காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   புதியவர்கள் பதிப்பு பற்றி ஓர் ஆலோசனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=65824)

kamakodangi68 27-01-15 03:23 PM

புதியவர்கள் பதிப்பு பற்றி ஓர் ஆலோசனை
 
அன்பு நண்பர்களே..

இது ஓர் ஆலோசனைதான்.. புகார் அல்ல..

நம் லோகத்தில் வருடாவருடம் புதியவர்கள் சேர்க்கை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் இந்த வருடம் வழக்கமான காலத்தில் புதியவர் சேர்க்கை என்று இல்லாமல் தைத்திங்கள் முதல்நாளை ஆரம்பமாகக்கொண்டு நம் தலைவர் அறிவித்தார்.

நாம் எல்லாரும் இதை ஆவலுடன் வரவேற்றோம். வரும் புதியவர்களை மகிழ்வோடு இருகரம் நீட்டி நம்லோகத்தில் இன்முகம் காட்டி சேர்த்துக் கொண்டோம்.

ஆனால்.. இந்த வருடம் வந்த புதியவர்கள் பதித்த பதிப்புகள்.. அவை கதை என்றாலும் சரி.. மற்ற பங்களிப்புகள் என்றாலும் சரி.. பெரும்பாலும்.. (அனைத்தும் அல்ல) அவையெல்லாம் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு திரி பூட்டப்படுகின்றனவே...

என்ன காரணம்..?

நான் நம் தளத்தில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களைக் கேட்க விரும்புகிறேன்..

ஏன் இப்படிப் பதிக்கிறார்கள்..?

நம் தளத்தின் விதிமுறைகளை செவ்வனே படித்துத்தானே நிர்வாகத்தினரால் செலக்ட் ஆகி தள நுழைவு அனுமதி பெற்று நம் தளத்தினுள் நுழைகிறார்கள்..?

பின் ஏன் இப்படி சொந்தப் படைப்புகள் அல்லாமல் காப்பியடித்துப் பதிக்கிறார்கள்..?

புதியவர்களை இப்படி பதிக்கத் தூண்டுவது எது..?

நம் லோகத்திற்குப் புதிதாய் வந்திருக்கும் புதியவர்களே..

உங்களின் கருத்துக்களைக் கூறுங்களேன்..

(பழையவர்களும் கருத்து கூறலாம்..)

அன்பு 27-01-15 07:39 PM

என்னைப்பொறுத்தவரை இங்கே நானே தட்டச்சு செய்த என்னுடைய சொந்தக்கதைகளை மட்டும்தான் பதிக்கப் போகிறேன். வேறுயாருடைய / எந்த தளத்துடைய கதையையும் காப்பி பேஸ்ட் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.

விளையாட்டுத்துறை வீரர்கள் பற்றியும் தவறாக குறிப்பிட மாட்டேன். கண்டிப்பாக 18 வயதுக்கு குறைவானவர்கள் என் படைப்புகளில் இடம்பெற மாட்டார்கள்.

நமது தளத்தின் கதைகளை வெளியே எங்கேயும் கொடுக்கவும் மாட்டேன். வேறு தளங்களிலோ, வலைப்பூக்களிலோ, குழுக்களிலோ, அல்லது மெயிலிலோ நமது தளத்தின் கதைகளை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.

சில புதியவர்கள் காப்பி கதைகளை பதிக்கிறார்கள்.

ஏன் என்றால் -

1. நிர்வாகிகளால் அந்த கதை காப்பி அடிக்கப்பட்ட கதை என்று கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்துக் கொள்வது.

2. புதிதாக கதை கருவை சிந்தித்து, நேரம் ஒதுக்கி தட்டச்சு செய்து, சொந்தமாக கதை எழுத சோம்பேரித்தனப்படுவது. யாருடைய கதையையோ பதிந்துவிட்டு பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணம்.

3. குறுக்குவழியில் வாசல்கள் கடக்க வேண்டும் என்ற எண்ணம்.

இப்படி இன்னும் பல காரணங்கள் உள்ளன.

kamakodangi68 28-01-15 08:42 PM

Quote:

Originally Posted by அன்பு (Post 1323097)
இப்படி இன்னும் பல காரணங்கள் உள்ளன.

கருத்து பதிந்ததற்கு நன்றி நண்பரே..

இன்னும் பல நண்பர்களின் கருத்துக்களை (புதியவர்கள், பழையவர்கள் என்ற வித்தியாசமில்லை.. அனைவரும் சொல்லலாம் ) எதிர்பார்க்கிறேன். சொல்ல விருப்பமில்லை என்றால் அவர்கள் நோ கமெண்ட்ஸ் என்றும்கூட இங்கே சொல்லலாம்..

Laal 29-01-15 04:43 AM

என்னதான் விதிமுறைகளை படித்து தளத்தில் இணைந்திருந்தாலும் சீக்கிரமே அடுத்தடுத்த வாசல்களை அடைய வேண்டும் என்ற காரணமே புதியவர்களை இப்படி யோசிக்க வைக்கிறது என்பது என் கருத்து...

ஆனால் நம் தள நிர்வாகிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பது தெரிந்தால் இப்படி செய்ய மாட்டார்கள்....

இந்த திரி புது நண்பர்கள் தடம் புறலாமல் இருக்க உதவும் நண்பரே...

ஸ்திரிலோலன் 01-02-15 05:32 AM

இந்த வினா என் மனதிலும் சில நாட்களாகவே உறுத்திக் கொண்டு இருந்தது.. நண்பர் கோடாங்கியார் அவர்கள் நச்சென்று அழகாகக் கேள்வி கேட்டு விட்டார்.. தவறு செய்யும் எண்ணம் உள்ள புதியவர்கள் இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்..

தக்க சமயத்தில் திரி எழுப்பிய நண்பர் கோடாங்கியாருக்கு மிக்க நன்றி...

srikalyan 01-02-15 06:39 AM

நண்பர் கேட்பதும் சொல்லுவதும் நியாயம்தான்.

அவசரம், எல்லா வாசல்களிலும் என்ன இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் அவசரம்தான் காரணமாக இருக்க முடியும்.

என்னையே எடுத்துக்கொள்வோம். இரண்டு மாதமாக செப்டம்பரில் இணையலாம் என்று காத்திருந்தேன். ஆனால் அது ஜனவரிக்கு தள்ளிப் போடப்பட்டது. காத்திருந்து இணைந்தால் ஒவ்வொன்றுக்கும் இத்தனை பதிப்புகள் வேண்டும் என்று தெரியும் போது சற்று சோர்வாக இருக்கிறது. சரி விதிமுறைப்படி நடப்போம் என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறோமே என்று என்னையே நான் தேற்றிக்கொண்டு பதித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் அதே சமயம் கதைகளை படித்தால் உடனே அடுத்தடுத்த வாசலுக்கு அனுமதி கிடைக்கும் என்னும் போது இப்படிதான் ஒரு குறுக்கு வழியை கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. சில தளங்களில் கதை பதித்தால்தான் அனுமதியே! அங்கே என்ன செய்ய முடியும்? வேறு ஒரு தளத்திலிருந்து கதையை திருடி அனுமதி பெறுவதுண்டு இல்லையா? அந்த பழக்கம் இங்கேயும் தொடருகிறது என்று நினைக்கிறேன்.

இந்த இண்டர்நெட் யுகத்தில் காப்பியடிக்கும் கதைகளை கண்டுப் பிடிப்பது ரொம்பவும் சுலபம் என்பது புதியவர்களுக்கு தெரியாததால் இந்த தவறு நடக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இரண்டு மூன்று காப்பியடிக்கப் பட்டக் கதைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

என்னைப்போன்ற புதியவர் நண்பர் அன்பு மேலே பதித்தக் கருத்துகள் மிகவும் சிறப்பனவை.

என்னைப்பொறுத்தவரை இங்கே நானே தட்டச்சு செய்த என்னுடைய சொந்தக்கதைகளை மட்டும்தான் பதிக்கப் போகிறேன். வேறுயாருடைய / எந்த தளத்துடைய கதையையும் காப்பி பேஸ்ட் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.

இதை புதியவர்கள் எல்லாரும் பின்பற்றினாலே போதும் என்பது என் கருத்து.

நன்றி.

salem1963 01-02-15 06:14 PM

நானும் இங்கு ஒரு புதிய உறுப்பினர் நான் பதிப்புகளை பதிய ஆரம்பிக்கும் பொது குழப்பமாக இருந்தது தற்போது கூட தமில்வாசளுக்கு விண்ணப்பித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டதனால் நாம் ஏதாவது தவறு செய்துல்லோம்மா என்று ஒரே குழப்பமாக உள்ளது இதேபோல் சிலர் மேலும் அனுமதி கிடைக்கவேண்டி எங்கு பதியவேண்டும் என்று தெரியாமல் தவறுகள் செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன் எனவே புதியவர்களுக்கு அவர்கள் ஈ மெய்லுக்கு தனியாக எவ்வாறு பதியவேண்டும் என்று தெரிவித்தால் தவறுகள் நடை பெறாது என்று எண்ணுகிறேன்

pooja1975 06-02-15 08:46 AM

வணக்கம்....எதையுமே பொறுமையா அனுபவித்து செய்தால் மிகவும் நன்றாக இருக்குமே! ஏன் அவசரப் படுகிறார்களோ தெரியவில்லை!

padithoraipandi 08-03-15 03:02 PM

அடுத்த அடுத்த வாசலுக்கு உடனே செல்ல வேண்டும் என்ற ஆவல்.ஆனால் முறையாக கதைகள் அல்லது பின்னூட்டம் இடுவதற்க்கு பொறுமையின்மை. ஆகையால் பிற தளங்களில் இருந்து காப்பி அடித்து போடுகிறார்கள். யார் இதை எல்லாம் கண்டு பிடிக்க போகிறார்கள் என்ற் நினைப்பு.

காமராஜன் 25-11-15 06:42 AM

நான் பார்த்தவரை ஒவ்வொரு ஆண்டும் புதிய சேர்க்கையில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே ஆக்டிவ் ஆகிறார்கள்..

பலரும் பல பகுதிகளை வாசிக்காமலேயே தொடர்கிறார்கள்...

புதிய கைத்தொலைபேசி வாங்கும் போது கையேட்டில் உள்ள எல்லா வற்றையும் வாசித்து விட்டா உபயோகிக்கிறோம் ..?? அவசரம் எல்லோருக்கும் உள்ள குணம்தானே??

நல்ல வழிகாட்டிகள் ... தேவை...!!


All times are GMT +5.5. The time now is 01:29 PM.

Powered by Kamalogam members