காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உலக புத்தகங்கள் தினம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64816)

dreamer 23-04-14 06:51 PM

உலக புத்தகங்கள் தினம்
 
இன்று 23 ஏப்ரல் -- 'உலக புத்தகங்கள் தினம்.'

கி.பி. 1564-ம் ஆண்டு இந்த நாளில்தான் உலகத்தின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தார். கி.பி. 1616-ல் இதே நாளில்தான் (தனது ஐம்பத்திரண்டாவது வயதில்) மரணமடைந்தார்.

ஜனரஞ்சகமான படைப்புகளுக்கு ஷேக்ஸ்பியரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை. எனவேதான் இவர் பிறந்த/இறந்த தினத்தைப் புத்தகங்கள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.

என்றும் உயிரோடுள்ள இவ்வாசிரியரை அவரது 450-வது பிறந்தநாளில் வாழ்த்துவோமா?

oolvathiyar 23-04-14 08:31 PM

அனைவருக்கும் உலக புத்தக தினத்தை நினைவு கூர்த்த டிரீமர் ஐயாவுக்கு என் நன்றி, அதுவும் சேக்ஸ்பியரின் 450 பிறந்த தினம் என்பது மிகவும் சந்தோஷமான விசயம். என்னுடைய இளம் வயதில் சேக்ஸ்பியர் சில புத்தகங்களை நான் விரும்பி படித்திருக்கிறேன். அப்போதைய வயதில் என்னை மிகவும் கவர்ந்தது அவரின் டுவல்த் நைட் என்ற கதைதான்.

Mathan 23-04-14 11:32 PM

இவர் கதைகளை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கண்டிப்பாக பள்ளி / கல்லூரிகளிலாவது படித்திருக்கக்கூடும்.
இவரைப் பற்றிய பல அறிய தகவல் தந்த ட்ரீமர் ஐயாவிற்கு எனது நன்றி.
இவர் பிறந்து 450 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தெரிந்துக்கொண்டேன்.
இவர் பிறந்ததும் / இறந்ததும் ஒரே தினத்தில் என்பதையும் தெரிந்துக்கொண்டேன் !!

ஸ்திரிலோலன் 24-04-14 01:26 AM

ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்று மற்றும் அந்நாளையே உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுகிறது என்று பல தகவல்கள் இன்று நம் ட்ரீமர் ஐயா மூலமாகத் தெரிந்து கொண்டுள்ளேன். மிக்க நன்றி ஐயா...

tdrajesh 24-04-14 07:09 AM

அனைவருக்கும் உலக புத்தக தினத்தை நினைவு கூர்ந்த டிரீமர் அண்ணாவுக்கு என் நன்றி.

ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில் என்பது நான் இதுவரை அறியாத ஒரு விஷயம்.

Nallavan1010 24-04-14 08:41 AM

மிகவும் அபூர்வமான தகவலை தந்துள்ள அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு நன்றி. நண்பர்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by dreamer (Post 1289044)
ஜனரஞ்சகமான படைப்புகளுக்கு ஷேக்ஸ்பியரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை.


கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற தமிழ் பழமொழியும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவை போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

என்ற மஹாகவி பாரதியார் சொல்லும் இந்நேரம் என் மனதில் நிழலாடுகின்றன. மேலை நாட்டு அறிஞர்களில் தலை சிறந்தவர் ஷேக்ஸ்பியர். இருப்பினும் நம்மவர்களையும் நாம் நினைவு கூர்தல் நலம் அல்லவா?

snehan 24-04-14 09:44 AM

அரிய தகவல்கள். உலகப்புத்தக தின வாழ்த்துகள் பற்றிய தகவல்கள் சொன்ன ட்ரீமர் ஐயாவுக்கு நன்றிகள்

உலக புத்தக தின வாழ்த்துகள்.

dreamer 24-04-14 03:07 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1289139)
Quote:

Originally Posted by dreamer (Post 1289044)
ஜனரஞ்சகமான படைப்புகளுக்கு ஷேக்ஸ்பியரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை.


கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற தமிழ் பழமொழியும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவை போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

என்ற மஹாகவி பாரதியார் சொல்லும் இந்நேரம் என் மனதில் நிழலாடுகின்றன. மேலை நாட்டு அறிஞர்களில் தலை சிறந்தவர் ஷேக்ஸ்பியர். இருப்பினும் நம்மவர்களையும் நாம் நினைவு கூர்தல் நலம் அல்லவா?

நம் தளத்து நற்றமிழ் வித்தகர்களில் யாருக்காவது இப்படித் தோன்றலாம் என்று எதிர்பார்த்துதான் 'ஜனரஞ்சகமான படைப்புகள் என எழுதினேன். ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும் ஊறித் தோய்ந்த மகாகவி அவர்களைவிட உயர்வான இடத்தில் கம்பரையும் வள்ளூவரையும் இளங்கோவையும் வைத்திருப்பது நமக்குப் பெருமைதான். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில்கூட புலவர்கள் உதவியின்றி ஒரு சராசரி மனிதன் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொண்டு ரசித்திருக்க முடியுமா?

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அப்படியல்ல. அவர் எழுதிய வசனங்களை தரை டிக்கட் (the pit) ஆடியன்ஸ் ஆரவாரமாக வரவேற்று ரசித்தனர். 'ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதானே பொருள்? மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இன்று ஷேக்ஸ்பியருக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது.

காமலோக உறுப்பினர்களுக்கு ஒரு கொஸுரு செய்தி. ஷேக்ஸ்பியர் எழுதிய பச்சையான காம வசனங்களை அவர் நாடகங்களுக்கு வந்திருக்கும் மக்கள் விஸிலடித்து வரவேற்றனர். அப்படிப்பட்ட பச்சையான காம வசனங்களைத் தொகுத்து இக்கால வாசகர்களுக்காக விளக்கமும் தந்துள்ள ஒரு புத்தகம்:

'Shakespeare Bawdy' by Eric Partridge

anabayan 24-04-14 03:28 PM

பெரும்பாலானோர் யாரும் அறிந்திடாத மிகவும் அரிய தகவலை தந்த அண்ணாவுக்கு நன்றி.

kamakodangi68 24-04-14 03:35 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1289184)
யாருக்காவது இப்படித் தோன்றலாம் என்று எதிர்பார்த்துதான் 'ஜனரஞ்சகமான படைப்புகள் என எழுதினேன்.

மதிப்பிற்குரிய ஐயா...

சும்மா நுழைந்து பார்ப்போமே என்று நுழைந்ததில் உங்களின் திரி கண்ணில் அகப்பட்டதால்.. அகப்பட்டதில் உள்ளதை வெளிப்படுத்துகிறேன்.

Quote:

Originally Posted by dreamer (Post 1289184)
வர்கள் வாழ்ந்த காலத்தில்கூட புலவர்கள் உதவியின்றி ஒரு சராசரி மனிதன் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொண்டு ரசித்திருக்க முடியுமா?

ஏன் முடியாது..?

அப்போதும் உரைநடைத் தமிழ் அல்லது தற்காலத்தமிழ் போன்றவையோ நடைமுறையில் இல்லையே.. எனவே ஒரு சராசரி மனிதன் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொள்ள முடியும். பதிலும் தரமுடியும்.

உதாரணத்திற்கு..

கவி காளமேகப்புலவர் நாகைக்குச் சென்றபோது (நாகை என்றுதான் நினைக்கிறேன்) ஒரு உணவு விடுதியில் மதிய உணவு அருந்த காத்திருந்தபோது உணவு வர நேரமானதால் அந்த விடுதி இருந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம்..."உணவு எங்கேப்பா விக்கும்..?" எனக் கேட்டாராம்.

அதற்கு அந்த சிறுவன்... "உணவு தொண்டையில்தான் விக்கும்.." என இரட்டுற மொழிந்தானாம். (சோழநாடு சோறுடைத்து.. எனவே பஞ்சம் அடிக்கடி ஏற்படும் தொண்டை நாட்டையே அச்சிறுவன் குறிப்பிட்டான் என்பது என் தமிழாசிரியர் எனக்கு கூறியது}

காளமேகம் எப்பேர்ப்பட்ட இரட்டுறமொழிபவர்.. அவரையே திகைக்கவைத்த பதிலடி வரிகள். சாமானியனான ரோட்டில் விளையாடும்.. தரை டிக்கட் வம்சமான சிறுவனின் பதில் மொழி அது. அதுகுறித்து காளமேகம் புகழ்ந்தும் செய்யுள் இயற்றியிருக்கிறார். எனவே சராசரி மனிதனும் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொண்டு ரசித்திருக்கமுடியும்.. பதிலடி கொடுக்கமுடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஐயா..

Quote:

Originally Posted by dreamer (Post 1289184)
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அப்படியல்ல. அவர் எழுதிய வசனங்களை தரை டிக்கட் (the pit) ஆடியன்ஸ் ஆரவாரமாக வரவேற்று ரசித்தனர். 'ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதானே பொருள்? மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இன்று ஷேக்ஸ்பியருக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது.

ஐயா..

இதில் உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதான் பொருள். இதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஜனரஞ்சகம் என்பது மாறுபடும். அதை இன்றிருக்கும் அளவுகோலால் அளப்பது சரியானதல்ல.

உதாரணத்திற்கு..

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே..
மேயாத மான்.. மே....யா....த.... மான்...
சாயாத கொம்பிரண்டிருந்தும் அது தலைநிமிர்ந்து பாயாத மான்...


என்றெல்லாம் கூத்துக்களில் பாடும்பொழுது தரைடிக்கட் ஆடியன்ஸ் கைதட்டி வரவேற்பர். கருத்தைப் புரிந்து ஆரவாரம் செய்வர். ரசித்து தங்கள் இணையைக் காதலோடு பார்ப்பர். அவர்களுக்கு அப்போது நோட்ஸ் தேவைப்படவில்லை. ஆனால் இவ்வரிகளுக்கு இன்றைய ஜெனரேஷனுக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது ஐயா.. இதுதான் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் பொருந்துகிறது.


All times are GMT +5.5. The time now is 07:53 PM.

Powered by Kamalogam members