாற்றிய பிறகு எந்த பிரச்சனையும் இல்லை

என்ன ஒன்னு பழைய ஞாபகத்துலேயே பழைய பாஸ்வோர்டை கொடுத்துவிடுகிறேன்:y2: ஹ்ஹ்ம்ம் எல்லாம் போக போக சரியாகிவிடும்:y15:

oshoviji 03-11-09 10:47 PM

தேவையான மாற்றங்களை தேவைப்படும் நேரத்தில் செயல்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் நிர்வாகி அவர்களே. எங்களுடைய நலனை எங்களுக்கு மேலாக கருத்தில் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள் பல.

Mathu 03-11-09 11:00 PM

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை தரும் நிர்வாகிக்கு நன்றிகள்.
பலமுறை சொல்லியும் பல ஆண்டுகளாக மாற்றி ஒரே பாஸ்வேர்ட்டே உபயோகிப்பவன் நான், ஆனால் உங்களின் அறிவுறுத்தலை இனி நிச்சயம் செயற்படுத்துகிறேன்.

PUTHUMALAR 03-11-09 11:07 PM

வங்கிகளைப் போல்!
 
நல்லது தலைவரே, தற்போதெல்லாம் வங்கிகள் அவர்களின் வாடிக்கையாளர்களை அவர்களின் நன்மை கருதி அவர்களின் கணக்கிற்கான பாஸ்வேர்டை 15 தினங்களுக்கு ஒருமுறை மாற்ற கட்டாயம் பணிக்கிறார்கள். அதுபோல தாங்களும் எமது நன்மை கருதியே இந்த ஏற்பாட்டை செய்துள்ளீர்கள். அதனையும் வெகுவாக பாராட்டி நாங்கள் ஏற்கிறோம். நன்றி! வணக்கம்.

kas12345 03-11-09 11:26 PM

நானும் இன்று பாஸ்வேர்டை மாற்றிவிட்டேன்

mayakrishnan 03-11-09 11:57 PM

இன்று பாஸ்வேர்ட்டை மாற்றும்படி கோரிக்கை வந்ததும், சுதாரித்து பாஸ்வேர்ட்டை பல வருடங்கள் கழித்து மாற்றினேன். தக்க சமயத்தில் நினைவூட்டியதற்கு நன்றி.

RICHARD 04-11-09 09:32 AM

ஆமாம் நாம ஏற்கனவே பட்ட அனுபவம் போதும்,
இப்போ ஜாக்கரதையா இருப்பது மேல்

நல்ல திட்டம். நானும் கடவு சொல்லை மாற்றிவிட்டேன்

ரிச்சர்ட்

rina 04-11-09 10:28 AM

எனது பாஸ்வேர்டை ஒரு வருடத்தின் பின் இன்றுதான் மாற்றியுள்ளேன். தேவையான ஒரு நடவடிக்கைதான். நன்றி,

gayathri2 04-11-09 12:02 PM

வெகு நாட்களாக மாற்றபடாமல் (மன்னிக்கவும்) இருந்த பாஸ்வேடை இன்று மாற்றிவிட்டேன்....
மாதம் ஒருமுறை என்பது சற்று சங்கடம் கொடுக்கும் என நினைக்கிறேன். (மாதம் ஒரு புது பாஸ்வேடை நினைவில் வைப்பது கஷ்டமான காரியம என தோன்றுகிறது)

Reader 04-11-09 03:10 PM

என்ன்டா இன்று என்னுடைய பாஸ்வேர்டை லாகின் செய்ய முடியவில்லையே என்று பார்த்தேன் இப்பொ தான் தெரிகிறது ஏன் என்று.

gopi55 04-11-09 07:14 PM

நம்முடைய சொந்த வசதிகளுக்கு சற்றுச் சிரமம் இருந்தாலும் தளத்தினுடைய பாதுகாவல் கருதியும் கடினமாக உழைத்து படைக்கும் படைப்பாளிகளின் படைப்பை திருடர்கள் எளிதில் அபகரிக்காமல் இருக்கவும் நல்ல ஏற்பாடுதான்.

நன்றி

sherin_lv 04-11-09 07:38 PM

நன்றி நீங்கள் எனக்கு மின் அஞ்சல் மூலம் நினைவூட்டியமைக்கு. எனது பாஸ் வேர்டை இப்போதே மாற்றி விடுகிறேன். தங்களின் இனிய தகவலுக்கு என் மனமார்ந்த நன்றி.

asho 04-11-09 08:22 PM

ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர்
http://kamalogam.com/new/showthread.php?t=32641

இந்த திரி பார்ப்பவர்கள் மறக்காமல் மேலே உள்ள திரியையும் ஒருமுறை பார்த்து விடுங்கள்.

பாஸ்வேர்டு தான் ஒவ்வொரு உறுப்பினரின் காமலோக பாஸ்போர்ட்.

வரிப்புலி 04-11-09 09:05 PM

நானும் பாஸ்வேர்டு மாற்றிவிட்டேன், ஆனால் என்ன கொடுத்தேன் என்பதை மறந்து... பாடுபட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்துட்டேன் :)

திரவிடன் 06-11-09 01:29 PM

நமது லோக கதையை வேறு இடத்தில் பத்து ஆச்சரிய பட்டது உண்டு !!
password மாற்றத்தால் இது தடுக்க படும் என்ன்றால் மிக்க சந்தோசத்தோடு வரவேற்கும் முதல் ஆள் நான்தான் இருக்கும்

gunguy 06-11-09 05:20 PM

நல்ல நேரத்தில் நினைவுபடுத்தினீர்கள் தலைவரே, மிகவும் அவசியமான ஒன்று. நன்றி.

kavina 06-11-09 05:25 PM

தலைமை நிர்வாகி அவர்களுக்கு வணக்கம். நாங்கள் காமலோகத்தில் "லாகின்" செய்யும் போது அனைத்து கடவுச்சொல்களும் http முறைப்படி "பிளைன் டெக்ஸ்ட்" ஆக "நெட்வொர்கில்" பரப்ப படுகிறது, இதன் மூலம் அடுத்தவர்கள் நம் கடவுச்சொல்லை அறிய வாய்ப்புள்ளது. நம் தளத்தில் "செக்யூர் லொகின்" எனப்படும் "https" வசதியை லாகின் செய்ய (மட்டுமாவது) உருவாக்கினால் நன்றாக இருக்கும்

hi2chat2003 10-11-09 01:05 PM

அருமையான நடவடிக்கை தலைவரே, நானும் எனது ரகசிய குறியீட்டை மாற்றவேண்டும் என்று நினைத்து மாற்றாமலே நீண்ட காலமாக இருந்து விட்டேன், இனி தாங்கள் கூறியது போல் அடிக்கடி மாற்றி விடுகிறேன்.

நன்றி தலைவரே

ஆதி 10-11-09 02:20 PM

பல வருடங்கலாக ஒரே பாஸ்வேர்டை உபயோகப்படுத்தினேன். காரணம் கொஞ்சம் வித்தியாசமான எழுத்துக்கள் என்று. இருப்பினும் இதுபோல் அவ்வப்போது மாற்றுவதும் நல்லதே. இப்போது புதுசு கண்ணா புதுசு....

மிக்க நன்றி இப்படி மாதம் ஒரு முறை பாஸ்வேர்ட் மாற்றம் செய்யவேண்டும் என்ற முறை கொண்டுவந்தமைக்கு.

madhavi 10-11-09 06:50 PM

மாசத்துக்கு ஒருமுறை எல்லாம் டூ மச்...
ஏதோ ஆறு மாதத்துக்கு ஒரு முறை .. ஓகே.
வங்கிகள் கூட இதைத்தான் வலியுறுத்துகின்றன..
எத்தனை பாஸ்வேர்டுகளைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியும்?

asho 10-11-09 07:10 PM

Quote:

Originally Posted by madhavi (Post 909166)
மாசத்துக்கு ஒருமுறை எல்லாம் டூ மச்...
ஏதோ ஆறு மாதத்துக்கு ஒரு முறை .. ஓகே.
வங்கிகள் கூட இதைத்தான் வலியுறுத்துகின்றன..
எத்தனை பாஸ்வேர்டுகளைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியும்?

ஏன் தேவையில்லாமல் டென்ஸனாகுகிறீர்கள் மாதவி,

மொத்தம் மூனு பாஸ்வேர்டை மட்டும் நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் போதும் :).

மேலே கண்ட எனது வரியை நன்றாக இன்னொருமுறை அல்லது புரியும் வரை படித்து பாருங்கள், பின் வீனாக டென்ஸனாக மாட்டீர்கள்.

ஜெய் 12-11-09 01:27 PM

மாத்திட்டேன்.
 
வரவேற்க்கத்தக்க ஒரு மாற்றம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று தான் தளத்திற்கு வந்தேன். வந்த உடனே பாஸ்வேர்ட் மாற்று என்று அடம் பிடித்தது. அட பாஸ்வேர்ட் திருடர்கள் இருக்கும் போது இந்த மாதிரி அடிக்கடி மாற்றுவது நல்லதொரு விஷயம் என்று பல தடவை எண்ணியதுண்டு ஆனால் நிர்வாகமே இந்த முறையை கடுமையாக்கியதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

நானும் மாத்திட்டேங்க என்னோட பாஸ்வே(போ)ர்டை.:y15:

bedroom_salak 14-11-09 06:10 PM

அவசியமான மாற்றம்.. வந்த நாள் முதல் ஒரே சொல்லையே பயன்படுத்தி.. இன்று மாற்றிவிட்டேன்..

sujay022 15-11-09 01:01 AM

பாஸ்வோர்ட் மாற்றம்
 
தலைவரே, கட்டாய பாஸ்வேர்ட் மாற்றத்திற்கு நன்றி. நானும் துவக்கதில் பாஸ்வேர்ட் திருடர்களால் மிகவும் அவதிபட்டிருக்கின்றேன்.
நன்றி - வணக்கம்

தமிழா 17-11-09 01:46 PM

ஒவ்வொரு மாற்றமும் லோகத்தின் நன்மைக்கே ! இந்தை தகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நிர்வாகி அவர்களுக்கு பாராட்டுக்கள் .

gemini 18-11-09 06:28 PM

உண்மை தான்....
ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்றுவது சிறந்தது.....

kudimagan 20-11-09 03:23 PM

பாஸ்வோர்ட் மாற்றுவது ஒரு அசெளகரியம் இல்லை. இது ஒரு கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயம். இனிமேல் நானும் மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளுகிறேன்

குடிமகன்

tamil kumaran 22-11-09 07:41 PM

நல்ல அவசியமான வரவேற்க்க தக்க நடவடிக்கை நானும் முதலில் குழம்பிவிட்டேன்

vjagan 07-03-10 11:47 AM

நன்றி அய்யா, நன்றி அய்யா, நன்றி அய்யா, என்று மூன்று முறை கூறி என் நன்றியை தெரிவிதுக்கொள்கிறேன் !

innocentdany 26-08-10 04:06 AM

இனி மாதா மாதம் மாற்றி விடுவேன்

nuralike 22-11-10 03:52 PM

நிர்வாகிக்கு நன்றிகள்.

Deepak 22-11-10 05:55 PM

கண்டிப்பாக இதை வரவேற்கிரேன்

மணிமணி 22-11-10 11:37 PM

இது நல்ல முயற்சிதான். மாற்றாமலே இருப்பவரும் மாற்றியே தீர வேண்டிய நிலை வந்தால் அவர்களுக்கும் நன்மை, சூழ்ந்திருப்பவர்க்கும் நன்மை.

umameena 23-11-10 10:46 AM

நன்றி நிர்வாகி அவர்களுக்கு இதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்

kay 23-11-10 12:02 PM

நன்றி! அவ்வாறே செய்கிறேன்! மறக்கக் கூடாது, மறந்து விட்டாலும் கடவுச்சொல் மாற்ற எச்சரிக்கை கொடுப்பது நல்லதே!:0019::0019::0019:

Hayath 24-03-11 12:16 PM

உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு சுலபமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள்.

இங்குள்ள அதே கடவுச்சொல்லை கொடுக்காமல் அதேபோன்றதொரு கடவுச்சொல்லை கொடுத்து கீழ்கண்ட தளங்களில் அறிந்துக் கொள்ளுங்கள்.

உ-ம்:

இங்குள்ள கடவுச் சொல் : lopk@2006@
அதேபோன்றதொரு கடவுச்சொல்: polk@0602@


Code:

http://howsecureismypassword.net

https://www.microsoft.com/protect/fraud/passwords/checker.aspx

http://www.passwordmeter.com


kay 25-03-11 09:29 AM

உபயோகமான, மிக முக்கியமான தகவல்!
நண்பர் ஹயாத்துக்கு நன்றி!:0019::0019::0019:

காமராஜன் 27-03-11 12:54 PM

கொஞ்சம் தொந்தரவாகத் தான் இருக்கிறது...
நல்ல வேளை முந்திய மறைச்சொல் ஏற்றுக் கொள்ளப் படுகிறது..
இல்லையானால் .. ரொம்பக் கஷ்டம் தான் சார்..

Laal 11-09-11 12:54 PM

இது ஒரு நல்ல நடவடிக்கை....வாழ்த்துக்கள்...

PanchBala 19-09-11 04:16 PM

இதில் சிரமம் இல்லை, அவ்வாறே செய்கிறோம்.

MURGUN 20-09-11 05:12 PM

அறிவிப்புக்கு நன்றி தலைவரே, உடனே மாற்றி விடுகிறேன் எனது பாஸ்வேர்டை

காமராஜன் 23-09-11 12:04 PM

மீண்டும் சொல்லுகிறேன்
ரொம்பத் தொந்தரவாகத்தான் இருக்கிறது..

காமத் தளங்களுக்கு என்று சில மறைச் சொல்களை வைத்திருக்கிறோம்.
அதை அடிக்கடி மாற்றச் சொல்லும் போது அதற்கு என்று வேறு ஒரு டாடா பேஸ் (data base) உருவாற்க வேண்டியிருக்கிறது..

இதனால்தானேயென்னவோ 23K+ உறுப்பினர்களின் 200 ஆட்களே ஆக்விவ்!!

sinnadurai 01-10-11 02:55 PM

பாஸ்வேர்ட்
 
வணக்கம் தலைவரே! புதியவர்களுக்கும் பாஸ்வேர்ட் மாற்றுதல் பற்றிய தகவல் மிகவும் உபயோகமானது. இங்கு மட்டுமல்ல பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை நீண்ட காலம் வைத்திருப்பது நல்லதல்ல. நன்றி.

raja004 19-01-12 09:32 PM

தங்களின் நினைவூட்டலுக்கும் அறிவுரைக்கும் நன்றி.....நன்றி

anabayan 20-01-12 05:30 PM

தலைவர் சொல்வது நியாயமே, பாஸ்வேர்டை மாத்துவது பாதுகாப்பானதே. நான் உடன் படுகிரேன்.

kaamaroja 22-01-12 02:42 PM

நல்ல அறிவுரை, இனி நான் மாதம் ஒருமுறை பாஸ்வர்ட் மாத்திவிடுகிறேன்.

உங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி.

அன்பு 31-01-15 09:55 AM

என்னுடைய பாஸ்வேர்டை ரொம்பவும் சிக்கலாகத்தான் போட்டு வைத்திருக்கிறேன். இனி அடிக்கடி மாற்றிக் கொள்கிறேன்.

madhavi 16-07-15 01:16 PM

அவ்வப்போது மாற்றுவது நிச்சயமாக அவசியமே...!!


All times are GMT +5.5. The time now is 11:59 AM.

Powered by Kamalogam members