காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கேன்சர் - குழப்பமான மனநிலை (http://www.kamalogam.com/new/showthread.php?t=71351)

mouni 10-11-18 08:10 AM

கேன்சர் - குழப்பமான மனநிலை
 
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.

கடந்த சில காலமாகவே நான் உடல் நிலை குறைவில் இருந்தேன். கையை உயர்த்த முடியவில்லை....டைப் அடிக்க முடியவில்லை...இத்தியாதி..இத்தியாதி.

இவைகள் எல்லாவற்றுக்கும் காரணம் சர்க்கரை என்றார்கள். அதை நம்பி எல்லாம் ட்ரீட்மெண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.

2. என் இரு கதைகள் முடிக்கப்படாமல் உள்ளது. யாராவது அதை முடித்து விடுங்கள். என் ஈ-கேஷ் பகிர்ந்து அளிக்கப்படட்டும். அவர்களுக்கு !

3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.

4. கடைசியாக, நான் எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருப்பவள்....ஏதேனும் நான் தவறு செய்து இருந்தால், பொறுத்துக்கொள்ளவும்.மன்னிக்கவும். மன்னிப்பு மிக சிறந்த மருந்து,

மற்றபடி என்னை மனம் திறந்து வாழ்த்தவும் - காரணம் கேன்சர் நோயோடு என் யுத்தம் , எனக்கு சாதகமாக இருக்க வாழ்த்தவும். நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

நன்றி
மௌனி

kauveri 10-11-18 09:45 AM

நண்பரே நெருங்கிய உறவுகள் பலர் புற்றுநோயால் போராடி வெற்றிப் பெற்றதையும் பெறாமல் மாண்டுப்போனதையும் நெருக்கமாக பார்த்தவன் என்பதால் என்னுடைய சிறு அபிப்பராயம்.
மனம் தளராதீர்கள். போராடுங்கள். யுத்தம் செய்யுங்கள்.. துணைக்கு யாரையும் நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்களே நம்பிக்கைகள். இது துச்சமாக கடந்துப் போகும் தடை என்று நினையுங்கள். இரண்டாவதாக, வெறுத்துப் போய் உங்களின் அன்றாட வாழ்கை முறையை மாற்றாதீர்கள். உதறிவிடாதீர்கள். உங்களின் வாழ்கையின் சில பகுதிகளை இந்த தளத்திற்காக செலவு செய்துள்ளீர்கள்.உங்கள் பங்களிப்புகளை படிக்கவே பல நாட்கள் தேவைப்படுகிறது. அது உங்களுக்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை தந்துள்ளது. ஆகையால் இத்தருணத்தில் காமலோகத்தை விட்டுப் போகாதீர்கள். கடைசி தெம்பு இருக்கும் வரை பங்களிப்பை அளியுங்கள். மற்ற அன்றாட வாழ்கை செயல்களை முடிந்தவரை தொடருங்கள். புற்று நோய உங்கள் வாழ்கைமுறையை மாற்ற அனுமதிக்காதீர்கள். மேலும், நல்ல மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெறுங்கள். சிகிச்சை பலன் தருமா, செலவுகள் எவ்வளவு, சிகிச்சையின் பின்விளைவுகள். சிகிச்சையளிக்கவில்லையென்றால் என்னவாகும் அளித்தால் என்னவாகும்.... என பலவித கேள்விகளுக்கு விடைத் தெரிந்து சிகிச்சையை தொடருங்கள்.
இந்த புற்று நோயை வென்று, மீண்டு வருவீர்கள் என வாழ்த்துகிறேன். மனம் தளராதீர்கள். நன்றி நண்பரே.

ராசு 10-11-18 10:12 AM

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.

காமலோகத்தில் சிறப்பான கதாசிரியர்களில் ஒருவரான "மௌனி" அவர்களின் மன குழப்பம் புரிகிறது !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

"கீமோ தெரப்பி" சிகிச்சையின் பக்க விளைவுகள் கொஞ்சம் கொடுமையானதுதான், ஆனால் அது இல்லாவிட்டால் உடல்நிலை இன்னும் மோசமாகி விடுமே ! ஆகவே சிறிது நாள் பொறுமையாக மருத்துவர்கள் சொல்லும் படி ஓய்வு எடுத்து உடம்பை தேற்றிக் கொள்ள வேண்டும். மனதை தளர விடக் கூடாது ! அதன் பிறகு உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடும் !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.

இந்த பிரிவு தற்காலிகமானதுதான் ! உடல் நிலை சீக்கிரமே சகஜமாகி மீண்டும் லோகத்துக்கு வருவீர்கள்
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.

தங்கள் உடல் நிலை பூரண குணமடைந்து மீண்டும் லோகத்துக்கு வந்து தாராளமாக கதை எழுதலாம் !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
4. கடைசியாக, நான் எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருப்பவள்....ஏதேனும் நான் தவறு செய்து இருந்தால், பொறுத்துக்கொள்ளவும்.மன்னிக்கவும். மன்னிப்பு மிக சிறந்த மருந்து,

ஒரு சிலர். சில சமயங்களில் தங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். அதனால் என்ன ? எனக்கு தெரிய, தாங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்த வித தவறும் செய்தது இல்லை, யாருடைய மனதையும் புண் படுத்தவில்லை !
Quote:

Originally Posted by mouni (Post 1460029)
மற்றபடி என்னை மனம் திறந்து வாழ்த்தவும் - காரணம் கேன்சர் நோயோடு என் யுத்தம் , எனக்கு சாதகமாக இருக்க வாழ்த்தவும். நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

இந்த கேன்சர் என்ற புற்று நோய் கொடுமையானது தான் ! ஆனால் அதை சீக்கிரமே கண்டு பிடித்து தாங்கள் தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உடல் பூரணமாக குணமாகிவிடும். எனது நண்பர் ஒருவருக்கு இதே நோய் வந்து, இதே மாதிரி "கீமோ" தெரப்பி, சிகிச்சை எடுத்து பிறகு பூரண குணமடைந்து, இப்போது சகஜ நிலைக்கு வந்திருக்கிறார். இனி அவரது வாழ்நாள் பூராவுக்கும் கேன்சர் வரவே வராது என்று மருத்துவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள் !

ஆகவே தாங்கள் மன உறுதியுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதுமானது ! தாங்கள் பூரணமாக குணமாகி விடுவீர்கள் ! மீண்டும் சகஜ நிலையடைந்து லோகத்துக்கு வருவீர்கள் ! இந்த சிகிச்சையின் போது கடவுள் உங்கள் கூட இருக்க வேண்டிக் கொள்கிறேன் ! நான் மட்டுமல்லாது நமது லோக அங்கத்தினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு !

tamizhan_chennai 10-11-18 11:23 AM

அன்புள்ள மவுனி.... மனம் தளாராது இருங்கள்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும்.... ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதே வேளையில் சில நாட்டு மருத்துவத்தையும் நாடுங்கள்.. அதன் பலன்கள் என்னவென்று சரியாய் தெரியாவிட்டாலும்... பக்க விளைவுகள் இல்லா நிலையில் அதையும் முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை.... ஆனால் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நிறுத்த வேண்டாம்.. மனம் திடமாய் இருந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி குறையாது இருக்கும்... சத்தான உணவை உண்பது உடல் பலவீனமாவதை தடுக்கும்.... கேன்ஸர் எதிர்ப்பு பொருட்கள் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுங்கள்.... ரிலாக்ஸாக இருங்கள்.... இயல்பாய் வாழுங்கள்.... இப்போது இருக்கிற நவீன மருத்துவத்தில் எல்லாம் சாத்தியமே... என்னுடைய தோழியின் மாமானாருக்கு உடலில் 5 - 6 இடங்க'ளில் இருந்தது.. முக்கியமாய் அதில் ஒன்று மூளை..நவீன சிகிச்சையால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முற்றிலும் குணமுடைந்து விட்டார்...கண்டிப்பாய் நல்லதே நடக்கும்... கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்...

kamakedi 10-11-18 12:46 PM

வணக்கம் மௌனி, மனம் தளரவேண்டாம், உங்கள் மனோபலம் தான் உங்களுக்கு நீங்கள் தரும் சிறந்த மருந்து. கேன்சரை வென்ற பலர் இன்று நம்முடன் நலமாக வாழ்கிறார்கள். நான் ஏற்கனவே உங்களுக்கு பரிந்துரைத்த "பேலியோ டயட்" ஆல் கேன்சர் செல்லக்கள் வளராமல் போகும் என்று நான் படித்திருக்கிறேன். உங்களின் மருத்துவ சிகிசைகளை தொடரவும். - விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் மௌனி.

chennaidreams 10-11-18 03:20 PM

வித்தியாசமன கதை கருவோடு கலக்கும் உங்களுக்கு இந்த நோய் வந்ததை கேள்விபடும் போது மனம் நெருடுகிறது. நீங்கள் விரைவில் நலம் பெற வாழ்துக்கள்

SITRINBBAN 10-11-18 03:39 PM

கவலை பட வேண்டாம் நண்பரே ,இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கேன்சர் நோயெல்லாம் ஒரு விஷையமே கிடையாது.எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்கள் முற்றிலும் குணமடைந்து பழைய படி காமலோகத்தில் வலம் வருவீர்கள்.தைரியமாக இருங்கள்.

JM 11-11-18 04:34 PM

இரண்டு வரியில் ஆறுதல் சொல்லவோ ஆலோசனை சொல்லவோ இயலாது.. இது உண்மையாய் இருக்கக் கூடாது என மனது வேண்டுகிறது.... மனதை தைரியமாய் வைத்து எதிர்த்த போராடுங்கள்... எனக்கு தெரிந்து 90 சதவீதம் பேர் இதை வென்றுள்ளனர்....!

niceguyinindia 11-11-18 04:50 PM

என்ன நண்பரே திடீரென இப்படி சொல்லி விட்டீர்கள் ஆறுதல் சொல்லும் மனநிலையில் நான் இல்லை ஆனால் ஒன்று நிச்சயம் நீங்கள் மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன்

mouni 12-11-18 07:16 AM

நண்பர்களுக்கு நன்றி! உங்கள் ஊக்கம் நிச்சயம் மருந்து! குறிப்பாக அண்ணன் ராசுவுக்கு!

கடவுள் மேல் பாரத்தை போட்டு என் வேலைகளை தொடர்கிறேன்.

நன்றி
மௌனி

நெருப்பு 12-11-18 08:40 AM

மருத்துவ உலகு எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்தது மவுனி.
பயமில்லாமல் போராடுங்கள். அதிசயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்..

manesh74 12-11-18 12:33 PM

உங்களின் படைப்புகள் காலத்தாலும் அழியாதது. அது வரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும். மனித உடல் நிலையற்றது. ஆனால் உங்கள் படைப்புகள் நிலையாக இருக்கும். உங்கள் உடல் உபாதைகள் நீங்கும். மீண்டும் வருவீர்கள்.

kprakash3516 12-11-18 01:47 PM

மௌனிக்கு,
எனது தாயார் புற்றுநோய் இரண்டாம் நிலையில் இருந்து மீண்டு வந்தவர்(வயது 74) ஆகவே பயம் வேண்டாம். இந்த நோய்க்கான மிகச்சிறந்த மருந்து தைரியம்தான். கடவுளின் அருளும் எங்கள் பிராத்தனைகளும் உங்களுடன்.

xxxGuy 12-11-18 01:55 PM

மௌனி,
உங்களுக்கு இந்த குழப்ப நிலை என்றால் நம்ப முடியவில்லை. மனம் தான் அனைத்துக்கும் காரணம் அதைத் திடமாக வைத்திருங்கள். நெகட்டிவ் சிந்தனைகளை எடுத்துக் களையுங்கள், பாசிட்டிவ்வாக சிந்தியுங்கள், எல்லாம் நல்லபடியாக முடியும் என நம்புவோம்.

நீங்கள் நமது தளத்தின் நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவர், உங்களுக்கு இல்லாத அனுமதியா! எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லுங்கள், ஒருவேளை ஏதும் பிரச்சனை என்றால் இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் "போராளி" மௌனி, அனைத்து நோய்களையும் வென்று வெற்றியுடன் வருவீர்கள். கவலை வேண்டாம். உங்களை நாங்கள் உற்சாகமாக பார்க்க விரும்புகிறோம், அதற்காக படைத்தவனை வேண்டிக் கொள்கிறோம். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.

கடந்த சில காலமாகவே நான் உடல் நிலை குறைவில் இருந்தேன். கையை உயர்த்த முடியவில்லை....டைப் அடிக்க முடியவில்லை...இத்தியாதி..இத்தியாதி.

இவைகள் எல்லாவற்றுக்கும் காரணம் சர்க்கரை என்றார்கள். அதை நம்பி எல்லாம் ட்ரீட்மெண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.

2. என் இரு கதைகள் முடிக்கப்படாமல் உள்ளது. யாராவது அதை முடித்து விடுங்கள். என் ஈ-கேஷ் பகிர்ந்து அளிக்கப்படட்டும். அவர்களுக்கு !

3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.

மௌனி

sinna vaaththiyaar 12-11-18 04:10 PM

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தங்கள் உடம்பை கவனித்து,முறையான மருந்துகளை உட்கொள்ளுங்கள்...
தன்னம்பிக்கையே சிறந்த மருந்து..அதை கை விடாதீர்கள்....எங்கள் ஆதரவும்,பிரார்த்தனைகளும்,இறைவன் அருளும் உங்களுக்கு எப்போதும் உண்டு....

மீண்டு(ம்) வர வாழ்த்துகள் நண்பரே!!

bedroom_salak 12-11-18 04:40 PM

மௌனி அவர்களே.. உங்களால் இதிலிருந்து விரைவில் விடுபட்டு, உங்களின் நார்மல் வாழ்வு பல காலம் தொடரும்.. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
இதுவும் கடந்து போகும்..

vjagan 12-11-18 05:51 PM

விரைவிலேயே உடல்நலம் சீரடைந்து பழைய நிலைக்க்கு திரும்பி வர பிரார்த்திக்கிறேன்!

APPAS 12-11-18 07:46 PM

எல்லாம் கடந்து போகும் ..நம்பிக்கையை விடாதீர்கள்
எல்லாம் வல்ல இறைவன் என்றும் துனை இருப்பான் ....மீண்டு மீண்டும் வற காத்திருப்போம்

NamiXXX 12-11-18 10:20 PM

மௌனி அவர்களே .. நவீன மருத்துவத்தில் எதுவும் சாத்தியம் .. மனம் தளர வேண்டாம் ..

JM 12-11-18 10:25 PM

மௌனி....முக்குறியோனின் ஆலோசனையும்..... சின்ன வாத்தியரின் ஆலோசனையும், சற்று செவிமெடுங்கள்..... சரியானபடி யோசித்து நல்ல மருத்துவரை நாடுங்கள்..... இறையருளால் கண்டிப்பாக குணமாகும்....! (ஏனோ தெரியவில்லை .... வெகு நாளைக்கு பிறகு லோகத்திற்கு வந்தாலும், இந்த திரியை தாண்டி என்னால் செல்ல முடியவில்லை.....)

ஸ்திரிலோலன் 12-11-18 11:06 PM

நண்பரே.. மனதைத் தளர விடாதீர்கள். கேன்சரை வென்ற ஏராளமான பேர்களை நாம் அறிவோம். அவ்வரிசையில் நீங்களும் நிச்சயம் வருவீர்கள். மருத்துவர் ஆலோசனையை ஏற்று சற்று ஓய்வெடுத்து, தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றியுடன் திரும்பி வருவீர்கள். அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

kaamalogan 15-11-18 10:13 AM

தாங்கள் நலமடைய என் பிரார்த்தனைகள். மீண்டும் இந்த லோகத்தில் நீங்கள் நெடு காலம் உலா வர விரும்புகிறேன்.

gemini 15-11-18 02:00 PM

வாசிக்கவே மனது கஸ்ட்மா இருக்கு.
நீங்கள் பூரண குணம் அடைந்து, உங்கள் வாழ்க்கை மீண்டும் வழமை நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறோம்.

nana2003 15-11-18 02:23 PM

மௌனி விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

smartman 15-11-18 02:47 PM

உங்கள் நலனில் அக்கறைகொண்ட பல நல் உள்ளங்கள் இங்கே இருக்கின்றன. என்னுடைய உறவினர் மற்றும் நண்பர்கள் சிலரும் புற்றுநோயுடன் போராடி மீண்டதைக் கண்ணால் பார்த்திருக்கிறேன். உங்களால் முடியும். போராடி வென்று வருவீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

நலம் பெற்று திரும்ப விரைவில் வாருங்கள் மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு T20 கதையாடலாம்.

உங்களை எங்கள் பிரார்த்தனையில் தினமும் வைத்துக்கொள்ளுகிறோம்.

mouni 16-11-18 09:29 AM

மிகுந்த அக்கறையுடன் ஆறுதலும், அறிவுறையும் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக தலைவருக்கு நன்றி.

உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பலமும், நம்பிக்கையும் தருகிறது.

உங்கள் பிராத்தனையுடன் பிரயாணிக்கிறேன்,

நன்றி வணக்கம்,
மௌனி

jaya6 02-12-18 02:32 PM

அன்பு ஆசிரியர் நட்புக்குரிய நண்பர் திரு(மதி):மௌனி அவர்களுக்கு.......!

காலையில் என் நண்பரும் தொழில் அதிபருமான மரியாதைக்குரிய திரு:"ராசு" அவர்களுக்கு போன் செய்த போது தங்களின் உடல்நிலை பற்றி அவர் சொன்னபோது ரொம்ப வேதனைப் பட்டேன்.உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்...என் இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய் விட்டன என்பதும் டயாலிசிஸ் மூலம் ஏதோ குத்து உயிரும் குலை உயிருமாக தினமும் (டயாலிசிஸ்க்கு அப்புறம் ) தாங்க முடியாத உடல் வேதையுடன் நாட்களை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.குவைத்தில் நான் சம்பாதித்தது எல்லாம் கரைந்து விட்டன....
நான் மனம் நொறுங்கும் போது எல்லாம் திரு:"ராசு" அவர்களிடமும் திரு:"TDR" மும் போனில் பேசுவேன் .ஆறுதல் கிடைக்கும் "I KNOW MY DAYS ARE BEING NUMBERED." என் கதை கிடக்கட்டும் விடுங்கள்...நான் இப்போ ரொம்ப மனம் வருத்தப் பட்டது தங்களின் உடல் நிலை அறிந்த போது தான்...தைரியமாய் இருங்கள் ...உங்கள் எழுத்துக்களால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருத்தன் உங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடுவேன்...நீங்கள் சீக்கிரம் முழு நலம் பெறுவீர்கள்....என் நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டு இடது கை விரல்கள் செயல் இழந்து விட்டன...இருப்பினும் ஒரே கையால் தட்டு தடுமாறி தட்டச்சு செய்து பின்னூட்டம் இட்டு வருகிறேன்..நீங்களும் முடிந்த வரையில் அப்போதைக்கு அப்போது லோகத்தில் உலா வாருங்கள்...உங்களுக்கு ஆறுதலாக திரு:'ராசு" அவர்களும் மற்றும் உங்கள் செய்திக்கு பின்னூட்டம் இட்டு ஆறுதல் சொல்லி இருக்கும் என் சகலோக நண்பர்களும் இருக்கிறோம்...தைரியமாக இருங்கள் "துணிவே துணை"

நட்புடன்
உங்களுக்காக கர்த்தரை மன்றாடும்
"Jaya6"
("Ramjee786")
(ramjee786@gmail.com)

niceguyinindia 02-12-18 07:05 PM

Quote:

Originally Posted by jaya6 (Post 1461507)

என்ன நண்பரே நீங்களும் ஒரு குண்டை தூக்கி போடுகிறீர்கள் .. ஆம் காமம் என்பதை தாண்டி நட்பு பாலமும் லோகத்தில் ஒரு இணைப்பை உருவாக்கி இருக்கிறது .. நீங்களும் மீண்டு வருவீர்கள்

oolvathiyar 05-12-18 03:44 PM

மௌனியின் கேன்சர் பிரச்சனை பெரிதாகம் கட்டுக்குள் வந்து விரைவில் குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன். மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி அதை பற்றி அதிகம் அலட்டிக்காம கவனத்தை வேறு பக்கம் வைத்திருங்கள், அதுவும் குனமடைய வலு சேர்க்கும்.

Quote:

Originally Posted by jaya6 (Post 1461507)
"I KNOW MY DAYS ARE BEING NUMBERED."

அப்படி நீங்களாக முடிவு செய்யாதீங்க, கண்டுக்காம இருங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்.
மனை உழைச்சல் இல்லாமல் கடவுளை பிராத்திக்கிறேன்

tamilnanban 06-12-18 04:42 PM

மெளனி அவர்களே
இந்த நிலையில் தான் நீங்கள் இன்னும் மன தைரியமாக இருக்க வேண்டும்..

எனக்கு தெரிந்து நிறைய பேர் இதிலிருந்து குணமாகி வெளியே வந்துள்ளார்கள்..

உங்கள் மன தைரியம் மட்டும் தான் இதற்கான சிறந்த மருந்து..

நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டி கொள்கிறேன்

msvasan 06-12-18 05:36 PM

எப்போது உங்களுக்கு கேன்சர் என்று நீங்க வெளியில் சொன்ன பின்னர் அதனை நீங்க வென்றுவிட்டிங்க , கவலைய விடுங்க எது வந்தாலும் பார்த்து விடுவேம், கேன்சரை நினைத்து பயம் வேண்டாம், பயம் தாம் நன்மை கொன்றுவிடும் பயம் வேண்டாம், வாழ்க்கை ஒரு போர்க்களம் , அதை வாழ்ந்து தான் பார்க்கனனும்
போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா

ramjiram 07-12-18 02:04 AM

மனதை வேதனைப்படுத்திய செய்தி! இன்றைய முன்னேறிய மருத்துவ முறைகளில் சிறிது கால போராட்டத்திற்குப் பிறகு அருமையான உடல் நிலை மீண்டும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

madan 09-12-18 02:23 AM

மௌனி மற்றும் jaya6 அவர்களுக்காக பிராத்திக்கிறேன். பெருமாள் அருளால் இருவரும் மீண்டு வருவீர்கள். எல்லோரும் சொல்வது போல, தைரியம் மருந்து. அதையே யோசித்து கொண்டு இருக்காதீர்கள். அருகில் யாரையாவது வைத்து கொள்ளுங்கள். தனிமையில் இருந்தால் மனம் ரொம்ப சஞ்சலம் ஆகும். அனைவருடன் பழகுங்கள். வெளியே செல்லுங்கள். எல்லோரிடமும் உங்கள் உடல்நலத்தை பற்றி பேசாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தைரியம் சொல்வதாக நினைத்து அதை இன்னும் பெருசு ஆக்குவார்கள். விரைவில் குணம் அடைவீர்கள்.

selvenselvi 09-12-18 10:30 AM

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

நாம் ஆழ்மன எண்ண​​மே நம் வாழ்வி​னை ​பெரும்பாலும் வழிநடத்தும்.. அவசியம் ​நோயிலிருந்து மீண்டு நலம் ​பெற்று வருவீர்கள்..

udhayasuriyan 10-12-18 01:16 AM

எனக்கு தெரிந்து எல்லாவற்றையும் இப்பொழுது கேன்சர் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.. தற்போது சகலை மீண்டு வந்து இருக்கிறார்.. வயது ஐம்பதுக்கும் கீழ்... ஆனால் என் தந்தை வயது அதிகம் அதே நேரத்தில் ரொம்ப முற்றிய நிலை அதுவும் நுரையீரல் ... நண்பருக்கு ஒன்று மட்டும் சொல்வேன்... நான் இறந்திருந்தால் இந்நேரம் 12 வருடங்கள் ஆகி இருக்கும்.. இதய நோய்.... அதற்கப்புறம் உடலுறவு இருக்க கூடாதென்று சொன்னார்கள்.. கொஞ்ச நாள் தவிர்த்தேன்.. அதற்கப்புறம் அட போடா என்று தூக்கி விட்டு சாதாரண வாஸ்க்கை வாழ்கிறேன்.. அதற்கப்புறம் தான் வெளிநாடும் சென்றேன்... பிரச்சினைகள் எனக்கு இருக்கு இருந்தாலும் பரவாயில்லை... மனது சந்தோஷமாக வாழுங்கள்.. சொல்வது எளிது.... எனக்கும் இது புரிகிறது... நன்றாக வருவீர்கள் என்று நம்புகிறேன்...

udhayasuriyan 10-12-18 01:21 AM

mouni and jaya6
நல்லவை நடக்கட்டும்

sreeram 10-12-18 01:33 AM

அன்புள்ள மெளனி,

என் கதைகளுக்கு நீங்கள் எழுதிய விமர்சனங்கள் என்னை வெகுவாய் ஊக்குவித்தது நிஜம். நாம் இருவரும் இணைந்து கதை எழுத வேண்டும் என லோகத்தில் சில வாசகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நாமும் ஒரு புதிய அறிவியல் கலந்த காமக் கதை எழுதுவதாய் திட்டம் இட்டு இருந்தோம். நேரம் காலம் தக்க சூழல் கைகூடி வராமல் போய்விட்டது. நான் என் பணியில் பிசி. நீங்கள் கனடாவில் உங்கள் வேலையில் பிசியாக இருந்தீர்கள்.

காலம் எவ்வளவோ மாற்றியது. புரட்டியடித்தது.

சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் சர்க்கரை நோயால் துன்புறுகின்றீர்கள் என்ற பதிவினைப் படித்தேன். இப்பொழுதெல்லாம் சர்க்கரை நோயை வெகு எளிதாக வென்றுவிட அதிகமான மருத்துவ அறிவியலும் உணவு முறைகளும் வந்திருப்பதால் மருத்துவர்களின் துணையுடன் எளிதாக கையாள்வீர்கள் என நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று கேன்சர் என்று சொல்கின்றீர்கள்.

திரைப்பட நடிகை கெளதமி கூட ஒரு முறை கேன்சரிலிருந்து மீண்டு வந்ததாக எங்கோ படித்த நினைவு.

எனவே நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள்.

நாங்கள் அனைவரும் உங்களுடன் உறுதுணையாக தோள் கொடுத்து நிற்போம். கண்டிப்பாக மீண்டு வருவீர்கள் !

டிஸ்கி: நீங்கள் ஒரு முறை என்னை, “ஸ்ரீராமுக்கு நல்ல பெண் மனைவியாய் அமைவாள்” என வாழ்த்தினீர்கள். இன்னமும் திருமணம் ஆகாத அதே அக்மார்க் கன்னிப் பையனாய் வலம் வருகின்றேன்.

eros 12-12-18 10:31 PM

என் மனைவிக்கும் கான்சர் என்றுதான் சொல்லி இருக்கிறார் டாக்டர். கவலைபட வேண்டாம், இப்பொழுது உள்ள மருந்துகள் நல்ல குணம் அளிக்கிறது, பெரும்பாலோருக்கு சரியாகி விடுகிறது என்றும் சொன்னார். நீங்களும் நிச்சயம் குணம் அடைவீர்கள்.

Thiru Raj 13-12-18 01:59 AM

எண்ணமே வாழ்க்கை.

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

தங்களின் இந்த எண்ணமே தங்களை நீண்ட காலம் வாழ வைக்கும்.

- ராஜ் -

bright 13-12-18 10:56 AM

அன்பரே,
இங்கே குறிப்பிட்ட இடத்த்தில் தங்களுக்கு உகந்த மருத்துவம் கிடைக்கின்றது
.
தயவு செய்து முயற்சி செய்யவும்.
கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும் 27 நாட்களுக்கு மருந்து விலை 400 ரூபாய் மட்டும் நோயளிகள் செல்லவேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருந்து யார் வேண்டும் என்றலும் போகலாம்.
Address. Vaidya Narayanamurthy
Narasipura Village
Sagar Taluk.
Shivamogga District
Karnataka India
காஞ்சிபுரத்தில் இருந்து 690 கிலோமீட்டர்
காரில் செல்பவர்கள் வழி
Hosur. Bengaluru Tumakuru Chitradurga Harihar Narasipura
பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்கள்
Hosur Bangalore Shivamogga Ananthapuram Narasipura
வேலை நாட்கள். வியாயன் ஞாயிரறு காலை 6
குறிப்பு.
தயவு செய்து இதை அனைவருக்கும் தெரியபடுத்தவும்
மேலும் விவரம் அறிய
Mahalakshmi Travels Kanchipuram
9944228213

baalan 14-12-18 12:34 PM

அதிர்ச்சியான ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள் மௌனி… ஒரு பக்கம் வருத்தமாக இருப்பினும், இந்த சோதனையான வேளையில் இந்த கேன்சர் நோயை வென்று மீண்டும் இத்தளத்தில் நீங்கள் வலம் வர அந்த இறைவனை இறைஞ்சுகிறேன்… பிரார்த்தனைகளுடன், பாலன்

kay 15-12-18 11:15 PM

மிகவும் வருந்துகிறேன்! மௌனி அவர்களும் ஜயா6 அவர்களும் உடல்நலம் சரியாக இல்லாமல் இருப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன்! இருவரும் பூரண குணம் அடைந்து நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

apdiya 16-12-18 12:34 PM

படித்ததும் மனது கனமாக இருப்பது போல உணர்கிறேன்.

விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்

மனம் தளரவேண்டாம்.

வந்தியத்தேவன் 20-12-18 10:22 PM

மனம் தளர வேண்டாம் மௌனி..

இறைவனும் தன்னம்பிக்கையும் துணையிருக்க வெகு விரைவில் மீண்டு வருவீர்கள்..

மீண்டும் வருவீர்கள்...

காத்திருக்கிறோம்..

MANJU_4U 22-12-18 07:07 PM

அதிர்சசி செய்தி..ஆனால் மனம் குன்றாமல் இருந்தால் எந்த நோய் நொடியையும் எதிர்க்க முடியும்.நம் நண்பர்களின் பிரார்த்தனை மற்றும் எதிர்பார்ப்புக்களை மீறி ஒன்றும் நடந்து விடாது.
உற்சாகத்துடன் வருவதை எதித்து நின்று ஜெயுங்கள்.
அதுதான் வெற்றி...நண்பர் குணம்பெற இறைவனை வேண்டுகிரோம்..

காமாசாமா 25-12-18 10:53 AM

நீங்கள் மீண்டு வர வழ்த்துகள். நிச்சயம் சுகமாக வருவீர்கள்.

tamilmaaran 03-01-19 11:08 AM

மெளனி கேன்சருக்கு மருந்து இருக்கிறது. கர் நாடகாவில் கிடைக்கிறது. கோவைப்பக்கம் கிடைக்கிறது. இந்துப்பு பயன்படுத்த ஆரம்பியுங்கள். கடவுள் சக்தி உங்களிடம் இருந்து நோயை அடியோடு நீக்கி உதவிடும்.

priyainlove 07-01-19 06:44 PM

தங்கள் உடல் நிலை பூரண குணமடைந்து மீண்டும் உங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். கவலை வேண்டாம்.. மன தைரியதுடன் இருங்கள்.. எல்லாம் சரியாகிவிடும்.

vjagan 07-01-19 06:51 PM

மீண்டும் உற்சாகமாக கதை எழுதும் நண்பருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துகளும்!

mouni 24-02-19 05:13 AM

உடல்நிலை மீண்டும் சரியில்லை. மீண்டும் கீமோதெரபி நாள் குறித்துள்ளார்கள்.

கடுமையான வலியில் எழுத வேண்டி உள்ளது.
பார்க்கலாம் நண்பர்களே....சிறிது ஓய்வுக்குபிறகு!

நன்றி
மௌனி

vjagan 24-02-19 05:36 AM

சகோதரி பூரண நலம் பெற்று வர இறைவனை வழிபடும் vjagan!

niceguyinindia 14-07-19 08:51 AM

நண்பர் மௌனிக்கு என்ன ஆயிற்று யாருக்கேனும் தெரியுமா

taninbaa 16-07-19 09:16 PM

சகோதரி விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

தமிழ் பையன் 20-01-20 06:57 PM

ஐயப்பட வேண்டாம் தோழி நீங்கள் புற்று நோயை வென்று மீண்டும் எழுந்து வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்காக நானும் மற்றும் எல்லா காமலோக சொந்தங்களும் பிராத்தனை செய்வோம். நீங்கள் கடவுளின் கிருபையால் மீண்டும் எழுந்து வருவீர்கள். புற்று நோயை விரட்டி அடித்து விட்டேன். அதை வென்று விட்டேன் என்று ஆனந்தமாக பதிவு பண்ணுவீர்கள் என்று மனதார வேண்டுகிறேன்.

அன்பு 23-01-20 10:35 PM

மௌனி என் நல்ல தோழி,

இந்த திரியை படித்து மனதிற்கு கஷ்டமாகி விட்டது.

கேன்சரை வென்று வா தோழி

mouni 06-04-20 04:58 AM

என் உடல் நிலையை பற்றி கவலைப்பட்டவர்களுக்கு என் உள்ளார்த்தமான நன்றிகள். நன்றி நண்பர்களே!

niceguyinindia 06-04-20 05:05 AM

Quote:

Originally Posted by mouni (Post 1502693)
என் உடல் நிலையை பற்றி கவலைப்பட்டவர்களுக்கு என் உள்ளார்த்தமான நன்றிகள். நன்றி நண்பர்களே!

வாருங்கள் நண்பரே என்ன திடீரென ஆளையே காணோம்

நலமா ?

mouni 06-04-20 05:10 AM

ஓரளவு நலமே....நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நண்பரே!
சௌக்கியமா...
Quote:

Originally Posted by niceguyinindia (Post 1502696)
Quote:

Originally Posted by mouni (Post 1502693)
என் உடல் நிலையை பற்றி கவலைப்பட்டவர்களுக்கு என் உள்ளார்த்தமான நன்றிகள். நன்றி நண்பர்களே!

வாருங்கள் நண்பரே என்ன திடீரென ஆளையே காணோம்

நலமா ?

smartman 06-04-20 11:27 AM

மீண்டும் வந்திருக்கிறீர்கள்! மீண்டு வந்திருக்கிறீர்கள்!!

மகிழ்ச்சி!!!

வாருங்கள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பவும் பலமாக உங்கள் பங்களிப்பைத் தாருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ராசு 06-04-20 11:45 AM

வெகு நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் மெளனியவர்களை இங்கே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் எழுத்தார்வம் போற்றத் தக்கது ! தங்கள் உடல் நிலையையும் கவனித்து கொண்டு நேரம் கிடைக்கும் போது உங்கள் கதைகளையும் இங்கே வழங்கும்ம் படி கேட்டுக் கொள்கிரேன்.

tamilplus 06-04-20 10:44 PM

மீண்டும் நல்வரவு மௌனி அவர்களே...
உடல்நிலையை தொடர்ந்து நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடியுங்கள். சத்தான உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.
இந்த முறை இடைவெளியின்றி தொடர்ந்து பங்களியுங்கள்.
வாழ்த்துக்கள்.

mouni 07-04-20 04:23 AM

ஸ்மார்ட் நலமா? பல நாட்களாகி விட்டது! தொடர்பில் இருக்கவும்.

Quote:

Originally Posted by smartman (Post 1502739)
மீண்டும் வந்திருக்கிறீர்கள்! மீண்டு வந்திருக்கிறீர்கள்!!

மகிழ்ச்சி!!!

வாருங்கள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பவும் பலமாக உங்கள் பங்களிப்பைத் தாருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அண்ணா, உங்களை மீண்டும் இங்கே சந்திப்பதில் மிகவும் ககிழ்ச்சி....அதற்கு காரணம் நீங்களே. உங்களுக்கு மீண்டும் நன்றி. உங்கள் அன்புக்கு நன்றி.
மௌனி

Quote:

Originally Posted by ராசு (Post 1502741)
வெகு நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் மெளனியவர்களை இங்கே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் எழுத்தார்வம் போற்றத் தக்கது ! தங்கள் உடல் நிலையையும் கவனித்து கொண்டு நேரம் கிடைக்கும் போது உங்கள் கதைகளையும் இங்கே வழங்கும்ம் படி கேட்டுக் கொள்கிரேன்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்...நலமா!அன்பான உங்கள் விசாரிப்புக்கு, அன்புக்கு நன்றி

மௌனி

Quote:

Originally Posted by tamilplus (Post 1502860)
மீண்டும் நல்வரவு மௌனி அவர்களே...
உடல்நிலையை தொடர்ந்து நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடியுங்கள். சத்தான உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.
இந்த முறை இடைவெளியின்றி தொடர்ந்து பங்களியுங்கள்.
வாழ்த்துக்கள்.

spy 07-04-20 09:08 AM

உங்களை மீண்டும் தளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

niceguyinindia 20-06-20 01:38 AM

Quote:

Originally Posted by mouni (Post 1502697)
ஓரளவு நலமே....நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நண்பரே!
சௌக்கியமா...
Quote:

Originally Posted by niceguyinindia (Post 1502696)
Quote:

Originally Posted by mouni (Post 1502693)
என் உடல் நிலையை பற்றி கவலைப்பட்டவர்களுக்கு என் உள்ளார்த்தமான நன்றிகள். நன்றி நண்பர்களே!

வாருங்கள் நண்பரே என்ன திடீரென ஆளையே காணோம்

நலமா ?

நான் நலம் நண்பரே .. மீண்டும் ஆக்டிவாக எங்களுக்காக கதைகளை கொடுத்து மகிழ்விக்க வேண்டுகிறேன் ..

serakumar 06-07-20 11:30 PM

உங்கள்ரசிகன். தொடர்ந்து பங்களியுங்கள். வாழ்த்துக்கள் முழு நலம் பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன்

mmkarnan 07-07-20 08:41 PM

அன்பு நண்பர் மௌனி அவர்களே, எங்களைப் போன்று எழுதத் துவங்கும் பலருக்கு உங்கள் எழுத்து தான் ஆதர்சம். நீங்கள் கடவுள் அருளால் பரிபூரண உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க எனது பிரார்த்தனைகளும். வாழ்த்துக்களும்.

mouni 14-05-21 07:19 AM

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. இரண்டாவது கீமோ கொடுத்தால்தான் குணமாகும் என்று சொல்லி விட்டார்கள். அதனால், சில நாட்களுக்கு என்னால் இந்த பக்கம் வர முடியாது என்று நினைக்கிறேன். நான் மீண்டு(ம்) வந்ததும் என் கதைகள் முடிக்கப்படும்.

என் சொந்தங்கள் நீங்களே....உங்கள் பிராத்தனையும், அன்பும்தான் என்னை மீண்டு(ம்) வர வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்,

மௌனி

ASTK 14-05-21 07:52 AM

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் நிலை நலமாக இருந்தால் தான் மற்ற வேலைகளில் முழு அர்பணிப்போடு ஈடுபட முடியும். உங்கள் உடல் நிலையை முதலில் கவனியுங்கள். குணமான பின் கதைகளைத் தாருங்கள்.

விரைவில் மௌனி பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

வரிப்புலி 14-05-21 09:45 AM

என் ஃபேசரைட் எழுத்தாளர்களில் ஒருவரான மௌனி அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து முன்போல் வலம் வர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

Mauran 14-05-21 10:40 AM

என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் ! முதலில் உங்களது உடல் நிலைமைகளை கவனியுங்கள் ! உங்களது உடல் மறுபடியும் குணமாகி நீங்கள் காமலோகத்தில் உங்கள் பங்களிப்புகளை தந்து சிறப்பிக்க பிரார்த்திக்கிறோம்.

niceguyinindia 03-06-21 12:48 AM

Quote:

Originally Posted by mouni (Post 1538265)
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. இரண்டாவது கீமோ கொடுத்தால்தான் குணமாகும் என்று சொல்லி விட்டார்கள். அதனால், சில நாட்களுக்கு என்னால் இந்த பக்கம் வர முடியாது என்று நினைக்கிறேன். நான் மீண்டு(ம்) வந்ததும் என் கதைகள் முடிக்கப்படும்.

என் சொந்தங்கள் நீங்களே....உங்கள் பிராத்தனையும், அன்பும்தான் என்னை மீண்டு(ம்) வர வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்,

மௌனி

RIP நம் விண்ணுலக பிரதிநிதி :cry::cry::cry:

இந்த பதிவை நான் இன்று தான் பார்க்கிறேன் .. முன்னாடியே பார்த்து இருந்தால் ஒரு சில வார்த்தைகளை அவருக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி இருக்க முடியுமோ என மனம் கனக்கிறது ..

MOHANPLUS 18-08-21 10:00 PM

இவர்கள் இறந்ததை நம்பவே முடியவில்லை
இவர்களின் தன்னம்பிக்கைக்கு நிகர் இவர்களைத் தான் சொல்ல முடியும்.
இவர் எழுதிய சில கதைகளைப் படித்த எனக்கே மனசு வலிக்கிறதே இவரிடம் பழகிய நண்பர்களுக்கு எப்படி இருக்கும்?
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Renuka 21-08-21 10:29 PM

RIP... உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பலம் வர பிரார்த்தனை.

Hayath 23-08-21 12:25 AM

மெளனி மறைந்து விட்டாரா ?! நம்ப முடியவில்லை,,,,நம்மையும் அறியாமல் கண்கள் கலங்குகின்றது. RIP Mouni

baxsu 01-12-21 10:15 PM

என் ஆழ்ந்த அனுதாபங்கள். சோகம் நெஞ்சை அடைக்கிறது. எத்தனையோ அற்புதமான படைப்புக்களை கொடுத்த மௌனி இன்று நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன். சான்றோர்களுக்கு மன வலிமை கிடைக்க பிராத்திக்கிறேன்.

RIP

rook 22-07-22 01:18 AM

சகோதரி, மௌனி அவர்களின் படைப்புக்கள், காமலோகம் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம், லோகத்தில் இவர் பதித்து இருக்கும் கதைகள் பட்டியல் அம்ம்..மா எத்தனை.

அதை படித்து அதன் நுனுக்கங்கள் அறிந்து கொள்ள ஆசையாய் உள்ளது.

படத்தி கடை காட்சி கண்கலங்க வைப்பது போலே நண்பர் இறுதி பதிப்பும், அவர் மறைவும் மனசுக்கு பெரும் பாரமாகவே உள்ளது.
அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன்.

வாழ்க, நண்பர் பதிவும், அவர் தொண்டும், பரவட்டும் அவர் கதைகள் லோகம் முழுவதும்.

Suryatamil 22-07-22 09:35 AM

நான் புதியவன், எனக்கு மெளனியின் கதைகள் எதுவும் தெரியாது. இருந்தாலும் இந்த திரியில் சொல்வதைப் பார்த்தால் நல்ல கதாசிரியர்னு தோணுது. அவரின் இழப்பு காமலோகத்துக்கு பேரிழப்புதான்./

RIP மெளனி

Killermiller 03-05-23 11:36 PM

இவரின் கதைகள் இவர் எழுதியது என்று தெரியாமலே படித்துள்ளேன்.... உண்மையில் இவர் ஒரு நல்ல உதாரணம்....
இத்தனை ஆண்டுகள் இந்த லோகத்தில் வராமல் இருந்து விட்டோமே என்று எண்ணி கவலைகொள்ள... இவரும் ஒரு காரணம்....

மௌனி மறைந்தாலும்... லோகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்....

All times are GMT +5.5. The time now is 10:45 AM.

Powered by Kamalogam members