காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   வருத்தம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70948)

Deepa1 29-04-18 11:23 AM

வருத்தம்
 
இதுக்கு முன்னாடி இப்படி ஒரு திரி இருக்கா இல்லையா தெரியல. இருந்தா மன்னிச்சி அதோட சேத்துடலாம். இல்லாட்டி...எல்லார் கருத்தும் தேவை

நான் ஒரு பெண் என் பெயர் தீபா. நான் வந்ததும் வராததுமா ஒருத்தர் இன்பாக்சிலே "சாட் வரியா?" ன்னு கேட்டார். அது சம்பந்தமா ரிப்போர்ட் பண்ணி நானும் கொஞ்சம் சமாதானமையிட்டேன். அப்புறம் எனக்கு வாழ்த்து சொன்ன ஒருத்தர்
Quote:

Originally Posted by jaya6 (Post 1448275)
திரு(மதி?):"Deepa1"

இப்படி ஒரு பதிவு பண்ணிதும் அதுக்கு
Quote:

Originally Posted by Deepa1 (Post 1448292)
Quote:
Originally Posted by jaya6
திரு(மதி?):"Deepa1"
என்ற பதிவு எதற்கு? இங்கு நம் முன்னோர்களும் இருக்கிறார்களோ? சிலர் முகத்தில் "மதி"யை காண்கிறார்கள் சிலர் பண்பில் "மதி"யை காண்கிறார்கள். நான் இங்குள்ள பெண்மையை போற்றும் "விதி"களில் நிர்வாகிகளின் "மதி"யை காண்கிறேன். நண்பர்களிடமும் விதிகளை "மதி"க்கும் "மதி"யை நான் எதிர்பார்க்கிறேன். அதுவும் நிறைய இருப்பதாலே இங்கு கதை எழுதுகிறேன். நான் வெறும் "திரு"வா "திருமதி"யா என்பது ரொம்ப முக்கியமா இப்போது? இந்த நண்பர் என்னுடைய ரெண்டு திரியில ஒன்னையாவது பாத்து ஒரு பதிவு செஞ்சிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பேன்.

பதில் சொன்னேன். இதெல்லாம்
நீதானே என் பொன் வசந்தம் போட்டி முடிவு அறிவிப்பு திரியில் இருக்கு. தொடர்ந்து ஒருத்தர் அவர் உங்களை கிண்டல் செய்யல நீங்க அப்படி எடுத்துக்காதீங்க ன்னு சொல்ல நான் அது அவரில்லை வந்து சொல்லணும் ன்னு சொன்னேன். இது தப்பா? இதே மாதிரி மார்ச் 2018 முடிவு அறிவுப்பு திரியிலேயும்
Quote:

Originally Posted by jaya6 (Post 1448916)
திரு(மதி?):"Vijithacool614"

இப்படி ஒரு பதிவு

மத்தவங்க சொல்றதெல்லாம் நான் கிண்டல் இல்லாம எடுத்துக்கணும் நான் பதில் சொன்னா மட்டும் அதுக்கு பேரு கிண்டலா? சரி இந்த நிர்வாக சவால் போட்டி129 அறிவிப்பு திரியில் ஒருத்தர் பதிவு செஞ்ச தேதி அன்னிக்கு வரை 4 பேரு களத்திலே இருந்தாங்க. ஆனா ஒருத்தர் மூணு பேருன்னு சொன்னத சுட்டிக்காட்டி "மூனுபேரா நாலு பேரு இல்ல" ன்னு மட்டும் தான் சொன்னேன். வேறு எதுவுமே சொல்லலே அதுக்கு அவர் என்ன என்னவோ சொல்ல நான் பதிலுக்கு சாரி கேட்டும் அவர் நான் "நையாண்டி" பண்ணினதா சொல்றாரு

பிரெண்ட்ஸ் நான் ஆணா பெண்ணான்னு ஒரு சந்தேகம் நிறைய பேருக்கு அது jaya06 பதிவிலிருந்து தெரியறது

புதியவர் பழையவரின் தவறை சொன்னா அது பொருக்கலை இது ரெண்டாவது உதாரணமா நான் சொன்னது.

இப்படிப்பட்ட பாரபட்சம் மிக்க தளத்திற்கு பெண்கள் எப்படி வருவார்கள். டேட்டிங் வரணுமா? அப்படின்னா அதை தைரியமா சொல்லவேண்டியது தானே? உடம்பு சரியில்லாம பெட்லே இருக்கற ஒருத்தருக்கு இதெல்லாம் எதுக்கு?பெண்களுக்கு பாதுகாப்பு என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய் தானே? malar1988 ஒரு நண்பரின் ப்ரொபைலிலே
"நான் ஆணா....பெண்ணா...என சந்தேகமா...?

நான் பெண் தான் ...இதற்கு மேல் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால் விட்டு விடுங்கள்...உங்களுக்கு நான் விளக்க வேண்டியது இல்லை...

- மலர்"

இப்படி ஒரு பதிவை செஞ்சிருந்தாங்க.பார்த்தேன். மலரை மனதிற்குள் பாராட்டினேன். சரி

நான் ஒரு ஆண் என்றால் உங்களுக்கென்ன? தெரிந்து என்ன செய்யப்போறீங்க? நான் ஒரு சவால் வைக்கிறேன். முடிந்தால் கண்டு பிடியுங்கள்? என்னைப்போல் மற்றவர்களுக்கு பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. பூனைக்கு மணிக்கட்ட நான் துணிந்துவிட்டேன். இங்கே இப்படி எல்லாம் எழுதுவதற்கு எனக்கு தண்டனை உண்டென்றால் அதிகபட்சம் தடை செய்யப்படுவேன் அவ்வளவு தானே? பரவா இல்லை. தீபா1

asho 29-04-18 12:12 PM

உங்கள் வருத்தம் புரிகிறது, அதே நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். இங்கே ஆண்/பெண் என்று உறுப்பினர் சேர்க்கை போது பதிவதை அப்படியே நிர்வாகம் எடுத்துக்கொள்கிறது, அது அவர்கள் விருப்பம். அதே சமயத்தில் பெண் உறுப்பினர்கள் நலனில் அக்கறையும் எடுத்துக்கொள்கிறது, உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களை தொடர்பு கொண்டால் பிரச்சினை தீர்க்கப்படும்.

உங்களை ஒருவர் கவனிக்கிறார், கவனம் பெற விழைகிறார், தொடர்பு கொள்ள நினைக்கிறார் என்று உணர்ந்தால் அவருடன் மேற்கொண்டு கீழே உள்ள நடவடிக்கைகள் மூலம் அதனை சரி செய்யலாம்.

1) கண்டு கொள்ளாமல் சும்மா இருப்பது

2) தொடர்ந்து தனிமடல்/தனிப்பட்ட வார்த்தைகள் பொதுவிலே வந்தால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் தந்து சுட்டிக்காட்டுதல்

3)சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு ஒரு வரியில், உன் நடவடிக்கை பிடிக்கவில்லை என்னை திரும்ப கவனம் பெற வைக்காதீர்கள் என்று பதில் தருவது, அப்படியும் தொல்லை தந்தால் முதலில் சொன்னபடி தலைமை நிர்வாகியிடம் புகார் தனிமடலில் செய்வதுடன் அவர் கதை முடிந்து விடும்.


நம் தளம் ஒரு பொது இடத்திற்கு(பூங்கா) சமமானது, இங்கே நல்லவரும் வருவார், கெட்டவரும் வருவார். நாம் நடந்து கொள்வதில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு பூங்காவில் உலா வரும் போது, பின் தொடர்ந்து வரும் ஒருவர் விசில் அடித்தால் அல்லது ஏய் என்று அழைத்தால் நாம் திரும்ப பதில் நடவடிக்கை செய்வதில் இருந்து அவரை தவிர்க்கலாம், நாம் சட்டை செய்யவில்லை என்னும் போது அவர் அத்து மீறினால் நாம் அவர் சட்டையை பிடித்து இரண்டு அறை விடலாம் அல்லது செருப்பை எடுத்து அடிக்கலாம். ஆனால் விசில் அடிப்பதே தவறு என்றோ அல்லது பூங்கா நிர்வாகத்தையோ குறை சொல்ல முடியாது.

நான் நிர்வாக உறுப்பினராக இருந்த காலத்தில் பெண் பெயரில் உள்ள உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு சிலர் தனிமடல் கொடுத்ததை அந்த பெண் உறுப்பினர்கள் யாரிடமும் சொல்லாமலே ஒதுங்கி(தளத்தை விட்டே) இருந்திருக்கிறார்கள். பின்னர் சில நாள் கழித்து ஏதோச்சையாக என்னிடம் தெரிவித்த பின் உடனடியாக அந்த உறுப்பினர்கள் விளக்கம் கோரப்பட்டு தடை செய்யப்பட்டார்கள்.

நாமே முடிவெடுப்பது சில விசயங்கள் சரியாக இருக்கும், ஒரு அமைப்பில் இருக்கும் போது அமைப்பை நிர்வாகிப்பவர்களிடம் தெரிவித்து பின் பதில் கண்டு முடிவெடுப்பது தான் சிறந்தது.

இங்கே உங்கள் பிரச்சினையில் நீங்கள் வெளிப்படையா ஜெயா6 என்ற உறுப்பினர் பெயர் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் ஏதும் மரியாதைக்குறைவாக எழுதியாக தெரியவில்லை, அவர் நோய்வாய்ப்பட்டு இறுதிக்காலத்தை நாட்களில் மீதம் வைத்திருக்கும் ஒரு உறுப்பினர். அவர் தவறான அர்த்தத்தில் எழுதியாக தெரியவில்லை.

பெண் உறுப்பினர் ஒருவர் தனிமடல் தந்தவரை நிர்வாகத்திற்கு புகார் அல்லது இக்நோர் லிஸ்ட் செய்து விடுதல் நலம். மற்றபடி தளத்திலே பொதுவிலே பதிப்பு சரியில்லை என்றால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் தந்தால் பதிவு திருத்தப்படக்கூடும்.

எல்லோருக்கும் உணர்வுகள் பொறுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும் எனவே, ஒருவர் சிரமத்தை மற்றவர் உணர்ந்து கொள்ளுதல் எந்த அளவிற்கு என்று தெரியாது, ஆனால் பாதிப்படைந்த ஒருவர் அதனை குறிப்பிடும் போது மற்றவர் அறிந்து கொள்ள முடியும்.

r.saranraj85 29-04-18 01:00 PM

எங்க போனாலும் இந்த தொல்லையா? இது காமலோகம் நாம்
நமது உணர்வுகளை (தகாத உறவுகதைகள் போன்ற சில எண்ணங்களை) பகிர்ந்து கொண்டு நமது காமத்திற்கு வடிகால் தேடி கொள்கின்றோம் அதிலும் இப்படியா? யாராக இருந்தால் என்ன உரையாடல் தனி மடலுக்கு எல்லாம் நிறைய சமூக வலைதளம் உள்ளதே பிறகு ஏன் இங்கே தொல்லை கொடுக்க வேண்டும்

niceguyinindia 23-06-18 07:29 PM

வாட்சப் உலகில் இன்னமும் தனி மடல் தொந்தரவா !
கவலை வேன்டாம் நிர்வாகிகள் நிச்சயம் உதவி செய்வார்கள்

Deepa1 03-09-18 10:45 AM

மேற்பார்வையாளர் அவர்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. அதற்கு எடுத்துக்கொண்ட சிரமத்திற்கும் மிக்க நன்றி. காமலோகத்தில் ஒரு பெண் உலவுகிறாள் என்றால் அவள் எதற்கும் தயாராக இருப்பாள் என்ற எண்ணம் சரியல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Quote:

Originally Posted by asho (Post 1449384)
நீங்கள் ஒரு பூங்காவில் உலா வரும் போது, பின் தொடர்ந்து வரும் ஒருவர் விசில் அடித்தால் அல்லது ஏய் என்று அழைத்தால் நாம் திரும்ப பதில் நடவடிக்கை செய்வதில் இருந்து அவரை தவிர்க்கலாம், நாம் சட்டை செய்யவில்லை என்னும் போது அவர் அத்து மீறினால் நாம் அவர் சட்டையை பிடித்து இரண்டு அறை விடலாம் அல்லது செருப்பை எடுத்து அடிக்கலாம். ஆனால் விசில் அடிப்பதே தவறு என்றோ அல்லது பூங்கா நிர்வாகத்தையோ குறை சொல்ல முடியாது.

இது சில நேரங்களில் சரியாக இருந்தாலும் பொதுவாக எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது. காரணம் பெண்கள் உடல் அளவில் அவ்வளவு வலிமையானவர்கள் இல்ல. தவிர இரக்க குணமே அவர்களுக்கு எதிராகவும் வேலை செய்கிறது.

ஓகே எழுத்திற்கு மட்டும் மதிப்பு தந்து எங்களுக்கு வேறு தொல்லைகள் இல்லாமல் இருந்தால்.எந்த ஒரு விஷயத்திலும் எங்களின் கருத்துக்களை அறிய முடியும்.
Quote:

Originally Posted by asho (Post 1449384)
இங்கே உங்கள் பிரச்சினையில் நீங்கள் வெளிப்படையா ஜெயா6 என்ற உறுப்பினர் பெயர் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் ஏதும் மரியாதைக்குறைவாக எழுதியாக தெரியவில்லை, அவர் நோய்வாய்ப்பட்டு இறுதிக்காலத்தை நாட்களில் மீதம் வைத்திருக்கும் ஒரு உறுப்பினர். அவர் தவறான அர்த்தத்தில் எழுதியாக தெரியவில்லை.

நண்பரின் நிலைக்கு வருந்துகிறேன். அவர் விரைவில் குணமடையட்டும்.

நான் தீபா. பெண். நான் பெண் பெயரில் இருக்கும் ஆணா என்ற வகையில் பதிவை ஏன் செய்யவேண்டும். அதை அறிவதில் என்ன ஆர்வம் லாபம். எழுத்திற்கு முக்கியத்துவம் உள்ள ஒரு தளத்தில் எழுதுவோரின் பாலினம் பற்றிய ஆய்வு எதற்க்கு?

சரி. மேற்பார்வையாளர் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். முதலில் ஆர்வமாக வந்தேன். இப்பொழுது சற்று குறைவு. பார்க்கலாம். நன்றி.

tdrajesh 03-09-18 11:19 AM

Quote:

Originally Posted by Deepa1 (Post 1456042)
அவர் விரைவில் குணமடையட்டும்.

ஆமாம்! உங்களின் ஆசிர்வாதத்தால் அவர் விரைவில் குணமடைந்து லோகத்தில் பங்களிக்க நானும் உங்களுடன் சேர்ந்து ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 04:20 PM.

Powered by Kamalogam members