அலுவலகத்திலிருந்து காமலோகம் பார்க்கும் நண்பர்களுக்கு!
அலுவலகத்திலிருந்து காமலோகம் பார்க்கும் நண்பர்களுக்கு!
வணக்கம் காமலோக நண்பர்களே! காமலோகம் காமத்தை முதன்மையாகக் கொண்ட தளம் என்பது எல்லாவரும் அறிந்தது. இங்கே எழுத்து சார்ந்த பதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கவர்ச்சியான படங்கள் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. கதைகளின் நடுவில் படங்கள் பதிப்பது, அவதரில் கவர்ச்சியான படங்களை வைத்துக்கொள்வது, சிக்னேச்சரில் கவர்ச்சி படங்கள் வைப்பது இது போன்ற விசயங்கள் பதிப்பவரின் ரசனையைப் பொறுத்து மறுபடும். ஒரு புத்தகம் அல்லது நாவலை வாங்கும் போது முதலில் நம்மைக் கவர்ந்து இழுப்பது அதன் அட்டைப் படம். ஒரு விசயத்தை அணைவரின் பார்வையிலும் விழ வைக்க இந்த கவர்ச்சிப் படங்கள் உதவுகின்றன. அதே போல நமது படைப்புகளையும் வாசகர்கள் தேடி வர வைக்க சில சமயங்களில் படங்கள் பதிக்கிறோம். அவதார் / சிக்னேச்சர் அவரவர் ரசனையைப் பொறுத்து மாறுபடும். காமத்தை பிரதானமாகக் கொண்ட ஒரு தளத்தில் இது போன்ற விசயங்களை ஆபாசம் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி ஆபாசம் என்று நினைப்பவர்கள் காமக் கதைகளை படிப்பதில் மட்டும் ஆபாசம் இல்லை என்று வாதாடவும் முடியாது. இருப்பினும் இங்கே காமம் படிக்க வரும் அனைவரும் தனி அறையில் இருந்து கொண்டு படிப்பதில்லை. பலர் வீடுகளில் படிக்கிறார்கள். பலர் அலுவலகங்களிலிருந்து காமலோகத்தை படிக்கிறார்கள். என்னையும் சேர்த்து. வெளி நாடுகளில் வேலை செய்யும் இடங்களில் பல தரப்பட்ட மொழி பேசுபவர்கள் இருப்பதால் நாம் காமம் படிக்கிறோமா அல்லது காவியம் படிக்கிறோமா என்பது யாருக்கும் தெரியாது. இதுவே நம்மை பெரும்பாலான நேரங்களில் காமலோகத்தில் உலாவ வைக்க போதுமான வசதியாக இருக்கிறது. ஆனால், நாம் படிக்கும் படைப்புகளில் ஊடே கவர்ச்சியான படங்கள், கவர்ச்சியான அவதார், கவர்ச்சியான சிக்னேச்சர் என்று இருக்கும் போது நாம் என்ன படிக்கிறோம் என்பதை எல்லாருமே தெரிந்துகொள்ள வாய்ப்பாக போய்விடும். இதானால் நமக்கு பல சமயங்களில் வேலைக்கு ஆப்பாக போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி அலுவலகத்தில் இருக்கும் வெகு சிலருக்காக படங்களே இல்லாமல் வெறும் எழுத்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வதும், பொறுத்தமான படங்களை பார்க்க விரும்பும் மற்ற வாசகர்களை பாதிக்கும் அல்லவா! அப்படியென்றால் இதற்கு என்ன தான் வழி? நாம் தளம் இயங்கிக்கொண்டிருக்கும் vBulletin® மென்பொருள் இதற்கு சரியான தீர்வை வைத்திருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது தெரிந்திருக்கும் பட்சத்தில் யாரும் படங்கள், அவதார், சிக்னேச்சர் பிரச்சினையைக் கண்டிப்பாக எழுப்ப மாட்டார்கள். அப்படி என்ன தான் தீர்வு! சீக்கிரம் சொல்லித் தொலையப்பா! என்று நீங்கள் உறுமுவது கேட்கிறது. சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன். நண்பர்களே! 1. உங்களுடையை User Control Panel பகுதிக்குச் செல்லுங்கள். சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் வேண்டும். ஆனால் படம் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு! என்ன நண்பர்களே! இனி யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லைதானே. இனி தைரியமாக எங்கிருந்து வேண்டுமானாலும் காமலோகம் படிக்கலாம். அதே நேரத்தில் மற்றவர்களும் அவர்களுக்கு பிடித்த படங்கள், அவதார் மற்றும் சிக்னேச்சர் வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்வுசெய்யும் வசதி இருக்கும் போது அடுத்தவர்கள் எதை வைத்திருந்தால் நமக்கு என்ன நண்பர்களே! என்ன நான் சொல்லுறது.. சரிதானுங்களே! நன்றி அன்புடன் ரசி கேம்ரென் இதற்கான விளக்கப் படம்: http://www.kamalogam.org/gallery/dat...PTIONS-IMG.jpg |
ரசி, நான் இதுபற்றி ஒரு திரி ஆரம்பிக்கலாமென்று நினைத்திருந்தேன், நீங்கள் முந்திக்கொண்டீர்கள்.
எப்படியோ நண்பர்கள் பிரச்சினை தீர்ந்தால் சரி தான். |
Quote:
சிக்னேச்சரை Disable செய்தால் சாதாரண எழுத்துக்கள் உள்ள மற்ற சிக்னேச்சரும் இதனால் தெரியாதல்லவா? இது நிரந்தர தீர்வு இல்லையே!! மற்றபடி படங்கள் பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் நன்று.. இதை இன்றே செய்கிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே!! |
தகவலுக்கு நன்றி (வீட்டில் சில நேரங்களில் தப்பித்துகொள்ள வழி காட்டியதற்கு)
|
இங்கிருந்த எனது பதிவையும் நீக்கிவிடுகிறேன்.
|
Quote:
இனி இதுபற்றி மற்றவர் பொதுவிலே குறை சொன்னால் நீங்கள் அப்படி நினைத்துக்கொள்ளலாமே அன்றி மற்றவர்களை பொத்தம்பொதுவாக குறிப்பிடுவது தவறு. முடிந்தால் அந்த வரியை நீக்குங்கள், நண்பர்களுக்குள் இங்கே, எப்போதும் ஆரோக்கியமான போட்டி தான் உண்டே தவிர பொறாமை இல்லை. தவறான அர்த்தமும் வரும் வார்த்தைகளால் மற்றவர் மனம் நோகச்செய்ய வேண்டாம். எல்லோரும் நம் நண்பர்களே, ஒன்று கூடி இன்புற்று இன்புற செய்திருப்போம். |
உங்கள் ஆதங்கள் புரிகின்றது .
உங்கள் கருத்து மிக்க நன்றி ரெசி ! இனி படத்தை பற்றி யாரும் வாய் திறக்க மாட்டார்கள் ( என்னையும் சேர்த்து தான் செல்லுறேன் ). |
இப்படி பட்ட ஆப்சன் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் இது வரை நண்பர்கள் யாரும் கேட்காததால் இப்படி பதிய வேண்டும் என்று எனக்கு தோணவில்லை. தக்க நேரத்தில் திரி ஆரம்பித்து நம் தளத்து நண்பர்களுக்கு நல்லதொரு வழி காட்டியுள்ளீர்கள். இனி அலுவலகங்கள், வீடுகளில் தைரியமாக திறக்கலாம். வாழ்த்துக்கள்.
|
நல்ல வழியை சொன்னதற்கு நன்றி நண்பரே
|
இதுவரை எனக்கு இந்த மாதிரியான பிரச்சனை எழவில்லை..இருப்பினும், தேவைபடுவோர், இதை பயன்படுத்தி,,, எஞ்ஜாய்..
|
All times are GMT +5.5. The time now is 07:08 PM. |
Powered by Kamalogam members