காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உதயசூரியன் அஸ்தமித்து விட்டார். (http://www.kamalogam.com/new/showthread.php?t=71124)

venkat2012 07-08-18 09:10 PM

உதயசூரியன் அஸ்தமித்து விட்டார்.
 
தமிழ் காதலர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6:10 அளவில் அஸ்தமித்து விட்டார். அவரது அரசியலில் பலருக்கு விருப்பு வெறுப்பு இருந்தாலும் அவர் தமிழுக்கு அனைவரும் ரசிகரே.. தமிழ் நாடு சிறந்த தமிழ் காதலரை இழந்து விட்டது..

kauveri 08-08-18 12:18 PM

அவர் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அது ஒரு சகாப்தம். அவரின் இல்லாமை தமிழ் சமுதாயம் நீண்ட காலங்களுக்கு உணர்ந்துக் கொண்டுத்தான் இருக்கும். அவருக்கு நம் அஞ்சலிகள்.

NamiXXX 08-08-18 10:03 PM

தலைவரின் ஆன்மா சாந்தியடையட்டும் .. :(

rafiahamed 09-08-18 03:11 PM

ஒரு நல்ல தமிழ் பெற்றுக்கொண்ட முத்தமிழ் தலைவர் ,
கலைஞர் .......
அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் ........

killingkavitha 09-08-18 03:53 PM

தெற்கில் மறைந்த சூரியன். தமிழ் காதலனாய், தமிழ் கிறுக்கனாய், தமிழுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த திருக்குவளை உதயசூரியன் தனது ஓய்வை வங்கக்கடலில் கரையோரத்தில் ஓய்வெடுக்கிறது. " ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான்"

niceguyinindia 11-08-18 11:17 AM

மிக நீண்டதொரு சரித்திரம் சகாப்தம் .. அவரது பேச்சை கேட்டால் காந்தம் போல ஈர்த்து விடுவார் .. ஆளுமைக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

sinna vaaththiyaar 12-08-18 03:35 PM

ஆட்சியில் இருந்த போதும் சரி,இல்லாத போதும் சரி,தனது கட்சியையும்,தொண்டர்களையும் பேச்சிலும்,எழுத்திலும் சோர்வடையாமல் வைத்திருந்த அவரின் தலைமை ஆளுமைக்கு நிகர் வேறு தலைவர்கள் கிடையாது....

தமிழ் போற்றும் தலைவருக்கு அஞ்சலிகள்.

sreeram 12-08-18 07:42 PM

ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக. அவரின் தமிழின் ஆளுமை என்னை வெகுவாகக் கவர்திழுத்தது உண்மை.

udhayasuriyan 12-08-18 07:57 PM

26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அறிவித்தன..

தமிழ்நாடு அல்லாத தென் மாநிலங்கள் அனைத்தும் விடுமுறை நாளாக அறிவித்தன..

பீகார் அரசு கலைஞருக்காக இரண்டு நாள் துக்கம், விடுமுறையோடு அறிவித்தது..

இந்திய தேசிய வரலாற்றில் இப்படி ஒரு துக்க தினம் இவ்வளவு மாநிலங்களால் அறிவிக்கப்பட்டது முதல் முறை கலைஞருக்கு மட்டும்தான்..

இவ்வளவு அண்டை மாநிலங்கள் , வடமாநிலங்கள

ஒரு மாநில அரசியல் கட்சி தலைவனுக்கு அஞ்சலி மரியாதை செலுத்துவது சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்
இந்தியா வரலாற்றில் இதுவே முதல் முறை..

14 வயதில் தொடங்கி கலைஞரின் வாழ்வு எல்லாமே சாதனை என்றால்..

மாநிலம் தாண்டி தேசியத்தையே வருந்த வைத்து,
சாவிலும் சாதனை படைத்திருக்கிறாய் தலைவா.. ❤️❤️❤️

#ஒரேதலைவர் #ஒரேகலைஞர்

HERMI 17-08-18 03:20 PM

அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது தமிழ் பற்று அளவிடற்கரியது. அன்னாரது ஆத்மா நித்திய இளைப்பாறல் அடைவதாக.


All times are GMT +5.5. The time now is 10:09 PM.

Powered by Kamalogam members