காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   அமேஜானின் கின்டில் இ-புக்கில் தமிழ் புத்தங்கள் படிக்க சிக்கல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65149)

raja35 31-07-14 07:10 PM

அமேஜானின் கின்டில் இ-புக்கில் தமிழ் புத்தங்கள் படிக்க சிக்கல்
 
அமேஜானின் கின்டில் இ-புக்கில் தமிழ் புத்தங்கள் படிக்க சிக்கல்

அமேஜானின் இ புக் கின்டில் என்னும் இ புக் ரீடர், பல நூறு ஆங்கில புத்தங்களை சேமித்து வைத்து, நினைத்த இடத்தில் பொழுதில் படிக்க அற்புதமான வசதி படைக்கும் ஒரு கருவி. அதில் தமிழ் புத்தங்களை ஏற்றிப் படிக்க ஒரிரு வருடங்களாக நான் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண முடியவில்லை. கின்டிலில், பி டி எப் வடிவில் தமிழ் புத்தங்களை படிக்கலாம். ஆனால், அந்த முறையில், எழுத்து வடிவம் சிறியதாகி படிக்க சிரமம். எழுத்து வடிவத்தை பெரிதாக்கினால், ஒரு பக்கத்தை படிக்க இடது அல்லது வலதுக்கு தள்ளித் தள்ளி படிக்க வேண்டும். இ புத்தங்களுக்கான மோபி பார்மேட்டில் இருக்கும் புத்தங்களை, கின்டிலில் ஏற்றினால், தேவையான அளவுக்கு எழுத்தளவை மாற்றினாலும், ஆட்டோமாட்டிக்காக அதை பக்கம் பக்கமாக பகுதி செய்து, சுலபமாக படிக்க வசதி செய்து விடும் கின்டில். இந்த முறையில் தமிழ் புத்தங்களை மோபி பார்மார்டில் மாற்ற எனது முயற்சி ஆரம்பமானது. ஒரு வளைதளத்தில் சொல்லியவாறு, பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஒரு பகுதியை, வேர்ட்டில் ஏற்றி, வெப் பேஜ் பார்மாட்டில் பதிவு செய்து கொண்டேன், பின் கேலிபர் என்னும் மென் பொருளை பயன் படுத்தி, அதனை மோபி பார்மாட்டிற்கு மாற்றிக் கொண்டேன். அடுத்து கேலிபர் மூலமாகவே, கின்டிலுக்கு அனுப்பியதும், கின்டிலில் தமிழ் எழுத்தில் புத்தகம் ஏறி விட்டதை கண்டதும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், கைக்கெட்டியது வாய்க்கெட்டாதது போல், தமிழ் சொற்கள் பல தப்பு தப்பாய் இருப்பதை கண்டு சோர்ந்து போனது மனது. சொற்களில் கொம்பு சுழிக்கள் யாவும் தப்பான இடத்தில் இருந்தன. உதாரணத்திற்கு, சோழன் என்ற சொல்லில், கொம்பு சுழி ச எழுத்திற்கு முன்னுக்கு பதிலாய் பின்னுக்கு வந்து என்னை வெறுப்பேற்றியது..

இந்த சிக்கலை நீங்கள் எதிர் கொண்டீர்களா, அதனை தீர்க்க வழி தெரிந்த நண்பர்கள் தயவு செய்து, வழி காட்டுங்கள்.

- போத்தன் ராஜா

venkat8 01-08-14 04:18 AM

அமேஸான் கிண்டில் தமிழுக்கு உகந்ததல்ல!.

mayakrishnan 07-08-14 12:44 PM

எனக்குத் தெரிந்து இது அமெசான் நிறுவனத்தார் தான் சரி செய்ய வேண்டும். மேலை நாட்டு கணிப்பொறி மற்றும் மென்பொருட்களில் எப்போதுமே தமிழுக்கு ஆதரவு கிடைப்பது தாமதமாகவே இருக்கிறது.

கேலிபர் மென்பொருள் கணிப்பொறிக்கு நன்று. ஆனால் இபுக் ரீடர்களுக்கு இன்னும் வழி பிறக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

பட்டிகாட்டான் 07-08-14 08:51 PM

நண்பர்கள் பேசிக்கொள்வது ரொம்ப பெரிய விஷயம் போல தோணுது.
நாம கொஞ்சம் வாய மூடிகிட்டு இருப்பது நல்லது

mayakrishnan 05-08-15 07:21 PM

ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்தப் பிரச்சனையைப் பேச வேண்டியுள்ளது. டீவியில் பிரம்மாண்டமாய் விளம்பரம் செய்கிறார்கள் கிண்டில்லுக்காக. ஆனால் இன்னும் தமிழ் எழுத்துகள் ஒழங்காக தெரியவில்லை. பி.டி.எப்பில் தமிழைப் படிப்பது நிறைவாக இல்லை.

நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம், டீவியில் தொடர்ந்து விளம்பரம் என கிண்டில் பேப்பர் வொயிட்டிற்காக செலவழிக்கும் ஆமேசான் என்று தமிழர்களின் சந்தையை நினைத்து பார்க்கும்?

ganesh143 05-08-15 09:02 PM

தமிழர்கள் இதை புறக்கணிக்க வேண்டும்...

padithoraipandi 06-08-15 12:02 AM

http://freetamilebooks.com/
இது போன்ற தளத்தில் தமிழ் .mobi புத்தகங்கள் கிடைக்கின்றன. நான் படித்து பார்த்ததில்லை. இதை நம்பிதான் கின்டில் ஆர்டர் செய்துள்ளேன்.

நீங்கள் முயற்சித்து பார்த்து பின்னூட்டம் இடவும்.

mouni 06-08-15 04:01 AM

அருமையான தளம். அறிமுகபடுத்தியதற்கு நன்றி!

அன்புடன்
மௌனி

Quote:

Originally Posted by padithoraipandi (Post 1351225)
http://freetamilebooks.com/
இது போன்ற தளத்தில் தமிழ் .mobi புத்தகங்கள் கிடைக்கின்றன. நான் படித்து பார்த்ததில்லை. இதை நம்பிதான் கின்டில் ஆர்டர் செய்துள்ளேன்.

நீங்கள் முயற்சித்து பார்த்து பின்னூட்டம் இடவும்.

venkat8 06-08-15 04:43 AM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1351200)
நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம், டீவியில் தொடர்ந்து விளம்பரம் என கிண்டில் பேப்பர் வொயிட்டிற்காக செலவழிக்கும் ஆமேசான் என்று தமிழர்களின் சந்தையை நினைத்து பார்க்கும்?

நண்பரே சரியாக ஒரு வருடம் கழித்து நாம் இந்த திரிக்கு வந்திருக்கிறோம். அமேசானிலேயே நிறைய தமிழ்ப்புத்தகங்கள் கிண்டில் வர்ஷனில் கிடைக்கிறது. இலவசம் அல்ல காசு கொடுத்து தான் வாங்க வேண்டும்.

Quote:

Originally Posted by padithoraipandi (Post 1351225)
இது போன்ற தளத்தில் தமிழ் .mobi புத்தகங்கள் கிடைக்கின்றன

நண்பர் சொன்னது போல் வேறு சில தளங்களிலும் மொபி புத்தங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் நாம் தேடும் புத்தமெல்லாம் கிடைக்காது.

சரி பிடிஎஃப் புத்தகங்களை எப்படி கிண்டிலுக்கு ஏற்றவாறு மாற்றுவது?

இங்கு படித்து பார்க்கவும். இந்த வலைப்பதிவில் வந்துள்ள பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

இந்த வலைப்பதிவினை பதித்தவர் மேலே படித்தொர பாண்டி கூறிய தளத்தின் குழுவில் ஒருவர்.

mayakrishnan 06-08-15 11:48 AM

Quote:

Originally Posted by venkat8 (Post 1351238)
நண்பரே சரியாக ஒரு வருடம் கழித்து நாம் இந்த திரிக்கு வந்திருக்கிறோம். அமேசானிலேயே நிறைய தமிழ்ப்புத்தகங்கள் கிண்டில் வர்ஷனில் கிடைக்கிறது. இலவசம் அல்ல காசு கொடுத்து தான் வாங்க வேண்டும்.

ஒரு வருடம் கழித்து தான் வருகிறோம் என தெரிந்து தான் அந்தப் பதிவினை எழுதினேன். நான் தேடிய போது அமெசானில் கிண்டில் வெர்சன் தமிழ் புத்தகங்கள் எதுவும் பார்த்த மாதிரி நினைவில்லை. நல்ல புத்தகமாக இருந்தால் நாங்களும் காசு கொடுத்து வாங்க ரெடி தான்.
Quote:

Originally Posted by venkat8 (Post 1351238)
நண்பர் சொன்னது போல் வேறு சில தளங்களிலும் மொபி புத்தங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் நாம் தேடும் புத்தமெல்லாம் கிடைக்காது.

அந்த மாதிரி அடிப்படை அறிவு கூட இல்லாதவன் அல்ல நான். நான் தேடும் புத்தகமெல்லாம் இலவசமாக வேண்டும் என்றே சொல்லவில்லை.
Quote:

Originally Posted by venkat8 (Post 1351238)
சரி பிடிஎஃப் புத்தகங்களை எப்படி கிண்டிலுக்கு ஏற்றவாறு மாற்றுவது?

இங்கு படித்து பார்க்கவும். இந்த வலைப்பதிவில் வந்துள்ள பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

இந்த வலைப்பதிவினை பதித்தவர் மேலே படித்தொர பாண்டி கூறிய தளத்தின் குழுவில் ஒருவர்.

நானும் இதனை முன்பே காலிபர் மூலம் செய்து பார்த்து 'கையை வளைத்து மூக்கைத் தொடுவதில்' சலித்து தான் பின்னூட்டத்தினை எழுதினேன்.

நான் கேட்பது என்னவென்றால் இத்தனை விளம்பரங்கள் தமிழகத்தில் செய்யும் ஒரு நிறுவனம் தமிழில் புத்தகங்களைப் படிப்பதை எளிதாக்கியிருக்க வேண்டுமா? வேண்டாமா?

All times are GMT +5.5. The time now is 10:27 AM.

Powered by Kamalogam members