காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நான் அவளில்லை.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=57510)

PUTHUMALAR 15-02-11 08:34 PM

நான் அவளில்லை..
 
நான் அவளில்லை.. என்ன நண்பர்களே.. மலருக்கு என்னாச்சு.. திடீர்ன்னு வந்து நான் அவளில்லை எனக் கூறுகிறாளே எனப் பார்க்கிறீர்களா?..

இதோ விசயத்திற்கு வருகின்றேன்.. நமது லோகத்தில் தான் அடைந்த புகழை மூலதனமாக வைத்து தானும் ஒரு தளம் அமைத்தால் என்ன என்ற சிந்தனை துரோகமே வடிவான ஒரு மாபெரும் உறுப்பினருக்குத் தோன்றியது.. அதன் விளைவாய் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாய் அவரும் ஒரு தளம் கண்டார்..

தளம் மட்டும் கண்டால் போதுமா?.. உறுப்பினர் வேண்டாமா என்ற நிலை அவர் மண்டையை உடைத்தது.. பாவம் அவர் தான் என்ன செய்வார்.. இங்கு முன்னணியில் உள்ள நல்ல பல உறுப்பினர்களுக்கு வலை விரித்தார்.. அவரது துரோகத்தின் விலை தெரியாத இங்குள்ள பல நல்ல உறுப்பினர்கள் அவர் சொல்லில் மயங்கி இங்கும் அங்குமாய் திரிசங்கு நிலையில் உள்ளனர்..

அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது தான் நான் அவளில்லை என்பது.. இன்னும் புரியவில்லையா?..

அந்த துரோகத்தின் பிறப்பிடம் என்னையும் தன் தளத்தில் இணைய வேண்டியது.. நான் மறுக்கவே.. ச்சீ.. ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்ற கதையாய் என்னைத் திட்டிச் சென்றது..

ஆனால் சென்றது சும்மா இருந்ததா?.. என் பெயரில் போலி நபர் ஒன்றை அது தன் தளத்தில் உருவாக்கி ஒரு குழப்பத்தை உருவாக்கியுள்ளது.. அது தான் நான் அவளில்லை என்று சொன்னதன் அர்த்தம்..

ஏன் என் பெயரில் உறுப்பினரை உருவாக்கியுள்ளாய் என நான் கேட்டால் உலகத்தில் நீ மட்டும் தான் மலரா?.. என எதிர் கேள்வி எழுப்புகின்றது அது.. உலகத்தில் நான் மட்டும் மலர் இல்லை தான்.. பின்னே ஏன் என் அடையாள எண்ணை இணைத்துள்ளாய்?.. இது யாரை ஏமாற்ற?.. காமலோக உறுப்பினர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. நான் அவள் என்று ஏமாற.. இன்னும் சொல்லப் போனால் அது நீ தான் என்று இங்குள்ள அனைத்து நண்பர்களுக்குமே தெரியும்.. இன்னும் எத்தனை உறுப்பினர்களை இது போல் உருவாக்கப் போகின்றாயோ எனக்குத் தெரியவில்லை.. ஆனால் நீ உருவாக்கும் உறுப்பினர்கள் எல்லாம் நாங்கள் ஆகிவிட முடியாது..

ஆம் நண்பர்களே.. அவள் நானில்லை.. இன்னும் சொல்லப் போனால் காமலோகத்தைத் தவிர நான் வேறு எங்கும் உறுப்பினரும் இல்லை.. இது ஒரு தன்னிலை விளக்கம் தானே தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை..

smdhabib 15-02-11 08:39 PM

நான் அவளில்லை - புரிந்துக் கொண்டேன் நண்பரே..!

jayjay 15-02-11 08:42 PM

அப்படி போடுங்க அருவாளை.. இப்பதான் எனக்கு நிம்மதியே..

வேறொரு தளத்தில் தங்களின் பெயரை பார்த்ததும் எனக்கு பகீரேன்றது.. நீங்கள் வேறெங்கும் போக மாட்டீர்கள் என்பது யாவரும் அறிந்ததே.. ஆனால் உங்கள் பெயரை அங்கே பயன்படுத்தி இருப்பது பற்றி நானே உங்களுக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கலாமென இருந்தேன்.. நீங்களே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்..

நண்பர்களே உஷார்.. உங்க பேரும் மற்ற தளங்களில் வேறொருவரால் உருவாக்கப்பட்டு இருக்கலாம்..

vaaliban 15-02-11 08:45 PM

ஹேட்ஸ் ஆப் மலர் !!

உங்க தில் & உங்க ஸ்ட்ரைட் பார்வர்ட் ஆன்ஸ்வர் டு தேட் கருப்பு ஆடு .. ரொம்ப பிடிச்சிருக்கு !!

தளத்தில் நீண்ட நாள் வராததால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ! தெரிந்து கொள்கிறேன் !!

(நிர்வாகத்திடம் ரிப்போர்ட் செய்யவில்லை என்றால் ..ரிப்போர்ட் செய்யுங்கள் ) நிர்வாகம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் !!!

ராசு 15-02-11 08:50 PM

இன்னும் எத்தனை தளங்களில் வேண்டுமானாலும் அவர்கள் இந்த வேலை செய்யட்டும்! அது உங்களை பாதிக்காது! காரணம் பெயரைத்தான் காப்பி அடிக்க முடியுமே தவிர, திறமையை காப்பி அடிக்க முடியுமா?

இது மலர் அவர்களின் திறமைக்கும், புகழுக்கும் வழங்கப் பட்ட சான்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும்!

MACHAN 15-02-11 08:56 PM

துரோகிகளை தோலுரித்து காட்டிய உங்களை மனதார பாராட்டுகிறேன் தோழி...! திறந்த மனதோடு நடந்த உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டீர்கள். சபாஷ்...!

PUTHUMALAR 15-02-11 10:28 PM

மிக்க நன்றி! தோழர்களே..
 
என்னைப் புரிந்து கொண்ட தோழர்களுக்கு மிக்க நன்றி!.. ஒரு வார காலமாய் என் மனதில் இருந்த வேதனைகளுக்கு உங்களின் வார்த்தைகள் அருமருந்தாய் அமைந்துள்ளது.. மிக்க நன்றி! தோழர்களே..

KANNAN60 16-02-11 12:37 AM

கருப்பு ஆடுகளைத் தோலுரித்துக் காட்டியதற்கு நன்றி தோழி மலர் அவர்களே. வருத்தம் வேண்டாம். யார் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது!

BILLA 16-02-11 10:27 AM

ஓ இப்படியெல்லாம் நடக்குதா? நன்றி மறவா மலருக்கு பாராட்டுக்கள். நாங்க உங்களை நம்புறோம் மலர். மற்றவர்களை பற்றி கவலை எதற்கு?

அன்புடன்
பில்லா

maria 16-02-11 10:58 AM

இப்படியல்லாம் குட்டையை குழப்புறாங்களா?
இதுக்கல்லாம் போய் வருத்தபடுகிறீகள் மலர்?
உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி


All times are GMT +5.5. The time now is 04:03 AM.

Powered by Kamalogam members