காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   ஒரு சிறப்பான காமக் கதை எழுதுவது எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=76287)

Superman82 17-01-22 12:55 AM

ஒரு சிறப்பான காமக் கதை எழுதுவது எப்படி?
 
காமக்கதைகள் . இதைப்பற்றி நான் எழுதலாமா? என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக காமக் கதைகளை படித்து வருகிறேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பல கதைகளை படித்திருக்கிறேன். மேலும் கடந்த சில வருடங்களில், ஒருசில கதைகளையும் எழுதியிருக்கிறேன். எனது அனுபவத்திலிருந்து, ஒருசிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி இந்த பதிவை இடுகிறேன். ஒரு சிறந்த காமக் கதை, அல்லது எதை நான் சிறப்பான காமத் கதையாகக் கருதுகிறேனோ அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இது, இங்கு காமக்கதை எழுத ஆசைப்படும் புதியவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

சொல்லவந்ததை நீட்டி முழக்காமல், சுவாரஸ்யமாகத் தர முயற்சிக்கிறேன். படித்துவிட்டு, உங்களின் பார்வையில் ஒரு சிறந்த காமக் கதை எப்படி இருக்கும் என்பதையும் கருத்தில் சொல்லுங்கள்.

காமக் கதைக்கான சில குறிப்புகள்,
  1. கதைக்கரு/ஆரம்பப்புள்ளி
  2. கதை அறிமுகம் /கதைமாந்தர் அறிமுகம்
  3. காமம் துளிர்க்கும் இடங்கள்/காமுறுதல்/காமத்திற்கான காரணம்
  4. காமத்திற்கான முன்னோட்டம்
  5. உரையாடல்கள்
  6. முழுதான காமம் நடைபெறும் இடங்கள்.
  7. கதையின் முடிவு
  8. கடந்து செல்லுதல்
  9. கதை சொல்லும் கோணம்
  10. மேலும் சில சுட்டிகாட்டிகள்


1.கதைக்கரு/ஆரம்பப்புள்ளி
கதை எழுதும் அனைவருக்கும் இந்த ஆரம்பப் புள்ளிகள்/கதைக்கரு எளிதாகவே மனதிற்குள் தோன்றும். ஆனால் அதை எழுத உட்காரும்போது,

"அபிராமி...அபிராமி.... அந்த வார்த்தையை எழுதும்போதுதன்"
"உன்ன நெனச்சு பாக்கும்போது… கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது… ஆனா அத எழுதனுன்னு உக்காந்தா… அந்த எழுத்துதான் வார்த்தை…"

எனக்கும், இதைச்சொல்லும்போதே. எனோ இந்த குணா படத்தின் பாடல் மனதிற்குள் வந்துபோனது. கதையின் ஆரம்பமும் இப்படித்தான் இருக்கும். கதை நன்றாக வரவேண்டுமே, என்ற எதிர்பார்ப்பு தரும் அழுத்தங்கள். நம் மனதில் உள்ள கதைக்கருவை எழுத்தாக வடிப்பதில் சிக்கல்களைத் தந்துவிடக்கூடும். எல்லாக் கதைக்கருவுக்கும் மூலம், எதோ ஒரு இடத்தில நமக்கு வரும் ஒரு சின்ன இன்ஸ்பிரேஷன். அதனால் பொறுமையாக, உங்கள் மனதுக்கு பிடித்ததுபோல எழுதுங்கள் மிக எளிதாக கடந்துவிடலாம்.


2. கதை அறிமுகம் /கதைமாந்தர் அறிமுகம்
பலர் இந்த கதாபாத்திரங்களின் அறிமுகத்தை கதையின் தொடக்கத்திலேயே செய்வார்கள். சிலர் அதனை கதையின் நடுநடுவே செய்வதும் உண்டு. இவை இரண்டிலுமே தவறுகள் கிடையாது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. கதை, சிறுகதையாக இருக்கும் பட்சத்தில், ஆரம்பத்தில் கதை அறிமுகத்தை வைக்கலாம். நெடுங்கதையாக, தொடர்கதையாக இருப்பின். கதை, கதைமாந்தர் அறிமுகங்கள் அவ்வப்போது சம்பவங்களைப் பொறுத்து நிகழ்வது, கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட உதவும்.

ஓர் உதாரணம்,
"அன்று, அந்தத் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது, எனோ அவனுக்கு மட்டும் எதிலும் கலந்துலொள்ளும் ஆர்வம் இல்லை.. அவன் மனதோடு போராடிக்கொண்டே இருந்தான்...."

இப்படி கதையை ஒரு புள்ளியில் தொடங்கி, பாத்திரங்களின் அறிமுகங்களை பின்னால் தள்ளிவைக்கலாம். இவை எல்லாமே, தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது.


3. காமம் துளிர்க்கும் இடங்கள்/காமுறுதல்/காமத்திற்கான காரணம்
"அவன் வந்தான். இவளும் வந்தாள். இருவரும் கழட்டிப்போட்டார்கள். சுபமாக முடிந்தது " இப்படியும் கதை சொல்லலாம். தவறில்லை. ஆனால் காமம் துளிர்க்கும் அந்தப் புள்ளி, அவர்கள் காமுறும் இடங்கள், எதிர்பாலின ஈர்ப்பு, காமத்திற்கான காரணம், அப்போது அவர்களின் மனநிலை.... இதையெல்லாம், ஒரு சின்ன, மிகவும் சிறிய வாக்கியங்களில் சொன்னால் கூட கதையின் நம்பகத் தன்மை வியப்புறும் வகையில் அதிகரிக்கும்.

இந்தப் பகுதி, ஒரு த்ரில்லர் படத்தில் வரும் அந்த முடிச்சுக்கு, சற்றும் சளைத்ததல்ல. என்னைப் பொறுத்தவரையில், ஒரு காமக் கதையில் மிக முக்கியமானதாக இந்தப் பகுதியைத்தான் சொல்லுவேன். இந்த முடிச்சு சரியாக அவிழ்ந்துவிட்டால், கதையில் காமமும் நன்றாகவே பெருக்கெடுக்கும். நண்பர்களே மீண்டும், இங்கே எதுவுமே கட்டாயமில்லை. அவரவர் சுய விருப்பத்தை பொறுத்தது.


4. காமத்திற்கான முன்னோட்டம்
காமமும் ஆசையும் மனதில் வந்துவிட்டது. சரி... கூடல் உடனே நடந்துவிடுமா?. ஆசை வந்த இடத்திலிருந்து, கூடல் நடக்கும் இந்த இடைவெளியை அழகாக நிரப்புவது.... ஒரு சிறந்த படைப்பை, மற்ற படைப்புகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும். இதில் முக்கியமான பகுதி பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை விவரிப்பது. தலைவன் என்ன நினைக்கிறான், அங்கே தலைவி என்ன பாடு படுகிறாள். ஒரு சில வரிகளே கூட போதுமானது. பின்பு, அவர்களின் தயக்கம் களைந்து எந்த ஒரு சந்தர்ப்பத்தில் கூடினார்கள் என்பைதச் சொல்லுவது சிறந்த படைப்பாக உருவெடுக்கும்.


5. உரையாடல்கள்
கதையில் வரும் உரையாடல்கள், கதையின் இயல்புத் தன்மையை மேலும் அதிகரிக்க உதவும். அங்கே இருப்பது மனிதர்கள், அவர்களுக்குள் இருப்பது உணர்வு, நடப்பது உணர்ச்சிக்கான போராட்டங்கள் என்பதை படிப்பவர்கள் மனதில் அழமாகப் பதிய வைக்க உரையாடல்களைப் பயன்படுத்தலாம். மேலும் படிப்பவர்களுக்கு இது ஒரு மூன்றாவது கோணத்தை தரும். பெரும்பாலும், நெடுங்கதைகளுக்கும், நீளமான தொடர் கதைகளுக்கும் இது அழகாகப் பொருந்தும். படிப்பவர்களும் எளிதில் சோர்வடைய மாட்டார்கள்.


6. முழுதான காமம் நடைபெறும் இடங்கள்
எனது கல்லூரிக்காலங்களில் நண்பன் ஒருவன் எனக்குச் சொன்னது. " மச்சி, இந்தக் கதைல எல்லாம், அந்த மாதிரி சம்பவம் ஆரம்பிக்கும் வரைதான் தான் படிப்பேன், அப்புறம் அதை அப்படியே தூக்கி ஓரமா வச்சிடுவேன். நானே உறவு நடக்குற மாதிரி கற்பனை பண்ணிப்பேன்" . அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. படிப்பவர்களுக்கும் கற்பனைத்திறன் உண்டு, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காமக் காட்ச்சிகளை விவரிக்கும் பொது அவர்களின் கற்பனைத் திறனுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

"இருவரும் நடுந்து சென்றார்கள். படுத்துகொண்டாள். அவன் அவளுடைய சேலையை கழட்டினான், பின்பு, ஜாக்கெட். உள்ளே ப்ராவும் இருந்தது. அதையும் கழட்டி..." என்று ஒவ்வென்றாக கிரிக்கெட் விமர்சனம் போல செய்வது, படிப்பவர்களின் கற்பனைத்திறனை குறைத்து மதிப்பிடுவதாகும். எழுதுபவர்களின் முக்கியமான வேலை படிப்பவர்களுக்கு அந்தக் காட்ச்சிகளை கண்முன்னே கொண்டுவருவது. அதை செய்தாலே பொதும்.

எல்லாவற்றிற்கும் மேல், ஒரு வினாடி கண்களைமூடி உறவு நடைபெறுவதை கற்பனை செய்தாலே போதும். எழுத்துக்கள் தானாக வந்துவிழும்.


7. கதையின் முடிவு
காமக் கதைகளைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் 'ஹாப்பி எண்டிங்' எனும் ஒரு சந்தோஷமான முடிவுகளையே விரும்புகின்றனர். சிலருக்கு முதல் பாகத்தை படிக்கும் முன்பே, சென்று கடைசி பக்கத்தில் என்னதான் இருக்கிறது என்று எட்டிப் பார்க்கும் ஆர்வத்தை மறுக்க முடியாது. ஒருவேளை அதில் சுபமான முடிவு இல்லாத பட்சத்தில் கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும். இந்த நபர்கள் அதனைக் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம். இதற்காக இப்படித்தான் முடிவுகள் இருக்கவேண்டுமென்பதை நான் வலியுறுத்தவில்லை. அது முற்றிலும் கதையின் ஆசிரியர்களை பொறுத்தது.


8. கடந்து செல்லுதல்
கதை எழுதும்போதே பல ஆசிரியர்களுக்கு வருவது 'ரோட் ப்ளாக்' எனப்படும் 'மன முட்டுக்கட்டைகள்'. அடுத்து கதையை எடுத்துச்செல்ல முடியாத நிலை. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. இதனைத் தவிர்க்க, நம்முடைய எல்லா கற்பனைகளையும் ஒரே கதையில் திணித்துவிட முயற்சிக்கக் கூடாது. எழுதும்போது நமக்கு 'எல்லாவற்றையும் இங்கேயே எழுதிவிடலாம்' என்ற ஆர்வமும் உந்துதலும் அதிகமாக இருக்கும். இதனைத் தவிர்ப்பது நலம். இங்கேதான் முதலில் சொன்ன வழிகாட்டுதல், 'கதைக்கரு' ஞாபகம் வரவேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் பயணம் கதைக்கருவை நோக்கி மட்டுமே இருக்கவேண்டும்.

அதேபோல, ஒரே காட்சிக்குள்ளேயே அடைபட்டுக் கிடத்தலும் கூடாது. அதிலிருந்த சில சமயங்களில் வெளியேறுவது கடினமாகி விடும். சினிமா இயக்குனர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.....

"இங்க கட்பண்ணா.... அப்படியே ஸ்விட்சர்லாந்துல.... அங்க என்னாச்சுன்னா" இந்த மாதிரியான காட்சித் தாவல்கள் (நன்றாகக் படிக்கவும். கட்சி தாவல் அல்ல) காட்சிகளை வேகமாக கடந்துசெல்ல உதவும்.


9. கதை சொல்லும் கோணம்
கதைகளில், சொல்லும் கோணமும் முக்கியமான பங்கு வகிக்கிறது. தன்னிலையாகக் கதை சொல்வது, பெண்ணின் இடத்தில பெண் சொல்வதைப்போல கதை சொல்வது, மூன்றாமாரின் பார்வைக்கோணத்தில் கதை சொல்வது. இவை அனைத்துமே சரிதான். ஆனால் பெண்ணின் இடத்தில பெண் சொல்வதை போன்ற கதைகள் மிகக் குறைவு. அந்தமாதிரிக் கதைகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அவர்களின் உணர்வுகளையும் மன நிலையையும் கூட நன்றாக விளக்க முடியும்.


10.மேலும் சில சுட்டிகாட்டிகள்
எதிர்பாராத, இயல்பான சம்பவங்கள் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்ட உதவும். ஸ்பான்டேனிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அது கதையில் இன்னும் காமத்தை அள்ளித் தெளிக்கும். வித்யாசமான இடங்கள், எதிர்பாராத தருணங்கள், பொதுவெளியில் தனிமையான சில தருணங்கள் என்று பலவிஷயங்கள் இதற்க்கு கைகொடுக்கும்.

அதேபோல் கதை நடைபெரும் கால அளவுகள். நெடுங்கதைகளுக்கும் தொடர்கதைகளுக்கும் அதிகமாகவும், சிறுகதையென்றால், ஒன்று இரண்டு நாட்களில் நடப்பதுபோலவும் சொல்லலாம். கால அளவுகளையும் மனதில் கொள்ளவது நலம்.

carthickeyan 17-01-22 06:57 AM

அருமையான தகவல்கள்… இந்த மாதிரியான இடுகையைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். நான் எழுத நினைத்த உண்மைச்சம்பவத்தை எப்படி கதையாக்குவது என கடந்த சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்… தங்கள் இடுகையை படித்தபின் எப்படி எழுத வேண்டும் என எனது மனக்கண்ணில் ஓட ஆரம்பித்துவிட்டது. நன்றிகள் பல சகோ

subbu2000 17-01-22 07:55 AM

ஒரு நீண்ட இலக்கணத்தை கொடுத்து விட்டார் நண்பர் சூப்பர் மேன்...

என்னுடைய பார்வையில்
1 ஒரு நல்ல கதைக் கரு கிடைத்திருக்க வேண்டும்
2 அதனை எப்படி எழுத போகிறோம் என்ற திட்டம். அதாவது ஆரம்பம் நிகழ்வு முடிவு
இதில் தெளிவிருந்தால்...பாக்கியெல்லாம் தானே அமைந்து விடும்...
முக்கியமானது கதைகள் எழுது முன் நிறைய படித்திருக்க வேண்டும்...படிப்பென்றால் பின்னூட்டமிடும் அளவுக்கு ஆழ்ந்த படிப்பு. நம்மையறியாமல் யாருடைய ஸ்டைலாவது பிடித்து போயிருக்கும்...அந்த ஸ்டைலை கொஞ்சம் மாற்றி நாமும் எழுத வேண்டியது தான்

கதைக்கரு எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்...கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் அவ்வளவே...

asho 17-01-22 09:22 AM

கதை எழுதும் புதியவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் இந்த திரி, சிரத்தையுடன் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு பாராட்டுக்கள்.

KADAMBANC 17-01-22 10:33 AM

சிறப்பான பதிவு நண்பரே.. கதையின் தொடக்கம் படிப்பவர்களை ஈர்த்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி படிக்க வைப்பதாக அமைய வேண்டும்.

கதையின் முடிவு (பாகத்தின் இறுதியில்) தொடர்கதையாக இருந்தால் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.. ஒரு பக்க கதையாக இருந்தால் இன்பம், மகிழ்ச்சி, வலி, வேதனை, சோகம் என ஏதோ ஒரு தாக்கத்தை தருவதாக அமைய வேண்டும்..

கதை எழுதுவோருக்கு தங்களின் திரி மிகவும் பயனளிக்கக் கூடியது.. சிறப்பான கருத்துக்களை வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்!!

madavan1000 17-01-22 10:47 AM

Superman82 - வின் குடும்பத்துடன் ஒரு கார் பயணம் - கதைக்கு நான் பின்னூட்டம் இடும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய் சூப்பர் மேன் என்று எழுதியதாக ஞாபகம்.
அதை இப்பொழுதும் மெய்ப்பித்திருக்கிறார்.

கதை எழுதுவது எப்படி? என்று சுஜாதா கூட எழுதியிருக்கிறார். அது போலவே சூப்பர்மேனும் காமக் கதை எழுதுவது எப்படி? என்று தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இந்தக் கட்டுரை புதிதாக கதை எழுத வரும் புதுமுகங்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்று கதைகள் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு டெக்ஸ்ட் புக் பாடம். ஒரு கதைக்கான இலக்கணம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
லோக நிர்வாகம் இந்தக் கட்டுரையை லோகத்தில் புதியதாக கதை எழுத வருபவர்களுக்கான பாடத்திட்டம் போன்று வைக்கலாம் என கருதுகிறேன்.

paid Gold Member ஆக இருந்த போதிலும் இவ்வளவு அருமையான கட்டுரையை எழுதியிருக்கும் சூப்பர் மேன் ஏனோ தெரியவில்லை (நேரமின்மை காரணமாக இருக்கலாம்) சொற்ப கதைகளையே எங்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார். அம்மாவின் ஏக்கம், மகனின் பாசம் - 5 பாகங்கள், நல்ல அம்மா, நல்ல மகன் - 23 பாகங்கள் கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது, பவித்ரா என்னும் அழகி, இந்த மாதம் துவங்கியிருக்கும் புதிய தொடர் அம்மா. அவள் உறவல்ல, உணர்வு , இப்படி பின்னூட்டங்களோடு சேர்த்து142 பதிவுகள்தான்.
ஆனாலும் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இரண்டாம் பரிசு வென்றிருக்கிறார்.

மென்மேலும் சூப்பர்மேனிடம் பல படைப்புக்களை எதிர்பார்க்கிறேன். அவர் கதைகளை படித்த, படிக்கிற லோகத்து வாசகர்களும் எதிர்பார்ப்பார்கள்.
சூப்பர்மேன் தான் மனது வைக்க வேண்டும்
நன்றி சூப்பர்மேன் 82

அன்புடன்
மாதவன் 1000

Murattu Kaalai 17-01-22 02:57 PM

வெகு அற்புதம்.. இன்னும் நிறைய சொல்லி வழிகாட்டுங்கள்.
சாதரணமாக கதை சொல்வது வேறு. காம கதை சொல்வது வேறு
//மச்சி, இந்தக் கதைல எல்லாம், அந்த மாதிரி சம்பவம் ஆரம்பிக்கும் வரைதான் தான் படிப்பேன், அப்புறம் அதை அப்படியே தூக்கி ஓரமா வச்சிடுவேன். நானே உறவு நடக்குற மாதிரி கற்பனை பண்ணிப்பேன்" //
ஆஹா. உண்மை.. காமமுற்று கிளர்ச்சி அடைவது மிகப்பெரிய கற்பனை..
அதனால் தான் போர்ன் படங்களை விட காம கதைகள் பயங்கரமாய் சூடேற்றுகின்றன

ASTK 17-01-22 03:29 PM

நண்பர் சூப்பர்மேன் அவர்கள் கட்டண உறுப்பினராக இருந்தாலும் அவர் தளத்திற்கு ஆற்றும் பணிகள் அளப்பரியது. அவர் இப்பொழுது தந்திருக்கும் இந்த ஆலோசனையும் புதிதாக கதை எழுதுபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. புதிதாக கதை எழுதுவதற்கு ஆலோசனை சொல்வதற்காகவே ஏற்கனவே இங்கே நிறைய திரிகள் இருக்கின்றன. எனினும்இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நண்பர் சூப்பர்மேன் தந்திருக்கும் ஆலோசனைகள் புதிய உறுப்பினர்களுக்கு பல சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். அவரது சேவைக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும். என்னைப் பொருத்தவரை நான் காமகதைகளுக்கு என்று சில வரையறைகளை வைத்திருக்கிறேன். இந்த வரையறைகளை ஏற்கனவே ஒரு நண்பர் வேறொரு இடத்தில் தந்திருந்தார். அது என்னவெனில்

சாதரண கதை என்பது ஒரு மிக சிறந்த களம். அது சிறுகதையோ நாவலோ எதுவாயினும் அதை முறையாய் பயன்படுத்தி அழகான கதைக்களம் , அருமையான கதாபாத்திரங்கள் , இனிமையான உரையாடல்கள் , உணர்வை கிள்ளும் சூழ்நிலை இவை அனைத்தும் கலந்த அருமையான கதையாக இருந்து அந்தக் கதையை படித்தால் அந்த கதையிலிருந்து வெளிவர சில நாட்களாவது ஆகும். அதே சமயம் பெரும்பாலான காம கதைகளில் கதையாசிரியர்கள் ஒரு பாகத்தில் ஆணையும் பெண்ணையும் வர்ணித்துவிட்டு அடுத்த பாகத்தில் அவர்கள் கட்டிலில் என்ன செய்தார்கள் என்பதை பல பாகத்திற்கு வக்கிரமாய் , விரசமான, மனதிற்கு ஒட்டாத வார்த்தைகளை வைத்து பக்கம் பக்கமாய் எழுதி தள்ளுவார்கள். இந்த மாதிரியான கதைகளைப் படித்து யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.

அழகான பாலுணர்வை தூண்டும் கதைக்களம் , கதை சூழ்நிலை , மனதைத்தொடும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் , அதிலும் குறிப்பாக பெண்கள் பாத்திரங்கள் , மற்றும் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உணர்வுபூர்மான உரையாடல்கள் , கதைக்குள் வரும் கண்ணீர் துளிகள் , தயக்கங்கள் , மனப்போராட்டங்கள் , தாபம் , சபலம் , கோபம் , கொஞ்சம் சதை , நிறைய கதை எல்லாம் கலந்து அடுத்து என்ன? என்ன? என்று நகம் கடித்துப் படிக்க தூண்டும்படியான கதைகள் மிகவும் சொற்பம். ஒரு காமக்கதையின் ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடிக்கும் போதும் நம் நாக்கில் ஒரு துளி தேனை வைத்தது போல் ஒரு தித்திப்பை , சிலிர்ப்பை , உடல் சூட்டை மென்மையாக ஏற்றவேண்டும். ஆர்வமாய் அடுத்த பாகத்தை தேட வைக்க வேண்டும்.   

அழகான காமக்கதைக்கான பொதுவான அளவுகோல் எது என்றால் ஒரு பெண்ணால் அருவருப்பில்லாமல் ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த காமக்கதை.

Superman82 17-01-22 07:09 PM

Quote:

Originally Posted by madavan1000 (Post 1577865)
கதை எழுதுவது எப்படி? என்று சுஜாதா கூட எழுதியிருக்கிறார். அது போலவே சூப்பர்மேனும் காமக் கதை எழுதுவது எப்படி? என்று தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

புதுமுகங்கள் சிலர் நல்ல கற்பனை இருந்தும், சிரமப் படுவதை பார்த்தேன். என் அனுபவத்தில் இருந்து ஒருசிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றே இந்த திரியை பதிவிட்டேன். அதற்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பை நானே எதிர்பார்க்கவில்லை நண்பா. உங்களின் அன்புக்கு உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன்.

Quote:

Originally Posted by madavan1000 (Post 1577865)
paid Gold Member ஆக இருந்த போதிலும் இவ்வளவு அருமையான கட்டுரையை எழுதியிருக்கும் சூப்பர் மேன் ஏனோ தெரியவில்லை (நேரமின்மை காரணமாக இருக்கலாம்) சொற்ப கதைகளையே எங்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார்.
மென்மேலும் சூப்பர்மேனிடம் பல படைப்புக்களை எதிர்பார்க்கிறேன். அவர் கதைகளை படித்த, படிக்கிற லோகத்து வாசகர்களும் எதிர்பார்ப்பார்கள்.

இல்லை நண்பா. சிறுகதை எழுதுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதே காரணம். இருந்தபோதும். 'நல்ல அம்மா, நல்ல மகன்' கதையின் ஒவ்வொரு பாகத்தையும் ஒரு கதை போலவேதான் பாவித்து எழுதினேன். அது உங்களை மகிழ்வித்ததில் எனக்குமே ஆனந்தம். உடலும் நேரமும் அனுபதிக்கும் பட்சத்தில் மேலும் சில கதைகளை எழுதவே ஆசை. நீண்ட பாகங்களாக எழுதி, அதனை மீண்டும் படித்து, திருத்தி பதிவிடுவது அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. இந்தக் கதையும் விரைவில் முற்றுப்பெறும். மேலும் சில கற்பனைகளும் இருக்கிறது. நேரம் கூடி வர தொடர்கிறேன்.

Quote:

Originally Posted by ASTK (Post 1577964)
நண்பர் சூப்பர்மேன் அவர்கள் கட்டண உறுப்பினராக இருந்தாலும் அவர் தளத்திற்கு ஆற்றும் பணிகள் அளப்பரியது. அவர் இப்பொழுது தந்திருக்கும் இந்த ஆலோசனையும் புதிதாக கதை எழுதுபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. புதிதாக கதை எழுதுவதற்கு ஆலோசனை சொல்வதற்காகவே ஏற்கனவே இங்கே நிறைய திரிகள் இருக்கின்றன. எனினும்இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நண்பர் சூப்பர்மேன் தந்திருக்கும் ஆலோசனைகள் புதிய உறுப்பினர்களுக்கு பல சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். அவரது சேவைக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும். என்னைப் பொருத்தவரை நான் காமகதைகளுக்கு என்று சில வரையறைகளை வைத்திருக்கிறேன். இந்த வரையறைகளை ஏற்கனவே ஒரு நண்பர் வேறொரு இடத்தில் தந்திருந்தார். அது என்னவெனில்

நான் ஆரம்பத்தில் கதை எழுத தொடங்கும்போது சந்தித்த சவால்களையும், அனுபவங்களையுமே உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். புதியர்களுக்கு பயனுள்ளதாய் இருப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி . நன்றி

madavan1000 17-01-22 08:20 PM

ASTK ஒரு நல்ல கதைக்கான வரையறையைத் தந்திருக்கிறார்.
Quote:

அழகான காமக்கதைக்கான பொதுவான அளவுகோல் எது என்றால் ஒரு பெண்ணால் அருவருப்பில்லாமல் ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த காமக்கதை.
அவரது வெற்றிக்கான சூத்திரத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

நன்றி ASTK

தங்களின் வழிகாட்டல்கள் எங்களுக்கு அவசியம் தேவை_ அவ்வப்போது பின்னூட்டங்கள் வாயிலாகவோ, தனிமடலிலோ சொல்லுங்கள்.

இனிமேல் நானும் இவற்றை பின்பற்ற முயற்சிக்கிறேன்

நன்றி நண்பரே

அன்புடன்
மாதவன் 1000


All times are GMT +5.5. The time now is 09:50 PM.

Powered by Kamalogam members