காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மென்பொருள் மேம்படுத்துதல் - ஜனவரி'10 (http://www.kamalogam.com/new/showthread.php?t=53537)

xxxGuy 11-01-10 01:18 PM

மென்பொருள் மேம்படுத்துதல் - ஜனவரி'10
 
நண்பர்களே,

நமது தளத்தின் பாதுகாப்பு கருதி அதன் மென்பொருளை அவ்வப்போது மேம்படுத்துதல் செய்தல் அவசியம். அதனால், பொங்கலை முன்னிட்டு விரைவில் நம் தள மென்பொருளை சிறிய அளவில் மேம்படுத்த உள்ளோம். ஒரேயடியாக தளத்தை மூடி வேலை செய்யாமல், சிறிது சிறிதாக அடுத்த 4-5 நாட்கள் வரை (11-15 ஜனவரி) வேலை நடைபெறும். இடையில் சிறு சிறு தடங்கல்கள் வரலாம், அவற்றைப் பொருத்துக் கொள்ளவும்.

நீங்கள் பதிவு செய்யும் பெரிய பின்னூட்டங்கள், திரிகள், படைப்புகளை உங்கள் கணிணியில் ஒரு நகல் எடுத்து வைத்துக் கொண்டு பதிக்கவும். இந்த மேம்படுத்தும் சமயத்தில் தளத்தில் பதிப்பவை சில சமயம் தோன்றாமல் போகலாம். அதனால், உங்கள் உழைப்பு வீணாகாமல் இருக்க தகுந்த ஏற்பாடு செய்து கொள்ளவும்.

முதலில் மூல மென்பொருள் மேம்படுத்தப் படும், பின்னர் அதனுடன் சேர்க்கப் பட்ட இதர சிறப்பு வசதிகளான தளத் தலைப்பு பகுதி, ஐகேஷ் வசதி, யுனிகோட் கன்வர்ட்டர் போன்றவை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கப் படும். அதுவரை சற்று பொறுமை காத்து ஒத்துழைப்பு கொடுக்கவும்.

கணிணித் துறை மற்றும் மென்பொருட் துறையிலுள்ளவர்கள் புரிந்து கொள்ள சில விவரத் தகவல்கள் இதோ: நாம் நம் தளத்திற்கு தற்போது விபுல்லட்டின் என்ற மன்ற மென்பொருளின் 3.7.4 வெர்சனை உபயோகிக்கிறோம். இதற்கு அடுத்து 3.8.x வரிசையும், அதற்கு அடுத்து 4.0.x வரிசையும் வந்துள்ளன. இதில் புதிய வரிசையான 4.0.x-ல் இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன, குறிப்பாக தமிழில் தேடுதல் சரிவர வேலை செய்யவில்லை. அதனால், நாம் 3.8.x வரிசைக்கு மாற உள்ளோம், 4.0.x வரிசைக்கு அல்ல.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..!!!

vaaliban 11-01-10 01:28 PM

தலைவர் அவர்களே!

இந்த மென்பொருள் மாற்றம் எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக முடிய வாழ்த்துகிறேன். தள உறுப்பினர்கள் என்றும் உங்களுடன் உறுதுணையாக இருப்பார்கள்.

MACHAN 11-01-10 01:35 PM

தள மேம்பாட்டிற்காக தலைவர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயமாக உண்டு. பதிவுகளை கணிணியில் நகல் எடுத்து வைத்துக் கொள்ள சொன்ன உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி தலைவரே. இல்லாவிட்டால் எங்களின் உழைப்பு சில நேரங்களில் வீணாகியிருக்கலாம். தகவலுக்கு நன்றி.

sunrise 11-01-10 01:41 PM

தலைவர் அவர்களுக்கு,

எனது புது வருட (2010) வாழ்த்துக்களுடன், அட்வான்ஸ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்களுடைய மென்பொருள் மேம்படுத்துதல் அறிவிப்பை தக்க நேரத்தில் படித்ததால் நான் பதியபோகும் கதையையும் எவ்வித பாதிப்பு இன்றி பதிக்க இவ்வறிப்பு பயனுள்ளதாக அமைவதால் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மென்பொருள் மேம்படுத்துதல் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்

udhayasuriyan 11-01-10 01:43 PM

தளத்தை மேம்படுத்த மேம்படுத்த.. எங்களுக்கு(எனக்கு) குறைந்த வேகம் கொண்ட இனையத்தில்.. காமலோகம் திறக்கவே மாட்டுது...ம்ம்ம்

எப்படியிருந்தாலும்.. மேம்பாட்டு பணிகளுக்கு.. பணி சிறக்க வாழ்த்துக்கள்..
வாழ்க தமிழ்

PUTHUMALAR 11-01-10 01:52 PM

'புதியன புகுதலும் பழையன கழிதலும்'
 
தலைவர் அவர்களின் தள மேம்படுத்துதல் அறிவிப்பு தைப் பிறக்கும் இவ்வேளையிலே 'புதியன புகுதலும் பழையன கழிதலும்' என்ற முதுமொழிக் கேற்ப அமைவதில் மகிழ்ச்சியே..

இதனால் ஏற்படும் சிறு சிறு சங்கடங்களை எதிர்வரப்போகும் நன்மைகள் கருதி பொறுப்போமாக.. தலைவர் அவர்களின் ஆலோசனைப் படி நடப்போமாக என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழா 11-01-10 02:02 PM

இந்த லோகத்தின் வளர்ச்சிக்காக, நிர்வாகி எடுக்கும் முயற்ச்சிக்கு எங்கள் ஒத்துழைப்பு கட்டாயம் இருக்கும்.

maria 11-01-10 02:14 PM

நேற்றீல் இருந்து ஒரே டென்ஷன்
காமலோகம் அக்ஸஸ் பன்னவே முடியவில்லை
நேட்ஒர்க் பிரப்ளம் என நினைத்தேன்
தகவலுக்கு நன்றி

grponly 11-01-10 02:35 PM

மாற்றம் ஒன்றே மாறது என்பதற்கு ஏற்ப தளத்தை மேம்படுத்த நிர்வாகி எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள்.தங்களது ஆலோசனைகளையும் படைப்பாளிகள் கவனத்தில் எடுத்து கொள்வார்கள்

junaam 11-01-10 02:44 PM

நீங்கள் எங்களுக்காக சேவையை மேம்படுத்தும் போது இதில் எங்களுக்கு சந்தோசமே .


All times are GMT +5.5. The time now is 01:11 AM.

Powered by Kamalogam members