காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழில் தவறின்றி எழுத ஆசையா??? (http://www.kamalogam.com/new/showthread.php?t=49430)

sajid80 27-02-09 05:31 PM

தமிழில் தவறின்றி எழுத ஆசையா???
 
நண்ப,நண்பிகளே....
நம்மில் பலர் எழுதும் போது ள,ல.ண,ன ற,ர ஆகிய எழுத்துக்களின் வித்தியாசம் தெரிந்தும்,உச்சரிப்பு,ஓசை,ஒலி எப்படி வரும்,வரணும் என்பதில் குழம்பி சில இடங்களில் தவறான எழுத்துக்களை உபயோகிப்பதால் வார்த்தையின் அர்த்தமே மாறி விடுகிறது..

காலையில் பால் கறந்து கொண்டு வா என்று சொல்வதற்கு பதிலாக,
காளையில் பால் கறந்து கொண்டு வா என்றால்?:y2:
உதாரணத்துக்கு...வெள்ளம்.வெல்லம்.எவ்வளவு பெரிய வித்தியாசம்?
அதே போல.....நீளம்,நீலம்.அரை,அறை.கள்,கல் சிரை,சிறை.மனம்,மணம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
கீழே நான் தரும் வார்த்தைகளை சொல்லி பாருங்கள்...

குணம்,பணம்,ரணம்,எண்ணம்,கிண்ணம்,எண்,கண்..
இதில் உள்ளதை பெரிய ண,அல்லது வல்லின ண என்பார்கள்
இதை சரியாக உச்சரிக்க நம் நாக்கு வாயின் மேல் நடுபகுதியை தொட்டல் சரியான ஓசை,ஒலி வரும்

அடுத்து...
மனம்.சினம்.இனம்,தினம்,சின்னம்,கன்னம்,மின்னல்,பின்னல்,இன்னல்.
இதில் உள்ளதை சின்ன ன,மெல்லின ன என்பார்கள்.
இதை சரியாக உச்சரிக்க நாக்கு நம் மேற்பற்களின் முன் இரண்டு பற்களை தொட்டால் சரியான ஓசை,ஒலி வரும்.

அடுத்து...
எலி,கிலி,புலி,வால்,கால்,சொல்.நில்.கோலம்.பாலம்.
இதில் உள்ளதை சின்ன ல,மெல்லின ல என்பார்கள்.
இதை சரியாக உச்சரிக்க நாக்கு நம் மேற்பற்களின் முன் இரண்டு பற்களை தொட்டால் சரியான ஓசை,ஒலி வரும்.

காளை,வேளை,எள்,தேள்,தாள், வாள்,தாளம்,கள்ளன்,குள்ளன்,உள்ளம்.
இதில் உள்ளதை பெரிய ள,அல்லது வல்லின ள என்பார்கள்.இதை சரியாக உச்சரிக்க நம் நாக்கு வாயின் மேல் நடுபகுதியை தொட்டல் சரியான ஓசை,ஒலி வரும்.
அடுத்து...
மரம்,ஜுரம்,சிரம்,தூரம்,பாரம்,ஏரி,காரம்,சாரல்,தூரல்.
இதை சின்ன ர,மெல்லின ர என்பார்கள்.
இதை அதிகம் அழுத்தாமல் மென்மையாக உச்சரிக்கவேண்டும்.

அறம்,புறம்,இறைவன்,பிறை,நிறை,குறை,மறை,கறை,துறை.
இதை பெரிய ற,அல்லது,வல்லின ற என்பார்கள்..
இதை சற்று அழுத்தி உச்சரிக்கவேண்டும்..
இதில் கவனிக்க வேண்டியது. ற,ர வின் உச்சரிப்பில்,ஓசையில்,ஒலியில் பெரிய வித்தியாசமில்லை.

இதை நான் எழுதியதால் நான் எழுதும் போது தவறே இருக்காது என்று நான் சொல்லவில்லை.

நல்ல தமிழில் நண்பர்கள் எழுதவும்,தவறின்றி எழுதவும் தான் இதை எழுதியுள்ளேன்.
நல்ல தமிழ்,தமிழ் வார்த்தைகள் கற்க ஆசை,ஆர்வமுள்ளவர்கள் மக்கள் தொ,காட்சி பாருங்கள்,குறிப்பாக சனி,ஞாயிறுகளில் ஒளி பரப்பாகும் தமிழ்பேசு,தங்ககாசு நிகழ்ச்சியை பாருங்கள்..

நண்ப,நண்பிகளின் மேலான ஆலோசனைகள்,மற்றும் எண்ணங்களை வரவேற்கிறேன்..
சாஜித்...

JACK 28-02-09 08:06 AM

Quote:

Originally Posted by sajid80 (Post 830573)
நண்ப,நண்பிகளே....
நம்மில் பலர் எழுதும் போது ள,ல.ண,ன ற,ர ஆகிய எழுத்துக்களின் வித்தியாசம் தெரிந்தும்,உச்சரிப்பு,ஓசை,ஒலி எப்படி வரும்,வரணும் என்பதில் குழம்பி சில இடங்களில் தவறான எழுத்துக்களை உபயோகிப்பதால் வார்த்தையின் அர்த்தமே மாறி விடுகிறது..
சாஜித்...

இந்த பிரச்சனை எனக்கும் உண்டு

மிக உபயோகமான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி சஜித்

மேலும் ஆங்கிலத்தை ms word documentல் டைப் செய்யும் போது spelling மிஸ்டேக் வந்தால் அந்த வார்த்தைக்கு கீழே கோடிட்டு காட்டுவதோடு அதற்கான சரியான spelling ங்கையும் எடுத்துக்காட்டும் அது போல் நமது தமிழுக்கும் ஏதாவது சாப்ட்வேர் இருக்கிறதா:001: இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

BILLA 28-02-09 08:19 AM

அன்புள்ள சாஜீத்.. மிகவும் உபயோகமான ஒரு திரியை ஆரம்பித்துள்ளீர்கள்... நம் நண்பர்கள் சில வேளைகளில் இதுபோன்ற சிறு தவறு செய்கிறார்கள்.. அவர்களை பொதுவில் திருத்தினால் மனசங்கடம் ஏற்படும்.... அதனால் இதுபோன்ற திரிகளை அவர்கள் பார்ப்பதன் வாயிலாக அவர்களின் எழுத்துப்பிழைகளை திருத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்..

சில வார்த்தைகள் நண்பர்கள் பயன்படுத்தும் போது நான் கண்டது...

நண்றி இது தவறு --- நன்றி இது தான் சரி
நன்பன் இது தவறு --- நண்பன் இது தான் சரி
வளியாக இது தவறு --- வழியாக இது தான் சரி
உறுப்பிணர் இது தவறு --- உறுப்பினர் இது தான் சரி

இந்த பதிப்பிலேயே இன்னும் சேர்க்கிறேன்...

நல்ல உபயோகமான திரி தொடங்கிய சாஜீத்துக்கு நன்றி

எந்திரன் 28-02-09 08:20 AM

நண்பர் கூறுவது முற்றிலும் சரி. ஏதோ எனக்கு தெரிந்த ஒன்று ;

தமிழ் பேசுவதிலேயே கூட ழ ல ள உச்சிரிப்பு வித்யாசப்படும்.

உதாரணமாக " தொழிலாளி " ஒரே வார்த்தையில் மேற்கண்ட மூன்று எழுத்துக்களும் வருகிறது இது போன்ற வார்த்தைகளை பேச்சிலும் சரி எழுத்திலும் சரி சரியாக உச்சரிக்க / எழுத வேண்டும்

sunrise 28-02-09 08:20 AM

காமலோகத்தில் காமபாடம் கற்றுக்கொண்டு இருக்கும்பொழுதும், காம சிந்தனைகளை, கனவுகளை பகிர்ந்துகொள்ளும் வேலையில், பள்ளிப்பாடத்திற்க்காக திரியை திறந்து தமிழ் மொழியை உச்சரிக்கும் விதத்தை நினைவுபடுத்தியமைக்கு என் வாழ்த்துக்கள்.

karalin 28-02-09 08:22 AM

ஆன் - இது சரி
ஆண் - இது தவறு
பெண் - இது சரி

BILLA 28-02-09 08:36 AM

Quote:

Originally Posted by karalin (Post 830774)
ஆண் - இது தவறு

ஆண்கள் ஆண்... ஆண்மை.... ஆண்டுகள்... சஜீத் சொன்னதை கவனியுங்கள்.....
Quote:

Originally Posted by sajid80
இதில் உள்ளதை பெரிய ண,அல்லது வல்லின ண என்பார்கள்
இதை சரியாக உச்சரிக்க நம் நாக்கு வாயின் மேல் நடுபகுதியை தொட்டல் சரியான ஓசை,ஒலி வரும்


sreeram 28-02-09 08:38 AM

Quote:

Originally Posted by karalin (Post 830774)
ஆன் - இது சரி
ஆண் - இது தவறு
பெண் - இது சரி

பாலினம் குறிக்க “ண்” சரியாது.
ஆண் - சரி
ஆன் - தவறு

sreeram 28-02-09 08:41 AM

Quote:

Originally Posted by BILLA (Post 830771)
வளியாக இது தவறு --- வழியாக இது தான் சரி

இரண்டிற்கும் வெவ்வேறு பொருட்கள்

வழி --- பாதை
வளி --- காற்று. வளி மண்டலம். (அறிவியலில் வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்ஸிஜன் உள்ளன என பாடம் படித்திருப்போம். நினைவிருக்கின்றதா...?)

எந்திரன் 28-02-09 08:55 AM

இன்னொரு "வலி" யிருக்கிறது அது வேதனையை குறிக்கும்
அதுவே "வலியுருத்துவது" என்ற வார்த்தை வற்புருத்துவதை குறிக்கும்.
மற்றொன்று "வழிமுறை" இது ப்ரொசீஜரை குறிக்கும்
"வழிகாட்டி" - கைட், இன்னும் வல்லினம், வல்லவர், வள்ளல், வல்லுநர், போல பல


All times are GMT +5.5. The time now is 02:57 PM.

Powered by Kamalogam members