காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே (http://www.kamalogam.com/new/showthread.php?t=48042)

காமராஜன் 16-03-09 08:34 PM

ஆலோசனைகள் எக்கச்சக்கமாகத் தர முடியும்.. ஆனால் ஒரு சிறிய தயக்கம்.. சற்றே மாற்றுக் கருத்தாக இருக்கும் பட்சம் அது 'குறை'யாகக் கருதப் படக் கூடும்.. ஆனாலும் ஒரு சிறிய பாயிண்ட்....

பொழுது போக்குக்காக ஒரு சில இணையத் தளங்களுக்கு வருகை செய்கிறோம்.. இன்பத்துக்காகவும் மகிழ்ச்சிகாகவும் மட்டுமல்லவா?

இங்கு ஏன் இந்த அவசியம் இல்லாத எச்சரிக்கைத் தொனி....?? மிரட்டல்கள்...???
ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில 'தவறு'களைச் செய்திருந்தால் கூட அவற்றை சற்று புன்முறுவலுடன் சுட்டிக் காட்டலாம் அல்லவா??

asho 16-03-09 09:54 PM

Quote:

Originally Posted by காமராஜன் (Post 836021)
ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில 'தவறு'களைச் செய்திருந்தால் கூட அவற்றை சற்று புன்முறுவலுடன் சுட்டிக் காட்டலாம் அல்லவா??

சரி இதோ புன்முறுவலுடன் :) உங்களுக்கு ஒரு சுட்டிகாட்டல் உங்கள் யூசர் புரபைலில் இருக்கிறது. சென்று பாருங்கள்.. :)

காமராஜன் 18-03-09 02:53 PM

Quote:

Originally Posted by asho (Post 836042)
சரி இதோ புன்முறுவலுடன் :) உங்களுக்கு ஒரு சுட்டிகாட்டல் உங்கள் யூசர் புரபைலில் இருக்கிறது. சென்று பாருங்கள்.. :)

புன்னகை எப்போதும் புத்துணர்வைத் தருகின்றது..:003::003:
ஒரு தவறு (!!?) :023::023: சீர் செய்யப் பட்டுள்ளது.
அடுதது தவறா (???) என்ற எண்ணம் மேலோங்கி நிற்கவே செய்கிறது :001::001:

எப்படியானாலும் தவறு-சரி பற்றி சில ஆலோசனைகள்....:003:.

தவறு-சரி என்பவை கறுப்பு-வெள்ளை அல்லது 1-0 போல ஒரு சின்ன இழையில் பிரிக்க முடியாது.. கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையே ஆயிரக்கணக்கான grey shades உள்ளன.. கறுப்பு வெளிச்சம் இல்லாத நிலை. வெள்ளை என்பது பல வண்ணங்களின் கலவை..

இதுபோலவே தவறுக்கும் சரிக்கும் இடையே சில விஷயங்களில் நூல் இழை வித்தியாசம் இருக்கலாம், சில விஷயங்களில் மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே உள்ள தூரம் கூட இருக்கலாம்..

சில தவறுகளை சரி யாக பார்க்க முடியும்.. சில சரிகளைக் கூட தவறு என்று நாமே வரையருக்கக்கூடும்.. இதெல்லாம் பார்ப்பவர் கண்ணோட்டம், மன நிலை, விஷயத்தின் சீரியஸ்னஸ் என்று பலவற்றை பொருத்தது.

நான் செய்யும் தவறு எனக்குச் சரியாகப் படலாம். மற்றவர் சரியாகச் செய்தாலும் என் மனம் 'தவறு' என்று அறைகூவக்கூடும்.. இதெல்லாம் இயற்கை. அன்றாட வாழ்க்கையில் தினம் நாம் சந்திக்கும் பல நிகழ்வுகளிலும் இந்த முரண்பாடுகளை நாம் அனுபவிக்கவே செய்வோம்.

பொழுது போக்கிலாவது சற்று மூச்சை ஆழமாக அனுபவித்து சுவாசித்து புன்னகையுடன் 'எல்லாம் சரி' .. ஐ அம் ஓகே .. யு ஆர் ஓகே .. லெவல்-இல் லயித்து இன்பம் காணுவோமே....:021::021:

oolvathiyar 18-03-09 08:19 PM

நான் ஆரம்பித்த இந்த ஆலோசனை திரி சிறப்பாக செய்படுவதை கண்டு சந்தோசம் அடைகிறேன். பலர் ஆலோசனைகள் தந்தும் நிர்வாகத்தினர் தந்த விளக்கம் கன்டும் குழப்பங்கள் களைந்திருகிறார்கள்.

நன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் காமலோகத்தில் நமக்கு என்னன்ன வசதிகள் வேண்டும் என்பதை பற்றி பதிய மட்டுமே இந்த திரியை பயன்படுத்தலாம். தயவுசெய்து விதிமுரைகளை பற்றி விவாதிக்க இந்த திரியை பயன்படுத்த வேன்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

இதனால் இந்த திரியின் நோக்கம் திசை மாறிவிடலாம். விதிமுரை வேறு வசதிகள் பற்றிய ஆலோசனைகள் வேறு என்பதை சரியாக புரிந்து கொள்ளமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி

asho 18-03-09 08:31 PM

Quote:

Originally Posted by காமராஜன் (Post 836562)
புன்னகை எப்போதும் புத்துணர்வைத் தருகின்றது..:003::003:

அது இடத்தை பொறுத்தது, ஒருவர் தெரிந்தே ஒரு தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்க கூடிய இடத்தில் இருப்பவர் அவரை பார்த்து புன்னகைத்தால் அந்த தவறை அவரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகி விடும். அதே போல மிகவும் சிரியசான இடத்தில் (ஒரு தவறு/கஸ்டம்/துக்கம் என ) இருக்கும் போது புன்னகைத்தால், அதை விட கொடுமையான தண்டனை சம்பந்தப்பட்டவருக்கு இருக்காது. ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டும் போது, புன்னகை செய்தால் அது இன்னும் கூடுதலாக தவறு செய்தவருக்கு (கிண்டல் செய்வதாக) தோன்றும். உ.தா, நமது லோகத்தில் ஒருவருக்கு இப்படி தனிமடல்/எச்சரிக்கை அனுப்பினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அன்பு நண்பரே,

நீங்கள் நம் தளத்திலே, திருட்டுக்கதை பதிந்ததால் உங்களை ஒரு மாத காலத்திற்கு உள் நுழைய தடை செய்கிறோம், மற்றும் உங்கள் அங்கத்தினர் பதவியையும் ஒரு படி கீழே இறக்குகிறோம் :) :) :). தொடர்ந்து இதுமாதிரி செய்தால் முற்றிலும் உங்களை தடை செய்ய வேண்டி இருக்கும்.

வாழ்த்துக்கள். :) :)

என்றும் உங்கள்
மேற்பார்வையாளர்.


கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிப்பு காட்டாமல், புன்னகை சிந்தினால் பின்னர் கண்டிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். நம் தளம் மற்ற தளங்கள் போல வந்தோம் பார்த்தோம் சென்றோம் தளம் அல்ல. அப்படி எல்லோரும் சென்றால் கதை/கவிதை/கட்டூரை/விவாதங்கள் எப்படி கிடைக்கும். எனவே பங்களிப்பது அவசியம். அப்படி பங்களிப்பது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதாலே தான் நாம் விதிமுறைகள் வைத்துள்ளோம், அது இப்போதுவரை நம் தளத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. இதில் தளர்வு அதாவது தவறு செய்பவரை(தெரிந்து செய்தாலும்/தெரியாமல் செய்தாலும்) கண்டி(டு)க்காமல் சிரித்து மழுப்பி விட்டு விட வேண்டும் என்றால், அவர் மீண்டும் அந்த சிரிப்பை காண நினைப்பார். அதற்கு பதில் கண்டிப்பு இருந்தால் முறையாக பங்களிப்பார்.

பொதுவாக, நாடு என்றிருந்தால் சட்டம் என்றிருக்கும், அப்படி சட்டம் என்றிருந்தால் அந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்றும் சொல்லப்பட்டிருக்கும், அவ்வாறின்றி தண்டனையே கூடாது என்றிருந்தால் அந்த சட்டத்திற்கு மதிப்பிருக்காது. அவரவர் விருப்பப்படி மீறுபவர்கள், அதே போல வெப்தளம் என்றிருந்தால் அததற்கென விதிமுறைகள் உண்டு மீறுபவர்கள் மீது நடவடிக்கை உண்டு. இல்லாவிட்டால தளம் குப்பையாகி விடும். தளத்திலே உள்நுழைபவர் ஒழுங்கற்ற தன்மையால் எரிச்சலுறுவர்.

நம் தளத்திலே தப்பு செய்பவர்கள் இரண்டே வகையினர், ஒன்று புத்தம் புது உறுப்பினர் மற்ற தளம் போல நினைத்து, இங்கே செயல்படுவர், இவர்கள் முதலில் அறிவுறுத்தல் பெறுவர், அதனை புறந்தள்ளி திரும்ப செய்தால், அதற்குரிய தண்டனை பெறுவதன் மூலம் திருந்துவர். இன்னொரு வகையினர் முன்னரே இங்கே பழம் தின்று கொட்டை போட்டு, பின்னர் பங்களிக்க மறந்து தளத்திலே திடிரென அவ்வப்போது தோன்றி, அதை மாற்று இதை மாற்று என்று சொல்லி தங்கள் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் கெடுப்பவர்களே, பொதுவாக இவர்களிடம் நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வதில்லை, அவர்கள் பழைய பங்களிப்பை மனதில் கொண்டு நீங்கள் சொல்வது போல புன்முறுவல் செய்து விட்டு, தளத்திலே ஆக வேண்டிய ஆக்கப்பூர்வ வேலைகளில் கவனம் செலுத்துவர். ஆனால் நிர்வாகம் மற்றும் தளத்து நண்பர்கள் கண்டு கொள்ள வேண்டும் என்றே, ஆங்காங்கே சில திரிகளில் வித்தியாசமாக கருத்து பதிந்து சென்று கொண்டே இருப்பார்கள். ஒரு அளவுக்கு மேலே போனால் தான் இவர்கள் செம்மையாக கவனிக்கப்படுவார்கள். கவனிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும், மிரட்டலோ கண்டிப்போ செய்வதில்லை, நிர்வாக உறுப்பினர்களில் நிர்வாக உதவியாளர்கள், கண்கானிப்பாளர், மேற்பார்வையாளர், தலைமை நிர்வாகி, ஆலோசகர் என இருக்கின்றனர். இதில் மேற்பார்வையாளர் என இருப்பவர்கள் (நானும், ஹயாத், ஸ்மார்ட்மேன்) தான் பிறர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இதில் மற்ற நிர்வாக உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?.

நிர்வாக உதவியாளர்கள், நிர்வாகத்தினருக்கு உதவி செய்வதை விட தளத்து உறுப்பினர்களுக்கே அதிகம் உதவி புரிகின்றனர். அது கதை பதிக்கும் புதியவர்களும் மற்றும் சமயத்தில் சில பழையவர்களுக்கு வரும் தனிமடலை வைத்து அவர்கள் அறிவார்கள். கண்கானிப்பாளர்கள் தாங்கள் கானும் நெறிமீறல்களை மேற்பார்வையாளர்களுக்கு தெரிவித்து, பின் அதை ஒன்றுக்கு இருமுறை ஊர்ஜிதப்படுத்தியே தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை திரியிலே பதிவுகள் (உங்கள் பார்வையில் மிரட்டல், அதிரடி) எங்களால் செய்யப்படுகிறது. அது தவறென்றால் நிர்வாக ஆலோசகர் மற்றும் தலைமை நிர்வாகியால் (மேற்பார்வையாளர்கள்) கவனம் பெற்று அதற்கு நிவாரணம் செய்கிறோம்.

சினிமா பட பஞ்ச் டயலாக் மாதிரி சொல்வதென்றால், தளத்திலே பங்களிக்கும் நல்லவர்களுக்கு நாங்கள் காமதேனு, தளத்திற்கு ஊறு விளைவிக்கும் வல்லவர்களுக்கு மிரட்டல்காரர்கள் தான்.

நாங்கள் எப்படி உங்களுக்கு தெரிகிறோம் என்று ஒருவர் நினைப்பதை வைத்து அவரவர் தங்களை அறிந்து கொள்ளலாம்.

தளத்திலே தவறு செய்பவர்களில், நேரமின்மை காரணமாக, அதிக உழைப்பில்லாமல் அடுத்தவர்(தள) படைப்பை இங்கே காப்பி செய்பவரே அதிகம், இவர்களிடம் தான் அதிக கடுமை காட்டப்படுகிறது. அடுத்தவர் படைப்பை(உழைப்பை) தனது படைப்பென்று கூசாமல் சொந்தம் கொண்டாடி அதன் மூலம் இங்கே அங்கீகாரம் பெற நினைப்பவர்களை, கண்டிக்க கூடாது என்று சொல்லி அவர்களுக்கு வால் பிடிக்காதீர்கள்.

உங்கள் அளவிற்கு தெளிவாக புரியும்படி என்னால் பதில் பதிக்க முடியவில்லை, ஏதோ எனக்கு தெரிந்தபடி பதிந்திருக்கிறேன். புரியாத இடம் இருந்தால் சொல்லுங்கள் மறுபடியும் பதிக்கிறேன்.

oolvathiyar 25-03-09 09:37 PM

படைப்புகளின் பட்டியல் இனம் பிரித்து லிங் தர அனுமதி
 
மூன்று ஆலோசனைகள்
ஆலோசனை 1
படைப்புகளின் பட்டியல் இனம் பிரித்து லிங் தர அனுமதி

நன்பர்களே நாம் அனைவரும் நிரைய கதைகள், நகைசுவை, கட்டுடை, பாட்டு படங்கள் இப்படி பலவற்றை பதிக்கிறோம் அதை மற்றவர்கள் அறிந்து கொள்ள நாம் நமது அறிமுக திரியில் அனைத்து படைப்புகளுக்கான லிங் தந்து விடுகிறோம். இதுதான் நாம் அனைவரும் கடைபிடிக்கும் நடைமுரை. இதில் நல்ல விசயம் தான்.

ஆனால் அதிக படைப்புகள் படைத்தவர்களுக்கு லிங் லிஸ்ட் மிக நீலமாகி விடுகிறது. அந்த ஏரியாவை ஸ்ரோல் செய்வதே நேரம் ஆகிறது. பிரித்து பிரித்து தெரிந்து கொள்வதில் காலதாமதமாகிறது. இதுவரை நான் 200 க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருப்பேன். அதன் லிங்குகளை நாம் இப்படி செய்து கொள்ளலாம்.

அதாவது படைப்புகளை ரகம் பிரித்து அந்த லிங்குளை அறிமுக திரியில் தனி தனி போஸ்டிங்காக போட்டு விடலாம் (அல்லது வேன்டாத பழைய அறிமிக திரியில் இருக்கும் நம்முடையை போஸ்டில் போடலாம்) அந்த போஸ்டிங்குக்கு அ ந்த படைப்புகளின் ரகத்தின் பெயர் தந்து விட வேன்டும்.
பிறகு அ ந்த போஸ்டிங்களின் லிங்குகளை தனியாக எடுத்து (போஸ் நம்பரை கொட்டினால் கிடைக்கும்) அறிமுக திரியில் படைப்பு ரகங்களை மட்டும் டைப் செய்து அதுக்கு அ ந்த போஸ்டிங்களின் லிங்கை தந்து விட்டால் சுலபமாக இருக்கும். இதற்க்கு அனுமதி அளிக்க வேன்டும்.

ஏ.கா என் படைப்புகளில் ரகம் பிரித்து கீழே தந்துள்ளேன்

1. கற்பனை சிறுகதைகள் (5)
2. குறைந்த பாகங்கள் கொன்ட தொடர்கதைகள் (3)
3. நீண்ட தொடர்கதைகள்
4. நகைசுவை கதைகள் (5)
5. நிஜ அனுபவங்கள் (3)
6. கட்டுரைகள் தத்துவங்கள் (12)
7. காம கதம்ப கதைகள் (2)
8. நிர்வாக சவால் போட்டில் நான் கலந்து கொன்டு நான் படைத்த கதைகள்
9. வித்தியாசமான அரிய படங்கள்
10. அசைபடங்களின் சுட்டிகள்.
11. படங்களின் சுட்டிகள்.
12 கவிதைகள்
13 சிரிப்புகளின்
14 படங்களுடன் சிரிப்பு
15 காமமில்லாத தலைப்புகள்
இன்னும் பல

பாத்தீங்களா படைப்புகளின் ரகங்களே இப்படி 15 லிங்க் லைனில் அமைக்க முடியும் போது வரிசையாக 200 படைப்புகளின் லிங்கை போட்டு மூல திரியை எதுக்கு நீளமாக்க வேன்டும்

இதை ஏன் கேட்கிறேன் என்றால் நான் என்னுடைய பழைய கலாவிதியான போஸ்டிங்களில் இப்படி செய்து லிங்கள் தந்து வைத்திருந்தேன். நிர்வாக மெம்பர் ஒருவர் போஸ்டிங்கள் அதிகமாக இருக்கிறது என்று கருதி அனைத்தையும் இனைத்து மீன்டும் அறிமுகத்தில் சேர்த்து விட்டார்.

ஆலோசனை 2
யூசர் பிரொபைலில் சார்டிங் வசதி
ஒருவர் வசதி வரும்வரை யூசர் பிரொபைலில் ஸ்டாட்டிக்ஸில் Find all threads started by பெயர் இதை கொட்டி அனத்து படைப்புகளையும் பார்கிறோம். அங்கும் சார்டிங் லிஸ்ட் பாக்ஸ் வைத்தால் வசதியாக இருக்குமே

இதுக்கு கீழே

http://www.kamalogam.org/gallery/data/596/threads.JPG

Namewise Sort
Created Datewise Sort
Last Posted datewise Sort
Prefixwise sort
Rating Reply / view wise sort
Forumwise Sort

இதில் கடைசியாக த ந்திருக்கும் வசதி மேலே நான் சொன்ன பிரச்சனை 1 க்கு படைப்பாளி விருப்பத்துக்கு சார்ட் ஆகாவிட்டாலும் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்

ஆலோசனை 3
சப்ஸ்கிரிப்சன் போல்டர் மற்றவர்களுக்கும் தெரிய வைக்கும் வசதி

ஒவ்வொரு படைப்பாளியின் சப்ஸ்கிரிப்சன் போல்டர் ( Subscribed Threads)பக்கம் மற்றவர்களுக்கும் தெரிய வைக்கும் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும். தேவை பட்டால் அவர் போல்டர் எடிட் செய்யும் போது அதை மற்றவர்களுக்கு மறைக்கும் ஆப்சன் வைத்து கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ளது படைப்பாளி தனது படைப்புகளை போல்டர் மூலம் ரகம் பிரித்து வைத்திருப்பார் அதன் மூலம் அவரின் ரகத்துக்கு ஏற்றவாரு உள்ளே போய் நாம் படித்து கொள்ளலாம். எ.கா நான் என்னுடைய போல்டரை காட்டுகிறேன்.

http://www.kamalogam.org/gallery/data/596/folder.JPG

லெப்டில் தந்திருக்கும் போல்டர்களை மட்டும் காட்டும் படி வசதி இருந்தால் போதும். (இன்னிக்கு ஓவரா குழப்பீட்டனோ). குழப்பி இருந்தால் கேளுங்கள் விளக்குகிறேன். முதல் முரையாக நானும் படம் போட்டு விளக்க ஆரம்பிச்சுட்டேனுங்கோ

அன்பு 20-08-15 05:27 PM

உறுப்பினர்களின் பல ஆலோசனைகளை, தேவைகளை கேட்டு நிர்வாகி அவர்களும் இயன்றவரை நடைமுறைப்படுத்தியுள்ளார். முடியாததை எதனால் முடியாது என்று காரணமும் கூறியுள்ளார்.

இந்த நல்ல திரியை ஏன் உறுப்பினர்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டனர் ?. மீண்டும் பயன்படுத்த துவங்கலாமே.

tamilplus 13-01-16 11:10 PM

இப்படி ஒரு திரி இருந்தால் நன்றாக இருக்குமே என்று பலமுறை தோன்றியது உண்டு. இப்போதுதான் இந்த திரியை கண்டதும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன்,
இப்போதைக்கு எந்த ஆலோசனையும் இல்லை - ஏனென்றால் நான் தர நினைத்த ஆலோசனை ஏற்கெனெவே கூறப்பட்டு , நிறைவேற்றப்பட்டு விட்டது.
இருப்பினும் , இந்த திரி உள்ளதை கண்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , ஒரு புக் மார்க் ஆகவும் ஒரு பதிவை போடுகிறேன்
தளத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு மீண்டும் ஒரு உதாரணம்.
நன்றிகள் பல.

vjagan 15-06-17 12:40 PM

நல்ல அய்யப்பாடுகளும் சிறப்பான பயனாக்கம் செய்துகொள்ளவேண்டிய விளக்கங்களும் அய்யா அம்மணி !அனவைருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 10:49 PM.

Powered by Kamalogam members