காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65354)

asho 02-10-14 03:11 PM

நி: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 100வது நி. சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான குரு அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான 'குற்ற விகிதம்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 16 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுத முன் வந்தனர். அதில் மூவர் (icefire89, ஸ்திரிலோலன், MACHAN) தொடர்ச்சிகளை முடித்து வைக்கவில்லை. மேலும் kamakodangi68 அவரது தொடர்ச்சியை வாக்கெடுப்பில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால்... இந்த நால்வர் தவிர தொடர்ச்சியை முடித்து வைத்துள்ள மற்ற 12 பேர்களின் தொடர்ச்சிக் கதைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 40 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...tar31210_3.gif tdrajesh 25 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜாவாக தேர்வான tdrajesh க்கு எங்கள் வாழ்த்துகள்..!

tdrajesh 'பத்தாவது முறை'யாக 'சவால் ராஜாவாக' தேர்வாகிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இவர் சவால் ராஜாவிற்கான மெடலையும், 5000 ஐகேஷ்கள் வெகுமதியையும் பெறுகிறார்.

அடுத்ததாக. 19 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gif Nallavan1010 அவர்கள் இரண்டாமிடம் பெறுகிறார். இவருக்கு இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்..!

அடுத்ததாக, 18 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar12910_4.gif RasaRasan மூன்றாம் இடத்தை பெறுகிறார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1. tdrajesh - 25
2. Nallavan1010 - 19
3. RasaRasan - 18

4. shobana_rv80 - 17

5. subbu2000 - 16
5. SIRUTHAI - 16
5. karrthee - 16
5. kay - 16

6. anabayan - 15
6.snehan - 15

7.oolvathiyar - 13

8.jayjay - 12

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய shobana_rv80, subbu2000, SIRUTHAI, karrthee, snehan, anabayan, kay, oolvathiyar, jayjay மற்றும் கௌரவக் கதை பதித்த kamakodangi68 ஆகியோருக்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு தலா 500 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

முந்தைய சாதனைகளை முறியடித்து புதியதோர் சாதனையை படைக்க உதவிய அனைவருக்கும் நன்றி.. நன்றி..

இந்த போட்டியை சிறப்பாகவும் அருமையாகவும் நடத்த உதவிய மேற்பார்வையாளர் பச்சி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

-:O:-

ஸ்திரிலோலன் 02-10-14 04:19 PM

துண்டு


100 ஆவது நிர்வாக சவாலில் வெற்றி பெற்று பத்தாவது முறையாக சவால் ராஜா ஆன அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் "சூப்பர் சவால் ராஜா" என்ற பெரிய விருதை லோகத்தில் முதலாவதாகப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்த இடம் பிடித்த, சமீப காலமாக லோகத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கும் கவியரசர் அண்ணன் நல்லவன் அவர்களுக்கும் அடுத்த இடம் பிடித்த அண்ணன் ராரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.

RasaRasan 02-10-14 04:27 PM

போட்டியில் வென்ற 100வது சவால் ராஜா ராஜேஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் தொடர்ந்த நல்லவர் வல்லவருக்கும் வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடம் எனக்கு தந்த நண்பர்களுக்கு நன்றி.

தொடர்ந்து வாக்குகள் பெற்ற நண்பர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

100 வது நிர்வாக சவாலில் கலந்து கொண்டதே சிறப்பு. இந்த சவாலில் என் கதைக்கும் நிச்சயம் நல்லதொரு இடம் கிடைக்கும் என நம்பினேன். அது போல் மூன்றாம் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனக்கு வாக்குகளை தந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.

anabayan 02-10-14 05:15 PM

சதம் கண்டு சாதனை படைத்த நிர்வாக சவாலில் பத்தாவது முறையாக சவால் மன்னராக முடி சூடப்பெற்ற நண்பர் ராஜேஷை மகிழ்வோடு பாராட்டி வாழ்த்துகிரேன்.

அழகான கோர்ட் ஸீனை கண்முன் கொண்டு வரும்போதே தெரியும் கவியரசரின் படைப்பு நிச்சயம் முக்கிய இடத்தை பெரும் என்று அது போலவே இரண்டாமிடம் வந்த லோக கவியரசருக்கும் எனது மகிழ்ச்சியான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

எந்த படைப்பை படைத்தாலும் அதை சமூக சிந்தனையோடு படைக்கும் மாமன்னரின் படைப்பு மூன்றாமிடம் பிடித்ததும் சந்தோசமாக இருக்கிரது. மாமன்னருக்கும் என் மனம் நிரைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

அடுத்து பங்கு கொண்டு தங்களது சீரிய படைப்பை தந்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது படைப்புக்கு ஊக்கமளிக்கும் பின்னூட்டம் இட்டதோடு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிரேன்.

100வது நிர்வாக சவாலை சிறப்புடன் நடத்தி முடித்த நிர்வாகத்தாருக்கு எனது பாராட்டுக்கள்.

maria 02-10-14 05:20 PM

10வது முறையாகவும் 100வது சிறப்பு சவாலில் சிறப்புவெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அடுத்த இடத்தில் வந்த நல்லவருக்கும்
மூன்றாமிடம் வந்த மாமன்னருக்கும் வாழ்த்துக்கள்

shobana_rv80 02-10-14 05:48 PM

இந்த சிறப்பு மிக்க 100வது நிர்வாக சவாலில் சவால் ராஜாவாக முடிசூடும் அதுவும் 10வது முறையாக முடிசூடும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்....
என்ன ஒரு பொருத்தம் 100 வது...10வது.... நம் தளத்தில் யாருக்குமே இப்படி ஒரு சிறப்பு கிடைத்திருக்காது....சளைக்காமல் கதைகள் படைப்பதாகட்டும் அடுத்தவர்களின் கதைகளுக்கு பக்கம் பக்கமாக பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்துவதாகட்டும்...உங்களுக்கு ஈடு இணையில்லை...
கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்....

அழகான கதையும் படைத்து கவிதைவரிகளில் அனைவரின் கதைக்கும் பின்னூட்டமிட்டு இரண்டாமிடம் பிடித்த நண்பர் நல்லவனுக்கும் பாராட்டுக்கள்...

இப்போது மட்டுமில்லை எப்போதுமே சவால் கதை தொடர்ச்சிகளை பிரித்து மேய்ந்து பின்னூட்டமிட்டு கதையாசிரியர்களை உற்சாகப்படுத்தும் சோழ மாமன்னர் ராசராசன் இந்த 100 வது நிர்வாகசவாலில் மூன்றாம் இடம் பெற்றதற்கு பாராட்டுக்கள்...

என்னுடைய கதைக்கும் ஆதரவளித்து நான்காம் இடம் தந்த நண்பர்களுக்கு நன்றிகள் பலப்பல....

இந்த சிறப்புமிகு 100வது நிர்வாகசவாலில் கலந்து கொண்ட அனைவருமே வெற்றியாளர்கள்தான்,என்பதற்கிணங்க கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆனால் வெறும் 40 பேர் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர் என்பதுதான் கொஞ்சம் சங்கடம்...வேலைப்பளு காரணமாக என்னால் சில நாட்களாக அதிகம் தளம் வர இயலவில்லை..வந்திருந்தால் இன்னும் ஒரு 20-30 வாக்குகள் விழ வைத்திருக்கலாம். மன்னியுங்கள்.இரண்டு கதைகள் எழுதி வாக்களிக்க தூண்ட எண்ணியிருந்தேன் ..முடியவில்லை...

ஆனால் அடேயப்பா...போட்டி கதைகளை படித்து முடிப்பதற்குள் மலைப்பாகிவிட்டது...

dreamer 02-10-14 05:55 PM

நூறாவது நிர்வாக சவாலில் பங்குகொண்டு முதலிடம் அடைந்து பத்தாவது முறையாக 'சவால்ராஜா" விருது பெறும் தம்பி ராஜேஷுக்குப் பாராட்டுகள்.

இரண்டாவது & மூன்றாவது இடம் பெறும் தம்பிகள் நல்லவன் மற்றும் ராசராசன் இருவருக்கும் என் வாழ்த்துகள்.

ஆர்வத்துடன் கலந்துகொண்டு இதை ஒரு மெகா போட்டியாக்கிய படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி.

tdrajesh 02-10-14 07:02 PM

என் வெற்றிக்கு காரணமான நண்பர்களுக்கு நன்றி.
 
இந்த சிறப்பு நி.சவாலின் சிறப்பே ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக கதை எழுதியிருந்தார்கள். எங்கே எல்லா கதைகளும் ஒரே மாதிரியாக இருந்து விடுமோ என்று நினைத்த எனக்கு ஆச்சரியம்தான் காத்திருந்தது.
Quote:

Originally Posted by subbu2000 (Post 1307835)
ஒரு கருவுக்கு எத்தனை விதமான கதைகள்….. வாவ்…. எந்த பத்திரிக்கையும் கையாளாத புது டெக்னிக், எழுத்தாளர்களூக்கும் இது ஒரு “பட்டறை” போல அமைந்து விட்டது.

நண்பர் சுப்பு மிகவும் அழகாகச் சொல்லிவிட்டார்!

சூடான வாதங்களை கொடுத்து கோர்ட் சீனை அமர்க்களம் பண்ணி இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் நல்லவனுக்கு என் பாராட்டுகள்.

கிளைமேக்ஸில் 'கத்தியை கையில் எடுத்தவன் கத்தியால் சாவான்' என்றக் கூற்றை கொண்டு வந்து வில்லனை அழித்து மூன்றாம் இடத்தை பெற்ற நண்பர் ரா.ரா.வுக்கு என் பாராட்டுகள்.

நான் ஒரு முறை கதை எழுதியப்போது வில்லனை தப்பிக்க வைத்தேன். அப்போது டிரீமர் அண்ணா "ஊஹும் இது சரியில்லை. கதையிலாவது வில்லன்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்று சொல்லி கதையை மாற்றி பதிக்கச் செய்தார். அது நினைவுக்கு வரவே பழி வாங்க இரண்டு கொலைகளைச் செய்த நளினியை (கொஞ்சம் சோகமாக இருந்தாலும்) மரணத்தை தழுவ செய்தேன். அது நண்பர்களுக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்.

இந்த சிறப்பு சவாலில் வாக்களித்து எனக்கு வெற்றிக் கனியை கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டியில் பங்கேற்ற மற்ற படைப்பாளிகளுக்கு என் வாழ்த்துகள்.

இப்போட்டியில் பங்கேற்ற கதைகளை பற்றி இன்னும் நிறைய எழுத விரும்புகிறேன். நண்பர் அநபாயன் ஆரம்பிக்க இருக்கும் திரியில் சொல்கிறேன்.

இன்றுதான் (28-11-2010) முதல் நி.சவால் போட்டியில் ஜெயித்தது போல இருக்கிறது. ம்.. ம்.. நி.சவாலில் பத்து முறை வெற்றி. நான் கொஞ்சமும் நினைத்து பார்க்காத ஒன்று. மீண்டும் நண்பர்களுக்கு நன்றி!

kay 03-10-14 01:18 AM

வெற்றி பெற்ற அருமை நண்பர் டிடிஆர் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். அடுத்து வந்த நண்பர்கள் நல்லவர், ராரா ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்கள். பிற இடங்களைப் பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். என்னால் இந்தச் சிறப்பு நிர்வாகச் சவால், அதுவும் 100ஆவதில், பங்கெடுத்துக் கொள்ள முடிந்ததே எனக்குப் பெருமையாகும்! என் தொடர்ச்சிக்கு வாக்களித்த, வாசித்த, பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்! மிகவும் உங்கள் அன்புக்குக் கடமைப் பட்டுள்ளேன். எல்லாக் கதைகளும் தனிச் சிறப்பு உள்ளவை! 40 பேர் மட்டும் காமலோகத்தில் வாக்களிக்கிறார்கள் என்பது மிக வருத்தத்தைத் த்ருகிறது! நிர்வாக சவால்களில் கை வலிக்க மூன்று அல்லது நான்கு பாகங்கள் டைப் பண்ணிப் பதிக்கும் எளிய எழுத்தாளனின் கஷ்டம் நிறையப் பேருக்குப் புரிவதில்லை என்றே எண்ணுகிறேன்! கடமையைத் தொடர்ந்து செய், பலனை என்னிடம் விட்டு விடு என்று சொன்ன இறைவன் கண்ணனின் வார்த்தை எவ்வளவு அருமையானது! நன்றி நிர்வாகத்தினருக்கும் லோக நண்பர்களுக்கும்! நிர்வாக சவால் 100 அமோகமாக நடந்தேறியது, புதிய சாதனையும் படைத்தது! அதில் நானும் பங்கெடுத்தது மிகுந்த மகிழ்ச்சி!

eros 03-10-14 01:56 AM

சவால் ராஜ ராஜேஷுக்கு வாழ்த்துக்கள். ஆர்வத்துடன் கதைகள் கொடுத்த மற்றவர்களுக்கும் பாராட்டு.


All times are GMT +5.5. The time now is 05:38 AM.

Powered by Kamalogam members