காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   அன்பர்கலெ உதவி செய்யுங்கல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=27066)

ஸ்டீம் 06-03-06 03:59 AM

அன்பர்கலெ உதவி செய்யுங்கல்
 


தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்


காமலோகத்திற்கு வரும் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி. எப்படி தமிழில் எழுவது? எதில் எழுதுவது? அதற்கு எந்தெந்த மென்பொருட்கள் தேவைப்படுகின்றன? அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த யூனிகோட், பாமினி, முரசு அஞ்சல் இதெல்லாம் என்னவென்று குழம்பி தலை வலிக்கிறதா? கவலையை விடுங்கள். நான் கீழே எழுதியிருக்கும் 7 வழிகளை அப்படியே கடைப்பிடித்துச் செய்யுங்கள். 10 நிமிடத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.


1. கீழ்கண்ட இணையதளத்திலிருந்து eKalappai 2.0b (Anjal) என்ற மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்துங்கள்.

eKalappai 2.0b (Anjal)

2. அதை பொருத்தியப் பிறகு உங்கள் கணினியில் Start பிறகு Programs பிறகு Tavultesoft Keyman For ThamiZha! பிறகு Keyman-ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது eKalappai துவங்கி உங்கள் ஸ்கிரீனின் கீழ்வலது மூலையில் இரு சிறு ஐகான் (icon) ஆகிவிடும்.

3. இப்பொழுது கணினியில் Notepad-ஐ துவக்குங்கள்.

4. கர்ஸரை (Cursor) Notepad-இல் வைத்து Alt-2 ஐ அழுத்துங்கள். இப்பொழுது கீழ்வலது மூலையில் இருக்கும் அந்த சிறு ஐகான் "அ" என்ற தமிழ் எழுத்தைக்காட்டும்.

5. பிறகு Notepad-இல் டைப் செய்யுங்கள். என்ன? தமிழில் எழுத துவங்கி விட்டீர்களா? எவ்வளவு சுலபமாக இல்லை?

6. நீங்கள் எவ்வளவு எழுதுகிறீர்களோ அதை அப்படியே காப்பி செய்து காமலோகத்தில் எங்கு பதிக்க நினைக்கிறீர்களோ அங்கிருக்கும் எழுத்துப் பலகையில் பதியுங்கள்.

7. பிறகு நீங்கள் எங்கு எழுதுகிறீர்களோ அதை பொறுத்து "Submit New Thread", அல்லது "Post Quick Reply" என்ற Button-ஐ அழுத்தி உங்கள் பதிப்பை சமர்ப்பியுங்கள்.


பார்த்தீர்களா? ஏழே வழிகளில் உங்களை தமிழில் எழுத வைத்துவிட்டேன். இப்பொழுது எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? செல்லுங்கள். உங்கள் எண்ணங்களை கதைகளாக கட்டுரைகளாக பதியுங்கள்.

மேலும் விவரங்கள் வேண்டுபவர்களுக்கு:

1. eKalappai-யின் Keyman மென்பொருளை ஆரம்பித்து விட்டு Notepad-இல் நீங்கள் Alt-1-ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுதலாம். Alt-2-வை அழுத்தினால் யூனிகோட் (Unicode) முறையில் தமிழ் எழுதலாம். இது தான் நமக்கு தேவை. காரணம் காமலோகத்தில் இப்பொழுது எல்லாமே யூனிகோடே. இருப்பினும் இன்னொன்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். Alt-3-ஐ அழுத்தினால் தமிழை அஞ்சல் எழுத்துருவில் எழுதலாம். அதற்கு கணினியில் முரசு அஞ்சல் என்ற இன்னொரு எழுத்துருவு மென்பொருளும் வேண்டும். இது கொஞ்சம் குழப்பமானதால் அப்படியே விட்டுவிடுங்கள். Alt-2 மற்றும் Alt-1-ஐ மட்டும் பயன்படுத்துங்கள்.

2. யூனிகோட் முறையிலான தமிழை பயில இந்த இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

யூனிகோட் பயிற்சிக் கூடம்

தமிழில் மிகச் சுலபமான முறையில் டைப்படித்து பழகச் சிறந்த இடம் இதுவே. இங்கு தமிழ் எழுத்துக்களை டைப் செய்வதற்கு முன்னால் மறக்காமல் நான் மேற்கூறியது போல Keyman மென்பொருளை செயல்படுத்தி பின்பு எழுதும் பலகையில் கர்ஸரை வைத்து Alt-2-வை அழுத்துங்கள். பின்னரே எழுத ஆரம்பியுங்கள்.

3. ஆங்கில உச்சரிப்புக்களுடன் தமிழ் யூனிகோட் வெகுவாகப் பொருந்தினாலும் சில எழுத்துக்களை தேட வேண்டிய நிர்பந்தம் ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஏற்படும். அதை சுலபமாக்க மறைந்திருக்கும் சில முக்கியமான எழுத்துக்களை இங்கே தருகிறேன். அவற்றை பழகிக்கொள்ளுங்கள்.

ந், ந - w, wa
ஃ - q
ஷ், ஷ - sh, sha மற்றும் ch, cha
ஸ், ஸ - S, Sa
ஞ், ஞ - nj, nja
ல, ள, ழ - la, La, za
ங் - ng
ஹ - ha
க்ஷ - ksha

4. புதிய திரி (New Thread) ஒன்றை ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்றால் தயவு செய்து அதை "Preview Post" என்ற Button-ஐ க்ளிக் செய்து சரி பார்த்தப் பின்னரே பதியுங்கள். இது உங்களின் படைப்புக்களின் முதல் பார்வை (First Impression) தரத்தை உயர்த்தும்.

நான் சொல்ல நினைத்தது அவ்வளவே. வேறு எதாவது சந்தேகங்களிலிருந்தால் இதே பதிப்பில் என்னிடம் கேளுங்கள். என்னால் இயன்ற ஆலோசனைகளை கூறுகிறேன். யூனிகோட் தமிழில் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய எனது நெஞ்சம் கலந்த வாழ்த்துக்கள். நன்றி.


ஸ்டீம்


dayaan 06-03-06 04:24 PM

நானும் இதே முறையில் தான் செய்து வருகிறேன் ஆனால் நீர் அருமையாக சொல்லி கொடுக்கின்றீர் ஸ்டீம் அற்புதமான பணி தொடருங்கள். ஸ்டீம் பெற்ற பேறு பெருக இவ் வையகம்.

என்னால் மைக்ரோசாஃப்ட் வேர்டில் (2000) டைப் செய்தால் ஒன்னு ரெண்டு எழுத்துக்கு பிறகு 0 0 0 ஆக வ்ருகின்றது உதவ முடியுமா நண்பா!

அன்புடன்,

டயான்

ஸ்டீம் 07-03-06 01:00 PM

மைக்ரோசாஃப்ட் வோர்டில் தமிழ்
 

விஜய நாராயணன் மற்றும் டயான் அவர்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி! ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து இப்பொழுது தான் எனக்கு இப்படி சுலபமான ஒரு வழி கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பே இந்த எழுத்துருவு பிரச்சினையால் எனது கதையெழுதும் ஆர்வம் தடைப்பட்டு பிறகு மறந்தே போனது. இது புதியவர்களுக்கு நடக்கக் கூடாது என்ற எண்ணமே இதனை எழுதுவதற்கு காரணம். முரசு அஞ்சலில் கஷ்டப்பட்டு ஏதேதோ எடிட்டர்களில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிகோட் உன்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் தான்.

டயான்! நானும் மைக்ரோசாஃப்ட் வோர்டில் பார்த்தேன். உங்களை போல எனக்கும் அந்த சுழிகள் வந்தன. இதற்கு Arial Unicode MS font என்ற எழுத்துருவை வோர்டுடன் பொருத்த வேண்டும். அதற்கான செயல்முறை விளக்கத்தை கீழே இருக்கும் லிங்கில் காணலாம்.

http://support.microsoft.com/kb/q287247/

இதில் How do I install the Arial Unicode MS font? என்ற பகுதியில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதனை நீங்கள் முயற்சி செய்து பலனை தயவுக்கூர்ந்து இங்கு பதித்தால் எல்லோருக்கும் பயன்படும். நன்றி.

ஸ்டீம்

mims 20-03-06 03:17 AM

மிகவும் நன்றி ஸ்டீம், நான் பாமினி எழுத்துருவில் மிகவும் நன்றாக தட்டச்சு செய்வேன். காம லோகத்தில் யுனி கோர்ட் கொன்வேட்டரில் எழுதி எழுதி பாமினியில் எழுதுவது மறந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டு இருந்தேன். ஈ கலப்பை ஸைட்டில் eKalappai 2.0b (Bamini) என்று கண்டவுடன் எனது அச்சம் நீங்கியது. இப்போது eKalappai 2.0b (Bamini) ஐப் பதிவிரக்கம் செய்து. அதில் தான் தட்டச்சு செய்கிறேன். சில நாட்கள் பாமினியில் டைப் பண்ணாமால் அஞ்சலில் டைப் பண்ணினதுக்கே இப்போது இரண்டும் குழம்புகின்றுது. இப்படியே சில நாட்கள் டைப் பண்ணியிருப்பின் பாமினி முற்றாக மறந்திருக்கும்.

ஸ்டீம் 22-04-06 10:08 PM

பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே என் ஆசை. எல்லோரும் என் முயற்சியினால் பயன் பெறுவதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Quote:

Originally Posted by punithan
தயவு செய்து "னன்றி" யில் உள்ள ந எப்படி அடிப்பது,உதவுங்கள்.

புனிதன்! உங்கள் பதிப்பை இப்பொழுது தான் பார்த்தேன். இத்தனை நாட்கள் பதிலெழுதாமல் தாமதித்தற்கு மன்னிக்கவும். நானும் உங்களை போலவே சில எழுத்துக்களை கோர்ப்பதற்கு வழியறியாமல் பல நாட்கள் குழம்பி இருக்கிறேன். உங்களுக்கு உதவுமாறு சில எழுத்துக்களை இங்கே தருகிறேன்.

ந், ந - w, wa
ஃ - q
ஷ், ஷ - sh, sha மற்றும் ch, cha
ஸ், ஸ - S, Sa
ஞ், ஞ - nj, nja
ல, ள, ழ - la, La, za
ங் - ng
ஹ - ha
க்ஷ - ksha

இவைத் தவிற மற்ற அனைத்து எழுத்துக்களும் சுலபமே. மேலும் பயிற்சி பெற இந்த லிங்கிற்கு ஒரு முறை சென்று வாருங்கள். உங்கள் சந்தேகங்கள் முழுவதுமாக தீர்ந்துவிடும்.

யூனிகோட் பயிற்சிக் கூடம்

வேறு எதுவாயினும் இங்கே கேட்கவும். நானும் யூனிகோடில் அனுபவம் பெற்ற மற்ற நண்பர்களும் உங்களுக்கு விடை அளிக்கத் தயங்க மாட்டோம். நன்றி.


ஸ்டீம்

tamil_kirukkan 25-08-06 06:51 AM

அன்பர்கலெ உதவி செய்யுங்கல்
 
எனக்கு தம்ழில் எழுதுவது மிக கடினமாக உல்லது. தம்ழில் வேகமாக எழுதும் நன்பர்கல் எப்படி வேகமக, எழுதுப்பிலை இல்லாமல் எழுவது என்று சொல்ல வேன்டுகிரென்

ஆதி 25-08-06 11:36 AM

நண்பர் ஸ்டீம் அவர்கள் தந்துள்ள அழகாண பதிப்பு, இங்கே சொடுக்குங்கள்

java 28-08-06 03:13 PM

என்முறையினையைத்தான் ஆதி காட்டிவிட்டாரே. இதற்கு மேல் எனக்கு தெரியாது.
அது சரி உதவி கேட்டு இன்றோடு இரண்டுனாளாகிவிட்டது. பயனடைந்தீர்களா? இல்லையா??
அறியத்தரலாமே. உதவியவர்கள் சந்தோசப்படுவர்.
தமிழ் பண்பாட்டை எங்கேயும் கைவிடாதிருக்கலாமே???

பீனா 28-08-06 05:02 PM

அது மட்டுமல்ல... மூத்த உறுப்பினர்கள் பலருக்கே இன்னும் ல,ள,ழ இவைகளுக்குள் குழப்பம் இருக்கிறது. என்னால் முடிந்த அளவு விளக்கப் பார்க்கிறேன்.

லி கா ல ம்
ka li kaa la m

ளி க் க லா ம்
ka Li k ka laa m

ழிளு ம்
ka zi ka Lu m

ஷ் ட ம்
ka sh ta m

ஸ் ப ம்
pa S pa m

இதைப் போல் ஒவ்வோர் எழுத்தாக தட்டச்சு செய்து பயின்றீர்கள் என்றால், டிரையல் அண்ட் எர்ரர் என்று சொல்லப்படும் முயன்று தவறும் முறையில் பல புதிய குறுக்குவழிகள் புலப்படும்.

Quote:

Originally Posted by tamil_kirukkan
எனக்கு தம்ழில் எழுதுவது மிக கடினமாக உல்லது. தம்ழில் வேகமாக எழுதும் நன்பர்கல் எப்படி வேகமக, எழுதுப்பிலை இல்லாமல் எழுவது என்று சொல்ல வேன்டுகிரென்

நீங்கள் எழுதியிருப்பதை (பிழைகள் களைந்து) அப்படியே ஆங்கிலத்தில் எழுதி காண்பிக்கிறேன். (இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காகத்தான் அப்படி செய்கிறேன். ஆங்கிலத்தில் எழுதியமைக்காக எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் தரவேண்டாம், ப்ளீஸ்).


enakku thamizil ezuthuvathu mikak katinamaaka uLLathu. thamizil veekamaaka ezuthum waNparkaL eppati veekamaaka,
ezuththup pizai illaamal ezuthuvathu enRu solla veeNtukiReen.




எனக்கு தமிழில் எழுதுவது மிகக் கடினமாக உள்ளது. தமிழில் வேகமாக எழுதும் நண்பர்கள் எப்படி வேகமாக,
எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவது என்று சொல்ல வேண்டுகிறேன்.



இதைப் பார்த்து, அப்படியே தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

kavinila 28-08-06 09:43 PM

Quote:

Originally Posted by bj
நீங்கள் எழுதியிருப்பதை (பிழைகள் களைந்து) அப்படியே ஆங்கிலத்தில் எழுதி காண்பிக்கிறேன். (இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காகத்தான் அப்படி செய்கிறேன். ஆங்கிலத்தில் எழுதியமைக்காக எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் தரவேண்டாம், ப்ளீஸ்).
-------
இதைப் பார்த்து, அப்படியே தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

எச்சரிக்கை புள்ளியை... எல்லாருக்கு தருவதில்லை.. அவசியம் இருந்தால் ஆங்கிலத்தை உபயோகிக்கலாம்..

நல்ல விளக்கம் நன்றி...


All times are GMT +5.5. The time now is 07:50 PM.

Powered by Kamalogam members