காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்தி தமிழில் எழுதுவது எப்படி..? (http://www.kamalogam.com/new/showthread.php?t=61465)

குரு 26-09-12 08:57 PM

என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்தி தமிழில் எழுதுவது எப்படி..?
 
இணையத்தில் கீழ்க்கண்ட முகவரிக்குச் சென்று

http://software.nhm.in/products/writer ஒரு எம்பிக்கும் குறைவான NHM Writer 1.5.1.1 என்னும் தமிழ் எழுதியையும் அதனுடன் கூடிய வழிகாட்டியையும் ( மேனுவல் ) தரவிறக்கி கணிணியில் சேமித்துக் கொள்ளவும்.

மேனுவலை பொறுமையுடன் வாசித்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும்.

NHMWriter யை எவ்வாறு தரவிறக்குவது..?

NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
******************************************************************************************************************************
****http://lh5.ggpht.com/kmdfaizal/SQXXS...age_thumb3.png*********************************

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXU...ge_thumb12.png****************************************************************************************

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXX...ge_thumb13.png

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXb...e_thumb141.png

4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXd...ge_thumb15.png

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXg...ge_thumb17.png

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXj...ge_thumb18.png

பிறகு இன்ஸ்டால் செய்யப்படும்..

http://lh4.ggpht.com/kmdfaizal/SQXXm...ge_thumb20.png

தொடரும்..

குரு 26-09-12 09:00 PM

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXn...ge_thumb22.png


தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.


http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXp...e_thumb221.png

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

http://lh4.ggpht.com/kmdfaizal/SQXXs...e12_thumb1.png

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXu...age_thumb5.png

மேற்கொண்டு ஐயங்கள் இருப்பின் இங்கே கேட்கலாம். வழிகாட்ட தயாராய் இருக்கிறேன்.

நிர்வாக நண்பர்களே.. நான் இதுபோன்ற திரி இருக்கிறதா என்று தேடலில் பார்த்துவிட்டு இல்லை என எனக்குக் கிடைத்ததால் இந்த திரியைப் பதிகிறேன். அப்படி முன்னரே இருந்தால் தயவு செய்து என் தவறாக எண்ணிடாமல் இந்த திரியை நீக்கிவிடுங்கள்.

Mathan 26-09-12 09:12 PM

நல்ல பயணுள்ள தகவல் அண்ணா.
நான் இந்த தமிழ் மென்பொருள் தான் எனது வின்டோஸ் கணினியில் வைத்திருக்கிறேன்.
தமிழையும் சேர்த்து இந்திய மொழிக்கான நல்ல ஓர் மென்பொருள்.

நான் அதிகம் பயண்படுத்துவது உபுண்டு.
உபுண்டுவில் தமிழ் எல்லாம் அதனுள்ளேயே உள்ளது.
மொத்த கண்ணியையுமே தமிழ் கணிணியாகவும் பயண்படுத்த முடியும்.
எல்லாமே தமிழில் தெரியும்.

எனக்கு உபுண்டுவில் ரொம்பவும் பிடித்த விசயம்,
தமிழ் எழுத்துகள் கண்ணில் எடுத்து ஒத்திக்கொள்வது போல் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

அடுத்ததாக வின்டோஸ் போல் வைரஸ் பற்றி கவலை படவேண்டிய அவசியமும் இல்லை.
உபுண்டுவை பற்றி சொல்லனும்னா நிறைய சொல்லலாம். மொத்ததில் பல விஷயம் அதில் உள்ளது.
நிறைய அப்ளிகே ஷன்ஸ் முக்கியமாக எல்லாமே இலவசம். வின்டோஸ்சை விட வேகமாக செயலாற்றும்.

உபுண்டு g-edit நோட்பேடில் எவ்வளவு பெரிய கதை எழுதினாலும், அதில் உள்ளதை அப்படியே இங்கே லோகத்து எடிட்டரில் காப்பி போஸ்ட் செய்தால், அதில் உள்ள ஃபார்மெட் அப்படியே கச்சிதமாக இங்கே பதிவாகும்.

விண்டோஸ் சில் அப்படி இல்லை. நோட்பேடில் டைப் செய்த கதையை, இங்கே காப்பி பேஸ்ட் செய்தாலும், நிறைய கேப் விழும். ஒவ்வொரு வரியாக ஃபார்மெட் செய்றதுகாட்டியும் தலவலியே வந்துவிடும்.

லினக்ஸ் யுகம் வளரட்டும் வாழட்டும் !

gemini 26-09-12 11:25 PM

பயனுள்ள தகவல்.

ஆனால் இது விண்டோஸ் 2003/XP & Vista ஆகியவற்றுக்கு மட்டுமா வேலை செய்யும்?

இப்போ விண்டோஸ் 7 , மற்றும் 8 உம் வந்து விட்டனவே.
நீங்கள் இதில் முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?
நான் இப்போதும் கூகில் தான் பாவிக்கிறேன்.
மிக மிக இலகுவானதாக உள்ளது.

குரு 26-09-12 11:36 PM

நான் விண்டோஸ் 7 தான் பாவிக்கிறேன் நண்பரே.. மிக நன்றாக வேலை செய்கிறது. இதோ இந்த எழுத்துகளும் அதில் தான் உருவானது. நான் தமிழ் மற்றும் हिन्दी பயன்படுத்துகிறேன். மிக நன்றாய் வேலை செய்கிறது.

KANNAN60 26-09-12 11:55 PM

Quote:

Originally Posted by குரு (Post 1177422)
நான் விண்டோஸ் 7 தான் பாவிக்கிறேன் நண்பரே.. மிக நன்றாக வேலை செய்கிறது. இதோ இந்த எழுத்துகளும் அதில் தான் உருவானது. ....

நானும் அதே அதே குரு!

HERMI 27-09-12 06:11 AM

நானும் பயன்படுத்த முயலுகிறேன்...பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி குருவே.

demkae 27-09-12 09:50 AM

நல்ல அருமையான தகவல் நானும் முயற்சி பண்ணி பார்க்கிறேன்.

pooja_priyan 28-09-12 04:08 PM

மிகவும் அருமையான உபயோகமான தகவல்!! நானும் என் எச் எம் தான் உபயோகிக்கிறேன்! எல்லா விஷயத்துக்கும் குரு ஒருத்தர் வேணும்..னு சொல்றது சரிதானே!! ரொம்ப நன்றி குரு!!!

chaplincharlie 01-10-12 03:27 PM

இதன் மூலம் நானும் பயன்பெற்றேன்.என்.எச்.எம்.ரைட்டர் மென்பொருள் அற்புதமோ அற்புதம். நன்றி நண்பரே.
நல்ல உதவி செய்தீர்.மீண்டும் நன்றி.


All times are GMT +5.5. The time now is 03:59 AM.

Powered by Kamalogam members