காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நவம்பர் மேம்படுத்துதல் புதிய வசதிகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47689)

xxxGuy 16-11-08 11:59 AM

நவம்பர் மேம்படுத்துதல் புதிய வசதிகள்
 
நண்பர்களே..!

இதுவரை மேம்படுத்துதல் வேலை 90% தான் முடிந்துள்ளது. அனைவரையும் அதிகம் காக்க வைக்க வேண்டாம் என நேற்று 20 நிமிடங்களிலேயே தளம் திறக்கப் பட்டு விட்டது. இன்னும் 10% வேலைகள் உள்ளன, அவை தற்போது முடிந்துள்ள வேலையில் உள்ள மாற்றங்கள் செய்து முடித்தபின் தொடரும். அதற்கு முன் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளோம் என சுருக்கமாக கூறிவிடுகிறேன். அதில் உங்களுக்கு உங்கள் அசௌகரியங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டால் அவற்றை சரி செய்ய முயற்சி செய்கிறோம்.

1] மன்றம் உறுதியான, புதிய விபுல்லட்டன் மென்பொருளின் புதிய வெர்ஷனுக்கு மாறியுள்ளோம்.

2] மன்றத்திற்கு புதிய தோல்கள் (skins) சேர்க்கப் பட்டுள்ளது. கீழ் பகுதியில் இடது பக்கத்தில் உள்ளது. அவற்றில் உங்களுக்கு பிடித்த தோலிற்கு மாற்றிக் கொள்ளலாம். தற்போது 5 உள்ளது, அவற்றில் உங்கள் விருப்பம் அறிந்து 3 மட்டுமே நிரந்தரமாகத் தொடரும்.
வாக்கெடுப்பு இங்கே: -> http://www.kamalogam.com/new/showthread.php?t=47764

3] கதைகளின் முன்பாக உபயோகித்து வந்த Prefixes என்றும் "முன்-ஒட்டுக்கள்" தமிழாக்கம் செய்யப் பட்டு, தற்போது வர்ணங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

4] உங்களைப் பற்றிய தகவல் அடங்கிய Profile பகுதி இப்போது நவீனப் படுத்தப் பட்டுள்ளது. அதில் பல வசதிகள் உண்டு.

(அ) பார்வையாளர் கருத்து (விசிட்டர் மெசேஜ்) என்னும் வசதியுடன் உங்கள் ப்ரோபைலிலேயே கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளலாம்.

(ஆ) நண்பர் வட்டம் உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு தனிமடல் அனுப்புபவர்களையும் விசிட்டர் மெசேஜ் பதிப்பவர்களையும் நீங்களே கட்டுப் படுத்தலாம்/தீர்மானிக்கலாம்.

(இ) உங்களுக்கு பிடித்த தலைப்புகளில் விருப்ப குழுக்கள்/தன்னார்வக் குழுக்கள் என்னும் Social Groups உருவாக்கிக் கொள்ளலாம்.

(ஈ) காமலோகம்.காம் தளத்தில் இதுவரை நாம் படங்கள் பதிவேற்றம் செய்ய அனுமதித்ததில்லை. முதல் முறையாக, தங்கள் பதிப்புகளினுள் சேர்ப்பதற்காக காமமில்லா படங்கள் மட்டும் (கவர்ச்சிப் படங்கள் ஓகே) பதிவேற்றம் செய்ய ஆல்பம் என்னும் வசதி மூலம் விரைவில் அனுமதிக்கப் படுகிறது. அவரவர் அனுமதிக்கேற்ப எண்ணிக்கையில் மாறுதல் உண்டு. (Bronze: 25, Silver: 50, Gold: 100)

இந்த வசதிகள் அனைத்தும் பெற குறைந்த பட்சம் வெண்கல வாசல் உறுப்பினராக இருத்தல் அவசியம்.


5] மேல் பகுதியின் வலது பக்கம் தனிமடல் வந்துள்ள Private Message அறிவிப்பு பகுதி, இப்போது "Notification" பகுதி ஆகியுள்ளது. இதில் தனிமடல் மட்டுமல்ல, பல செய்திகள் வரும் வசதி உள்ளது.

6] Tags என்றும் "தொகுப்பு அட்டை" வசதி புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இது நமது தேடு பொறியை விட சக்தி வாய்ந்தது. இதன் பயன் உடனடியாகத் தெரியாது, போகப் போகத் தான் நன்றாக இருக்கும். அதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பு தேவை. (இது பற்றிய விளக்கமாக ஒரு திரி இங்கே உள்ளது)

7] நேரடி தமிழ் தட்டச்சு மேம்படுத்தப் பட்டுள்ளது. இந்த வசதி "பேசிக் எடிட்டரை" தேர்வு செய்தால் மட்டுமே கிட்டும். (இதில் முன்புள்ள பிரச்சனைகள் சில உள்ளன). தற்போது KeyMap, மற்றும் Help என்ற மேலும் இரு பட்டன்களைக் காணலாம்.

KeyMap உங்களுக்கு எழுத்துக் கோர்வைக்கான அட்டவணைப் படத்தைக் காட்டும்.

Help நீங்கள் ஒரு எழுத்தைத் தட்டும் போது அடுத்து என்ன எழுத்தைச் சேர்த்தால், என்ன எழுத்து வரும் என ஆலோசனை கூறும்.

இந்த வசதி Quick Reply-யில் சரியாக கிடைக்காது, அதனால் Go Advanced மூலம் முழுப் பெட்டியில் தட்டச்சு செய்யும் போது கிட்டும்.

8] முன்பு தங்க வாசலில் இயங்காமல் இருந்த நேரடி வீடியோ வசதி சரி செய்யப் பட்டு வருகிறது. (விரைவில் சரி செய்யப் பட்டு விடும்).

9] விரைவில் அதிக Smileys என்னும் சிரிப்பு படங்கள் சேர்க்கப் படும்.


மேலும் வசதிகள் சேர்க்கப் பட்டால் மேம்படுத்தப் பட்டால் விரைவில் இங்கு சேர்க்கப் படும்.

நன்றி..!!

பின்சேர்ப்பு: தள மென்பொருளில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளதால், தங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பவர்களின் கணக்குகள் வேலை செய்யாது. அவர்கள் நிர்வாகியை தொடர்பு கொண்டு பாஸ்வேர்ட் மாற்றிக் கொள்ளவும். (உங்கள் ப்ரோபைலில் என்ன ஈமெயில் முகவரி உள்ளதோ அந்த முகவரியில் இருந்து தொடர்பு கொள்ளவும்.)

JACK 16-11-08 12:09 PM

மிக அற்புதமான மாறுதல்கள் தளம் புது பொலிவுடன் ஜொலிக்கிறது

தலைவரே எழுத்துக்கள் முன்பு போல் பளிச் என்று தெரியாமல் சிறு மங்கலாக* தெரிவது போல் உணர்கிறேன்:???::???:

kaman007 16-11-08 12:11 PM

தலைவர் அவர்களுக்கு,

நம் காமலோகத்தின் தொடர் மேம்பாடு கருதி மேம்படுத்தும் பணியை நடத்தி புது மாற்றங்களையும் சேர்த்துள்ளமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். உங்கள் தலைமையின் கீழ் நம் மன்றம் இன்னும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்.

__DELETED USER__ 16-11-08 12:11 PM

யப்பா சாமி..கண்ணக் கட்டுதுங்கோ..

90 சதவீத மாற்றங்கள் ஒரே ஒரு இரவிலா:!::!:

தமிழ்..தமிழ்..தமிழ்.. அனைத்திலும் தமிழ்..

ப்ரீஃபிக்ஸ்(முன்னொட்டு) கூடத் தமிழில்..:!::!:

அற்புதமாக இருக்கு. தளம் புது மெருகு அடைந்து விட்டது. வாழ்த்துச் சொல்ல அனுபவமில்லை. ஆதலால், வணக்கம் தலைவரே:cool::cool:.

XXXGirl 16-11-08 12:15 PM

இன்று நான் தளத்திற்க்கு வந்தவுடன் தளத்தின் புதிய அமைப்பைக் கண்டு வியந்தேன்..... பாராட்டுக்கள் தலைவரே......

தமிழா 16-11-08 12:20 PM

நல்ல அறிய பல மாற்றங்கள் கண்டு வியந்த்தேன், தளத்தின் நிர்வாகி அவர்களுக்கு என் பாராட்டுக்கள் .

tamilnanban 16-11-08 12:31 PM

நம் தளம் இவ்வளவு மாறுதல்கள் பெற்று முன்னேற்ற பாதையில் செல்வது மிக்க மகிழ்ச்சி..
இது நம் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியென்றே நான் கூறுவேன்.
இத்தனை புதிய வசதிகள் செய்து கொடுத்த நம் தலைவருக்கும், மேலாளர்களுக்கும், கண்கானிப்பாளர்களுக்கும், மற்றும் நம் அனைத்து உருப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்கிறேன்.

rajesh2008 16-11-08 12:47 PM

தலைவரே, நல்ல வரவேற்கத்தக்க மாற்றங்கள்.
போஸ்டின் இடது மூலையில் (ஜாயின் டேட் அருகில்..?) ஒருவர் ஆரம்பித்த திரிகள் ஏதோ ஒரு விசையைத் தட்ட தென்படுமே.அது காணோமே

xxxGuy 16-11-08 01:00 PM

Quote:

Originally Posted by JACK (Post 789112)
தலைவரே எழுத்துக்கள் முன்பு போல் பளிச் என்று தெரியாமல் சிறு மங்கலாக* தெரிவது போல் உணர்கிறேன்:???::???:

எந்த தோல்(ஸ்கின்) உபயோகிக்கிறீர்கள் என்று தெரிவித்தால் அதை பரிசோதித்துப் பார்த்து தேவையான மாற்றங்கள் செய்வேன்.

Quote:

Originally Posted by rajesh2008 (Post 789132)
போஸ்டின் இடது மூலையில் (ஜாயின் டேட் அருகில்..?) ஒருவர் ஆரம்பித்த திரிகள் ஏதோ ஒரு விசையைத் தட்ட தென்படுமே.அது காணோமே

விரைவில் வரும்...

coolanu 16-11-08 01:03 PM

நேற்று நிகழ்ந்த மாற்றங்களை உடனுக்குடன் கண்ட அனுபவம். புது ஸ்கின்கள் எல்லாம் அருமை. மேலும் ப்ரொஃபிக்ஷ் தமிழில் இருப்பது அருமை.

ஆனால் நேற்றிலிருந்து தளம் ஸ்லோவாகிவிட்டது. ஒருவேளை மேம்படுத்துதல் முடிந்தவுடன் சரியாகிவிடும் என நினைக்கிறேன்.

ஜாக் சொன்னது போல எழுத்துக்கள் மங்கலாக தெரிகிறது. கருப்பு வர்ணத்தில் முன்பு போல் பளிச்சிட வைக்கலாம்.

மேம்படுத்துதல் பணிகளை சிறப்பான செய்து முடித்த தலைவருக்கு வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 10:29 PM.

Powered by Kamalogam members