நமது காமலோகம் தனது 21ம் ஆண்டில் தொடர்கிறது
நமது காமலோகம் தனது 21ம் ஆண்டில் மிளிர்கிறது.
நண்பர்களே, நமது தளம் ஆரம்பித்து 20 வருடங்கள் கடந்து 21ம் ஆண்டில் சீராக இயங்கி கொண்டிருக்கிறது. நமது தளம் சிறப்பாக நடக்க நமது தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் தொலைநோக்கு பார்வையும், தளத்திற்கான விதிமுறைகளை சிறப்பாக வடிவமைத்ததும் முக்கிய காரணம். இந்த தளத்திற்கு 20 வருடத்திற்கு முன்னரே சிறப்பான அடித்தளமிட்டு இதனை வழிநடத்தி செல்லும் அவருக்கு நன்றி சொல்லி, அவர் அனுமதியுடன் இந்த 21ம் ஆண்டில் உறுப்பினர்களுக்கு சில சலுகைகளை அறிவிக்கிறோம். இந்த அறிவிப்பில் இருக்கும் சலுகைகள் அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும். (மார்ச் 4ந்தேதி முதல் ஏப்ரல் 3ந்தேதி வரை) 1) மூத்த உறுப்பினர்களுக்கு வாசல் அனுமதிகளுக்கான சலுகையாக 50% பதிவுகள் 2)எச்சரிக்கை புள்ளிகள் பெற்றவர்கள், தண்டனைக்காலம் முடிந்திருந்தால் அந்த தடயங்களை நீக்கி கொள்ளலாம். 3)கட்டண உறுப்பினர் அந்தஸ்து புதுப்பிக்கவோ/ பங்களிப்பு உறுப்பினரில் இருந்து மாறவோ விரும்புவோருக்கு 25% சலுகை அளிக்கப்படுகிறது. பின்னர் சேர்த்தது 4) புது உறுப்பினர்களுக்கான காலத்தடை தற்காலிகமாக விலக்கப்படுகிறது மேலே உள்ளதற்குமான விளக்கங்கள் வரிசையாக தரப்படுகிறது 1) மூத்த உறுப்பினர் என்றால் பத்து வருடத்திற்கு முந்தையவர், அதாவது அவர் சேர்ந்த காலம் 04-03-2012க்கு முந்தின தேதியாக இருக்க வேண்டும். அவர் ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் என்ற திரியில் சொன்னதில் பாதி பதிவுகள் அவர் விரும்பும் அடுத்த வாசலுக்கான தகுதியாக இருக்கும். தமிழ்வாசலுக்கு 10, காமக்கதை வாசலுக்கு 20, தீ.த.உறவு வாசலுக்கு 30, வென்கலவாசலுக்கு 125, வெள்ளி வாசலுக்கு 375, தங்கவாசலுக்கு 1000 பதிவுகள் போதும். இவர்கள் மட்டும் அனுமதிகளை நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடலிட்டு ஏப்ரல் 3க்குள் பெற்றுக்கொள்ளலாம். 2) எச்சரிக்கை புள்ளிகள் விவரம் அதனை பெற்றவர்களன்றி மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாது என்றாலும், அதனை பார்க்கையிலே அவர்களுக்கு எச்சரிக்கை உணர்வு தோன்றவேண்டும் என்பதற்காகவே விட்டு வைக்கப்பட்டது, அது போதும் என்று நினைப்பவர்கள், தண்டனைக்காலம் முடிந்து பங்களித்துகொண்டிருப்பவர்கள் தனிமடலில் நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்து எச்சரிக்கை புள்ளிகள் பற்றிய பதிவுகளை ஏப்ரல் 3க்குள் நீக்கி கொள்ளலாம். 3)கட்டண உறுப்பினர் ஒருவர் இந்த 30 நாட்களுக்குள் புதுப்பித்துக்கொண்டாலோ அல்லது பங்களிப்பு உறுப்பினர் ஒருவர் கட்டண உறுப்பினராக மாறிக்கொள்ள விரும்பினாலோ இந்த 30 நாட்களுக்கு சலுகை பெறுவர். இந்திய மதிப்பில் கட்டணம் செலுத்துபவர் கட்டணத்தில் 25 சதவீதம் குறைவாகவும், பேபால் மூலம் கட்டணம் செலுத்துபவர் கால அளவில் 25 சதவீத அளவு கூடுதலாகவும் சலுகையாக பெறுவர். மேலும் விவரத்திற்கு தனிமடலில் நிர்வாக உறுப்பினரை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த சலுகை தளத்திலே நடப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே எனவே தனிமடல் கொடுக்க முடிபவர் எவரோ அவருக்கே இந்த சலுகை. இமெயில் மூலமாக கேட்பவர்களுக்கு இந்த சலுகை இல்லை. 4)நம் தளத்திலே இந்த வருடம் சேர்ந்த புது உறுப்பினர்களுக்கு சலுகையாக ஒவ்வொரு வாசல் அனுமதிக்கும் இருந்த காலத்தடை தற்காலிகமாக இன்றிலிருந்து 30 நாட்களுக்கு(05-04-22 வரை) நீக்கப்படுகிறது, அந்தந்த வாசலுக்கான தகுதி இருந்தால் உரிய இடத்தில் திரியின் முதல் பதிப்பை படித்துப்பார்த்து விண்ணப்பித்து, பதிப்புகளின் எண்ணிக்கை தகுதி மட்டும் இருப்பின் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இதே கால கட்டத்தில் ஒரு வாசலுக்கு விண்ணப்பித்து இன்னொரு வாசலுக்கு விண்ணப்பிக்க 3 அல்லது 7 நாள் தடை அளவும் விலக்கி வைக்கப்படுகிறது, ஒரு வாசல் அடைந்தவுடன் தகுதி இருப்பின் உடனே அடுத்த வாசல் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேற்கொண்டு விளக்கம் விவரம் பெற விரும்புவர்கள், 1,2 மற்றும் 3 அறிவிப்பிற்கு மட்டும் தனிமடலில் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பின்னர் இந்த பதிப்பு இன்னும் திருத்தம் மேற்கொள்ளப்படலாம். |
படிக்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! மகத்தான சாதனை. பலர் வாழ்க்கையில் காமலோகம் பாஸிட்டிவாக இருந்து இருக்கிறது.
வாழ்த்துக்கள் பல! ஜெயகுமார். |
2008 ஆம் ஆண்டில் இருந்து எனது கணக்கில் நிலுவையில் இருந்த எச்சரிக்கை புள்ளிகளை நீக்கியதற்கு நிர்வாகத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மாறப்போம், மன்னிப்போம் என்ற தாரக மந்திரமே இன்றைய உலகின் அமைதிக்கு மிகவும் அவசியமான ஒன்று |
மிகவும் சந்தோஷமான விஷயம்
21ஆம் ஆண்டிற்கு வாழ்த்துகள் எனது எச்சரிக்கை புள்ளிகளையும் நீக்கியதற்கு நன்றிகள் பல. |
21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது லோகத்தில் நானும் ஒரு உரிபிரணாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ..
|
20 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு 21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க்கும் நமது தளம் இன்னும் கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்றால் அதற்கான காரணம் தளத்தின் கடுமையான விதிமுறைகளும் மற்றும் நிர்வாகிகளும்தான் காரணம்.
இத்தளம் ஒருவித ஒழுங்குமுறையை கற்பிக்கிறது. இல்லையென்றால் இதனுள் நீடித்திருப்பது மிகக் கடிணம். எதுவும் கட்டாயம் என்றால்தான் பின்பற்ற வேண்டும் என்ற மனநிலை நம்மிடையே (மக்கள் )இருப்பது வேதனையான விசயம் என்றாலும், இத்தளம் அந்த மனநிலையை சற்றே மாற்றுகிறது. 21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது தளத்திற்கும் மற்றும் தளத்தின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் |
மகிழ்வான செய்தி. கண்டிப்பாய் முயற்சித்து பார்த்து அடுத்த வாசல்கள் பெற முயற்கிக்கிறேன். நிர்வாகிகளுக்கு நன்றி.
|
வாழ்த்துகள்
மகிழ்ச்சி நன்றி 21ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க அடிகோலிய தலைமை நிர்வாகிக்கு பாராட்டுகள் |
30 க்கும் சற்று குறைவான பதிவுகள் இட்டிருந்த என்னை தலைவாசல் தாண்டி சற்றே உள்ளே வெராண்டாவுக்கு முன்கூட்டியே அனுமதித்த நிர்வாகிகளுக்கு எனது நன்றி நன்றி
|
எங்களுக்கும் எதாவது சலுகைகள் உண்டோ ஐயா.
|
All times are GMT +5.5. The time now is 10:23 PM. |
Powered by Kamalogam members