காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   can i scan and upload (http://www.kamalogam.com/new/showthread.php?t=51527)

enkanavugal 19-08-09 12:13 AM

can i scan and upload
 
hi admin,

i know how to write in tamil, but when i try to type in tamil i get a lot of spelling mistake and it is consuming a lot of time, can i write in tamil in a piece of paper, scan it and upload it as a pdf.

is it allowed.

kindly explain.

JACK 19-08-09 12:24 AM

நண்பரே உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகங்கள் இருந்தால் முதல் அதற்க்கான விடை ஏற்க்கனவே இருக்கிறதா என்று நமது தளத்தில் தேடுங்கள் அப்படி கிடைக்க வில்லையேல் நிர்வாக நண்பர்களுக்கோ இல்லை மூத்த உறுப்பினர்களுக்கோ தனி மடலிட்டு கேளுக்கள் இப்படி தனி திரி துவங்கி ஆரம்பத்திலேயே எச்சரிக்கை புள்ளிகள் வாங்காதீர்கள் நீங்கள் கேட்ப்பதுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது

நீங்கள் தமிழில் சுலபமாக எழுத கீழே கொடுத்துள்ள லின்கில் போய் பார்க்கவும்
தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்


பிறகு படைப்புகளை படைத்து பின்னூட்டமிடுங்கள் அது தமிழை தப்பில்லாமல் தட்டச்சு செய்ய உங்களுக்கு உதவியாக இருக்கும் முதலில் எழுத ஆரம்பிக்க போது எழுத்து பிழைகள் வரதான் செய்யும் பழக பழக கால போக்கில் அது சரியாகிவிடும் நன்கு தமிழ் தட்டச்சு செய்ய வந்த பிறகு கதையை பதிக்க ஆரம்பியுங்கள்

பச்சி 19-08-09 12:29 AM

நண்பரே,

தாங்கள் கேட்கும் இந்த வசதி நம் தளத்தில் கிடையாது.

தாங்கள் தமிழ் டைப் செய்வதற்காக எந்த வகை சாப்ட்வேர் பயன்படுத்துகிறீர்கள்? என்பதை பொறுத்து தங்களுக்கு கஷ்டமாகவும், லேசாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது.

தமிழில் டைப் செய்வது தாங்கள் சொல்வது போல கஷ்டமில்லை நண்பரே. நாங்களெல்லாம் இங்கு வந்துதான் கற்றுக் கொண்டோம். ஆரம்பத்தில் அப்படித்தான் தெரியும். பழகிவிட்டால் எழுத்துப்பிழைகள் சரியாகி, வேகமாகவும் டைப் செய்துவிடலாம். நம்பிக்கையோடு முயலுங்கள்.

நம் தளத்தில் 'தலைவாசல்' பகுதியில் 'எழுத்துரு உதவி' பகுதியில் தங்களுக்கு தேவையான 'தமிழில் எழுத' எல்லா வகை வழிகளும் இருக்கின்றன. ஒரு முறை சுற்றிப்பாருங்களேன்.

மேலே நண்பர் ஜாக் குறிப்பிட்டுள்ள 'தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்' என்ற திரியும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவர் கூறியுள்ள கருத்தையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

asho 19-08-09 04:09 PM

திரி ஆரம்பித்த நண்பருக்கு,

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப்போக தட்டச்சு செய்வது எளிதாகி விடும். ஆனால் ஸ்கேன் செய்து படமாக(JPEG, JPG) பதிப்பதில் நிறைய சிரமம் உள்ளது.

1)உங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும்.
2)ஸ்கேன் செய்த படத்தெளிவு அதிகமாக இருந்தால் அதிக பேண்ட்வித் செலவு இருபக்கமும் நேரிடும்
3)தட்டச்சில் கதை இருந்தால் தான் சேர்ச் செய்து பார்க்க முடியும்
4)பிழை திருத்தம், கதையின் ஒரு பகுதியை கோட் செய்வது இயலாமல் போகும்
5)ஸ்கேன் செய்வது மற்றும் அதனை இன்னொரு தளத்தில் ஏற்றி சுட்டி தருவது இதெல்லாம் கூடுதல் வேலை. சிலருக்கு சில தளத்தில் பதிவேற்றப்பட்டவை அந்தந்த நாட்டு இனையவழங்குநர் தடையால் கிடைக்காமல் போகலாம்

இப்படி நிறைய அடுக்கி கொண்டே போகலாம், நீங்கள் தமிழ் தட்டச்சு செய்வது தான் சரியான சிறந்த வழி, இனி இன்னொரு திரி ஆங்கிலத்தில் பதிக்காதீர்கள். தமிழிலே பதிக்க பாருங்கள். ஆங்கிலத்தில் பதிவது தள விதிகள் படி தவறு.


All times are GMT +5.5. The time now is 01:46 AM.

Powered by Kamalogam members