காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய நேரடி தமிழ் தட்டச்சு சோதனை. (http://www.kamalogam.com/new/showthread.php?t=36222)

xxxGuy 10-06-07 03:21 PM

புதிய நேரடி தமிழ் தட்டச்சு சோதனை.
 
நண்பர்களே..!!

இங்கே என்னையும் சேர்த்து பலர் இகலப்பை கொண்டு தட்டச்சு செய்து பதிக்கிறார்கள். இகலப்பையை உபயோகிக்க முடியாதவர்கள், நமது தளத்தின் கீழ் பகுதியில் உள்ள "யூனிகோட் கன்வர்ட்டர்" கொண்டு தட்டச்சு செய்து பதிக்கிறார்கள்.

இந்த இரண்டையும் உபயோகிக்க முடியாமல் இன்னும் பலர் உலாவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்டு மாதம் முதல் மீண்டும் புதியவர்களுக்கு நமது தளத்தை திறக்க இருக்கிறோம், அப்போது இன்னும் பலர் தமிழில் எழுத தவிப்பார்கள். அவர்களுக்காக தமிழில் தட்டச்சு செய்வதை இன்னும் எளியதாக்குகிறோம். இனி எந்த வித மென்பொருளும் இன்றி நமது தளத்தில் நேரடியாகவே தமிழில் பதிக்கும் முறை இன்று முதல் சோதனையோட்டமாக செயல் படுத்தப் படுகிறது.

இதை நீங்கள் திரி துவக்கும் போதும், பதிலளிக்கும் போதும், "க்விக் ரிப்ளே" செய்யும் போதும் நீங்கள் தட்டச்சு செய்யும் இடத்தின் மேல் "Phonetic, Bamini, English" என மூன்று பட்டன்கள் தோன்றும். இதில் பாமினியை நானே வடிவமைத்துள்ளேன், ஆனால் இதற்கு முன் பாமினி எழுத்துருவை நான் உபயோகித்ததே கிடையாது. அதனால், பிழைகள் வர வாய்ப்புள்ளது. பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து பழக்கமுள்ளவர்கள், அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக் காட்டினால் திருத்த எளிதாக இருக்கும்.

இந்த வசதி தமிழ் மென்பொருள் இல்லாத புதிய இடங்களில் இருந்து அவசரமாக நமது தளம் வருபவர்கள், "சைபர் கபே" போன்ற பொது இடங்களில் இருந்து வருபவர்கள், குறிப்பாக விடுமுறையில் இருக்கும் போது நமது தளம் வருபவர்களுக்கும் மிக உதவியாக இருக்குமென்று நம்புகிறேன். மேலும் விண்டோஸ்98, விண்டோஸ்Me, Linux, Mac வைத்திருப்பவர்களாலும் இனி இதில் சிறந்த முறையில் தட்டச்சு செய்ய முடியும்.

கடைசியாக இதில் ஒரு குறைபாடும் உள்ளது, அதையும் கூறிவிடுகிறேன். இது Message என்னும் தகவல்கள் தட்டச்சு செய்யும் இடத்தில் மட்டுமே வேலை செய்யும், குறிப்பாக திரியின் தலைப்பு கொடுக்கும் Subject/Title பகுதியில் இந்த வசதி வேலை செய்யாது. அதனால், தலைப்பையும் Message பெட்டியுனுள்ளேயே முதலில் தட்டச்சு செய்து விட்டு, பிறகு நகலெடுத்து தலைப்பில் பதிக்கவும்.

இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் இந்த வசதி ஆகஸ்டு மாதம் முதல் நிரந்தரமாக்கப் படும், அல்லது பிரச்சனைகள் வந்தால், ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தொடராது.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.!!

(சோதனைக்காக இதையும் இகலப்பை மென்பொருள் இல்லாமலேயே புதிய வசதியில் தட்டச்சு செய்துள்ளேன். தற்போது InternetExplorer 6 & 7உலாவிகளில் மட்டுமே சோதித்துள்ளேன், மற்ற உலாவிகளில் நீங்கள் முயற்சித்துப் பார்த்து கூறவும். )

=================================================================
கூறப் பட்ட குறைகள் பின்வருமாறு, அவற்றை களை முயற்சிக்கிறோம்.

Bugs Reported So Far:

1) Hyphen (minus sign) not working.

Solved: Fixed Now.

2) Extra star (asterik) signs appears in blank spaces or wherever the character ends with 'a'.

3) While pressing Enter, Scrollbar Not moving down

4) Parts of the English Characters gets changed as Tamil while replying.

Temp. Solution: Before typing, change the selection to English Keyboard, and press Enter or space, then start typing by pressing Phonetic.

5) While Replying using QUOTE, not possible to type at the beginning.

Temp. Solution: Please reply at the bottom of Quote Message.

6) In Private Massaging, While reply using Quote, not possible to type at the beginning. Also while pressing Enter at the beginning, it brings the whole tool bar brings down.

Temp. Solution: Please reply at the bottom of Quote Message.

7) Shortcut Key for switching English to Tamil.

Answer: Currently due to technical issues, it is not possible, but trying to sort out the issue and introduce shortcut keys.

8] In Bamini Keyboard, 'H' stands for 'ர்', it is not printing properly.

Solved: Fixed Now.

9) In Bamini Keyboard, Tamil Vowels e, ee, ai ('ெ ே ை') problem with Consonents.

Answer: Type the Consonant first 'க'*, then type the Vowel 'ெ ே ை'.

.

aishu_sva 10-06-07 03:33 PM

இதை நாங்கள் ட்ரை பன்றோம்.

நெருப்பு 10-06-07 04:04 PM

நிச்சயமாக இந்த முடிவு வறவேற்க்கத்தக்க ஒன்று.
நான் இன்டு நாள் வரையில் யுனிகோட் வன்வெர்ட்டரைத்தான் உபயோகித்து வந்தேன். ஆனால் இப்போது இந்த பிரச்சினைக்கு இடமேயில்லை.
புதிய வசதியை வடிவமைத்த தலைவருக்கு நன்றி.
இதன் மூலம் எழுத்து துறையிலும் தன்னிறைவடைந்திருக்கிறோம் என நினைக்கிறேன்..
இனி மற்றவர்களை நம்பி நாமில்லை

jayvijay 10-06-07 04:40 PM

மிகவும் வரவேற்கத்தக்க மகிழ்ச்சிகரமான செய்தி.தமிழில் தட்டச்சு வசதியை மேலும் எளிதாகச்செய்யவும் புதிய உறுப்பினர்களை தமிழில் எழுத ஊக்குவிக்கவும் அறிமுகப்படுத்தப்படும் தலைவரின் இம்முயற்சி வெற்றியளிக்க வேன்டும் என வேன்டுகிறேன்.

மினி 10-06-07 04:41 PM

புதியவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்..

monophoenix 10-06-07 05:16 PM

அருைமயான முயற்சி. மிகவும் அற்புதமாக ேவைல ெசய்கிறது. ஆனால் பயர்பாக்ஸில் பாமினியில் ைடப் ெசய்யும் ேபாது சில துைணெயழுத்துக்கள் மாறி வருகின்றன.

xxxGuy 10-06-07 05:42 PM

Quote:

Originally Posted by monophoenix (Post 545328)
அருைமயான முயற்சி. மிகவும் அற்புதமாக ேவைல ெசய்கிறது. ஆனால் பயர்பாக்ஸில் பாமினியில் ைடப் ெசய்யும் ேபாது சில துைணெயழுத்துக்கள் மாறி வருகின்றன.

இதை Internet Explorer-ல் மட்டுமே சோதித்துள்ளேன். இன்னமும் ஃபயர் பாக்ஸில் சோதனை செய்யவில்லை. சோதித்து விட்டு கூறுகிறேன். நீங்களும் பிரச்சனை தரும் எழுத்துக்க*ள் எவை என்று குறிப்பிட்டால் நல்லது.

kprakash3516 10-06-07 05:46 PM

அருமை தலைவரே இது போன்ற வசதியைதான் நான் எதிர் பார்த்துகொண்டிருந்தேன். சைபர் கபேகலில் இ கலப்பை போன்ற மென் பொருள் நிறுவப்படுவதில்லை அந்த பிரச்சனையை இந்த புதிய முறை நீக்கிவிடும் என்று நம்புகிறேன்.

rusi18 10-06-07 05:57 PM

மிகவும் பயனுள்ள வசதி. ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் சொல்வது போல "அப்படியே தட்டச்சு செய்யலாம்".
தலைவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

kay 10-06-07 06:07 PM

அப்படியே தட்டச்சு வேலை செய்கிறது!Phonetic chosen; Bamini,English vacant


பாராட்டுக்கள்!நன்றி!:) :) :)


All times are GMT +5.5. The time now is 09:46 PM.

Powered by Kamalogam members