காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கவிஞர் நா. முத்துக்குமார் திடீர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=69065)

PUTHUMALAR 14-08-16 04:58 PM

கவிஞர் நா. முத்துக்குமார் திடீர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி..
 
கவிஞர் நா. முத்துக்குமார் மறைவு.. கவிஞர் நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்திவிட்டார்.. குறுகிய காலத்தில் 1000 க்கு அதிகமான பாடல்களை எழுதி இரு முறை தேசிய விருதை வென்றுள்ளார்.. தமிழக அரசின் சிறந்த கவிஞர் விருதையும் வென்றுள்ளார்.. காதலை விரசமில்லாமல் வடிப்பதில் வல்லவர்..

அவர் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று:

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

அவரின் கீழ்காணும் பாடலை ரசிக்காத மனமும் உண்டோ?!..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

அன்னாரின் திடீர் மறைவிற்கு கனத்த இதயத்துடன் எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றேன்..

JACK 14-08-16 05:50 PM

காலையில் இந்த நீயுசை பார்த்தது அதிர்ச்சி ஆனேன். நம்ப முடியாமல் பல வலை தளங்களில் தேடின பிறகுதான் நம்ப முடிந்தது. மனது வலித்தது.

அவரின் ஆத்மா சாந்தியடைட்டும்

tdrajesh 14-08-16 06:28 PM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1398082)
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,
அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

ஆஹா... என்ன அருமையான வரிகள்!

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

vjagan 14-08-16 07:13 PM

நெஞ்சை விட்டு நீங்காத பாடல்களை இயற்றிய கவிஞர் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளித்தது அய்யா!

கடவுள் மிகவும் கொடுமையானவர்தான் அய்யா !
நல் முத்துக்களை நமக்கு மிகவும் காலம் கடந்தேதான் காட்டும் அந்தப் பொல்லாத ஆண்டவர் காட்டிவிட்டு வெகு சீக்கிரமே அவைகளை நம்மிடமிருந்து பறித்து செல்கிறார் அய்யா!
அவர் இரக்கமற்ற பொல்லாதவர்தான் அய்யா !

மறைந்த அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெவித்துக் கிறேன் அய்யா!

ஸ்திரிலோலன் 14-08-16 09:13 PM

அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..

nandabalan 14-08-16 10:50 PM

யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் எழுதிய பாடல்கள் எதுவும் நெஞ்சை விட்டு அகலாது. என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் இவரின் ஆனந்த யாழ். நம் காதில் ஒலிக்க விட்டு விட்டு இவர் அமைதியாகி விட்டார்.

taninbaa 14-08-16 11:00 PM

இன்று காலை 11 1/2 மணிக்கு நியூஸ் 7 சேனலில் பார்த்தபோது இந்த கொடுரமான செய்தி கண்டு உங்களை போன்று நானும் அதிர்ச்சி அடைந்தேன் .இன்று மாலையே இறுதி ஊர்வலம் அதே சேனலில் நேரலை கண்டு மேலும் மனமுடைந்தேன் ..சிறு வயதிலே இரண்டு தேசிய விருதுகளை பெற்ற மகா கவிஞனின் ஆன்மா சாந்தியடையட்டும்.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை .

tamilplus 14-08-16 11:00 PM

சைவம் படத்துக்காகவும் , தங்கமீன்கள் படத்துக்காகவும் என இருமுறை தேசிய விருது பெற்ற இவர் குடியாலும் , அதை தொடர்ந்த மஞ்சள் காமாலை நோயாலும் இறந்ததாக சொல்கிறார்கள்.
இவருடைய மரணம் குடியில் சிக்கி இருப்போருக்கு இன்னொரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைக!

NamiXXX 14-08-16 11:55 PM

அருமையான பாடல்களை எழுதிய நம் நண்பர் மிக குறைந்த வயதிலேயே மறைந்துவிட்டார் என்பதை கேட்க்கும்போது நம்பமுடியவில்லை .. தமிழுலகத்திற்கு ஒரு பேரிழப்பு

Laal 15-08-16 02:57 AM

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்....

venkat8 15-08-16 03:37 AM

இந்த துக்க செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்றேன். மிக குறுகிய காலத்தில் அதிக பாடல்களை எழுதியவர். ரஜினி நடித்த 'சிவாஜி' திரைப்படத்தில் 'பல்லெலக்கா..' பாடலும் நா முத்துகுமார் எழுதியது தான்.

சாதிக்க வேண்டிய வயது... 41 வயதில் மரணம் என்பதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

MACHAN 15-08-16 04:28 AM

என் மனைவியும் நானும் காரில் பயணிக்கும் போதெல்லாம்

“ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!”


என்ற பாடலை போடுங்க மச்சான் என்று என்னை வற்புறுத்தி மீண்டும் ரிப்பீட்டாக கேட்டு ரசித்தபடியே பயணிப்பாள்..!
நா. முத்துக்குமார் அவர்கள் எழுதிய இந்த பாடலின்மீது அவ்வளவு அலாதி பிரியம் அவளுக்கு..!

குறுகிய காலத்தில் இரண்டு தேசிய விருது பெற்றவர். 41 வயதில் மரணம். அவர் மனைவி கையிலோ 8 மாத கைக்குழந்தை..! மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அன்னாரின் மறைவு அவரின் குடும்பத்தார்க்கும் தமிழ்ப்பட உலகுக்கும் மிகப் பெரிய இழப்பேயாகும்.

HERMI 15-08-16 05:57 AM

'வெண்மேகம் பெண்ணாக' உருமாற
'ஒரு தடவை சொல்வாயா' - வசீகரா
'சுட்டும் விழிச் சுடர்' ... குருடாக
மனம் 'உருகுதே மருகுதே'....
'தெய்வங்கள் எல்லாம்' தோற்றுப்போய்.......
'ஆனந்த யாழ்' இன்று அநியாயமாய் புழுதியில்.

மது என்னும் அரக்கன் என் கவியை கொன்றதென்னவோ பாவம்..!!!???

வார்த்தையில் வடிக்கமுடியாத இழப்பு. அவரின் ஆன்மா நித்திய இளைப்பாறல் பெறுவதாக...! கவியின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Deepak 19-08-16 04:11 PM

மறைத்த பாடலாசிரியர் முத்துக்குமார் அவர் குடும்பத்திற்கு காமலோகம் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

bedroom_salak 24-08-16 07:53 PM

எனக்கு பிடித்த பாடலாசிரியர்.. அன்னாரின் மறைவு கேட்டு அதிர்ச்சியாகி...
மீண்டு வரவே முன்று நாட்களாகின..
ஆன்மா சாந்தியடையட்டும்...


All times are GMT +5.5. The time now is 10:29 AM.

Powered by Kamalogam members