காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எனது பதிவுகள் அனைத்தும் காணவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=74382)

kudaikkullamazhai 26-02-21 02:42 AM

எனது பதிவுகள் அனைத்தும் காணவில்லை
 
நிர்வாகி அவர்களுக்கு வணக்கம்.
நான் சுமார் 1900 பதிவுகளுடன் வெள்ளி வாசல் அனுமதி வைத்திருந்தேன். ஏதோ சில காரணத்தினால் எனது பதீவுகள் அணைத்ததும் காணவில்லை.அதோடு எனது
அனுமதியும் தமிழ் வாசலுக்கு வந்து விட்டது..தயவு செய்து எனதுபதிவுகளையும் அனுமதியும் திரும்ப பெற உதவி செய்யுங்கள்.நன்றி

vjagan 26-02-21 05:54 AM

ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு..... இங்கு சென்று பாருங்கள்... விடை கிடைக்கும் அய்யா....

niceguyinindia 26-02-21 08:39 AM

வணக்கம் நண்பரே நலமா

பின்னூட்டங்கள் அதிகம் கொடுக்காமல் வாக்கெடுப்பிலும் பங்கேற்காமல் லோகத்தில் இருந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு..... இங்கு சென்று பாருங்கள் ஒரு வேளை உங்களுக்கு விடை கிடைக்கலாம்

kudaikkullamazhai 26-02-21 02:31 PM

தகவலுக்கு நன்றி. நான் அந்த திரியை படிக்காமல் விட்டுவிட்டேன். அதனால்தான் வாக்களிப்பில் பங்கு பெறவில்லை.எனது அனுமதியை திரும்ப பெற ஏதேனும் வாயுப்புகள் உண்டா?.கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தளத்தில் உறுப்பினராக இருந்து பெற்ற அனுமதி..ஒரு கவன குறைவால் இழப்பது வருத்தமாக உள்ளது..

asho 26-02-21 03:14 PM

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், எத்தனை மாத சிறந்த கதை போட்டிக்கு மறக்காமல் வாக்கு போட்டு, சென்ற மாத கதைப்போட்டிக்கு மட்டும் வாக்கு போடாமல் இருந்து விட்டீர்களா என்று.


கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மாத சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்களை தண்டிக்க நேரும் என்று சொல்லி சொல்லி யாரும் திருந்துவதாக தெரியவில்லை. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக போனது எச்சரிக்கையின் மதிப்பு.

போதிய கதைகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது, கதை ஏன் இல்லாமல் போனது என்றால் யாரும் வாக்களிக்கவில்லை, முறையாக பின்னூட்டமிடவில்லை, ஏன் யாரும் பின்னூட்டமிடவில்லை என்றால், எல்லோரும் அடித்து பிடித்து அடுத்தடுத்த வாசல் அனுமதி வாங்கியாகி விட்டது, பின் எதற்கு பின்னூட்டமிடவேண்டும் என்ற மிதப்பு, நம் தளத்தின் உயிர்நாடியே கதைகள் தான், அதனை புதிது புதிதாக தருபவர்களை இங்கே கதை படிக்க வருபவர்கள் ஊக்குவில்லை என்றால் கதை எப்படி திரும்ப பதிக்கப்படும்.

சொல்லி சொல்லி பார்த்தாயிற்று, இப்போது நடவடிக்கை எடுக்கவும் தான் விழிப்பு வருகிறது, முறையாக பங்களிப்பவர் எவரும் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. ஆங்கிலத்தில் சொல்வார்களே ஹிட் அண்ட் ரண் என்று, தளத்திற்கு வருவது ரெண்டு கதை படிக்க வேண்டியது, பரவசப்படுவதுடன் பின் ப்ரவுசரை குளோஸ் செய்து சென்று விடுவது என்றால் அவர்களால் என்ன பயன் தளத்திற்கு?.


எவருக்கு சலுகை இனி கிடையாது, திரும்ப முறையாக பங்களித்து பழைய வாசல் அனுமதி படிப்படியாக பெற வேண்டியது தான் ஒரே வழி.

ஒரே ஒரு சிறப்பு சலுகையாக முன்னரே ஒரு திரியில் சொன்னது போல ஒரு கதை எழுதி அது முதல் மூன்று இடத்திற்குள் வந்தால் திரும்ப அதே அனுமதி பெறக்கூடும்.

கதை எழுதினால் தான் எழுதியவர் படும் சிரமம் தெரிய கூடும்.


நிர்வாக அறிவிப்பை யாரும் படிப்பதில்லை என்றும் தெரிகிறது கடந்த 90 நாட்களாக இம்மாதிரி வாக்களிக்கவில்லை என்றால் தளத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று சொன்னதை அநேகர் படிக்கவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

உண்மையிலே மொத்தம் 250 பேருக்கு மேல் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். ஒரே நாளில் அனைவரையும் தகுதி இறக்கம் செய்ய இயலாது என்பதனால் அதிக சிரத்தையுடன் லிஸ்ட் தயார் செய்து அதில் முதலிடம் பிடித்தவர்களை முப்பது முப்பது பேராக இறக்கி விட்டு கொண்டிருக்கிறோம். விரைவில் விழித்து கொள்வோர் எல்லோரும் பிழைத்துக்கொள்வார்கள், தூங்கி கொண்டிருப்பவர்கள் எல்லோரும் அங்கத்துவத்தை கோட்டை விட்டவர்கள் ஆவார்கள்.

kudaikkullamazhai 27-02-21 12:44 AM

தங்களிடம் தனி மடலில் கூறியதை போல நான் வாக்கெடுப்பில் பங்கு பெற்று பல மாதங்கள் இருக்கும். ஆனால் நான் படிதது பிடித்த கதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வந்தேன்.கடந்த மாதம் நண்பர் ASTK அவர்கள் நான் தொடர்ந்து அவர் கதைகளுக்கு பின்னுட்டம் அளிப்பதால் 100 பணம் அளித்து இருந்தார்

rook 16-01-22 09:16 PM

மேற்பார்வையாளர் திரு. அசோ அவர்கள் சொல்லுவது உண்மையிலும் உண்மை. கதை பதிப்பவர் ஆக்கம் பின்னோட்டமும் வாக்கில் பங்கெடுப்பும் தான். கதை பட்திப்பவர் மணிகணக்கில் நேரம் எடுத்து பதிக்கும் கதைக்கு வாசகர்கள் சில நிமிடங்கள் பின்னோடம் எங்களுக்கு உற்சாகம் அளிகிறது நணரே.
மீண்டும் எல்லா வாசகதவுகள் திறக்க வாழ்த்துக்கள். நண்பா

indven 16-01-22 09:37 PM

கூகுள் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை நண்பர்களே. பெரிய பின்னுட்டமிட மிக சிரமமாக உள்ளது..

asho 17-01-22 11:12 AM

Quote:

Originally Posted by indven (Post 1577760)
கூகுள் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை நண்பர்களே. பெரிய பின்னுட்டமிட மிக சிரமமாக உள்ளது..

நண்பரே கீழே உள்ளவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நம் தளத்தில் ஒன்றினைந்து இருந்த கூகிள் தமிழ் தட்டச்சு, அவர்கள் மென்பொருள் புதுப்பித்தலில் வேலை செய்யாமல் போனது. திரும்ப முயற்சி செய்து சேர்க்க முடியவில்லை. எனவே கீழே உள்ள சுட்டிகள் சென்றால் உங்களுக்கு விடை/வழி கிடைக்கும்.

https://www.google.co.in/intl/ta/inputtools/try/


கீழே உள்ள ஒரு வலைப்பூ இங்கே பலதரப்பட்ட வழிமுறைகள் உள்ளது, உங்களுக்கு எது சிறந்ததோ அதனை தேர்ந்துக்கொள்ளுங்கள்.
Code:

http://tamilvelicham.blogspot.com/p/online-google-input-tools-cut-copy-paste.html
பொதுவாக கம்ப்யூட்டரில் வருபவர்கள் ஒரு தமிழ் உள்ளீடு முறை கொண்டு தட்டச்சியும், கைபேசியில் வருபவர்கள் நேரடியாகவே தமிழ் தட்டச்சு முறை மூலமாகவும் பதிவுகள் செய்து வருகிறார்கள்.


All times are GMT +5.5. The time now is 02:51 AM.

Powered by Kamalogam members