காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மௌனி ஒரு தேவதை! (http://www.kamalogam.com/new/showthread.php?t=77438)

vasanthanirmala 01-04-22 03:24 PM

மௌனி ஒரு தேவதை!
 
மௌனி ஒரு தேவதை!

மௌனி யார் என்ற கேள்விக்கு என்னிடம் சற்று அதிகமான விவரங்கள் இருப்பதாக நினைப்பதால், மௌனி விரும்பிய லோகத்துக்கு சொல்வது என் கடமை என்பதால் இந்த பதிவு!

முதலில் நான் ஆண். டெக்னிக்கல் ரைட்டிங் என் தொழில். அலுவலக நிமித்தமாக நான் டெல்லி சென்ற சூழ்நிலை. 30 நாட்களுக்கு மேலாக இட்டிலி, சாம்பார் கிடைக்காததால் நாக்கு செத்து சுண்ணாம்பாகி , மீண்டும் என் முன்னால் வைத்த சப்பாத்தியை திட்டியபோது (எப்படி தமிழில்தான்!)

"நீங்க தமிழா?" என்ற குரலுக்கு சொந்தமானவர்களை பார்த்தபோதுதான் மௌனி என்ற தேவதையை பார்த்தேன்.

அழகு இல்லை. கருமையாக உருவம். ஆனால், தீர்க்கமான பார்வை. கணீரென்ற குரல். பார்த்து பழகிய 5 நிமிடத்திலேயே ஏதோ பல வருடங்கள் பழகியது போல இருந்த பாசம்! முதல் முதலாக நெகிழ்ந்தேன்.

"ஆமாம்" என்றேன்.

"வாங்க வீட்டுக்கு?"

"முன் பின் தெரியாத என்னை வீட்டுக்கு கூப்பிடறீங்க?" என்றேன்.

"தமிழாச்சே...நல்ல மனிஷங்களாகத்தான் இருப்பீங்க" என்ற அந்த நம்பிக்கை என்னை ஈர்த்தது!

அவர்கள் வீட்டுக்கு சென்றேன். சின்ன வீடு.

'என்ன படிச்சீங்க"

"எம்.சி.யே படிச்சேன். ஆனா, இப்ப வேலை செய்யறது ரெஸ்டாரண்டில்"

வருத்தப்பட்டேன்.

எங்கும் தமிழ். அலமாரியில் கத்தை , கத்தையாக புத்தகங்கள். தி.ஜானதிராமன் முதல் லேட்டஸ்ட் சுபா வரை!

5 நிமிடத்தில் வரலாம் என்று நினைத்து பல மணி நேரமாக பேச்சி போனது.
அப்படியே போனது 5 வருடங்கள்.

நல்ல நட்பு.

tamilplus 01-04-22 11:23 PM

இந்தத்திரிக்கு முதன் முதலாக பின்னூட்டமிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
நம் விண்ணுலக பிரதிநிதி சகோதரி மௌனி ஒரு உணவகத்தில் பணி செய்தாரா ??? நம்ப முடியாத உண்மை தகவல் .
அவருடைய தமிழ் ஆர்வமும் , நட்பான எண்ணங்களும் யாரும் மறக்க முடியாது .
அவருடன் நேரில் பழகிய தாங்கள் எல்லாநிகழ்வுகளையும் அன்போடு பதிவிட வேண்டுகிறேன் .

niceguyinindia 01-04-22 11:44 PM

உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே ..

sreeram 02-04-22 04:51 AM

நீங்கள் மெளனியை நேரடியாகச் சந்தித்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி ! 2008 என நினைக்கிறேன். ஒருமுறை மெளனி என்னிடம் ஒரு அறிவியல் புனைகதை (Sci-Fi) ஒன்றினை கொஞ்சம் காமம் கலந்து நம் லோகத்தில் பதிக்கும்படிக் கூறினார். கரு கூட ஒரு நல்ல அருமையான கரு ஒன்றினைக் கொடுத்தார். முடிவில் என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் மனிதனின் உணர்வுகளை ஒருக்காலும் வெல்ல முடியாது என்பதைப் போல் வரும்படி அமைக்கச் சொன்னார். சந்திராயன் ப்ராஜக்ட் சென்று கொண்டிருந்ததால் அதன்பின் நான் இங்கு எழுதுவதையே நிறுத்திவிட்டேன். நேரம் கிடைக்கும்பொழுது மெளனிக்காக அந்தக் கதையை எழுத ஆசைப்படுகின்றேன்.

dubukh 02-04-22 05:44 AM

Quote:

Originally Posted by jaya2019 (Post 1600719)
"எம்.சி.யே படிச்சேன். ஆனா, இப்ப வேலை செய்யறது ரெஸ்டாரண்டில்"

நான் தான் இப்படினு நினச்சேன், நம்மல மாதிரி நெறய பேரு இடுக்காங்க போலருக்கு.

ரைட்டர் மௌனி வெல் செட்டில்ட்னு நினைச்சேன், ஆனால் அவர்களின் உண்மை நிலை இப்படி (என்னைப் போல) என கேட்க அதிர்ச்சியா இருக்கு

chelluda 02-04-22 11:29 PM

லோகத்தில் முதல்தர எழுத்தாளர்கள் வரிசையில் நிரந்தர இடம் பிடித்தவர்கள் மெளனி அவர்கள். அவர்களைப் பற்றி மேலும் அறியும்படி தொடர்ந்தால் இனிமையே... தொடருங்கள்.

Sent from my AC2001 using Tapatalk

mayakrishnan 03-04-22 05:29 PM

நான் அறிந்த லோக எழுத்தாளர் மௌனி நீங்கள் சொல்லும் விவரிப்பில் இல்லை என சற்று குழம்புகிறேன். நான் மௌனியைச் சந்தித்தது இல்லை ஆனால் வருடக்கணக்கில் நாங்கள் இருவரும் தனி மடலில் பேசியிருக்கிறோம். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் நான் வருடக்கணக்கில் லோகத்திற்கே வராமல் இருந்த காலக்கட்டத்தில் அவரோடு தொடர்பு இல்லாமல் போனேன். திரி தொடங்கிய நண்பர், மற்ற நண்பர்கள் என்னுடன் தனி மடலில் அவரைப் பற்றி மேலும் அதிகமான தகவல்கள் சொன்னால் மகிழ்வேன்.

sreeram 04-04-22 01:49 AM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1601113)
நான் அறிந்த லோக எழுத்தாளர் மௌனி நீங்கள் சொல்லும் விவரிப்பில் இல்லை என சற்று குழம்புகிறேன். நான் மௌனியைச் சந்தித்தது இல்லை ஆனால் வருடக்கணக்கில் நாங்கள் இருவரும் தனி மடலில் பேசியிருக்கிறோம். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் நான் வருடக்கணக்கில் லோகத்திற்கே வராமல் இருந்த காலக்கட்டத்தில் அவரோடு தொடர்பு இல்லாமல் போனேன். திரி தொடங்கிய நண்பர், மற்ற நண்பர்கள் என்னுடன் தனி மடலில் அவரைப் பற்றி மேலும் அதிகமான தகவல்கள் சொன்னால் மகிழ்வேன்.



மெளனி அவர்கள் கனடாவிலிருந்து நொய்டாவிற்கு குடிபெயர்ந்தார். தன் இறுதிக்காலங்களில் டெல்லியருகே இருந்தார். நீரிழிவு நோயும் கான்சர் நோயும் முற்றி அவதிப்பட்டார். மருத்துவம் பயனின்றி இயற்கை எய்தினார். இது அவரின் முந்தைய பதிவுகளில் இருந்தே நானும் அறிந்தேன். பல ஆண்டுகளாக நானும் வழக்கமாக லோகம் வர இயலவில்லை. அவ்வப்பொழுது வந்து தலை மட்டும் காட்டிச் செல்வதுண்டு.

vasanthanirmala 04-04-22 05:05 AM

மௌனி மீது அன்பு வைத்திருக்கும் தமிழ்ப்ளஸ், நைஸ்கை, சிரிராம், செல்லுடா, டுபுக், மாயகிருஷ்ணன் அனைவருக்கும் என் நன்றிகள் பல!

பல பிரச்சனை என்று சொல்ல மாட்டேன். ஒரு பிரச்சனைதான். அதனால் அவர் தன் சின்ன வயதிலேயே வீட்டு உறவுகளுடன் பிரிந்துள்ளார். கனடா சென்றும் சில காலம் இருந்துள்ளார். பின் ஃபரீதாபாத் வந்து தங்கி உள்ளார். அங்கும் அந்த பிரச்சனை தொடரவே செய்தது.

அதனால் அவர் கவனம் எழுத்து என்று திரும்பியுள்ளது. பல மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகையில் எழுத கடைசி வரை முயன்று இருந்ததை நான் கண்கூடாக அறிவேன். சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் அவர் முயற்சி செய்தார்.

காமலோகத்தையும், அவர் நண்பர்களையும் நேசித்தார். லோகத்தில் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார். ராசு அண்ணா, ஜேகே என்று அவருக்கு நண்பர்கள் இருந்ததாக சொல்வார்.

எப்படியோ இறப்பில் அமைதியாக இருக்கட்டும் அந்த மகராசி.

Mauran 04-04-22 05:28 AM

எமது விண்ணுலக பிரதிநிதியின் மறு பக்கங்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரே. எங்கிருந்தாலும் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.


All times are GMT +5.5. The time now is 08:01 AM.

Powered by Kamalogam members