காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோக விதிமுறை மீறல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=77445)

Conqadam 03-04-22 12:41 AM

காமலோக விதிமுறை மீறல்
 
நிர்வாகிகள் கவனத்திற்கு,


புதியவர் கதைப்பகுதியில் "காமத்தீ கோமதீ " என்கிற கதை 3 பாகங்கள் பதிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கதை வேறொரு தளத்தில் "அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்" என்ற தலைப்பில் வெளி வந்த, வரிக்கு வரி மாற்றமில்லாத கதை. அந்த தளத்தின் சுட்டியை இங்கே பதிக்க விரும்பவில்லை. நிர்வாகிகள் கேட்டால் தனிப்பட்ட முறையில் தரத் தயார்

அந்த தளத்தில் மிக நீண்ட நெடுந்தொடராக வந்த கதையில் இருந்து முதல் 3 பாகங்கள் மட்டும் இங்கே பதிக்கப்பட்டு உள்ளது. இது காமலோகத்தின் அப்பட்டமான விதிமுறை மீறல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மறுபிறவி 03-04-22 01:43 AM

நண்பருக்கு வணக்கம். இதற்காக தனி திரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

நிர்வாகத்தினருக்கு தனி மடலாகவோ இல்லை. அந்த கதையின் பாகத்திலே நீங்கள் அதை தெரியப்படுத்திருக்க வேண்டும்.

kathalan 03-04-22 01:44 AM

Quote:

Originally Posted by Conqadam (Post 1600973)
இந்தக் கதை வேறொரு தளத்தில் "அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்" என்ற தலைப்பில் வெளி வந்த, வரிக்கு வரி மாற்றமில்லாத கதை

Quote:

விதிமுறைகளை மீறும் பதிப்புகளின் மேல் உள்ள http://www.kamalogam.com/new/images/buttons/report.gif Report Post என்ற குறியை சொடுக்கி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இது சிவப்பு நிற முக்கோண வடிவினுள் ஆச்சர்ய குறியை உள்ளடக்கி காணப்படும். ஓவ்வொரு பதிப்புக்கு மேல் வலது கோடியில் காணப்படும்.
தாங்கள் அவர் பதித்த கதையின் இரு பாகங்களில் கூட இந்த புகாரை பதித்துள்ளீர்கள். அதற்கு நிர்வாக பதில் கிடைக்காததால் தனி திரியே துவங்கி விட்டீர்கள்.

*தாங்கள் அக்கதையின் ரிப்போர்ட் போஸ்ட் குறியை அழுத்தி புகாரை நிர்வாகத்திற்கு நேரடியாக தெரிவிக்கலாம். வேறு தளத்தில் ஏற்கனவே பதித்த கதை என்று கூறி உள்ளீர்கள். அந்த கதை சுட்டியை அந்த ரிப்போர்ட் பாக்ஸில் குறிப்பிட்டு அனுப்பலாம்.
அல்லது
*நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனி மடலில் புகாரை தெரிவிக்கலாம்.

இப்போது நான் இந்த தகவலை நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்து சென்றுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்.

அந்த நண்பர் வேறு தளத்தில் உள்ள கதையை இங்கே பதித்து குறுக்கு வழியில் லோகத்தில் முன்னேற நினைத்திருந்தால் கண்டிப்பாக அவர் மீது லோக நடவடிக்கை பாயும்.

asho 03-04-22 05:50 AM

தகவலுக்கு நன்றி, அவர் கதை பூட்டி, அவரையும் தடை செய்து விட்டோம்.

நீங்கள் தெரிவித்த புகாரை சரி பார்ப்பதில் சற்று கால தாமதம், விடுமுறை நாள் என்பதால் ஆகி விட்டது.

சுட்டி காட்டியதற்கு நன்றி.

இம்மாதிரி விதிமுறை மீறல்களை ரிபோர்ட் போஸ்ட் செய்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.

நடவடிக்கை எடுத்ததால் இந்திரி பூட்டப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 08:27 AM.

Powered by Kamalogam members