காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0040 - மே '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=50608)

smartman 11-06-09 12:59 AM

நி: 0040 - மே '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

மே '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான paavai1 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான "நானும் பேபியக்காவும்! - பாகம் 1" 2 3 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டு, இந்தக்கதையின் 3 மூல பாகங்களும் காமக்கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது, கதைக்கு தொடர் எழுத சொல்லி ஒரு சவால் விடப்பட்டது.

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 6 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அவர்களில் rina அவர்களால் தொடர இயலாமல் மற்ற 5 பேரும் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அந்தக் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாத போட்டியிலும் மொத்தம் 5 பேர் கலந்து கொண்டு முடித்து வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த போட்டியில் இன்னும் கூடுதலாக பங்கேற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கதைகளின் தொடர்ச்சி தந்த ஐவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் http://www.kamalogam.com/new/customa...tar17085_6.gif kadalkanni அவர்கள் 17 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் kadalkanni.
வாக்குகள் கிடைத்த விவரம்.
1) kadalkanni 17 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

2) BILLA - 16 வாக்குகள் (1 அத்தியாயம்)

3) oshoviji - 15 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

kadalkanni 1 வாக்கு மட்டும் அதிகம் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
இவருக்குப் பின் BILLA மற்றும் அவருக்குப் பின் oshoviji ஆகிய இருவரும் தலா ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். மூவரும் படைத்த கதைத்தொடரின் தரம் சிறப்பாக வந்த காரணத்தால் மூவரும் நெருக்கமான வித்தியாசத்தில் வந்திருக்கின்றனர்.

வெற்றி பெற்ற உறுப்பினர் kadalkanni-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இரண்டாம் இடம் பெற்ற BILLA அவர்கள் ஒரே வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கினார். அவர் எழுதிய தொடர் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட போதிலும் பில்லா போட்டியில் இருந்து விலகுவதாக கடைசி நாள் நிர்வாகத்திடம் தெரிவித்ததினால், இந்த முறை யாருக்கும் ஆறுதல் பரிசு கிடையாது.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். மூவருக்கும் 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சற்று குறைவான நண்பர்களே பங்கேற்றார்கள். என்றாலும், இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

நெருப்பு 11-06-09 11:09 AM

வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..

BILLA 11-06-09 11:18 AM

வெற்றி பெற்ற கடல்கன்னிக்கும் ஓசோவிஜிக்கும் பங்கேற்ற அபீப் மற்றும் ஜெய்க்கும் என் பாராட்டுக்கள்

பில்லா

பச்சி 11-06-09 11:34 AM

மே மாத 'சவால் ராணி' பட்டம் பெற்றுள்ள நண்பர் kadalkanni அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒவ்வொரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் பில்லா மற்றும் ஓஷோவிஜி ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

போட்டியில் சிறப்பான கதைகளை கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

தமிழா! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. 'முதிர்' என்பதை 'கடல்' என்று மாற்றிவிட்டேன்.

ஜெய் 11-06-09 11:39 AM

வாழ்த்துகள்
 
போட்டியில் வெற்றி பெற்ற கடல்கன்னி,பில்லா,ஒஷோவிஜி ஆகியோருக்கு எனது பாராட்டுகள். மேலும் கலந்து கொண்ட ஹபீப் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழா 11-06-09 11:39 AM

Quote:

Originally Posted by baseer (Post 862232)
மே மாத 'சவால் ராணி' பட்டம் பெற்றுள்ள நண்பர் முதிர்கன்னிக்கு பாராட்டுக்கள்.

பஷீர் " சவால் ராணி : முதிர்கன்னி இல்லே, கடல்கன்னி தவறுதலாக பதித்து இருப்பீர்கள் என்று நினக்கிறேன்.

கடல்கன்னியை நானும் வாழ்த்துகிறேன் .

king_007_1234567 11-06-09 11:55 AM

போட்டியில் சவால் ராணியாக வெற்றி பெற்ற கடல்கன்னிக்கு என் பாராட்டுக்கள் & வாழ்த்துகள் !!!!!!!


$$$ ராஜ் $$$

bedroom_salak 11-06-09 01:11 PM

போட்டியில் வெற்றி பெற்ற கடல்கன்னி, பில்லா(விலகினாலும்), ஓஷோவிஜி, மூவருக்கும் என் பாராட்டுக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

smdhabib 11-06-09 01:42 PM

சவால் ராணியாக தேர்வு பெற்ற kadalkanni அவர்களுக்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள். நண்பர்கள் பில்லா மற்றும், விஜி, ஜெய் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.மற்றும் பாராட்டுக்கள்.

எனது தொடர்ச்சியை படித்து, எனக்கு வாக்களித்த முகமும் பெயரும் தெரியாத அந்த5 உள்ளங்களுக்கும், என் மரியாதை கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து நிர்வாக சவாலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் ஸ்மார்ட்மேன் சார் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன்
ஹபிப்

kadalkanni 11-06-09 02:24 PM

காமலோகத்தில் இத்தனை வருடமாக இருந்தாலும், நிர்வாகப் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது கதையிலேயே சவால் ராணியாக தெர்ந்தெடுத்த நிர்வாகத்தினருக்கும், எனது மூன்று தொடர்ச்சிகளையும் பொருமையுடன் படித்து பின்னூட்டங்களை கொடுத்து மேலும் மேலும் உற்சாகமூட்டிய எனது நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்..

இரண்டு மூன்றாவது இடத்தில் வந்த எனது நண்பர்கள் பில்லா மற்றும் ஓஷோவிஜிக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்..


All times are GMT +5.5. The time now is 03:01 AM.

Powered by Kamalogam members