காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   2022 டிசம்பர் 1 அன்று (ஒரே ஒரு நாள் மட்டும்) முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=78882)

asho 01-11-22 03:25 PM

2022 டிசம்பர் 1 அன்று (ஒரே ஒரு நாள் மட்டும்) முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி
 
2022 டிசம்பர் 1 அன்று (ஒரே ஒரு நாள் மட்டும்) முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி



நண்பர்களே, வரும் 2023 ஜனவரி 14 முதல் புதிய உறுப்பினர்கள் அனுமதிக்க இருக்கிறோம், அதற்கு முன் முன்னாள் உறுப்பினர்கள் இன்னாக்டீவாக இருப்பவர்கள் அல்லது முறையாக பங்களிக்கவில்லை என்று அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி மட்டும் அனுமதி வழங்கினோம். ஆனால் முன் அறிவிப்பு 10 நாட்களுக்குள் இருந்ததால் அதனை பார்க்க முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்ட சில உறுப்பினர்களுக்கு சலுகை கிடையாது என்றதையும் குறிப்பிட்டு கால அவகாசம் முடிந்த பின் நிர்வாக குழுவிற்கு சிலர் முறையிட்டதால் இந்த முறை 30 நாட்களுக்கு முன்னரே அறிவிப்பு தரப்படுகிறது. தளத்து இமெயிலான காமலோகம்@ஜிமெயில்.காம் (ஆங்கிலத்தில்) உங்கள் ரெஜிஸ்டர்டு இமெயில் மூலம் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டு திரும்ப தலைவாசலில் புத்தம் புதிதாக பங்களிக்கலாம். இவர்கள் சேர்ந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் காமக்கதை வாசல் அனுமதி பெற்று விட வேண்டும், மறுத்தால்/மறந்தால் திரும்ப முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள். இதில் எந்த நெகிழ்வும் பின்னர் கிடையாது.



யார் யாரெல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்

1)தளத்திலே 3 மாதத்திற்கு மேல் வராமல் போய் இன்னாகிடிவ் ஆனவர்கள்

2)தளத்திலே 3 மாதத்திற்குள் வந்து கதை மட்டும் படித்து கருத்து பதிக்காமல் இன்னாகிடிவ் ஆனவர்கள்

3)தளத்திலே வந்து கதை படித்து கருத்து பதிந்து, மாதந்திர சிறந்த கதைபோட்டிக்கு வாக்களிக்காமல் அதற்கு தண்டனையாக இன்னாகிடிவ் ஆனவர்கள்

4)தளத்திலே தாங்களாகவே இமெயில் மாற்றி அதற்கு கன்பர்ம் இமெயில் வராமல் போய், பழைய இமெயிலும் வேலை செய்யாமல் போனவர்கள. இவர்களை சரி பார்க்க இவர்கள் தளத்து இமெயிலுக்கு, சமீபத்தில் மாற்றிய இமெயிலில் இருந்து வேண்டுகோள் விடுத்து, பின் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சரியாக பதில் கொடுத்து சேர்ந்து கொள்ளலாம். இங்கே முன்னரே சேரும் போது கொடுத்திருக்கும் தகவல் மறந்து போயிருந்தால் கணக்கு அவ்வளவு தான்.

5)நீண்ட காலம் தளத்திற்கு வராமல் போய், இங்கே கொடுத்திருந்த இமெயிலும் வேலை செய்யாமல் போய், பாஸ்வேர்ட் தெரியாமல் அதனை ரீசெட் செய்ய முடியாமல் போய், புத்தம் புது இமெயிலில் வருபவர்களும் இந்த நாளில் வேண்டுகோள் தந்து கணக்கை மீட்டெடுத்துகொள்ளலாம். இவர்களும் கேட்கும் கேள்விக்கு ஒரே தடவையில் சரியான பதில் தர வேண்டும் இல்லாவிட்டால் கணக்கு கிடைக்காது.

6) சேர்ந்து ஒரு வருடத்திற்குள் இன்னாகிடிவாக/தடை செய்யப்பட்டு இருந்தவர்கள்.

7)இங்கே கணக்கு துவங்கும் போது தகவல்களை தவறாக தந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனால் கணக்கை இழந்தவர்கள்.


நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்டு அது தற்போது அமலில் இருப்பவர்கள் மட்டும் சேர முடியாது, (Banned Members Not Allowed).


அதே போல மறு அனுமதி அளிக்கும், நிர்வாக குழுவானது, ஒரு உறுப்பினரின் கடந்த கால செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என கருதினாலும், தளத்தின் நன்மை கருதியும், இம்மாதிரி மறு அனுமதி கேட்கும் எவரொருவர் வேண்டுகோளையும் நிராகரிக்கும் உரிமை உள்ளது. அதற்கு முழுமையான விளக்கம் தரப்படாது.

அனுமதிகள் ஏன் ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் தருகிறோம் என்றால், இதற்கு முன் முன்னாள் உறுப்பினர்களுக்கான அனுமதி அனைத்து நாட்களிலும் வழங்கப்பட்டது, அப்படி வழங்கப்பட்ட தேதியில் இருந்து திரும்ப ஒரு நாள் கூட தளம் எட்டிப்பார்ப்பதில்லை பலர். அம்மாதிரி அனுமதிகள் தந்து திரும்ப ஆக்டிவேட் செய்யப்பட்டு ஒரு பதிவும் பதிக்காமல் திரும்ப அது இன்னாகிடிவ் (90 நாளில்) ஆகும் கேலிக்கூத்தை தவிர்க்கவே. இப்போதும் சென்ற அக்டோபரில் அனுமதி கேட்டு வாங்கியதில் 5 பேருக்கு மேல் ஒரு பதிவு கூட பதிக்காமல் அப்படியே ஙே என சிலர் ஹேங்காகி இருக்கிறார்கள். அவர்களை முற்றிலும் தடை செய்தாயிற்று.

அது போக டெஸ்க்டாப்/ லேப்டாப் / மொபைல் போனை சர்வீஸ் அல்லது விற்பனையால் கிடைக்கபெற்றவர்கள், அதில் முன்னரே சேமித்து வைத்திருக்கும் நம் தள யூசர் நேம் பாஸ்வேர்ட்களை வைத்து கணக்கை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால் இப்படி தன்னிச்சையாக ஒருவரே இமெயில் மாற்றுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்பது அவர்களுக்கு தெரியாது. புது இமெயிலில் இருந்து பின்னர் பழைய கணக்கை ஏதாவது சொல்லி சொந்தமாக்க நினைப்பவர்கள், இங்கே அவர்கள் கொடுத்த தகவல்களை சரிபார்க்கையில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் தொல்லைகளையும் தவிர்க்கவே இந்த ஒரே ஒரு நாள் மறு அனுமதி. இவர்கள் அடிக்கடி இம்மாதிரி அடுத்தவர் கணக்கை கைப்பற்ற துடிக்கிறார்கள். ஒரு கேள்விக்கும் ஒழுங்காக பதில் தருவதில்லை, உடனேயும் தருவதில்லை.

கட்டண உறுப்பினர் இவ்வளவு தொகை இவ்வளவு காலத்திற்கு என்று செலுத்தி கட்டண உறுப்பினராகி தளத்தில் வலம் வருகிறார் இன்புறுகிறார். அவர்கள் முதலிலே தளத்திற்கான அவர்தம் பங்களிப்பை செய்து விடுகிறார்.

ஆனால் பங்களிப்பு உறுப்பினர், முதலில் அனுமதி வாங்கி பங்களிப்பேன் என்று உறுதி கூறி பின் தளத்தை பயன்படுத்தி இன்புறுகிறாரே அன்றி அவர் பங்களிக்க மறந்து விடுகிறார். 10 கதை எழுதவோ, அல்லது படிக்கும் கதைக்கு எல்லாம் அவசியம் விமர்சனம் எழுத வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை,

மிக மிக குறைந்தபட்சமாக

மாதம் ஒருமுறை - காமக்கதை வாசல் அனுமதி பெற்ற பின்னர், மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு ஒரு வாக்களிப்பு

3 மாதத்திற்கு ஒரு தடவை ஒரே ஒரு கதைக்காவது தரமான பின்னூட்டம்

வருடத்திற்கு மொத்தமாக 36 கதைகளுக்கான பதிவுகள்.

இ்ந்த பங்களிப்பு கூட தர வில்லை என்றால் எப்படி, தளம் ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பல பிரச்சினை சிக்கல்கள் இருக்கும். ஆனால் எல்லோரும் அதனை சொல்லி தப்பித்தால் தளத்திலே படைப்பது யார் பங்களிப்பது யார்?. புதிது புதிதாக கதைகள் எப்படி வரும்?. தளம் புத்துணர்ச்சியோடு இருக்க அவ்வப்போது பங்களிக்காமல் உலாவுபவர்களை கண்டு நீக்கவும், திரும்ப பங்களிப்பதாக சொல்பவர்களை அனுமதிப்பதும் அவசியம்.

தளம் சிறப்பாக நடைபெறவே இந்த மாதிரி நடவடிக்கைகளே அன்றி யாரையும் தனிப்பட்டு வருத்தப்படவைக்க அல்ல. இதனை புரிந்து உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.



கடைசியாக ஒரு குறிப்பு:.

கதைகளுக்கு எழுதப்படும் பதிப்புகளே இனி அனுமதிகளுக்கான எண்ணிக்கை கணக்கில் சேர்க்க இருக்கிறோம். எனவே கதைகளுக்கு பின்னூட்டமிடுவதையே கண்க்கில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற திரிகளுக்கு எழுதுவதை தனிப்பட்டு சந்தோசமாக மொத்தக்கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.

vjagan 01-11-22 09:01 PM

மிகவும் வரவேற்பு தரவேண்டிய ஓர் அரிதினும் அரிதான வாய்ப்பு லோகத்தில் மீண்டும் புது உலா வர தரப்படும் வழி வாய்க்கால்!
பயனாக்கம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் நம் பழைய பழகிய நண்பர்கள் அனைவரும்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

விக்கி 01-11-22 10:36 PM

பழைய உறுப்பினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முன்வந்துள்ள நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகள் ....அதிலும் தேவையானவருக்கு அவர்களது அக்கௌன்ட் திரும்ப கிடைக்க நிர்வாகத்தினர் கூறும் விதிமுறைகளும் மிகவும் அவசியமானதாகவே உள்ளது ....

குறைந்தபட்ச பங்களிப்பை தான் அவர்கள் கேட்கிறார்கள் ...அதுவும் அவர்களுக்காக இல்லை ,....கதை எழுதும் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவே ஒன்றி .......இதனை புரிந்து வரும் பழைய உறுப்பினர்கள் திரம்பப்பட செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் ..

நமது காமலோகம் தொடர்ந்து சிறப்பாக இயங்க என் மனதார வேண்டிக்கொள்கிறேன் ....

niceguyinindia 01-11-22 10:38 PM

அரிதிலும் அரிதான வாய்ப்பு பயன் படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே

rook 01-11-22 11:55 PM

பல நண்பர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும், பயன்படுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

SIRUTHAI 02-11-22 01:56 PM

இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பல நண்பர்கள் மீண்டும் இணைந்து செயல்பட நல்வாழ்த்துகள்...

rmsun 06-11-22 03:42 AM

இந்த கமலோகம் வாசகர்களுக்கு ஓய்வெடுக்கவும், டெம்போவை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர்களின் சிறப்பான சேவைக்காக அனைத்து நிர்வாகிகளையும் பாராட்டுகிறேன். நன்றி

வேதா 07-11-22 09:24 PM

Quote:

Originally Posted by asho (Post 1630567)
முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி

சிறப்பு ... அனைவரையும் கருத்தில் கொண்டு நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க்கத்தக்கது ... மிக்க மகிழ்ச்சி

நண்பர்களே ... ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ... கணக்கை மீளப்பெட்ட்று லோகத்தை சிறப்பியுங்கள் ..

எவ்வாறு இன்னக்டிவ் நண்பர்கள் இந்த திரியை பார்ப்பார்கள் என்று சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த திரி காமலோக கணக்கு இல்லாதவர்களுக்கு(லாகின் செய்யும் முன்) கூட (ஹோம் பேஜில்) கான்ப்பிக்கின்றது மகிழ்ச்சி .

வாய்ப்புக்களை தவறவிட்டிடாமல் பெற்றிடுங்கள் ...

sridha 12-11-22 05:41 PM

அருமையான வாய்ப்பு நண்பர்கள் பயன்படுத்தி கொள்ளவும்

Kaamaguru 17-11-22 10:11 PM

மிகச் சரி
தளத்திற்கு வருபவர்கள் ஒரே ஒரு பின்னூட்டமாவது இட்டு சென்றால் எழுதுபவர்க்கு தூண்டுகோலாக இருக்கும். நான் ரசித்த (படித்த அல்ல ரசித்த) எந்த கதைக்கும் நான் பின்னூட்டம் இன்றி கடந்தது இல்லை..


All times are GMT +5.5. The time now is 01:47 AM.

Powered by Kamalogam members