காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   முன்னாள் சபா நாயகர் காளிமுத்து மரணம்... (http://www.kamalogam.com/new/showthread.php?t=28498)

udhayasuriyan 08-11-06 04:20 PM

முன்னாள் சபா நாயகர் காளிமுத்து மரணம்...
 
இன்று(08-11-2006) முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபா நாயகருமான காளிமுத்து அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கால மானார். அவருக்கு வயது 65.

அன்னாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துகொள்கிறொம், அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்
.

a1b2c3d4 08-11-06 06:40 PM

ஏதாவது சொன்னா சண்டைக்கு வருவாங்க , வேண்டாம் விடுங்க,

ஆனால் அவர் தமிழ் நல்ல தமிழ் , அவர் ஆன்மா சாந்தி அடைவதாகுக .

உமா 08-11-06 09:53 PM

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது மறைவு தமிழுக்கும் ஒரு இழப்புதான்

kamakadhal 09-11-06 03:44 PM

மேடையில் அவரது வீராவேச பேச்சுக்கும், நேரில் சந்திக்கும் போது அவரது பேச்சுக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த அளவிற்கு மென்மையான சுபாவம் கொண்டவர் அவர். அனைத்து கட்சியினருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் காளிமுத்து.

பொருளாதார ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ளாததால், அவ்வப்போது பலரிடம் கடன் பெறுவதையும், திருப்பி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கும் பழக்கம் கொண்ட ஒன்றிரண்டு அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பதால், முக்கிய பிரமுகர்கள் இவருக்கு கடன் கொடுக்க தயங்கியதில்லை. இவரால் அரசியலில் முன்னணிக்கு வந்த பலர் மாஜி அமைச்சர்களாகவும், பல்வேறு அரசு மற்றும் கட்சி பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இரு மனைவியருக்கும் மனம் கோணாமல் இல்லற வாழ்க்கையை கொண்டு சென்றவர் காளிமுத்து.

thangamani 10-11-06 02:13 PM

1989ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வி.என்.ஜானகியை பார்தால் கும்பிடத்தோனுகிறது! ஆனால் ஜெயலலிதாவை பார்த்தால் கூப்பிடத்தோனுகிறது! என்று பொதுகூட்டத்தில் பேசியவர்தான் இவர். பின்பு அந்தர் பல்டி அடித்துவிட்டு தன் நாக்கை ஜெயலலிதவிடம் அடமானம் வைத்துவிட்டார்.

a1b2c3d4 10-11-06 02:32 PM

தங்கக்கம்பி, வேண்டாம் செத்துபோன ஒரருத்தருக்கு இரங்கல் சொல்ற பதிவுல அரசியல பேசாதீங்க , அப்புறம் நான் எதாவது சொல்லப்போக நல்லாருக்காது .

அப்புறம் யாரு யாரு என்ன என்ன சொன்னாங்க , செஞ்சாங்கன்னு பேச ஆரம்பிச்சா அப்புறம் அது .....

udhayasuriyan 10-11-06 07:02 PM

இது இரங்கல் தெரிவிக்கும் இடமாக கருதலாம்...
இங்கு அரசியல் தேவை இல்லை...
அவர் தவறே புரிந்து இருந்தாலும், அவர் தமிழுக்காக ஒரு காலத்தில் உழைத்து இருக்கிறார்..
அவரின் தமிழ் பற்று பற்றி நாம் நன்கு அறிவோம்..
என்ன...... அவர் இருந்த இடம் காரணமாக மேலும் தமிழுக்கு உழைக்க முடியாமல் போனது..
என்றாலும் அவரின் பெருமையை போற்றுவோம்

வாழ்க தமிழ்.

thangamani 10-11-06 08:51 PM

எச்சரிக்கை புள்ளி கூடுகிறது : தேவையில்லாமல் விதிமுறை மீறி அரசியல் பேசுதல்

சுய நலத்திற்காக தன்னையே தொலைத்தவர்,தன்னுடைய தலைவன் மறைந்ததும் ஜானகி கோஷ்டியிலிருந்து கொண்டு ஜெயலலிதாவை தன் தமிழால் கேவலமாய்திட்டினார். பின்பு இரண்டு கோஷடியும் இணைந்ததும் ஜெயலிதாவை தூக்கிப்பிடித்து கொண்டாடினார்.பின்பு அதிமுக வைவிட்டு திமுக விக்கு தாவினார்.கலைஞரை ஆ ஊ என்று பாராட்டினார்.விரைவிலேயே அதிமுக விக்கு ஒடி மண்டிபோட்டவர் தான் இவர். ராபின்ஹூட்,மற்றும் தற்போது சட்டசபை வளாக கேண்டின் வழக்கு களில் குற்றவாளியாகியுள்ளார்.தன்னுடைய இன்ப துன்பங்களுக்கு அரசியலை சாக்கடையாக்கியவர்களுக்கு இத்தளத்தில் எதற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும்?

a1b2c3d4 11-11-06 03:25 PM

Quote:

Originally Posted by thangakambi (Post 410353)
சுய நலத்திற்காக தன்னையே தொலைத்தவர்,தன்னுடைய தலைவன் மறைந்ததும் ஜானகி கோஷ்டியிலிருந்து கொண்டு ஜெயலலிதாவை தன் தமிழால் கேவலமாய்திட்டினார். பின்பு இரண்டு கோஷடியும் இணைந்ததும் ஜெயலிதாவை தூக்கிப்பிடித்து கொண்டாடினார்.பின்பு அதிமுக வைவிட்டு திமுக விக்கு தாவினார்.கலைஞரை ஆ ஊ என்று பாராட்டினார்.விரைவிலேயே அதிமுக விக்கு ஒடி மண்டிபோட்டவர் தான் இவர். ராபின்ஹூட்,மற்றும் தற்போது சட்டசபை வளாக கேண்டின் வழக்கு களில் குற்றவாளியாகியுள்ளார்.தன்னுடைய இன்ப துன்பங்களுக்கு அரசியலை சாக்கடையாக்கியவர்களுக்கு இத்தளத்தில் எதற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும்?

நாளைக்கு இன்னொருத்தருக்கு இரங்கல் தெரிவிப்பீங்க , எனக்கு அவர் மேல விமர்சனம் உண்டு ,அப்போ நானும் இப்படி சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்களே ?


All times are GMT +5.5. The time now is 06:35 PM.

Powered by Kamalogam members