காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   10-வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட சலுகைகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60072)

xxxGuy 14-02-12 09:31 AM

10-வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட சலுகைகள்
 
நண்பர்களே,

வரும் மார்ச் 4-ம் தேதி நமது காமலோகம்.காம் தளம் நிறுவப்பட்டு 10 வருடங்களை வெற்றிகரமாக முடித்து, ஒளிமயமான 11-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனால், வரும் மார்ச் மாதத்தை சிறப்பாக கொண்டாட தளத்தில் ஒரு சில மாறுதல்கள் மற்றும் சில சலுகைகள் கொடுத்து உங்களுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறோம். அந்த மார்ச் மாத பத்து சலுகைகள் / மாறுதல்கள் பின்வருமாறு:

===

[01] இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப்படும் கதைகளில் மூன்று பாகத்திற்கு மேல் பதிக்கப்படும் கதைகளுக்கு 1,000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும். மூன்று பாகங்களுக்கு குறைவான கதைகளுக்கு 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.

கவனிக்க: (அ) கதைகள் புதிய காமக் கதைகள், புதிய தகாத உறவுக் கதைகள் மற்றும் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதியில் பதிக்கப் பட்டிருக்க வேண்டும். (ஆ) தலைப்பில் "காமலோக 10 ஆண்டு நிறைவு விழா" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். (இ) கதைகள் மார்ச் மாதத்தில் முடிவடைந்திருக்க வேண்டும். (ஈ) உங்கள் கதைகளுக்கான ஐகேஷ் பரிசுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் உங்கள் கணக்கில் வந்து சேரும்.

[02] பழைய முடிவடையாத கதைகளை மீண்டும் துவக்கி மார்ச் மாதத்திற்குள் முடித்து வைக்கும் படைப்பாளிகளுக்கு சிறப்பு பரிசாக 1,000 ஐகேஷ்கள் வழங்கப்படும். (குறைந்த பட்சம் 1 வருடத்திற்கு முன் இதன் முந்தைய பாகம் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்)

[03] மார்ச் மாதத்தில் வர இருக்கும் மாதம் ஒரு சவால் போட்டிக்கு "என்னுடைய" ஒரு கதை வைக்கப்பட இருக்கிறது. வெகு நாட்களாக நான் முடிக்காமல் இருக்கும் அந்த கதைக்கு நிர்வாகத்திடம் இருந்து விசேஷ அனுமதி வாங்கியுள்ளேன். நமது 10-வது ஆண்டை முன்னிட்டு இந்த கதைக்கு எத்தனை பாக தொடர்ச்சிகள் வேண்டுமென்றாலும் பதியலாம் (3-5 பாகங்கள் தொடர்ச்சிகள் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இந்த மாதம் தளர்த்தப் படுகிறது). மேலும், இந்த மார்ச் மாத நிர்வாக சவால் போட்டியின் முடிவில் நிர்வாகம் வழங்கும் ஐகேஷ் பரிசு போல, நான் நினைத்த படி கதையை முடிப்பவருக்கு என் சார்பாகவும் ஒரு "போனஸ்" பரிசு உண்டு.

[04] மார்ச் மாதத்திலிருந்து இந்த 10-ம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்க ஒரு வருடத்திற்கு சினிமா / சின்னத் திரை பகுதி மற்றும் கதைக்கேற்ற காமப் படங்கள் பகுதி இரண்டும் 'வெண்கல வாசல் உறுப்பினர்களும்' பார்க்குமாறு ஒரு புதிய பகுதியில் வைக்கப்படும்.

[05] தற்போது தங்க வாசல் மற்றும் வெள்ளி வாசல் உறுப்பினர்களுக்கு மட்டுமே காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிவேற்றம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் சித்திர காமக் கதைகள் மற்றும் சித்திரச் சிரிப்புகள் பதிக்க விரும்பும் வெண்கல வாசல் உறுப்பினர்களுக்கும் காமலோகம்.அமை தளத்தில் அனுமதி கொடுக்கப்படும்.

[06] சினிமா / சின்னத் திரை பகுதியில் தற்போது செய்திகள் இல்லாமல் வெறும் படங்கள் மட்டும் பதிக்க அனுமதியில்லை. இந்த விதிமுறை மார்ச் முதல் தளர்த்தப் படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சினிமாப் படங்கள் வரை செய்திகள் ஏதும் இன்றியும் பதிக்கலாம். இவற்றில் மற்ற தளப் பெயர்கள் பெரிதாக இருந்தால் தணிக்கை செய்து பதிக்கவும். செய்தியில்லாத படங்களுக்காக மட்டும் திரியை துவக்குபவர்கள் அதற்குண்டான சரியான Prefix தேர்வு செய்ய வேண்டும். செய்திகள் பதிப்பவர்கள் [செய்தி] எனவும், படங்கள் பதிப்பவர்கள் [படங்கள்] எனவும் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வரும் படங்களில் சிறந்த படங்களை சேகரித்து, அடுத்த மாதம் நம் தளத்தின் மேல் பகுதியில் மாறும் படங்களில் சேர்க்கப்படும். (மற்ற தளங்களின் பெயர் இல்லாத படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்).

[07] தமிழ் வாசலின் காமப் பாடல்கள் பகுதியில் "சினிமா உல்டா பாடல்கள்" பதிப்பவர்கள் தங்கள் பாடல்களுடன் ஒலி வடிவில் (mp3) மற்றும் ஒலி-ஒளி (video) வடிவிலான பாடல்களின் சுட்டிகள் கொடுக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
இது பாடலின் கீழ் பகுதியில் தான் பதிக்கப்பட வேண்டும், இல்லையெனில் அலுவலகத்தில் இருந்து திரிகளை காண்பவர்களுக்கு இடையூறாக அமையும்.
அலுவலகத்தில் இருந்து தளம் உலா வருபவர்கள் கேட்டுக் கொள்வதால் ஒரு சிறிய மாற்றம். பாடல்களை சினிமா பகுதியின் வீடியோ பகுதியில் பதிக்கவும். வீடியோ பகுதி திரியின் சுட்டியை மட்டும் உல்டா பாடலில் திரியில் கொடுக்கவும்.

[08] சினிமா பகுதியினுள் ஒலி-ஒளி (வீடியோ) பகுதி ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. இதில் ஆடியோ, வீடியோ சினிமா பாடல்கள் பதிக்கலாம். இங்கே ஒருவர் ஏற்கனவே காமப் பாடல்கள் பகுதியில் பதிந்த உல்டா பாடலுக்கு மற்ற உறுப்பினர்கள் அந்த பாடலின் ஒலி-ஒளிக்கான திரி துவக்கலாம், அதில் உல்டா பாடலின் சுட்டியை மறக்காமல் சேர்க்கவும். இது தவிர உல்டா செய்யப் படாத பாடலைப் பதித்து அந்த பாடலுக்கு உல்டா வேண்டியும் இங்கே பதிக்கலாம்.

[09] ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிக பட்சம் 500 ஐகேஷ்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்ற உச்சகட்ட அளவு 500-லிருந்து 1,000-ஆக உயர்த்தப் படுகிறது.

[10] திரிகளுக்கு ரேட்டிங் கொடுப்பதற்கு மிகக் குறைவான ஐகேஷ்களே கொடுக்கப்பட்டு வந்தது. அது மார்ச் முதல் அதிகரிக்கப் படுகிறது (இனி படித்த கதைகளுக்கு தவறாமல் ரேட்டிங் கொடுங்க, ஐகேஷ் சம்பாதியுங்கள்). மேலும் பல வகைகளில் உங்கள் ஐகேஷ்கள் அதிகரிப்பதற்கு வழி செய்யப் பட்டுள்ளது. அதனால், ஒருவர் கணக்கில் அதிக பட்சம் 50,000-க்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை 75,000-ஆக உயர்த்தப் படுகிறது.

===

இணையத்தில் புற்றீசல்கள் போல தினமும் எத்தனையோ தளங்கள் முளைக்கின்றன. அவையெல்லாம் ஒன்றிரண்டு வருடங்களிலேயே காணாமலும் போய் விடுகின்றன. அப்படிப்பட்ட கால கட்டத்தில் 10 வருடங்களாக எங்களுடன் கூடவே இருந்து, எங்கள் விதிமுறைகளை மதித்து, கட்டுக் கோப்பாக இந்த 10 வருடங்களை கடக்க உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பால் மட்டுமே எங்களால் இதை சாதிக்க முடிந்தது.

நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்தீர்களோ இல்லையோ, காமலோகத்தை நன்றாக காதலித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

அதனால், நீங்கள் அனைவரும் காதலர்கள் தான், உங்கள் அனைவருக்கும் எங்களின் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!!

நன்றி..!!!

xxxGuy

KANNAN60 14-02-12 09:35 AM

அருமையான திட்டங்கள் / சலுகைகள் அன்புத் தலைவர் அவர்களே! மிக்க நன்றி! மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நம் தளம் 11வது பிறந்தநாள் கொண்டாடுவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

HERMI 14-02-12 09:48 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்தீர்களோ இல்லையோ, காமலோகத்தை நன்றாக காதலித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
அதனால், நீங்கள் அனைவரும் காதலர்கள் தான், உங்கள் அனைவருக்கும் எங்களின் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!!

தலைவரே,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.

அதே சமயம் எந்தவொரு பலனும் எதிர்பாராமல் இதை ஈரைந்து ஆண்டுகளாய் தமிழனுக்காக, தமிழை வளர்க்க நீங்கள் செவ்வனே இந்த தளத்தை சீரும் சிறப்புமாக, கட்டுக்கோப்போடு நடத்திவருகிறீர்கள். அதற்கு என் நன்றி.

இந்த 10 - ஆண்டு நிறைவில் நானும் பங்கெடுக்க வாய்ப்பு அமைந்ததை என் பெருமையாக நினைக்கிறேன்.

இன்னும் பல்லாண்டுகள் லோகம் தழைத்தோங்க நான் மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

maria 14-02-12 10:37 AM

காதலர் தினத்தன்று சிறப்பு சலுகைகளை அறிமுகபடுத்திய தலைவருக்கு நன்றி
Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்தீர்களோ இல்லையோ, காமலோகத்தை நன்றாக காதலித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

100% சத்தியமான வார்த்தைகள்
நம் காமலோகம் இன்னும் பல்லாண்டு காலம் செழித்தோங்கி வளர உளமாற வாழ்த்துகிறேன்

MACHAN 14-02-12 11:01 AM

காமலோகத்தை காதலிக்கும் காதலர்களான எங்களை மகிழ்விக்கும் விதமாக காதலர் தினத்தன்று காதலோடு சிறப்பு சலுகைகளை அள்ளி வழங்கிய நிர்வாகத்தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பத்தாவதை நிறைவு செய்து 11 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களின் சீரிய தலைமையிலான காமலோகம் மென்மேலும் பல்லாயிரம் ஆண்டுகளை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.

tdrajesh 14-02-12 11:01 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
உங்கள் அனைவருக்கும் எங்களின் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!!

தலைவரின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

இந்த நேரத்தில், இவ்வளவு சலுகைகள் கொடுத்திருக்கும் நேரத்தில் நான் விடுமுறையில் செல்லுவது (கேட்டராக்ட் சர்ஜரி) கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மார்ச் மாதம் 15 தேதிக்கு மேல் கலந்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
மார்ச் மாதத்தில் வர இருக்கும் மாதம் ஒரு சவால் போட்டிக்கு "என்னுடைய" ஒரு கதை வைக்கப்பட இருக்கிறது. வெகு நாட்களாக நான் முடிக்காமல் இருக்கும் அந்த கதைக்கு நிர்வாகத்திடம் இருந்து விசேஷ அனுமதி வாங்கியுள்ளேன். நமது 10-வது ஆண்டை முன்னிட்டு இந்த கதைக்கு எத்தனை பாக தொடர்ச்சிகள் வேண்டுமென்றாலும் பதியலாம் (3-5 பாகங்கள் தொடர்ச்சிகள் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இந்த மாதம் தளர்த்தப் படுகிறது). மேலும், இந்த மார்ச் மாத நிர்வாக சவால் போட்டியின் முடிவில் நிர்வாகம் வழங்கும் ஐகேஷ் பரிசு போல, நான் நினைத்த படி கதையை முடிப்பவருக்கு என் சார்பாகவும் ஒரு "போனஸ்" பரிசு உண்டு.

இதில் நானும் கலந்துக்கொள்ள விரும்புவதால் (அந்த ஸ்பெஷல் 'போனஸ்'-யை பெற விரும்புவதால்) போட்டியின் கால அளவை சற்று நீடித்தால் நலமாக இருக்கும். இது என்னுடைய வேண்டுக்கோள்.

நம்முடைய லோகம் இன்னும் பிரமாண்ட வளர்ச்சி பெறவும், நண்பர்களிடயே நட்புறவு பெருகவும் வாழ்த்துகிறேன்.

தலைவருக்கும், நிர்வாக தோழர்களுக்கும் மற்ற லோக நண்பர்கள் அனைவருக்கும் 'காதலர் தினம்' நல்வாழ்த்துக்கள்.

sujathabalaji2007 14-02-12 11:05 AM

நல்ல பல அருமையான திட்டங்களையும், சலுகைகளையும் கொடுத்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தலைவருக்கு நன்றிகள் பல உரித்தாகுக.
மேலும் மேலும் லோகம் ஆல் போல தழைத்தோங்க எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.
நன்றியுடன்

anabayan 14-02-12 11:08 AM

நம் காமலோகம் பத்தாண்டு நிறைவு பெற்றமையை கொண்டாடும் விதமாக பல சலுகைகளை தந்து சிறப்பிக்கவிருக்கு நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிரேன். வாழ்க நமது தளம் வலமுடன் மேலும் பல பத்தாண்டுகள்.

MURATTUKKALAI 14-02-12 11:28 AM

இனியவை பல அறிவித்த தலைமை நிர்வாகிக்கு நன்றிகள் பல. பத்தாண்டு முடிவடைந்து பதினொன்றில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்.

தமிழா 14-02-12 12:07 PM

பத்தாம் ஆண்டு முடிந்து பதினோறாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் லோகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வியக்க தக்க சலுகைகள் !


All times are GMT +5.5. The time now is 12:47 AM.

Powered by Kamalogam members