காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0062 - மார்ச் 2011 மாதம் ஒரு சவால் போட்டியில் வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57810)

asho 29-03-11 09:58 PM

நி: 0062 - மார்ச் 2011 மாதம் ஒரு சவால் போட்டியில் வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57651

2011ம் வருடம் மார்ச் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Rajbabu அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான வாட்சுமேனின் மனைவி (1-3) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 7 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 24 பேர். இது சென்ற மாதத்தை விட 16 வாக்குகள் குறைவு. ஆனால் சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கை அதிகம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57651
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...ar28729_17.gif muthirkanni அவர்கள் 6 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக மூன்றாம் முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் muthirkanni.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) muthirkanni - 6 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) kadalkanni - 5 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)
3) tdrajesh - 4 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) kay - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினரான muthirkanni -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் kadalkanni பெற்றுள்ளார். முதல் பரிசை ஒரு வாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 2000 இபணம் பெறுகிறார். அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

மூன்றாம் இடத்தை தலா 4 வாக்குகள் பெற்று இருவர் (tdrajesh & kay) பெற்றிருக்கின்றனர். அடுத்த முறை முதலிடம் பெற வாழ்த்துக்கள்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் எழுவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய demkae, niceguyinindia, tdrajesh, kay & வாசன் ஆகியோருக்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு தலா 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட 4 பேர் அதிகமாக தொடர்ச்சியை முடித்து தந்தாலும், வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 16 வாக்குகள் குறைவு . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்பதால், வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-

tdrajesh 29-03-11 11:39 PM

நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற முதிர் கன்னிக்கும் இரண்டாம் இடம் பெற்ற கடல் கன்னிக்கும் வாழ்த்துக்கள்.

மூல ஆசிரியர் கதையை சிறப்பாக தொடர்ந்து எழுதியதாக முதிர்கன்னி அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கும் வாசக நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.

மூலக் கதையில் கோபி சாந்தாவை சந்திக்கும் போது உயிருடன் இருந்த கோபியின் தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாக சொல்லி கோபியின் அம்மாவுக்கு மறுமணம் செய்து ஒரு புரட்சிகரமான முடிவை கொடுத்திருந்த முதிர்கன்னியின் கதைக்கு பரிசு கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமே !

kadalkanni 30-03-11 12:08 AM

முதிர் கன்னியின் எழுத்திற்கு கிடைத்திருக்கும் பரிசு இது.. அருமையான ஒரு முடிவை கொடுத்த அவரை சவால் ராணியாக தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்..

எனது எழுத்தையும் மதித்து இரண்டாம் இடம் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றிகள்..

dreamer 30-03-11 05:27 AM

வென்ற முதிர்கன்னிக்கும் இரண்டாவது இடத்தைப் பெற்ற கடல்கன்னிக்கும் என் வாழ்த்துகள்.

மற்றவர்களுக்கு என் ஆறுதல்களும் போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கு என் நன்றியும்.

Vaasan 30-03-11 08:23 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும், எனக்கு வாக்களித்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் . . இன்னும் நல்ல பொருத்தமான கதைகளை தர முயற்சிக்கிறேன் . .

தமிழா 30-03-11 12:16 PM

5 அத்தியாயம் படைத்த முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள் ! இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

MACHAN 30-03-11 12:22 PM

மூன்றாம் முறையாக சவால் ராணி பட்டம் வென்ற தோழி முதிர்கன்னி அவர்களுக்கு தோழர் மச்சானின் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற தோழி கடல்கன்னிக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர் ராஜேஷுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்ட எல்லா படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.

பச்சி 30-03-11 03:20 PM

சவாலில் வென்று முதலிடம் பிடித்த நண்பர் muthirkanni அவர்களுக்கு பாராட்டுக்கள்!

ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் நண்பர் kadalkanni அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்!

மீண்டும் ஒரு வாக்கில் இரண்டாமிடத்தை தவறவிட்டு மூன்றாமிடம் பிடித்திருக்கும் நண்பர்கள் tdrajesh, kay ஆகியோருக்கும் பாராட்டுக்கள்!

போட்டியில் கலந்து கொண்டு அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்து... சவால் போட்டிகளை சிறப்பித்து வரும் ஒவ்வொரு படைப்பாளி நண்பருக்கும் என் நன்றிகள்!

maria 30-03-11 04:22 PM

மூன்றாமுறையாக சவால் ராணியாகியிருக்கும் முதிகன்னிக்கும்
இரண்டாமிடம் வந்த கடல் கன்னிக்கும் வாழ்த்துக்கள்.
மூன்றாமிடம் வந்த ராஜேஷ்
கேய் இருவருக்கும் பாராட்டுகள்

niceguyinindia 30-03-11 05:48 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

உற்சாகமாக பங்கேற்று சவால் தொடர்ச்சியை படைத்த நண்பர்களுக்கு பாராட்டுக்கள்


All times are GMT +5.5. The time now is 01:50 AM.

Powered by Kamalogam members