காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்தார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=66995)

ஸ்திரிலோலன் 16-07-15 11:33 AM

மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..

Nallavan1010 16-07-15 11:56 AM

24.06.1928 அன்று இவ்வுலகிலே பாலக்காட்டில் தோன்றி நாலாவது வயதில் தந்தையை பறிகொடுத்து வறுமையின் கொடுமை தாளாது தாயுடன் மரணத்தை தழுவ இருக்கும் நேரத்தில் தாத்தாவால் காப்பாற்றப்பட்டு உழைத்து திரை இசை சகரவர்த்தி யாக உயர்ந்த மனயங்காத் சுப்பிரமணியம் விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்களுடன் இனைந்து 1952 ல் பணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை இசை வாழ்கையை துவங்கி எம்.எஸ்.வி. என்ற செல்லப்பெயரால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்க இடம்பெற்று விட்ட அந்த இசை மேதை இன்று நம்மிடையே இல்லை என்று நினைக்கையில் வேதனை நெஞ்சை கவ்வுகிறது. இவர் தனியே இசையமைக்க படத்தில் மழையில் ஏழைகள் நனைய மக்கள் திலகம் வாயசைக்க சந்திரோதயம் படத்தில் இவர் படைத்த இசை காவியங்களில் ஒன்றின் வரிகள் இவை

பகை வந்த போது துணை ஒன்று உண்டு
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.


மக்களின் மனதில் நம்பிக்கை ஒளிதந்த .இந்த இசை மழை தந்த கார்மேகம் விண்ணில் மேகங்களுடன் இன்று மறைந்த்விட்டது

இவர் ராமமூர்த்தி அவர்களுடன் இணைந்து இசையமைத்து தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் மக்கள் திலகத்தின் நடிப்பின் மூலம்.ஒலித்த ஒரு பாடல்

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.....

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் ஆன்மா "ஓடும் மேகங்களே" உங்களிடையே ஊடுருவி வந்துவிட்டது. எங்களுக்காக விண்ணிலுள்ள தெய்வங்களிடம் அவர் ஆன்மா சாந்தியடையுமாறு எங்கள் சார்பில் வேண்டுவீர்களாக

1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் போர் மூண்ட போது "ஜெய் ஜவான் ஜெய் கிஸான்" என்று அன்றைய பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் முழங்க பாகிஸ்தான் எல்லையில் தங்களின் வெற்றிப்பயணத்தை துவங்கிய நமது ராணுவத்தினருக்கு எல்லையில் தன்னுடைய இன்னிசை மூலம் உற்சாகப்படுத்திய இந்த இசை மாமேதைக்கு வீர வணக்கங்கள்.

salem1963 16-07-15 12:30 PM

ஒரு மிக பெரிய இசை சகாப்தம் முடிவடைத்து பூமியை விட்டு செண்டுள்ளது அவரைப்போல் ஒரு மெல்லிசை இசை கலை மேதையை இந்த உலகம் இனி காண இயலாது அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் அவரது உடல் மறைத்தாலும் அவேர் வழங்கிய பாட்டுகள் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும்

madhavi 16-07-15 01:01 PM

எம்.எஸ்.வி. என்றாலேயே ஒரு தனி ட்ரேட்மார்க் இருக்கும்
கண்ணதாசன். வாலி இவர்களுடன் இணைந்த பாடல்கள் என்றும் அழியாதவை..!

maria 16-07-15 05:04 PM

சாகாவரம் கொண்ட மெட்டுகளை அமைத்து தந்த இறவா புகழ் படைத்த மெல்லிசை மன்னர் எம் எஸ்..வி யின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

anabayan 16-07-15 06:17 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1348984)
24.06.1928 அன்று இவ்வுலகிலே பாலக்காட்டில் தோன்றி நாலாவது வயதில் தந்தையை பறிகொடுத்து வறுமையின் கொடுமை தாளாது தாயுடன் மரணத்தை தழுவ இருக்கும் நேரத்தில் தாத்தாவால் காப்பாற்றப்பட்டு உழைத்து திரை இசை சகரவர்த்தி யாக உயர்ந்த மனயங்காத் சுப்பிரமணியம் விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்களுடன் இனைந்து 1952 ல் பணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை இசை வாழ்கையை துவங்கி எம்.எஸ்.வி. என்ற செல்லப்பெயரால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்க இடம்பெற்று விட்ட அந்த இசை மேதை இன்று நம்மிடையே இல்லை என்று நினைக்கையில் வேதனை நெஞ்சை கவ்வுகிறது.

கணக்கும் இதயத்துடன் நானும் கவியரசருடன் இணைந்து மெல்லிசை மன்னரின் ஆத்மா ஆண்டவனின் பாதத்தில் இளைப்பாற பிராத்திக்கின்றேன்.

superstar 16-07-15 06:42 PM

அற்புதமான பாடல்களை தந்த அருமையான மேதை.. கர்வம் என்பது துளி கூட இல்லாத ஒரு மாமேதை.. RIP

காமராஜன் 16-07-15 06:54 PM

மெல்லிசை மன்னரின் ட்யூன்கள் இரத்த்தத்தில் ஊறிப் போய் விட்டன ..!

அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன...?

biobar97 16-07-15 07:56 PM

உடலுக்கு தான் மறைவு, அவர்கள் விட்டுசென்ற இசை சுவடுகள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழும், அவர் தம் பெயர் சொல்லும். வாழ்க MSV புகழ்.

tamilplus 17-07-15 01:39 AM

அவரை போல காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை மீண்டும் மறுபிறவி எடுத்து அவரே வந்து கொடுக்க வேண்டுவோம். அவருக்கும் இசை ஞானிக்கும் நல்ல நட்பு இருந்தது, அவருக்கு மார்க்கெட் போன பின்பு இளையராஜா படங்களுக்கு அவர் பின்னணி இசை அமைத்து கொடுத்ததாகவும் அதற்கு இளையராஜா நல்ல ஊதியமும் மரியாதையும் கொடுத்து வந்ததாகவும் கேட்டு இருக்கிறேன் .


All times are GMT +5.5. The time now is 10:09 PM.

Powered by Kamalogam members