புதியவர் சேர்க்கை, தள மேம்படுத்துதல்
நண்பர்களே/நண்பிகளே,
(1) புதியவர்கள் சேர்க்கை அடுத்த மாதம், ஜனவரி 14-ம் தேதி பொங்கலை முன்னிட்டு துவங்கும், பெப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் அன்று முடிவடையும். புதியவர்களை வரவேற்கவும், வழிகாட்டவும் தயாராக இருங்கள்.
(2) இந்த மாதம் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தள மேம்படுத்துதல் வேலைகள் நடைபெறும். அப்போது நீண்ட பதிப்புகள், கதைகள் பதிப்பவர்கள் தங்கள் பதிப்புகளை சொந்தக் கணிணியில் ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். (தள மேம்படுத்துல் செய்யும் போது இதற்கு முன் 2 முறை நமது தகவல் தளம் பழுதுபட்டு ஒரு சில நாட்களின் பதிப்புகளை ஏற்கனவே இழந்து இருக்கிறோம்)
(3) நாம் முன்பு அறிவித்து இருந்தது போல், இந்த மாத இறுதியில், அதாவது வருடக் கடைசியில், இந்த வருடம் முழுவதும் போதிய பதிப்புகள்/பங்களிப்புகள் கொடுக்காதவர்கள் அனைவருடைய அனுமதி குறைப்பு செய்யப் படும், வெகு நாட்களாக பதிப்புகள் ஏதும் பதிக்காமல் இருப்பவர்கள் கணக்கு நீக்கப் படும்.
இந்த மாதம் முழுவதும், திருத்துவதும், மாற்றுவதும், களையெடுப்பதும் தான் எங்கள் வேலை. அடுத்த மாதம் முதல் தளம் புதிய வேகத்தில் இயங்கும்.
நன்றி..!
|