காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup) (http://www.kamalogam.com/new/showthread.php?t=16993)

nicman_1954 22-12-05 04:59 AM

எழுதியதை ஒரு முறை படித்தாலே அதிக பிழைகள் திருத்தப்பட்டு விடும். எழுதுவோம். படிப்போம். திருத்துவோம் பிறகு நகல் ஒட்றி ப்திப்போம்

keith 06-01-06 04:44 AM

தமிழ் எழுத்துப் பிழைகள்
 
நண்பர்களே
நம் தளத்தில் புதிதாக கதை எழுதுபவர்களை பாராட்டவேண்டியதும் ஊக்குவிப்பதும் எல்லோருடைய கடமை. ஆனால் அதே சமயத்தில் நல்ல தமிழை வரவேற்பதுவும் நம் கடமையல்லவா?
நம் தள தலைவர்கள் ஏன் இதற்காக சில விதிமுறைகளை விதிக்ககூடாது?
இது பற்றி நாம் விவாதிக்கலாம் இல்லையா? நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்?
கீத்

arasan 06-01-06 11:45 AM

நீங்கள் எந்த மாதிரியான விதிமுறைக்கு பரிந்துறை செய்கிறீர்கள். பிழை இல்லாமல், சரியான முறையான எழுத்துகளை கொண்டு இருக்க வேண்டும் என்றா...? நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அனைவராலும் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதமுடியும் என்று கூற முடியாது. ஏன் என்றால் பெரும்பான்மையோர் ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தமிழ் தெரிந்ததே பேச்சு வழியாக இருக்கலாம். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்..

ramv 06-01-06 12:52 PM

தமிழ் புலமை கொண்டவர்களுக்கும் எழுதுப்பிழை வருவது இயற்கையே! என்னக்கு தெரிந்தவரை, தமிழை பேசுவது வேறு, எழுதுவது கடினம். எனவே உங்கள் பரிந்துரையை அப்படியே அமுல் படுத்துவது மிகவும் கடினம் என நினைக்கிறேன்.

ஆதி 06-01-06 03:26 PM

இங்கு உள்ள உருப்பினர்களில் 90% எழுத்துப்பிழை உள்ள பதிப்பாகத்தான் தருகிறார்கள். (என்னையும் சேர்த்துத்தான்) கூடுமான வரை பிழை இல்லாமல் தற வேண்டிக்கொள்ளலாம்.

ilangomat 06-01-06 03:49 PM

நாம் பலமுறை தவறுகள் தெரிந்தும் அதை பெரிது படுத்தாமல் பாராட்டோடு நிறுத்திக் கொள்கிறோம்.

அப்படி இல்லாமல், நாம் எல்லோரும் தவறுகளை உடனுக்குடன் குறிப்பிட்டு வந்தால், எழுதியவர்களுக்கு திருத்த வாகாக இருக்கும். எழுதியவர்கள், அப் பிழைகளை பற்றி அறியும்போது, உடனே அதை திருத்த வேண்டும். இவ்வாறு பிழைகளை குறிப்பிடுவதை வித்தியாசமாக நினைக்கக் கூடாது.

உதாரணமாக, இங்கு முந்தைய பதிவுகளில் பிழைகள் (தருகிருகிறார்கள் என்று இருக்கிறது. தருகிறார்கள் என்றிருக்க வேண்டும். (ஆதி அவர்கள் பதிவு) என்னக்கு = எனக்கு ramv. பரிந்துறை = பரிந்துரை arasan. பெரும்பார்மையோர் = பெரும்பான்மையோர் arasan. வரவேர்க்கிறேன் = வரவேற்கிறேன். arasan. ) முதலிய பிழைகள் எனக்கு தோன்றுகிறது.

விமர்சன பதிவுகளை விட கதைப் பதிவுகளுக்கு பிழையில்லாமல் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பேச்சுத்தமிழில் எழுதுவது வேறு. அது பிழையில்லை. அது கதைக்கு ஒரு சுவை ஊட்டுவதை மறுக்க முடியாது. ஆனால், பிழையாக எழுதினால் கதையை ரசிக்கமுடியவில்லை.

நன்றி

ஆதி 06-01-06 06:31 PM

Quote:

Originally Posted by ilangomat
(தருகிருகிறார்கள் என்று இருக்கிறது. தருகிறார்கள் என்றிருக்க வேண்டும். (ஆதி அவர்கள் பதிவு)

நன்றி இளங்கோ. என் பதிப்பில் உள்ள பிழையை திருத்திவிட்டேன்
Quote:

Originally Posted by ilangomat
அது கதைக்கு ஒரு சுவை ஊட்டுவதை மறுக்க முடியாது.ஆனால், பிழையாக எழுதினால் கதையை ரசிக்கமுடியவில்லை.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான், இருப்பினும் அதிகமானோர் யுனிகோட் எழுத்துவதில் சில வேலைகளில் இது போல் தவறுகள் வரலாம். மேலும் தாங்கள் குறிப்பிட்டது போல், படித்துவிட்டு எங்கே எழுத்துப்பிழை உள்ளது என்று குறிப்பிட்டால் அந்த தவறுகளை திருத்திக்கொள்ளலாம். (இப்போது என் பதிப்பில் குறிப்பிட்டது போல்) நன்றி.

arasan 06-01-06 07:08 PM

இளங்கோ நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.... பிழை இல்லாத தமிழைப் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் அழகாகத்தான் இருக்கும். என்ன செய்வது, சில எழுத்துப் பிழைகள் தெரியாமல் ஏற்படுவது... சில பிழைகள், தெரிந்து ஆனால் எந்த எழுத்து சரியாக பொருந்தும் என்பது தெரியாமல் வருவது... மேலும் சில பிழைகள் தட்டச்சு பிழைகள்.... இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுவதன் மூலம் கண்டிப்பாக திருத்த முடியும்.... நானும் இதை வரவேற்கிறேன்.

எனது பதிப்பின் பிழைகளைத் திருத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.....

ilangomat 06-01-06 07:31 PM

அரசன் அவர்களே,

நீங்கள் என் கருத்துகளுக்கு வரவேற்பு அளித்தது மிகவும் சந்தோஷம்.

என் பெயர் இளங்கோ. இலங்கோ என்பதல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

ஒருமுறை படித்துப் பார்த்தால் பெரும்பாலான பிழைகள் கண்ணில் பட்டுவிடுகின்றன என்று நினைக்கிறேன்.

நன்றி.

arasan 06-01-06 07:48 PM

Quote:

Originally Posted by ilangomat
அரசன் அவர்களே,

தவறாக எண்ண வேண்டாம்.
நன்றி.

நான் முன்பு கூறியது போல், நான் தவறாக என்ன மாட்டேன். அதே சமயம் இந்தப் பிழை தட்டச்சு காரணமாக நேர்ந்தது... திருத்திவிட்டேன்...


All times are GMT +5.5. The time now is 09:29 PM.

Powered by Kamalogam members