காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2019 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71524)

xxxGuy 14-01-19 10:27 AM

2019 புதியவர் சேர்க்கை ஆரம்பம்
 
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் முன்கூட்டியே எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

இந்த நன்னாளை முன்னிட்டு காமலோகம்.காம் தளத்தின் புதியவர் சேர்க்கை ஒரு மாதத்திற்கு துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 10-30 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு சென்று பாருங்கள், அது அங்கே சென்றிருக்கலாம்.

அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நிறைவு செய்து நமது காமலோகம்@ஜிமெயில்.காம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை, புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம்,

வெகு நாட்களாக தளத்தில் பங்கேற்காத பழைய உறுப்பினர்கள் உண்மையிலேயே மீண்டும் சேர்ந்து பங்களிக்க விரும்பினால், உங்கள் பழைய கணக்குகளை முடுக்கிவிட விண்ணப்பித்து பங்கேற்கலாம்.

தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்..

புதியவர்களே வாருங்கள்.! தள விதிமுறைகளை பின்பற்றி இந்த கண்ணியமான காமலோக குடும்பத்துடன் இணைந்து மகிழ்ந்திடுங்கள்.!!

நன்றி..!!

vjagan 14-01-19 10:42 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1465248)
தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்.

நமது லோகத்தில் உலா வரப்போகும் வரப்போகும் புதிய பறவைகளை ஒவ்வொன்றாக முகமன் கூறி வரவேற்று வாழ்த்து சொல்ல காத்திருக்கும் சில பல உறுப்பினர்களில் நானும் சேர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் அய்யா !

வாய்ப்பு கொடுத்து அழைப்பு அனுப்பிய தங்களின் மேலான வழி நடத்தலுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா!

புதியவர்கள் அனைவருக்கும் என்னாலான வழி நடத்துலை செவ்வனே செய்வேன் அய்யா !

Deepa1 14-01-19 05:46 PM

புதியவர் சேர்க்கை ஆரம்பம். ரொம்ப அருமை. இங்கே பெண்கள் அதிகமா சேர ஆதரவு தரணும். சேந்தப்பறம் அவங்க ஆம்பளையா பொம்பளையாங்கிற ஆராய்ச்சி எல்லாம் செய்யாம நட்புடன் பழகினா நல்லா இருக்கும். நிறைய புதிய நட்புகள் சேர்ந்து இந்த காம லோகம் மேலும் பொலிவு பெற வாழ்த்துக்கள். முடிஞ்சவரை புதிய அறிமுகங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

gemini 14-01-19 09:50 PM

அருமை.
வழமை போல இந்த வருட தொடக்கத்திலும் புதிவர்கள் வருகை ஆரம்பமாகி விட்டது.
புதிய உறுப்பினர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளேன்.
அத்தோடு அவர்கள் இங்கே எழுதும் அவங்களுடைய அனுபவங்களை படிக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

ஸ்திரிலோலன் 14-01-19 10:11 PM

நம் லோகத்தில் இணைய இருக்கும் புதிய நண்பர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறேன் தலைவரே.. புதிதாய் வரும் அவர்களுக்கு, என்னால் ஆன உதவிகளை செய்து வழி நடத்துவேன் என்றும் உறுதி கூறிக் கொள்கிறேன்..

dr.no 18-01-19 01:33 AM

வர இருக்கின்ற புதிய எழுத்தாளர்களை வருக வருக என வரவேற்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 03:45 PM.

Powered by Kamalogam members