காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   டிசம்பர் 26 சுனாமி நினைவஞ்சலி (http://www.kamalogam.com/new/showthread.php?t=31063)

udhayasuriyan 25-12-06 08:54 PM

டிசம்பர் 26 சுனாமி நினைவஞ்சலி
 
மறக்க முடியுமா...???

நாள் - திசம்பர் 26
வருடம்- 2004
நேரம் - 8.30 மணி

இந்தோனிசியா, இலங்கை,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 3 லட்சம் பேர் மாண்டதும், பல லட்சம் குழந்தைகளும்,பெரியவர்களும் அனாதைகள் ஆனதும்.... மறக்க இயலுமா..????

இந்தியாவில் அந்தமான் பகுதியும், அதைவிட மோசமாக தமிழ் நாடும் பாதிக்க பட்டது...
ஒரு குறிப்பிட்ட சமுதாயமே ஆழி பேரலையில் அழிந்து போனது....

சுனாமி தாக்கி இரண்டாவது ஆண்டு நினைவு தினம் தான்...திசம்பர் 26..

சுனாமியால் உயிரிழந்த அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும், உலக சொந்தங்களுக்கும், எங்களின் இதய நினைவஞ்சலி.!!

சென்னையில் ஒரு இடத்தில் வைக்க பட்டுள்ள பேனரில் நான் பார்த்த வாசகம் இதோ..,

சுனாமி...! வேண்டாம் இனி நீ...!!
ஆழி பேரலை...!! இனி தாக்க வேண்டாம் எங்களை...!!!

ஏ.. கடல் தாயே...!!! நியாயமா..??
நீ சுமந்த பிள்ளைகளை....,
நீ பெற்ற பிள்ளைகளை...,
உன் பேர் சொன்ன பிள்ளைகளை...,
உன் மடி தவழ்ந்த பிள்ளை களை...,

நீயே எடுத்து கொண்டது...நியாயமா..??



கண்ணீர் வந்து விட்டது எனக்கு... அதனால் கண்ணீருடன் நினைவு அஞ்சலி செய்கிறேன்...
நம் தள நண்பர்களும் அஞ்சலி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்...

வாழ்க தமிழ்

Mathan 26-12-06 06:50 PM

அவர்கட்கு, எமது கண்ணீர் அஞ்சலி.

oolvathiyar 31-12-06 02:27 PM

இயற்கை என்ன தான்
மனிதன் அழித்தாலும்
அது ஒரே சமயத்தில்
பலி வாங்கும்
இயற்கையோடு நாம் அளவாகதான்
விளையாட வேண்டும் எண்று
நமக்கு உனர்த்திய பாடம்
ஆனால் நம் வாழ்கைமுறை
நம்மை திருந்த விடாது

udhayasuriyan 23-12-07 08:43 PM

சுனாமி நினைவு நாள்
மறக்க முடியுமா திசம்பர் 26

3 ம் ஆண்டு நினைவு அஞ்சலி..

இத்தருணத்தில்.. தமிழ் மன்றத்து நன்பரின் கவிதையை இங்கு வைத்து.. அஞ்சலி செலுத்துகிறேன்....




நாளை உண்டு நமக்கு...

சுதந்திர பூமி தமிழீழத்துக்காய்
சுதந்திர வேட்கை மனதில்
சூழ விழித்திருந்த வேளைதனில்
சுனாமி என்ற பெயர் கொண்ட
சூறாவளி சுழன்று சுழன்று அடித்தே
சூறையாடி விட்டது எம் இனத்து
சொந்த பந்தங்களை

தண்ணீருக்குள் தண்ணீராய் ஈரமாக
இணைந்திருக்கும் உனக்கில்லை இரக்கம்
கண்ணுக்குள் கண்ணீராய் இணைந்த எம்
நெஞ்சுக்குள் ஈரம் எமக்குண்டு

அடங்கி விட்டது உன் சீற்றம்
அடங்க வில்லை எம் உணர்வுகள்
ஆறாத்துயரில் அழுதிடும் எம் உறவுகளை
அணைத்திட எம் கரங்கள் உண்டு

மனித அவலத்தின் உச்சியின் கதறல்களில்
மனிதம் விழிப்புறட்டும்
இனம் மதம் தேசம் கடந்த
இணைந்த கைகள் இறுகப்பற்றியே
நாளை உண்டு நமக்கு என்றே
நாளைய பயணம் நல்வழியாக அமையட்டும்

வாழ்க தமிழ்

உதயம் 24-12-07 03:48 PM

அந்த டிசம்பர் 26 அன்று நான் சென்னையில் தான் இருந்தேன். ஆனால் 8.30 மணிக்கு பாரிஸ் பேருந்து நிலையதில் இருந்து ஒரு இடத்திற்கு புறப்பட்டேன். சென்ட்ரல் ஸ்டாப்பிங் வரும்போது ஒரு கூட்டம் மக்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டு, நடத்துநர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க அவர்கள், எங்கள் வீடு, பொருள் எல்லாம் கடல் கொண்டு போய்விட்டது எங்கே செல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. மீண்டும தண்ணி வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது, எங்காவது கொண்டு சென்று விடுங்கள் என்று சொன்னது.

கூட்டதில் அந்த அம்மா நான் என் மகளை காப்பாற்றிவிட்டேன், மகளின் மகனை காப்பாற்ற முடியவில்லையே என தன் மார்பில் அடித்துகொண்டு அழுத காட்சி இன்னும் மறக்க முடியவில்லை

hard bang 24-12-07 04:52 PM

இறந்தவர்கள். ..இழந்தவர்கள்,
இவர்களுக்கு நம் இதய அஞ்சலி..
அந்த கொடுமையின் பெயர் சொல்லி
கொள்ளை அடித்தவர்களை..
நாமும் மனிதமாய் மன்னிப்பதில்
எங்கே உள்ளது நீதி.. ..

நிவாரணம் கொடுத்த
நல்ல உள்ளங்களின்
வெள்ளை மனதினை..
கொள்ளை கூட்டம்
கேலி கூத்தாக்கியது..

உறவை தொலைத்தவர்
உடமை தொலைத்தவர்
இன்னும் இருக்கார் வீதியிலே
செய்த பயனென சொல்லி
பெயர் வாங்கியர்.. துட்டு அடித்தவர்
ஏசி ரூம் அறைக்குள்ளே..

இறைவா..
கடந்த சுனாமியே
கடைசியியாய் இருக்கட்டும்..
ஆனால் புரியாமல் ஒன்று
உன்னிடம் கேட்கிறேன்..
இந்த இயற்கை சீற்றங்களில்
ஏன் அதிகம், இல்லதாவர்
பாதிக்கப்படுகிறார்கள்..?

udhayasuriyan 24-12-07 09:47 PM

நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்..
இந்த திரி.. காமமில்லா தலைப்புக்கு மற்ற படுமா..?????

நண்பர்கள் விருப்ப பட்டால் இங்கேயே இருக்கட்டும்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

rose1604u 24-12-07 09:58 PM

யாராலுமே மறக்க முடியாத தினம் டிசம்பர் 26.

சுனாமியால் உயிர் நீத்த அனைவருக்கும் எமது (3ம் ஆண்டு) கண்ணீர் அஞ்சலி...

குமரன் 26-12-07 02:38 PM

ஆழிப்பேரலை என்னும் கடற்கோளால் கண்மூடிப்போன கண்மணிகள் அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் மறப்போமா மாண்டவர் தன்னை.

udhayasuriyan 26-12-07 08:49 PM

இலங்கையின் சோகம்..

சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு.. இலங்கை அரசு ஒரு உதவியையும் செய்யாமல் விட்டது.. அதே போல் தொண்டு நிறுவனங்களும் கொள்ளை அடித்து கொண்டு விட்டன...

ஜிங்தோடா: இலங்கையின் கடலோர நகரமான ஜிங்தோடாவின் ஒரு பகுதி இது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இப்பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

சுனாமி மறுவாழ்வுப் பணிகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி செய்த போதிலும், இன்னமும் பலர் குடிசைகளில்தான் வசிக்கின்றனர்.

சுனாமி குடியிருப்புகளைக் கட்டிக் கொடுப்பதாகக் கூறி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல கோடி ரூபாயை ஏப்பமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நிதியுதவி செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன.

வாழ்க தமிழ்


All times are GMT +5.5. The time now is 11:37 PM.

Powered by Kamalogam members