காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   விடை பெற்ற விமர்சகர் சோ.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=69379)

vjagan 07-12-16 10:48 AM

விடை பெற்ற விமர்சகர் சோ....
 
விடை பெற்ற விமர்சகர் சோ....

சிறந்த சிரிப்பு நடிகரும் , துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், சிறந்த தேசியவாதியுமான சோ நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்,அய்யா அம்மணி !

கேலிச் சித்திரங்களின் மூலம் அரசியலை விமர்சனம் செய்யும் உத்தியை ஆரம்பித்து வைத்தவர்;

மொரார்ஜி தேசாயும் ,இந்திரா காந்தியும் அவரை தமிழ் நாட்டின் முதல்வராக்க செய்த அனைத்து முயற்சிகள் தோல்வியை சந்தித்தன;

காரணம் அவர் மறுத்துவிட்டதுதான்.

அவரின் ஆன்ம சாந்தி அடையவும் அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கும் நம் பிரார்த்தனை செய்வோம் அய்யா அம்மணி !

tdrajesh 07-12-16 11:18 AM

‘சோ’ அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், படைப்பாளி, விமர்சகர்.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

HERMI 07-12-16 02:32 PM

அரசியல் நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து தெளிவாக விமர்சிக்கும் வித்தகர்.! பல திறமைகளுக்கு சொந்தக்காரர்.!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.!

bedroom_salak 07-12-16 02:42 PM

சோ,,, மற்றவர்களுக்காக தன் தனித்துவத்தை இழக்காமல், தன் பத்திரிக்கையை நடத்தி, அதற்கான வாசகர்களை தன்னகத்தே கொண்டவர்.. அரசியல் சிற்பி..
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்..

Nallavan1010 07-12-16 02:57 PM

ஒரு சிறந்த அறிவாற்றல் மிக்க பத்திரிக்கை ஆசிரியர் சோ. யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார். யாரானாலும் தவறு செய்தால் இடித்துரைப்பதில் வல்லவர். யாரையும் புண்படுத்தாத இவரின் கேலியும் நையாண்டியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

வியாபார நோக்கில் செய்யப்படும் சினிமா விமர்சனம் ராசிபலன் இரண்டும் இன்றி பத்திரிக்கை நடத்தி வெற்றிகண்டவர். 1975 ல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்பத்தப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு தடா மிசா போன்ற கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது அஞ்சா நெஞ்சுடன் அதை எதிர்த்தவர். அந்நேரம் துக்ளக் பத்திரிக்கை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரும்பி படிக்கப்பட்டது.

அதுவரை சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்ற முடிவை நிலைமைக்கேற்றவாறு மாற்றி எமெர்ஜென்சி காலத்தில் சரச்வதிகாரி என்ற பழைய திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுவது போல் மறைமுகமாக எதேச்சாதிகார போக்கை கண்டித்த அதி புத்திசாலி.

அதே போல் ஆட்சியில் இருப்பவர் யாரானாலும்

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்ற வள்ளுவரின் சொல்லிற்கேற்ப இடித்துரைக்க தயங்குவதில்லை. இவரது மறைவு பெரிய இழப்புதான். அவரது ஆன்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவதில் காமலோக நண்பர்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன்.

anabayan 07-12-16 03:42 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1408571)
கேலிச் சித்திரங்களின் மூலம் அரசியலை விமர்சனம் செய்யும் உத்தியை ஆரம்பித்து வைத்தவர்;

Quote:

Originally Posted by tdrajesh (Post 1408573)
‘சோ’ அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், படைப்பாளி, விமர்சகர்.

Quote:

Originally Posted by HERMI (Post 1408590)
அரசியல் நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து தெளிவாக விமர்சிக்கும் வித்தகர்.! பல திறமைகளுக்கு சொந்தக்காரர்.!

Quote:

Originally Posted by bedroom_salak (Post 1408592)
சோ,,, மற்றவர்களுக்காக தன் தனித்துவத்தை இழக்காமல், தன் பத்திரிக்கையை நடத்தி, அதற்கான வாசகர்களை தன்னகத்தே கொண்டவர்.. அரசியல் சிற்பி..

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1408594)
அதே போல் ஆட்சியில் இருப்பவர் யாரானாலும்

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்ற வள்ளுவரின் சொல்லிற்கேற்ப இடித்துரைக்க தயங்குவதில்லை.

இத்தனை திறமைகளை கொண்ட சோ என்று எல்லோராலும் அழைக்க பட்ட திரு ராமசாமி அவர்கள் இறைவனடியை அடைந்தது மிகவும் வருத்ததை அளிக்கிரது. அவரது ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகிரேன்

gemini 07-12-16 04:50 PM

உண்மையில் நல்ல ஒரு உழைப்பாளி.
நடிகர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, பலருக்கு ஆலோசனை வழங்குபவர்.
தொடக்க காலத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு ஆலோசனையாளராக இருந்தவர் என்றும் கேள்விப்பட்டேன்.
அவர் ஆத்மா சாந்தி ஆடையை இறைவனை பிராத்திப்போமாக.

sinna vaaththiyaar 07-12-16 04:58 PM

உற்ற தோழியின் மறைவுக்கு பின்னாடியே தோழரின் மரணமும் நெஞ்சை பிழிந்தது...

சோ அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்

654321 07-12-16 10:47 PM

சோ பயமற்ற* அரசியல் விமர்சகர், சானக்கியர், சிறந்த சிந்த்தனைவாதி..
ஈருலகிலும்.. ஜெயலலிதா அவர்களுக்கு ஆலோசனை கூற கடமை பட்டிருப்பார்.. போலும்.....
அன்னாரது.. ஆன்மா சாந்தியடையட்டும்..

anarth_maddy 08-12-16 12:25 AM

அடுத்தடுத்து இரங்கல் செய்திகள் வருவது மனதிற்கு நெருடலாக உள்ளது.

அன்னாரின் எழுத்துக்களால் என்றும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.

அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


All times are GMT +5.5. The time now is 01:47 PM.

Powered by Kamalogam members