காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=75878)

asho 01-12-21 08:50 AM

முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி
 
நண்பர்களே, வரும் 2022 ஜனவரி 14 முதல் புதிய உறுப்பினர்கள் அனுமதிக்க இருக்கிறோம், அதற்கு முன் முன்னாள் உறுப்பினர்கள் இன்னாக்டீவாக இருப்பவர்கள் அல்லது முறையாக பங்களிக்கவில்லை என்று அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு இன்றிலிருந்து அனுமதி வழங்க இருக்கிறோம். தளத்து இமெயிலான காமலோகம்@ஜிமெயில்.காம் (ஆங்கிலத்தில்) உங்கள் ரெஜிஸ்டர்டு இமெயில் மூலம் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டு திரும்ப தலைவாசலில் இருந்து பங்களிக்கலாம்.

ஆனால் இந்த வாய்ப்பு கீழே உள்ளவர்களுக்கு பொருந்தாது.
1) சேர்ந்து ஒரு வருடத்திற்குள் இன்னாகிடிவாக/தடை செய்யப்பட்டு இருப்பவர்கள்
2) கதை திருடி இங்கே அல்லது வெளியே பதிந்து அதனால் தடை செய்யப்பட்டவர்
3) இரட்டை கணக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டவர்கள்
4)இங்கே உள்ள நம் கதைகளை திருடி பதிந்து பிழைப்பு நடத்துபவர்கள் அப்படிப்பட்ட தளத்தில் மெம்பராக இருப்பவர்கள்/இருந்தவர்கள் என நீக்கப்பட்டவர்கள்.

வரும் ஜனவரி 2022லிருந்து அனுமதிகள் முறையிலும் பெரிய மாற்றம் கொண்டு வர இருக்கிறோம். அதற்குள் பழைய அனுமதிகள் எண்ணிக்கையிலே விரைந்து அனுமதி பெற பாருங்கள். அந்த அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

இந்த ஜனவரி 2022 அனுமதிகள் மாற்றம் இந்த வருடம் மே மாதத்தில் சேர்ந்தவர்களை கட்டுப்படுத்தாது, அவர்களுக்கு மார்ச் 2022லிருந்து அனுமதி மாற்றங்கள் செயல்படும்.


இன்றிலிருந்து 7 நாட்களுக்கு பின் தளத்திலே கிழே உள்ள லிஸ்டில் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு காலகிரமத்தில் இன்னாகிடிவ் செய்யப்படுவர். திரும்ப அனுமதிகள் கேட்டாலும் 30 நாட்களுக்கு பின்னரே வழங்கப்படும்.

1) மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு, வாக்கெடுப்பு காலத்திற்கு வந்து அந்த திரியை பார்த்தும், பின் வாக்களிக்காதவர்கள், வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படுவர்.
2) உப்புசப்பில்லாத ஒருவரி கருத்துத்துக்கள் தொடர்ந்து பதிந்து தள்ளுபவர்கள், வாரம் ஒருமுறை கண்டு நீக்கப்படுவர்.
3) 3 மாதத்திற்கு மேல் தளத்திலே 10 கருத்துக்குள் கூட பதிக்காதவர்கள், இவர்களும் வாரம் ஒருமுறை கண்டு நீக்கப்படுவர்.
4) முன்னாள் கதை எழுதியவர்கள்/நிர்வாகத்திற்கு உதவியவர்கள் என தளத்திற்கு வந்தும் விதிமுறைகளை தெரிந்து 3 மாதத்திற்கு ஒரு பதிவிட்டு/அமைதியாக செல்பவர்கள். இந்த மாதம் 7 முதல் நீக்கப்படுவர்.

தளம் சிறப்பாக நடைபெறவே இந்த மாதிரி நடவடிக்கைகளே அன்றி யாரையும் தனிப்பட்டு வருத்தப்படவைக்க அல்ல. இதனை புரிந்து உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.


கடைசியாக ஒரு குறிப்பு:.
கதைகளுக்கு எழுதப்படும் பதிப்புகளே இனி அனுமதிகளுக்கான எண்ணிக்கை கணக்கில் சேர்க்க இருக்கிறோம். எனவே கதைகளுக்கு பின்னூட்டமிடுவதையே கண்க்கில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற திரிகளுக்கு எழுதுவதை தனிப்பட்டு சந்தோசமாக மொத்தக்கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.

vjagan 01-12-21 09:38 AM

லோகத்தின் தரத்தை மேலும் மேலும் உயர்த்த கண் துஞ்சாமல் அயராது உழைத்து வரும் அசோ அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் !

rojaraja 01-12-21 10:19 AM

முன்னாள் உறுப்பினர்களுக்காக சிறப்பு அனுமதி என்றதும் வந்து படித்தேன் :), ஆனால் அதில் இந்நாள் உறுப்பினர்களுக்கான எச்சரிக்கையும் இருப்பதை தெரிந்துகொண்டேன்.

இன்றைய சூழ்நிலையில் தளம் வளர இந்த கட்டுப்பாடுகள் அவசியமான ஒன்று தான், அவர் அவர்கள் தங்களுக்கான நிலைமைக்கு ஏற்ப பங்களித்தால் இந்த கட்டுப்பாடுகள் தேவை இல்லாமல் போகும் ஒரு காலமும் வரும் என்று நம்புகிறேன்

கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்க என்னாலான முயற்சி செய்துகொண்டு தான் இருக்கின்றேன், தொடர்ந்து செய்வேன்

லோக தளம் சுறுசுப்பாக இயங்க நிர்வாகி அசோ அவர்களின் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

baxsu 01-12-21 10:39 AM

தளம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது எல்லோருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்து களை புடிங்கினாள் பயிர் விளையும் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்! காமலோக உறுப்பினர்கள் அனைவரும் தமிழில் பதிப்புகளும் கதைகளும் அடிக்கடி பதிக்க வேண்டும்!

kathalan 01-12-21 10:45 AM

Quote:

Originally Posted by asho (Post 1570038)
தளம் சிறப்பாக நடைபெறவே இந்த மாதிரி நடவடிக்கைகளே அன்றி யாரையும் தனிப்பட்டு வருத்தப்படவைக்க அல்ல.

லோக தரத்தை உயர்த்தவும், லோகம் வளர்ச்சிக்கும், லோக உற்சாகத்துடன் பயணிக்கவும் இம்மாதிரி விதிமுறைகள் அவசியமானதாகவே பார்கிறேன். இந்த அவசியத்தை நம் லோக நண்பர்கள் யாவரும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று மனதார நம்புகிறேன். புது திட்டங்களை வகுத்து நம் லோகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அசோ அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote:

Originally Posted by asho (Post 1570038)
கதைகளுக்கு எழுதப்படும் பதிப்புகளே இனி அனுமதிகளுக்கான எண்ணிக்கை கணக்கில் சேர்க்க இருக்கிறோம். எனவே கதைகளுக்கு பின்னூட்டமிடுவதையே கண்க்கில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற திரிகளுக்கு எழுதுவதை தனிப்பட்டு சந்தோசமாக மொத்தக்கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.

கதைகளே நம் லோகத்தில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். ஆகவே இதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சின்ன கருத்து:
லோகத்தில் மற்ற பங்களிப்புகளில் இந்த கட்டுப்பாடுகளால் முற்றிலும் பின்னூட்டங்கள் குறைந்து விடலாம். ஆகவே மற்ற பங்களிப்புகள் கொடுப்போரின் ஆர்வமும் குறைய நேரிடுமோ என்கிற ஐயம் எனக்குள்ளே எழுகிறது. அகவே,
1. மற்ற பங்களிப்புகளில் கொடுக்கப்படும் தரமான பின்னூட்டங்கள் 5 = 1 என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளலாமே.
2. ஒரே நாளில் ஐந்து கதைகளுக்கு பின்னர் மற்ற திரிகளில் பதியப்படும் ஒரே ஒரு பின்னூட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமே.
3. மற்ற திரிகளில் கொடுக்கப்படும் பின்னூட்டம் எண்ணிக்கைக்கு என்று அல்லாமல் அந்த படைப்பாளிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் அவற்றை எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாமே.
இவை என் மனதில் தோன்றிய சின்ன கருத்துக்கள் மட்டுமே.

happyrajas77 01-12-21 11:38 AM

எனக்கு திரும்ப அனுமதி கொடுத்ததற்கு நன்றி, இனி சிறப்பாக பங்களிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

நானும் தற்போதுதான் ஆக்டிவாக உள்ளேன்

madavan1000 01-12-21 11:47 AM

இந்த அறிவிப்பை நானும் வரவேற்கிறேன்.
பல மணி நேரங்கள் யோசித்து, பல மணி நேரங்கள் செலவழித்து கதைகள் எழுதுகிறோம். பின்னூட்டங்கள் இட நேரமில்லையென்று பலரும் ஒதுங்குவது வியப்பளிக்கிறது. அதில் அவர்களுக்கு
ஆர்வமில்லை என்பதே உண்மை.
அடியாத மாடு படியாது என்பார்கள் அசோ கம்பை எடுத்துள்ளார்.
பின்னூட்டம் தொடர்ந்து எழுதினாலே போதும் சிறு சிறு கதைகள் எழுத பழக்கம் வரும்.
அப்படி வந்தவர்கள் பலர்.
இதனால் புதுப் புதுப் படைப்பாளிகளும், படைப்புக்களும் கிட்டட்டும்

அசோவின் ஒரு வரி புரியவில்லை
Quote:

, வாரம் ஒருமுறை கண்டு நீக்கப்படுவர்
வார வாரம் சோதிக்கப்படுவோமா?
வார வாரம் களையெடுப்பு நடத்தப்படுமெனில் வார வாரம் தேடப்படுவோம் என்பது தானே பொருள்

தொடர்ந்து பயணிப்போம்

நன்றி
அன்புடன்
மாதவன் 1000

gemini 01-12-21 12:11 PM

ஒரு தளம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றால், அந்த தளத்துக்கு கட்டுப்பாடு, விதிகள் முக்கியம்.

இங்கே நிர்வாகம் அதை நன்றாக செய்து வருகிறது. மேலும் அதை இன்னும் சிறப்பாக செய்ய இன்னும் சில விதிகள்.

வாராவாரம் களையெடுப்பு நடாத்துவது உண்மையில் நிர்வாகத்தின் செயற்பாடும், அவர்களின் அளவில்லா உழைப்பையும் காட்டுகிறது.

icefire89 01-12-21 12:37 PM

இளமைப் பொலிவுடன் நடை போட்டு வரும் காம லோகத்தை மேலும் அழகாக்கும் இது போன்ற நடைமுறைகளுக்கு எம்மை போன்ற உறுப்பினர்கள் எப்போதும் எங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கி கொண்டே இருப்போம்...

ASTK 01-12-21 03:13 PM

இந்த உலகில் மாற்றம் என்ற ஒன்றே மாறாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் தளத்திற்கும் புதிய மாற்றங்கள் அவசியம் தேவைப்படுகிறது. தற்போது நிர்வாகம் அறிவித்துள்ள அறிவிப்புகள் ஒரு சிலருக்கு கசப்பாக இருந்தாலும் அது லோகத்திற்கு நல்ல மருந்தாக அமையும்.

இதுவரை பங்கேற்காமல் செயல்படாமல் இருந்த உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கணக்கை உயிர்ப்பித்துக் கொள்ளலாம்.
கதைகளுக்கு மட்டுமே வரும் பின்னூட்டங்களை மட்டுமே பதிவுகளாக எடுத்துக்கொள்ளும் நடைமுறையை நானும் வரவேற்கிறேன்.

2022 புதியவர் சேர்க்கையில் நடைபெறும் மாற்றங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:14 PM.

Powered by Kamalogam members