காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   விடை பெற்ற விமர்சகர் சோ.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=69379)

sajid80 08-12-16 01:34 AM

ஒருவர் மறைந்து விட்டால் அவரின் குறைகளை குற்றங்களை பற்றி பேசாதீர்கள்,அவர்கள் செய்த செயல்களின் பலனை அவர் அடைந்து விட்டார் என சொல்கிறது.......

வேறென்ன சொல்ல?

tamilmaaran 08-12-16 05:07 AM

சோவின் மஹாபாரதம் பேசுகிறது என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அப்படி ஒரு தர்க்க விவரத்தை எவராலும் எழுதவே முடியாது. மிகச் சிறந்த படைப்பாளி. துக்ளக்கில் வரும் கார்ட்டூன்கள் ஆழங்கள் நிறைந்தவை.

அவரின நடிப்பு வசனங்கள் கூர்மையானவை. சிந்திக்க தூண்டுபவை.

சோ மறக்கவே முடியாத காலத்தால் அழிக்கவே முடியாத வரலாறு.

oolvathiyar 09-12-16 11:49 AM

என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஆர்டிஸ்ட் சோ இயற்கை ஏய்தியது வருத்தத்தை தந்தது. இவர் எழுதிய நாவல்களில் சிலதை மட்டுமே படித்திருக்கிறேன், ஆனால் இவர் தயாரித்து நடித்த நாடங்கள்ங்கள், நிகழ்ச்சிகள், பேட்டி, , சினிமா, நிறைய பார்த்து வயிரு குலுங்க சிரித்து மகிழ்ந்திருக்கிறேன். அதில் ஒரு நாடகத்தில் வந்த சீன் என்றுமே என் நினைவில் இருக்கும்.

அன்றைய செய்தித்தாளை படிப்பதற்காக கையில் எடுத்த சோ "வர வர இப்ப நியூஸ் பேப்பரை கையில எடுத்தாலே கொலை, கொள்ளை, கற்பழிப்புனு வருது" என்று சொல்லிவிட்டு பேப்பரை விரித்து "புதிய மந்திரி பதவியேற்பு" என்று செய்தி வாசிக்க துவங்குவார்.

Quote:

Originally Posted by vjagan (Post 1408571)
சிறந்த தேசியவாதியுமான

ஒரே வார்த்தையில் சோவை பத்தி சொல்லீட்டீங்க. அவர் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன்.

tamilplus 11-12-16 12:28 AM

அவர்மீது பல விமர்சனங்கள் பலருக்கும் உண்டு
, என்றாலும் தமிழ் அங்கத எழுத்துக்களில் அவருடைய இடத்தை இனி யாராவது நிரப்ப முடியுமா என்பது ஐயமே....
அவருடைய ஆத்மா சாந்தி அடைக....

ஸ்திரிலோலன் 19-12-16 10:53 AM

சோ அவர்களின் இடத்தை இனி யாராலும் பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..

coolguys12341 20-12-16 12:46 AM

சோ அவர்களுடைய நையாண்டி விமர்சனங்கள் இனி யாருக்கும் வராது. ஆன்மா சாந்தி அடையட்டும்.

mouni 20-12-16 02:02 AM

சோ இறந்ததற்கு என்ன வருத்தம்....என் ஐந்து மாத விரதத்தை இந்த திரிக்காக முடிக்கிறேன்.

சோ ஈழ தமிழர் விஷயத்தில் செய்தது துரோகம்....ஜெயவர்த்தனேவையே சப்போர்ட் செய்தவர் சோ. ஈழ தமிழர் விஷயத்தில் , ஆரம்பம் முதலே, நெகட்டிவ்வாக பேசி , என் போன்ற பல ஈழ விரும்பிகளுக்கு தொல்லை கொடுத்த மகான் இவன்.

சோ பீடை ஒழிந்தது ... நிம்மதி. இதே போல சுப்பரமணிய சாமி, ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பல தமிழ் துரோகிகள் உலவி வருகிறது...இந்த நாய்கள் வாழ்ந்தால் என்ன....செத்தால் என்ன....இவனுக்கு ஒரு திரியா....! கொடுமை.

செத்தான் சோ.....தமிழ் சமுதாயம் நிம்மதியாக இருக்கட்டும்.

ராசு 21-12-16 01:06 PM

Quote:

Originally Posted by mouni (Post 1409739)
..என் ஐந்து மாத விரதத்தை இந்த திரிக்காக முடிக்கிறேன். ... .

தாங்கள் மீண்டும் இங்கே வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து தங்கள் பதிப்புகளை வரவேற்கிறேன்.
Quote:

Originally Posted by mouni (Post 1409739)
.. சோ ஈழ தமிழர் விஷயத்தில் செய்தது துரோகம்....ஜெயவர்த்தனேவையே சப்போர்ட் செய்தவர் சோ. ஈழ தமிழர் விஷயத்தில் , ஆரம்பம் முதலே, நெகட்டிவ்வாக பேசி , என் போன்ற பல ஈழ விரும்பிகளுக்கு தொல்லை கொடுத்த மகான் இவன்.

சோ பீடை ஒழிந்தது ... நிம்மதி. இதே போல சுப்பரமணிய சாமி, ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பல தமிழ் துரோகிகள் உலவி வருகிறது...இந்த நாய்கள் வாழ்ந்தால் என்ன....செத்தால் என்ன....இவனுக்கு ஒரு திரியா....! கொடுமை.

செத்தான் சோ.....தமிழ் சமுதாயம் நிம்மதியாக இருக்கட்டும்.

சோ என்பது ஒரு புனைப்பெயர். அவரது அபிப்பிராயங்கள், கருத்துக்கள் பொதுவாக துக்ளக் என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப் பட்டன. அவருடைய கருத்துக்களுக்கும் உங்களுடைய கருத்துக்களுக்கும் சில முரண்பாடுகள் இருக்கலாம். பரவாயில்லை. அவரது தவறான சில கொள்கைகளால் ஈழத் தமிழர்களுக்கு சில தொல்லைகள் வந்திருக்கலாம். விபரம் எனக்கு தெரியாது. ஒருவேளை உங்கள் மாறுபட்ட கருத்துக்களை அவருக்கு அதே பத்திரிக்கையில் வாசகர் கடிதமாக எழுதியிருந்தால், அவர் அதையும் பிரசுரித்திருப்பார்.

ஆனால் இறந்தது "சோ" என்ற புனைப்பெயரின் பின்னணியில் இருந்த உண்மையான நபர். பெயர் "ராமசாமி". நன்றாக தமிழிலும், ஆங்கிலத்திலும் மேடையில் சுவாரஸ்யமாக பேசுவார். குறிப்பாக நகைச்சுவையுடன் பேசுவது அவரது பாணி !

வாசகர்கள் இங்கே பாராட்டுவது அவருடைய சில திறமைகளை பற்றி ! அரசாங்கத்தை பற்றி துணிச்சலாக விமர்சிப்பார். குறைகளை சுட்டி காட்டுவார் ! பத்திரிக்கையாசிரியர் என்ற முறையில் அவருடைய எழுத்துக்கள் ஒரு தனி தன்மையானவை ! அதுபோல் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சிப்பவர்கள் சொற்பமே !

அவரது சில கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு இல்லை. இருந்தாலும் அவரது இழப்பு வருத்ததை ஏற்படுத்துகிறது !

mouni 21-12-16 04:12 PM

சோ கடைந்தெடுத்த இந்துத்வா வாதி!

ரிஸர்வேஷனுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்....சாகிற தருணம் வரை திராவிட இயக்கங்களை நையாண்டி செய்தவர்...மிடாஸ் போன்ற சாராய ஆலைகளை நிர்வகித்தவர்....பெரியாரை எல்லாம் துச்சமாக பேசியவர்.

தமிழ் சமுதாயத்திற்கு என்ன ஆனது....அம்மா போனவுடன் சின்னம்மா, துதி பாடுதல், ஜால்ரா கச்சேரிக்கள், எம்.ஜி.ஆர் ஜெயித்ததே சின்னம்மாவால்தான் என்பது போல ஜால்ரா.....

முதுகெலும்பு இல்லாமல் தமிழ் துரோகிகளை ஐயோ பாவம் என்று பார்ப்பதால்தான் எல்லாரும் தமிழர்களை மொட்டை அடிக்கிறார்கள்.

அலேப்போ ஞாபகம் இருக்கட்டும் என்று சுட வேண்டாம், ஐயோ எவ்வளவு பெரிய ஆள் என்று துதி பாடாமல் இருக்கலாம்.

ஆனால் ஒன்று, செத்தாலும் விளங்க மாட்டான்...இதுவே உண்மையான தமிழன் சாபம்.

xxxGuy 22-12-16 09:38 AM

மௌனி,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. அவரைப் பற்றி இவை எல்லோரும் அறிந்ததே இருந்தாலும் ஒருவர் உயிருடன் இருக்கும் போது எப்படி வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம், திட்டலாம், வசை பாடலாம், ஆனால் இறந்த பின் அவர் செய்த கெட்டவைகளை யாரும் வெளியே பேசி அவரை அசிங்கப் படுத்த மாட்டார்கள், அவர் செய்த நல்லதை மட்டுமே பேசுவார்கள். அது தான் தமிழர் பண்பாடு. அதைத் தான் மற்ற உறுப்பினர்கள் பின் பற்றுகிறார்கள், நாம் அனைவரும் அதையே பின்பற்றுவோம். வீண் சர்ச்சைகளைத் தவிர்ப்போம்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" அது தான் தமிழர் பண்பாடு.

Quote:

Originally Posted by mouni (Post 1409921)
ஆனால் ஒன்று, செத்தாலும் விளங்க மாட்டான்...இதுவே உண்மையான தமிழன் சாபம்.



All times are GMT +5.5. The time now is 09:35 AM.

Powered by Kamalogam members