காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கேன்சர் - குழப்பமான மனநிலை (http://www.kamalogam.com/new/showthread.php?t=71351)

mouni 10-11-18 08:10 AM

கேன்சர் - குழப்பமான மனநிலை
 
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.

கடந்த சில காலமாகவே நான் உடல் நிலை குறைவில் இருந்தேன். கையை உயர்த்த முடியவில்லை....டைப் அடிக்க முடியவில்லை...இத்தியாதி..இத்தியாதி.

இவைகள் எல்லாவற்றுக்கும் காரணம் சர்க்கரை என்றார்கள். அதை நம்பி எல்லாம் ட்ரீட்மெண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.

2. என் இரு கதைகள் முடிக்கப்படாமல் உள்ளது. யாராவது அதை முடித்து விடுங்கள். என் ஈ-கேஷ் பகிர்ந்து அளிக்கப்படட்டும். அவர்களுக்கு !

3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.

4. கடைசியாக, நான் எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருப்பவள்....ஏதேனும் நான் தவறு செய்து இருந்தால், பொறுத்துக்கொள்ளவும்.மன்னிக்கவும். மன்னிப்பு மிக சிறந்த மருந்து,

மற்றபடி என்னை மனம் திறந்து வாழ்த்தவும் - காரணம் கேன்சர் நோயோடு என் யுத்தம் , எனக்கு சாதகமாக இருக்க வாழ்த்தவும். நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

நன்றி
மௌனி

kauveri 10-11-18 09:45 AM

நண்பரே நெருங்கிய உறவுகள் பலர் புற்றுநோயால் போராடி வெற்றிப் பெற்றதையும் பெறாமல் மாண்டுப்போனதையும் நெருக்கமாக பார்த்தவன் என்பதால் என்னுடைய சிறு அபிப்பராயம்.
மனம் தளராதீர்கள். போராடுங்கள். யுத்தம் செய்யுங்கள்.. துணைக்கு யாரையும் நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்களே நம்பிக்கைகள். இது துச்சமாக கடந்துப் போகும் தடை என்று நினையுங்கள். இரண்டாவதாக, வெறுத்துப் போய் உங்களின் அன்றாட வாழ்கை முறையை மாற்றாதீர்கள். உதறிவிடாதீர்கள். உங்களின் வாழ்கையின் சில பகுதிகளை இந்த தளத்திற்காக செலவு செய்துள்ளீர்கள்.உங்கள் பங்களிப்புகளை படிக்கவே பல நாட்கள் தேவைப்படுகிறது. அது உங்களுக்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை தந்துள்ளது. ஆகையால் இத்தருணத்தில் காமலோகத்தை விட்டுப் போகாதீர்கள். கடைசி தெம்பு இருக்கும் வரை பங்களிப்பை அளியுங்கள். மற்ற அன்றாட வாழ்கை செயல்களை முடிந்தவரை தொடருங்கள். புற்று நோய உங்கள் வாழ்கைமுறையை மாற்ற அனுமதிக்காதீர்கள். மேலும், நல்ல மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெறுங்கள். சிகிச்சை பலன் தருமா, செலவுகள் எவ்வளவு, சிகிச்சையின் பின்விளைவுகள். சிகிச்சையளிக்கவில்லையென்றால் என்னவாகும் அளித்தால் என்னவாகும்.... என பலவித கேள்விகளுக்கு விடைத் தெரிந்து சிகிச்சையை தொடருங்கள்.
இந்த புற்று நோயை வென்று, மீண்டு வருவீர்கள் என வாழ்த்துகிறேன். மனம் தளராதீர்கள். நன்றி நண்பரே.

ராசு 10-11-18 10:12 AM

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.

காமலோகத்தில் சிறப்பான கதாசிரியர்களில் ஒருவரான "மௌனி" அவர்களின் மன குழப்பம் புரிகிறது !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

"கீமோ தெரப்பி" சிகிச்சையின் பக்க விளைவுகள் கொஞ்சம் கொடுமையானதுதான், ஆனால் அது இல்லாவிட்டால் உடல்நிலை இன்னும் மோசமாகி விடுமே ! ஆகவே சிறிது நாள் பொறுமையாக மருத்துவர்கள் சொல்லும் படி ஓய்வு எடுத்து உடம்பை தேற்றிக் கொள்ள வேண்டும். மனதை தளர விடக் கூடாது ! அதன் பிறகு உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடும் !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.

இந்த பிரிவு தற்காலிகமானதுதான் ! உடல் நிலை சீக்கிரமே சகஜமாகி மீண்டும் லோகத்துக்கு வருவீர்கள்
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.

தங்கள் உடல் நிலை பூரண குணமடைந்து மீண்டும் லோகத்துக்கு வந்து தாராளமாக கதை எழுதலாம் !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
4. கடைசியாக, நான் எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருப்பவள்....ஏதேனும் நான் தவறு செய்து இருந்தால், பொறுத்துக்கொள்ளவும்.மன்னிக்கவும். மன்னிப்பு மிக சிறந்த மருந்து,

ஒரு சிலர். சில சமயங்களில் தங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். அதனால் என்ன ? எனக்கு தெரிய, தாங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்த வித தவறும் செய்தது இல்லை, யாருடைய மனதையும் புண் படுத்தவில்லை !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
மற்றபடி என்னை மனம் திறந்து வாழ்த்தவும் - காரணம் கேன்சர் நோயோடு என் யுத்தம் , எனக்கு சாதகமாக இருக்க வாழ்த்தவும். நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

இந்த கேன்சர் என்ற புற்று நோய் கொடுமையானது தான் ! ஆனால் அதை சீக்கிரமே கண்டு பிடித்து தாங்கள் தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உடல் பூரணமாக குணமாகிவிடும். எனது நண்பர் ஒருவருக்கு இதே நோய் வந்து, இதே மாதிரி "கீமோ" தெரப்பி, சிகிச்சை எடுத்து பிறகு பூரண குணமடைந்து, இப்போது சகஜ நிலைக்கு வந்திருக்கிறார். இனி அவரது வாழ்நாள் பூராவுக்கும் கேன்சர் வரவே வராது என்று மருத்துவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள் !

ஆகவே தாங்கள் மன உறுதியுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதுமானது ! தாங்கள் பூரணமாக குணமாகி விடுவீர்கள் ! மீண்டும் சகஜ நிலையடைந்து லோகத்துக்கு வருவீர்கள் ! இந்த சிகிச்சையின் போது கடவுள் உங்கள் கூட இருக்க வேண்டிக் கொள்கிறேன் ! நான் மட்டுமல்லாது நமது லோக அங்கத்தினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு !

tamizhan_chennai 10-11-18 11:23 AM

அன்புள்ள மவுனி.... மனம் தளாராது இருங்கள்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும்.... ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதே வேளையில் சில நாட்டு மருத்துவத்தையும் நாடுங்கள்.. அதன் பலன்கள் என்னவென்று சரியாய் தெரியாவிட்டாலும்... பக்க விளைவுகள் இல்லா நிலையில் அதையும் முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை.... ஆனால் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நிறுத்த வேண்டாம்.. மனம் திடமாய் இருந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி குறையாது இருக்கும்... சத்தான உணவை உண்பது உடல் பலவீனமாவதை தடுக்கும்.... கேன்ஸர் எதிர்ப்பு பொருட்கள் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுங்கள்.... ரிலாக்ஸாக இருங்கள்.... இயல்பாய் வாழுங்கள்.... இப்போது இருக்கிற நவீன மருத்துவத்தில் எல்லாம் சாத்தியமே... என்னுடைய தோழியின் மாமானாருக்கு உடலில் 5 - 6 இடங்க'ளில் இருந்தது.. முக்கியமாய் அதில் ஒன்று மூளை..நவீன சிகிச்சையால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முற்றிலும் குணமுடைந்து விட்டார்...கண்டிப்பாய் நல்லதே நடக்கும்... கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்...

kamakedi 10-11-18 12:46 PM

வணக்கம் மௌனி, மனம் தளரவேண்டாம், உங்கள் மனோபலம் தான் உங்களுக்கு நீங்கள் தரும் சிறந்த மருந்து. கேன்சரை வென்ற பலர் இன்று நம்முடன் நலமாக வாழ்கிறார்கள். நான் ஏற்கனவே உங்களுக்கு பரிந்துரைத்த "பேலியோ டயட்" ஆல் கேன்சர் செல்லக்கள் வளராமல் போகும் என்று நான் படித்திருக்கிறேன். உங்களின் மருத்துவ சிகிசைகளை தொடரவும். - விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் மௌனி.

chennaidreams 10-11-18 03:20 PM

வித்தியாசமன கதை கருவோடு கலக்கும் உங்களுக்கு இந்த நோய் வந்ததை கேள்விபடும் போது மனம் நெருடுகிறது. நீங்கள் விரைவில் நலம் பெற வாழ்துக்கள்

SITRINBBAN 10-11-18 03:39 PM

கவலை பட வேண்டாம் நண்பரே ,இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கேன்சர் நோயெல்லாம் ஒரு விஷையமே கிடையாது.எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்கள் முற்றிலும் குணமடைந்து பழைய படி காமலோகத்தில் வலம் வருவீர்கள்.தைரியமாக இருங்கள்.

JM 11-11-18 04:34 PM

இரண்டு வரியில் ஆறுதல் சொல்லவோ ஆலோசனை சொல்லவோ இயலாது.. இது உண்மையாய் இருக்கக் கூடாது என மனது வேண்டுகிறது.... மனதை தைரியமாய் வைத்து எதிர்த்த போராடுங்கள்... எனக்கு தெரிந்து 90 சதவீதம் பேர் இதை வென்றுள்ளனர்....!

niceguyinindia 11-11-18 04:50 PM

என்ன நண்பரே திடீரென இப்படி சொல்லி விட்டீர்கள் ஆறுதல் சொல்லும் மனநிலையில் நான் இல்லை ஆனால் ஒன்று நிச்சயம் நீங்கள் மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன்

mouni 12-11-18 07:16 AM

நண்பர்களுக்கு நன்றி! உங்கள் ஊக்கம் நிச்சயம் மருந்து! குறிப்பாக அண்ணன் ராசுவுக்கு!

கடவுள் மேல் பாரத்தை போட்டு என் வேலைகளை தொடர்கிறேன்.

நன்றி
மௌனி


All times are GMT +5.5. The time now is 04:19 PM.

Powered by Kamalogam members