கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!!
நண்பர்களே...! நண்பிகளே...!!
நமது தளம் கட்டுப் பாடுகளுடன் இயங்கும் ஒரு தளம், அதனால் தான் இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். இணையத்தில் தமிழில் காமக் கதைகள் என்றால் 99% அது காமலோகத்தில் மட்டுமே. நமது கதைகளை திருடிப் பிழைக்கவே இணையத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு இங்குள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கிறார்கள். நமது தளத்தின் விதிமுறையிலும் தெளிவாக கூறியுள்ளோம், ஒவ்வொரு வருடமும் அறிவிப்புகள் கொடுக்கிறோம் எந்த குற்றம் செய்தாலும் மன்னிப்பு உண்டு, ஆனால் நம் கதைகளை திருடி மற்ற தளங்களில் பதிக்கும் புல்லுருவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. விதிமுறை மீறல்களை தடுக்க காமலோகத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக கவனிக்கப் படுகிறார்கள். வெறும் உங்கள் பதிப்புகள், திரிகளை மட்டும் கவனிப்பதில்லை. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எப்படி வருகிறீர்கள், என்ன ப்ராக்ஸி மூலம் வருகிறீர்கள், என்ன கணணியில் இருந்து வருகிறீர்கள், என்ன ஆப்ரேட்டிங் சிஸ்டம், என்ன ப்ரௌசர், உங்கள் உண்மையான ஐபி எண் என்ன, இங்கிருந்து எங்கே செல்கிறீர்கள், என்ன பதிப்புகளை இங்கே பார்க்கிறீர்கள், அவற்றை நகல் எடுக்கிறீர்களா, அவற்றை வேறு எங்கும் பதிக்கிறீர்களா, உங்கள் கணக்கை நீங்கள் தான் உபயோகிக்கிறீர்களா? ஆனால், இவை அனைத்தும் 100% ரகசியமாக வைக்கப் படுகிறது. தமிழில் கதைகளை எழுத வைக்க திறமையற்ற சில சோம்பேறித் தளங்கள், கதைகளை திருடி கொண்டு வாருங்கள் எங்களுடைய கதைகளை படிக்க அனுமதி தருகிறோம் என்று புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். அவைகள் அனைத்தும் நம்மிடம் இருந்து சுரண்டப் படும் கதைகளே. அவர்கள் இதுவரை ஒரு கதையை கூட புதிதாக படைக்கவில்லை. அவர்களின் வஞ்சக வலையில் விழுந்து 5 உறுப்பினர்கள் சமீப காலங்களில் நிரந்தரமாக தடை செய்யப் பட்டுள்ளார்கள். இன்னமும் 5-6 உறுப்பினர்கள் அங்கே தங்கள் வேலையை புதிதாக துவங்கியிருக்கிறார்கள். அவர்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம், விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். கதைத் திருடர்களை மீண்டும் எச்சரிக்கிறேன்..! ஓரிரு மாத அனுமதிக்கு ஆசைப் பட்டு, காமலோக கதைகளை திருடி அங்கே பதித்து, காமலோகத்தின் வாசலை நீங்களே நிரந்தரமாக மூடிக் கொள்ளாதீர்கள். இது போன்ற நமது கதைத் திருடர்கள், மீண்டும் ஆகஸ்டு மாதம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது திரும்ப சேர்த்து கொள்ள படமாட்டார்கள், கட்டண உறுப்பினர்களாகவும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள். கட்டண உறுப்பினர்கள் இது போன்ற கதை திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் கணக்கும் முடக்கப் படும், கட்டணமும் திருப்பி கொடுக்கப் படாது. இந்த அறிவிப்பை கண்டாவது தற்போது அங்கே உலாவிக் கொண்டிருக்கும் சிலர் திருந்துவார்கள், அவர்கள் காமலோக கணக்கை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி.. |
மிக நல்ல திட்டம் நிர்வாகி அவர்களே...
நீங்கல் சொல்வது முற்றிலும் உண்மையே... 99 சதவிகிதம் அல்ல... 100க்கு 100 தமிழில் காம கதை மற்றும் சிரிப்புகள் என்றால் அது நம் தளமே... நானும் பல தளங்களின் நம் கதைகளையும் சிரிப்புகளையும் பாத்திருக்கிறேன்.. உங்களின் இந்த நடவடிக்கை..மிகவும் வரவேற்கதக்கது.. மென் மேலும் இதுபோல் பல நடவடிக்கைகளை எடுத்து தளத்தை இன்னும் மெருகூட்ட வாழ்த்துக்கள் அன்புடன் சூர புலி |
இப்படியும் மனிதர்களா?
தலைவர் இத்தனை திறமையாகவும், விழிப்பாகவும் நமது லோகத்தை நடத்தி வருகின்றார்... அப்படி அவர் நமக்காக செய்து கொண்டிருக்கும் இந்த சேவைக்கு நம்மால் ஆன உதவியை செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் தானே? நண்பர்களே, கதையைத் திருடாதீர்கள்... அந்த ஒவ்வொரு கதையையும் படைக்க எழுத்தாளர்கள் எத்தனை சிரமப் படுகின்றார்கள் என்பதை எழுத்தாளரான நான் அறிவேன்... தயவு செய்து எங்கள் கஷ்டத்தையும், முயற்சியையும் வீணடிக்காதீர்கள்... அனைத்து எழுத்தாளர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்வது இது மட்டுமே... |
நமது தளத்தில் நகல் எடுக்கும்(Ctrl + C, Right Click Copy) வசதியை டிஸேபுள் செய்ய வழிவகை இருந்தால் ஓரளவுக்கு தடுக்க முடியும் என நினைக்கிறேன்.
ஆனால் அது சாத்தியமா தெரியவில்லை. நான் பல தளங்களில் அதுபோல் காபி டிசேபுள் செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். |
Quote:
நீங்கள் சொன்னதையும் நான் சொன்னதையும் தடை செய்ய முடியுமானால் கன்டிப்பாக இந்த கதை திருட்டை தடுக்கலாம் அன்புடன் சூர புலி |
Quote:
|
நான் சொல்வது எதற்கும் முழூ தீர்வு என்பது கடினம், எனக்கு தெரிந்து 2 முறைகளில் தடுக்கலாம்...
1. யூசர் ட்ராக்கிங், 2. காப்பி ஆப்சன் தடை செய்வது. யூசர் ட்ராக்கிங் சிறிது கடினமான வேலை தான், எந்த ஐபி, எங்கிருந்து ப்ரொவ்ஸ் செய்யப்படுகிறது, எந்த ஓஎஸ் என்பதை கண்டுபிடித்திடலாம். குறிப்பிட்ட நபர்தான் என்பதை உறுதி செய்ய சந்தேகிக்கும் யூசரை சற்று உன்னிப்பாக கவனிப்பது அவசியம். எங்கெங்கு செல்கிறார், திடிய கதைக்கான திரியில் யார்யார் வீயூவ்டு லிஸ்டில் இருக்கிறார்கள். கடைசியாக அவர் வந்து சென்ற நேரம். எந்தெந்த ஐபியில் லாகின் ஆகிரார் என்பதையும் கண்கானிக்க வேண்டும். இதனால் நிர்வாக பணிகள் கூடும். ஆகவே யூசர் ட்ராக்கிங் டீம் அமைப்பது கூட சிறந்தது. ஹைடு ஐபி போன்ற சில மென்பொருட்க்கள் மூலம் ஐபியை மாற்றி காண்பிக்கவும் முடியும். ஜெஸ்ட் ஐடியாதான்... |
Quote:
Quote:
Quote:
எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். |
எப்படியும் புல்லூருவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
என்ன செய்வது இவர்களை எதற்கு இந்த அபலாசை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை என்று ஆகிவிடும் எனவே நகல் எடுத்து அடுத்த தளத்திற்கு கொடுக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... |
திருடராய் பார்த்து திருந்தா விட்டல் திருட்டை ஒழிக்க முடியாது. அப்படி கதை திருடி என்னதான் சாதிக்கப்போகிறார்களோ ??
|
All times are GMT +5.5. The time now is 07:47 PM. |
Powered by Kamalogam members