காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோகத்தில் "களையெடுப்பு" நல்லது (http://www.kamalogam.com/new/showthread.php?t=75742)

kathalan 29-10-21 10:27 PM

காமலோகத்தில் "களையெடுப்பு" நல்லது
 
குறள் 111:
“தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்”.

(ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும் - புலியூர்க் கேசிகன்)

நம்முடைய லோகத்தில் மாதாந்திர சிறந்த கதை போட்டி முடிவுகள் அறிவிப்பின் போது களையெடுப்பு என்கிற பெயரில் புதிய நடவடிக்கை அரங்கேறி வருகிறது. இது நம் லோக உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததே.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 20 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வெள்ளி வாசல், தங்க வாசல் உறுப்பினர்கள் கூட தலை வாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப் படுகின்றனர். இந்த நடவடிக்கை முறையானதா? முரணானதா? என கேட்டால், தினமும் லோகத்தில் பங்களிப்பு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் நல்லது என்றும், என்றாவது ஒருநாள் மட்டும் லோகத்தில் எட்டிப் பார்ப்போர் இது சரி இல்லை என்றும் கூறுவார்கள்.

அனுமதி குறைக்கப் பட்டதும் எப்படியாவது நிர்வாகத்திடம் பேசி அல்லது மன்னிப்பு கேட்டு மறுபடி முழு அனுமதியை பெற்று விட வேண்டும் என்றே நினைப்பார்கள்.

பிற காம தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முதன்மை தளமாக நம் தளம் பயணிக்க முக்கிய காரணமே இங்கே வகுக்கப் பட்டிருக்கும் விதிமுறைகள் தான். விதிமுறைகள் என்று வரும் போது அதில் பாரபட்சம் இருக்க கூடாது என்பது தானே சரியாக இருக்கும். அதைத்தானே நம் லோகம் செய்கிறது.

அப்படி இருக்கையில் முன்னாள் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், பல பங்களிப்புகளை கொடுத்தவர் என்ற அடிப்படையிலும், அவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி அமைப்பது என்பது நற்செயல் ஆகாதே. இருந்தாலும் முன்னாள் உறுப்பினருக்கு பதிவு எண்ணிக்கையில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளதே. அதன்படி சுலபமாக முன்னேறி விடலாமே.

“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன்”

இந்த பாடலை உணர்வு பூர்வமாய் நாம் ரசிக்கிறோம். பாடலின் வரிகளை வரவேற்கிறோம். நம் லோகத்திலும் அப்படி தானே. தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்கப்படும். தவறு செய்பவர்கள் அனைவரும் தானாய் திருந்த மாட்டார்கள். கடுமையான தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும். ஆனால், லோக தண்டனைகள் யாவும் தவறை திருத்திக் கொள்ள கொடுக்கப்படும் மென்மையான தண்டனைகள் தானே.

ஆகவே லோகத்தின் இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். லோக வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிப்பதாகவே நான் கருதுகிறேன். நான் தங்க வாசலை அடைந்து விட்டதால் சாதித்து விட்டேன் என்று எப்போதுமே நினைத்தது இல்லை. லோகம் துவங்கிய காலந்தொட்டே இன்னும் சோர்வடையாமல் உற்சாகமாய் பயணிக்கும் பல உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சாதனையாளர்கள் தான். அத்தகுதி கண்டிப்பாக எனக்கு இல்லை. நான் லோகத்தில் சின்ன ஒரு தூசி மட்டுமே. ஆகவே நான் அறிவுரை கூறவில்லை நண்பர்களே. என் கருத்தை மட்டுமே பதிவிடுகிறேன்.

அப்படி என்ன தவறு செய்து விட்டேன்? ஒரு காம தளத்தில் வராததற்கும், வாக்களிக்காததற்கும் இப்படி ஒரு நடவடிக்கையா? என பலரும் கேட்கலாம்.

ஆம்... படைப்பாளிகள் பலர் நேரங்களை ஒதுக்கி பலப்பல கோணங்களில் சிந்தனைகளை செதுக்கி கதைகளை எழுதி லோகத்தில் பதிவிடுகிறார்கள். பலரோ கதையை மேலோட்டமாக படித்து நகர்ந்து விடுகின்றனர். மேலும் சிலர் கதையை படித்தும் ஒரு பின்னூட்டம் கூட கொடுப்பது இல்லை. சரி. இது அவரவர் சொந்த விருப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இதை பற்றி பெரிதாக பேச முடியாது. ஆனால், போட்டியில் பங்குபெறும் கதைகளுக்கு வாக்களிக்க தவறுவது என்பது குற்றம் தான். பலர் மெனக்கெட்டு எழுதிய கதைகள், பலரின் உன்னத படைப்புகள் என கடல் போல கொட்டிக் கிடக்கும் நம் லோகத்தில் இலவச அனுமதியை பெற்றுக் கொண்டு வாக்களிக்க கூட தயங்குவதை என்னவென்று சொல்வது?

மனசாட்சியை தொட்டு கேளுங்கள். இது நியாயமா? இது தவறு இல்லையா? இது குற்றம் இல்லையா? படைப்பாளிகள் இந்த படைப்புகளை படைக்க எவ்வளவு நேரத்தை செலவிட்டிருப்பார்கள்? பத்து நிமிடத்தில் நாம் ஒரு கதையை படித்து விடலாம். ஆனால் அந்த ஒரு கதையை எழுதி முடிக்க பத்து நாட்கள் கூட மெனக்கட்டு இருக்கலாம் என்பது ஏனோ பலருக்கு தெரியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாகத் தான் உள்ளது.

நானும் இதே தவறை தான் செய்தேன். களையெடுப்பு நடவடிக்கையால் நானும் தகுதி இறக்கம் செய்யப்பட்டேன். தங்க வாசலில் இருந்து தலை வாசலுக்கு இறக்கி விடப்பட்டேன். நிர்வாகியிடம் என் தரப்பு நியாயங்களை சொல்லி முழு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

அனுமதி மறுக்கப்பட்ட போது தான், நான் செய்த தவறுகளை உணர்ந்தேன். மீண்டும் தங்க வாசலை விதிமுறைகள் படியே அடைய நினைத்தேன். பங்களிப்பின் எண்ணிக்கையை வேகமாக்கினேன். ஒவ்வொரு வாசலாக மீண்டும் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு மாதத்திற்குள் மீண்டும் தங்க வாசலை அடைந்தேன்.

அனுமதிக்கான விதிமுறைகள் இங்கே

“உனக்கென்னப்பா? எக்கச்சக்கமா நேரம் கிடைச்சிருக்கும் எழுதி தள்ளி இருக்கிறே”
நான் செய்யும் தொழிலில் எனக்கு நேரமே கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை. இருந்தாலும் கிடைக்கும் சின்ன சின்ன ஓய்வு நேரத்தில் தான் லோகத்தில் வந்து செல்கிறேன். மேலும் பத்து நிமிட இருபது நிமிட கேப்புகளில் தான் கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். நேரம் கிடைக்கவில்லை. ஐ ஆம் ஆல்வேஸ் பிஸி என்று சொல்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான்.

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு”

சிலர் போட்டிகளில் பங்கெடுத்து அதிலே வெற்றி கிடைக்காமல் போனால் துவண்டு போவதுண்டு. அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நாம் போட்டியில் பங்களிப்பு கொடுப்பதே வெற்றி தான். இங்கே பங்களிப்பு தான் முதல் வெற்றி என்பது பலருக்கு தெரியவில்லை. மேலும் சிலர், வெற்றி கிடைக்கும் போது அவர்களுக்குள் தலைக் கனமும் உருவெடுத்து விடுகிறது. நான் செய்வது மட்டுமே சரி என்றும் என்னை மிஞ்ச ஆள் இல்லை என்றும் நினைப்பதுண்டு. அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை.

“வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை”

ஆனால், சிறந்த பங்களிப்பை நாம் எப்போதுமே நினைத்தால் கொடுக்க முடியும். இதை நிரந்தரமாக செய்ய முடியும். எவ்வளவோ கஷ்டப்பட்டு நம் தலைவர் xxxguy நமக்காக கடலை போன்ற தளத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். தங்க வாசலை அடைந்து விட்டேன். இனி நாம தான் ராஜா என்றெல்லாம் நினைப்பது சரி தானா?

“தன்னை தானே புகழ்வது மன நோய்”

களையெடுப்பு நடவடிக்கையால் நான் தகுதி இறக்கம் செய்யப்பட்டேன். முதல் படியில் இருந்து முன்னேறுவது எனக்கு புது அனுபவமாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். இது கூட ஒரு தனி கிக் தான். என்னை தகுதி இறக்கம் செய்து மீண்டும் கீழிருந்து பயணிக்கும் வாய்ப்பை கொடுத்த லோக நிர்வாகத்திற்கு நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கேன். இதை நான் சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பயணித்தேன். கொஞ்சம் வேகமாக.... இந்த வேகம் என்றுமே நிலைத்திருக்குமா என்பதில் உறுதி இல்லை. ஆனாலும் என் பங்களிப்பை தொடர்ந்து நம் லோகத்தில் கொடுப்பேன் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

தகுதி இறக்கம் அடைந்தோர் ஒவ்வொரு படியையும் மீண்டும் ரசித்து முன்னேறுங்கள். இது அரியதோர் வாய்ப்பு. தகுதியை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாம் நினைத்தால் மீண்டும் நம் தகுதியை நிரூபிக்க முடியாதா? கண்டிப்பாக முடியும்.

“முயன்றால் முடியாதது இல்லை”

நிர்வாக சவால், வாசகர் சவால், மாதாந்தர போட்டிகளில் கண்டிப்பாக வாக்களியுங்கள் நண்பர்களே...
படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கும் பெரிய பரிசு என்பது வாக்களிப்பது தான். வாக்களிப்பு மூலம் படைப்பாளிகளுக்கு நாம் ஊக்கம் கொடுப்போம். வாக்களிப்பு அதிகாகும் போது நம் லோகத்தில் கதை பதிப்போரின் எண்ணிக்கையும், கதைகளும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

என் மனதில் தோன்றிய கருத்துக்களை இங்கே பதிவிட்டுள்ளேன். தவறு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

sivvaa 30-10-21 03:03 PM

தங்க வாசலில் இருந்து ஏதும் பதியதால் தரமிறக்க பட்டேன். அதேயே சவாலாக எடுத்து கொண்டு, சுமார் இரு வாரங்களில் மீண்டும் வெண்கல வாசலை அடைந்திருக்கிறேன்.
'
தங்க வாசலுக்கு பின் ஏதும் கதை பதியாமல் இருந்த என்னை இந்த தரமிறங்கியது உசுப்பி, 4 பாகங்களுடன் ஒரு கதை பதிக்க செய்தது. இனி தொடர்ந்து பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பின்னூட்டங்கள் மேலும் உறுதியாக்கியது.

இதே வேகம் தொடர உறுதி கொள்கிறேன்!

subbu2000 30-10-21 05:51 PM

நீண்ட நாள் தளத்துக்கு வராமல் இருந்த படியால் ஜீனியர் மெம்பராக்கப் பட்டேன்...இப்போது கொஞ்ச கொஞ்சமாய் கதைகள் எழுதி பின்னூட்ட மிட்டு மேலேறி வருகிறேன்....இதுவும் நல்லாத்தான் இருக்கு

kathalan 31-10-21 12:30 PM

Quote:

Originally Posted by sivvaa (Post 1565604)
சவாலாக எடுத்து கொண்டு, சுமார் இரு வாரங்களில் மீண்டும் வெண்கல வாசலை அடைந்திருக்கிறேன்.

Quote:

Originally Posted by sivvaa (Post 1565604)
இதே வேகம் தொடர உறுதி கொள்கிறேன்!

சூப்பர் நண்பா. இதே நம்பிக்கையோடும்,, வேகத்தோடும் பட்டையை கிளப்புங்கள் நண்பா.
Quote:

Originally Posted by subbu2000 (Post 1565630)
இப்போது கொஞ்ச கொஞ்சமாய் கதைகள் எழுதி பின்னூட்ட மிட்டு மேலேறி வருகிறேன்....இதுவும் நல்லாத்தான் இருக்கு

ஆம் நண்பரே. உண்மை தான். ஒவ்வொரு படியையும் மீண்டும் ஒருமுறை ரசித்துக் கொண்டே படியேறுவது தனி சுகம் தான்.
சிறந்த படைப்பாளரான தங்களுக்கு மீண்டும் தங்க வாசலை அடைவது எளிதான விஷயம் தான். தங்களின் இரண்டாம் இன்னிங்க்ஸ்-ல் முடிக்கப்படாமல் இருந்த பல கதைகளை முடித்து அசத்திக் கொண்டிருக்கிறீர். தொடர்ந்து பல படைப்புகளை கொடுத்து அசத்துங்கள் நண்பரே.

asho 02-11-21 06:01 PM

நிர்வாக நடவடிக்கை பற்றிய இந்த திரிக்கு பின்னூட்டம் எழுத வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

குறை என்றால் உடனே பதில் எழுதியிருந்திருப்போம், நிறை என்பதால் மற்ற உறுப்பினர் பதிப்பு கண்டு பதிக்கலாம் என்று இருந்தோம்.

நிர்வாக குழு சார்பாக எனது பதில்.

சென்ற வருடத்தில் இதே நேரத்தில் தளத்திலே அப்போதைக்கு ஆன் லைனில் இருப்பவர் எண்ணிக்கை சராசரியாக 4 (கொரோனா இரண்டாவது அலை ஆரம்பிக்கும் முந்தைய சூழ்நிலை). சராசரியாக பதிக்கப்பட்ட திரிகள் 2.5(இரண்டோ அல்லது மூன்றோ). பதிக்கப்படும் பதிப்புகள் எண்ணிக்கை 7 என இருந்தது. இதிலிருந்து தளத்தை உற்சாகப்படுத்த வழிகள் ஆராயப்பட்டது. நிறைய உறுப்பினர்கள் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளினால் சரியாக பங்களிக்கவில்லை, இருப்பவர்களும் மனச்சோர்வில் இருந்தனர். அடுதடுத்த மாதங்களில் இன்னும் சோர்வு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் உறுப்பினர்களிடையே ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்த மாதக்கதைகளுக்கு வாக்களிக்காதவர்களை தமிழ்வாசலுக்கு அனுப்ப நினைத்தோம். இந்த மாதிரி செய்ய ஆறு ஏழு வருடங்களாகவே வாக்கெடுப்பு திரியில் வாக்களிக்காதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை செய்து வந்தோம். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படுத்தினோம்.

முதலில் 10 பேருக்கு மேல் தமிழ்வாசலுக்கு இறக்கி விடப்பட்டனர். அடுதடுத்த மாதத்தில் இன்னும் பலர் இறக்கி விடப்பட்டனர். ஒரு சிலர் தனி திரி ஆரம்பித்து தாங்கள் ஏன் தகுதி இறக்கம் செய்யப்பட்டோம் என்று ஆதங்கப்பட்டனர், ஒருவர் விளக்கம் பெற்றவுட்ன திரும்ப பதிவெல்லாம் செய்ய மாட்டேன் என்னை நீக்கி விடுங்கள் என்றும் பதிந்திருந்தார்.

அதற்குப்பின் தமிழ்வாசலுக்கு பதில் இன்னாக்டீவ் மெம்பர் என மாற்றிய பின்னர் தளத்து இமெயிலில் திரும்ப பங்களிப்பதாக உறுதி சொன்ன பின்னரே அவர்கள் பதிப்புகள் இபணம் நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வளவும் எதற்கு என்றால் தளத்தை சிறப்பாக நடத்தவே, சில பழைய உறுப்பினர்கள் அவர்கள் தனிப்பட்ட வேலைப்பளு, சூழல்கள் காரணமாக பதிவுகள் ஏதும் தருவதில்லை. 3 மாதத்திற்கு ஒரு பதிவு மட்டும் பதிந்து செல்கின்றனர். அவர்கள் முந்தைய உழைப்பை கணக்கில் கொண்டு நாமும் அவர்களை பதிவுகள் பதிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை.

புதியவர்களில் சிலர் இரட்டை கணக்கு வைத்துகொண்டு ஏதாவது நேர்ந்தால் திரும்ப தளத்தில் வலம்வர இன்னொரு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் லிஸ்டும் கைவசம் இருக்கிறது.

இன்னும் சில உறுப்பினர்கள் தத்தம் நண்பர்களிடம் பாஸ்வேர்ட் கொடுத்து தளத்தில் அவர்களை ஏதும் பதிந்து விடாதே கதை படித்து இன்புறு என்று தருகிறார்கள் என்றும் தெரிகிறது.

இப்போது இம்மாதிரி நடவடிக்கையால் அவர்கள் கணக்கு முடக்கப்பட்டு திரும்ப அவர்கள் பங்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்போது தளத்திலே தினமும் 15 பேராவது ஆக்டீவாக உள்ளனர் தினமும் 150 பேருக்கு மேல் தளம் வருகிறார்கள், சராசரியாக தினமும் 25 பதிப்புகள் 4 திரிகள் உருவாகின்றது. மகிழ்ச்சியாக உள்ளது. இதில் எந்த சமரசமும் யாருக்கும் செய்ததில்லை என்பதால் தான்.

திரி ஆரம்பித்த நண்பருக்கு 1000 இபணம் பரிசளிக்கிறேன். திரியிலே கருத்து பதிந்த நண்பர்களுக்கு நன்றி.

ஆட்சேபனையான கருத்து இருந்தாலும் பதியுங்கள், நண்பர்களே. அதனால் ஒரு கருத்து ஒருமித்தல் கிடைக்க கூடும்.

vjagan 02-11-21 07:12 PM

அயராத உழைப்பு நல்கி இந்தபப் பொல்லாத லோகத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு உயர்த்த பாடுபடும் அசோ அவர்கள் குலம் வாழ்க கொற்றம் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு!

kathalan 02-11-21 09:36 PM

Quote:

Originally Posted by asho (Post 1566081)
சென்ற வருடத்தில் இதே நேரத்தில் தளத்திலே அப்போதைக்கு ஆன் லைனில் இருப்பவர் எண்ணிக்கை சராசரியாக 4

Quote:

Originally Posted by asho (Post 1566081)
சராசரியாக பதிக்கப்பட்ட திரிகள் 2.5

Quote:

Originally Posted by asho (Post 1566081)
பதிக்கப்படும் பதிப்புகள் எண்ணிக்கை 7 என இருந்தது

Quote:

Originally Posted by asho (Post 1566081)
இப்போது தளத்திலே தினமும் 15 பேராவது ஆக்டீவாக உள்ளனர் தினமும் 150 பேருக்கு மேல் தளம் வருகிறார்கள், சராசரியாக தினமும் 25 பதிப்புகள் 4 திரிகள் உருவாகின்றது. மகிழ்ச்சியாக உள்ளது. இதில் எந்த சமரசமும் யாருக்கும் செய்ததில்லை என்பதால் தான்.

சரியான நேரத்தில் தேவையான, முறையான நடவடிக்கை. அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

லோக விதிமுறைகளை மதிப்பதோடு, நேரம் கிடைக்கும் போது தங்களால் இயன்ற பங்களிப்புகள் பின்னூட்டங்கள் கொடுத்தும், மாதாந்திர போட்டியில் அனைவரும் வாக்களித்தும் வந்தால் 'களையெடுப்பு' கண்டு யாரும் அச்சமுற தேவையே இல்லை.

தகுதி இறக்கம் அடைந்து விட்டவர்கள் மீண்டும் முயற்சி செய்தால் அடுத்தடுத்த வாசலை அடைவது ஒன்றும் கடுமையான காரியம் இல்லை.

குறள்:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)

முயற்சி என்பது மகிழ்வைத் தரும், முயற்சியின்மை என்பது துன்பத்தைத் தரும். முயல், ஆமை கதை நாம் அறிந்த கதை. முயல், ஆமையிடம் ஏன் தோற்றது என்றால், முயலாமையால் தோற்றது என்பது விடையாகும். முயலாமை என்பது தோல்வியையே தரும்.


கதாசிரியர்களை ஊக்க படுத்துவோம். ஒவ்வொரு போட்டிகளிலும் மறக்காமல் வாக்களிக்க முயற்சிப்போம். அனைவரும் ஒன்று பட்டு பங்களிப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த வாசலுக்கு முன்னேறுவதோடு, களையெடுப்பு-க்கு இனி வேலை இல்லை என்ற நிலையையும் உருவாக்கிட முடியும்.

நம் ஒவ்வொருவரின் பங்களிப்பே லோகத்தின் வளர்ச்சி ஆகும். இதை மட்டும் நினைவில் கொள்வோம்.

பாராட்டியதோடு 'களையெடுப்பு' எந்த காரணத்துக்காக செயல் படுத்தப்பட்டது என்பதை அனைவரும் தெளிவுற விளக்கிய மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கு என் நன்றிகள்!

KADAMBANC 02-11-21 10:46 PM

இந்த திரி புதியவர்களுக்கு தெளிவான விளக்கங்களையும் அன்பான எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறது. மேற்பார்வையாளர் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் பல!!

niceguyinindia 03-11-21 12:33 AM

உண்மை தான் நண்பரே

நான் கூட சில வருடங்களுக்கு முன் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தளத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது அந்த நேரங்களில் பின்னூட்டங்களையும் வாக்களிப்பையும் ரெகுலராக செய்து ஆக்டிவாக இருந்தேன்

ஆனால் இந்த மாதிரியான வாய்ப்பும் நண்பர்களுக்கு கிடைத்து இருக்குமா என்று தெரியவில்லை

asho 03-11-21 07:49 AM

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1566142)
ஆனால் இந்த மாதிரியான வாய்ப்பும் நண்பர்களுக்கு கிடைத்து இருக்குமா என்று தெரியவில்லை

வாக்களிப்பு கால கட்டத்தில் தளத்திற்கு வருகை தராதவர் மீது இந்த நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு விதிவிலக்கு.

அவர்கள் தொடர்ந்து 90 நாள் ஒரு பதிவும் செய்யாமல் போனால் என்ன விளைவு பெறுவாரோ அந்த பாதையில் சென்று விடுவார். இதுவும் கொரோனா இரண்டால் அலை தளர்விலிருந்தே, அதற்கு முன் இது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அதே போல மாத சிறந்த கதைக்கு வாக்களிக்காத உறுப்பினர் மட்டுமே இதில் சேர்க்கபடுவர். நிர்வாக சவாலில் வாக்களிக்காதவர் இதில் சேர்க்கப்படவில்லை. ஒரு நேரத்தில் இரண்டு சோதனைகள் வேண்டாம் என்பதனாலேயே.

இதன் மூலம் மாத சிறந்த கதை போட்டிக்கு வாக்களிப்பவர் எண்ணிக்கை 40லிருந்து 75 வரை சென்று விட்டது.

இதில் இருந்து மாத சிறந்த கதை போட்டிக்கு கதை எழுதியவர் விதிவிலக்கு பெறுகின்றனர்.

தளத்திற்கு வந்தால் கதை எழுது இல்லை எழுதியவர் கதைக்கு மாதம் ஒரு கிளிக் அழுத்து என்பதே ஸ்லோகன். அதற்கும் வலிக்கிறது என்றால் தலைவாசலில் இருந்து கதைகளுக்கு திரும்ப பின்னூட்டம் போடுங்கள் என்பதே.

இம்மாதிரி முந்தைய அனுமதி குறைக்கப்பட்டு திரும்ப அனுமதி பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை என்னவென்றால் அவர்கள் அதற்கு முன் பெற்ற அனுமதி வரை உள்ள அனுமதிக்கு பாதி பதிவுகள் எண்ணிக்கையே போதும். ஆனால் அது கதைகளுக்கு சிறந்த பதிவாக இருக்க வேண்டும். ஒரு வரி அனைத்து கதைக்கும் பொருந்தும் பதிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

அனுமதி நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் தனிமடலில் கேட்டாலே போதும், பொதுவில் பதிக்க வேண்டாம்.

அடுத்த மாதத்தில் இருந்து வாசல் அனுமதிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக இருப்பதால் இம்மாதிரி உறுப்பினர்கள் விரைவில் அனுமதி பெற பாருங்கள்.


All times are GMT +5.5. The time now is 08:49 PM.

Powered by Kamalogam members