காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   2022 அக்டோபர் 1 அன்று முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=78644)

asho 19-09-22 11:41 AM

2022 அக்டோபர் 1 அன்று முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி
 
2022 அக்டோபர் 1 அன்று முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி

நண்பர்களே, வரும் 2023 ஜனவரி 14 முதல் புதிய உறுப்பினர்கள் அனுமதிக்க இருக்கிறோம், அதற்கு முன் முன்னாள் உறுப்பினர்கள் இன்னாக்டீவாக இருப்பவர்கள் அல்லது முறையாக பங்களிக்கவில்லை என்று அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி மட்டும் அனுமதி வழங்க இருக்கிறோம். தளத்து இமெயிலான காமலோகம்@ஜிமெயில்.காம் (ஆங்கிலத்தில்) உங்கள் ரெஜிஸ்டர்டு இமெயில் மூலம் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டு திரும்ப தலைவாசலில் புத்தம் புதிதாக பங்களிக்கலாம். இவர்கள் சேர்ந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் காமக்கதை வாசல் அனுமதி பெற்று விட வேண்டும், மறுத்தால்/மறந்தால் திரும்ப வெளியேற்றப்படுவார்கள்.

யார் யாரெல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால்

1)தளத்திலே 3 மாதத்திற்கு மேல் வராமல் போய் இன்னாகிடிவ் ஆனவர்கள்

2)தளத்திலே 3 மாதத்திற்கு மேல் வந்தும் கதை மட்டும் படித்து கருத்து பதிக்காமல் இன்னாகிடிவ் ஆனவர்கள்

3)தளத்திலே வந்து கதை படித்து கருத்து பதிந்து, மாதந்திர சிறந்த கதைபோட்டிக்கு வாக்களிக்காமல் அதற்கு தண்டனையாக இன்னாகிடிவ் ஆனவர்கள்

4)தளத்திலே தாங்களாகவே இமெயில் மாற்றி அதற்கு கன்பர்ம் இமெயில் வராமால் போய், பழைய இமெயிலும் வேலை செய்யாமல் போனவர்கள. இவர்களை சரி பார்க்க இவர்கள் தளத்து இமெயிலுக்கு சமீபத்தில் மாற்றிய இமெயிலில் இருந்து வேண்டுகோள் விடுத்து, பின் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சரியாக பதில் கொடுத்து சேர்ந்து கொள்ளலாம். இங்கே முன்னரே சேரும் போது கொடுத்திருக்கும் தகவல் மறந்து போயிருந்தால் கணக்கு அவ்வளவு தான்.

5)நீண்ட காலம் தளத்திற்கு வராமல் போய், இங்கே கொடுத்திருந்த இமெயிலும் வேலை செய்யாமல் போய், பாஸ்வேர்ட் தெரியாமல் அதனை ரீசெட் செய்ய முடியாமல் போய், புத்தம் புது இமெயிலில் வருபவர்களும் இந்த நாளில் வேண்டுகோள் தந்து கணக்கை மீட்டெடுத்துகொள்ளலாம். இவர்களும் கேட்கும் கேள்விக்கு ஒரே தடவையில் சரியான பதில் தர வேண்டும் இல்லாவிட்டால் கணக்கு கிடைக்காது.


ஆனால் இந்த வாய்ப்பு கீழே உள்ளவர்களுக்கு பொருந்தாது.
1) சேர்ந்து ஒரு வருடத்திற்குள் இன்னாகிடிவாக/தடை செய்யப்பட்டு இருப்பவர்கள்
2) கதை திருடி இங்கே அல்லது வெளியே பதிந்து அதனால் தடை செய்யப்பட்டவர்
3) இரட்டை கணக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டவர்கள்
4)நிர்வாகத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து அதனால் தடை செய்யப்பட்டவர்கள்.
5)இங்கே கணக்கு துவங்கும் போது தகவல்களை தவறாக தந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனால் கணக்கை இழந்தவர்கள்.

அனுமதிகள் ஏன் ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் தருகிறோம் என்றால், இதற்கு முன் முன்னாள் உறுப்பினர்களுக்கான அனுமதி அனைத்து நாட்களிலும் வழங்கப்பட்டது, அப்படி வழங்கப்பட்ட தேதியில் இருந்து திரும்ப ஒரு நாள் கூட தளம் எட்டிப்பார்ப்பதில்லை பலர். அம்மாதிரி அனுமதிகள் தந்து திரும்ப ஆக்டிவேட் செய்யப்பட்டு ஒரு பதிவும் பதிக்காமல் திரும்ப அது இன்னாகிடிவ் (90 நாளில்) ஆகும் கேலிக்கூத்தை தவிர்க்கவே.

அது போக டெஸ்க்டாப்/ லேப்டாப் / மொபைல் போனை சர்வீஸ் அல்லது விற்பனையால் கிடைக்கபெற்றவர்கள், அதில் முன்னரே சேமித்து வைத்திருக்கும் நம் தள யூசர் நேம் பாஸ்வேர்ட்களை வைத்து கணக்கை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால் இப்படி தன்னிச்சையாக ஒருவரே இமெயில் மாற்றுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்பது அவர்களுக்கு தெரியாது. புது இமெயிலில் இருந்து பின்னர் பழைய கணக்கை ஏதாவது சொல்லி சொந்தமாக்க நினைப்பவர்கள், இங்கே அவர்கள் கொடுத்த தகவல்களை சரிபார்க்கையில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் தொல்லைகளையும் தவிர்க்கவே இந்த ஒரே ஒரு நாள் மறு அனுமதி. இவர்கள் அடிக்கடி இம்மாதிரி அடுத்தவர் கணக்கை கைப்பற்ற துடிக்கிறார்கள். ஒரு கேள்விக்கும் ஒழுங்காக பதில் தருவதில்லை, உடனேயும் தருவதில்லை.

தளம் சிறப்பாக நடைபெறவே இந்த மாதிரி நடவடிக்கைகளே அன்றி யாரையும் தனிப்பட்டு வருத்தப்படவைக்க அல்ல. இதனை புரிந்து உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.


கடைசியாக ஒரு குறிப்பு:.
கதைகளுக்கு எழுதப்படும் பதிப்புகளே இனி அனுமதிகளுக்கான எண்ணிக்கை கணக்கில் சேர்க்க இருக்கிறோம். எனவே கதைகளுக்கு பின்னூட்டமிடுவதையே கண்க்கில் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற திரிகளுக்கு எழுதுவதை தனிப்பட்டு சந்தோசமாக மொத்தக்கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.


இதில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கருத்து பதிக்க அவசியமில்லை என்பதால் இந்த அறிவிப்பு பூட்டப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 03:21 PM.

Powered by Kamalogam members