காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   கதைகளில் "இ" என்ற எழுத்து தெரிவதில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=35058)

shrividya_22 15-04-07 02:19 PM

கதைகளில் "இ" என்ற எழுத்து தெரிவதில்லை
 
நண்பர்களுக்கு வணக்கம்.

நான் கொஞ்ச நாட்களுக்கு முன் வைத்திருந்த சில கதைகளை இப்போது திறந்து பார்த்தால் கதையில் வரும் "இ" என்ற எழுத்து தெரிவதில்லை.

என்ன காரணமாக இருக்கும் ?

யாராவது கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.

நன்றி.

வித்யா

asho 15-04-07 02:36 PM

பொத்தம் பொதுவாக கூறினால் பதிலளிப்பது இயலாத காரியம்.

நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு முன் வைத்திருந்த சில கதைகளை என்றால் இங்கே பதிந்த உங்கள் கதைகளை இப்போது பிரவுசரில் பார்க்கையிலா அல்லது நீங்கள் இங்கிருந்து காப்பி செய்து உங்கள் கணினியில் சேமித்து வைத்த பைல்களா?

இ எழுத்து மட்டும் தெரியவில்லையா அல்லது மற்ற வேறு எழுத்துக்களும் மாறியிருக்கிறதா? இ என்ற எழுத்து தெரியவில்லை என்றால் அது என்ன எழுத்தாக தெரிகிறது.

சமீபத்தில் OS (Operating system) அல்லது ஏதாவது மென்பொருள் புதிதாக அல்லது மேம்படுத்தி பதிந்தீர்களா? வேறு கணினி மூலம் படிக்க முடிகிறதா என்று முயன்று பார்த்தீர்களா?

நான் சொன்ன வழி தவிர வேறு வழிமுறை ஏதாவது முயன்று பார்த்தீர்களா,

சற்று கூடுதல் தகவலோடு கேள்வி கேளுங்கள் நண்பர்களே, பதில் சொல்பவரை பல வழிகளில் யோசிக்க வைத்து சிரமப்படுத்தாதீர்கள்.

நீங்கள் இங்கு பதிந்தவைகளில் உங்கள் கதைகளில் உள்ள எழுத்துக்கள் (குறிப்பாக இ) இங்கு என்னால் நன்றாக பார்க்க முடிகிறது.

xxxGuy 15-04-07 02:55 PM

நிச்சயம் அவை நமது யாகூ குழு கதைகளாக இருக்க வாய்ப்புள்ளது.

அப்போது நாம் "திஸ்கி v1.6" எழுதுருவை உபயோகித்தோம். அவற்றை InternetExplorer உலாவியில் திறந்தால் 'இ' தெரியாது (also all Microsoft programs). ஆனால் Netscape-ல் திறந்தால் 'இ' ஒழுங்காக தெரியும். இந்த பிரச்சனை பிறகு திஸ்கி v1.7-ல் களையப் பட்டது. அப்போது தான் குழுவில் இருந்து காமலோகத்திற்கு தாவினோம்.

இப்போது உள்ள TSCu_Paranar, TSCu_Avarangal போன்ற எழுத்துருக்கள் திஸ்கி எழுத்துருவையும் யூனிகோட் எழுத்துருவையும் படிக்க முடியும், ஆனால் அவை திஸ்கி 1.7 மட்டுமே, திஸ்கி 1.6 அல்ல.

அனைத்து திஸ்கி 1.7 எழுத்துருக்களும் TSC__ என்று துவங்கும், திஸ்கி 1.6 எழுத்துருக்கள் அனைத்து __TSC என்று முடியும். அதனால், திஸ்கி 1.6 எழுத்துருக்கள் கொண்டு படிக்க முடியும்.

shrividya_22 15-04-07 03:17 PM

நண்பர் ஆஷோ அவர்களுக்கும் நிர்வாகி அவர்களுக்கும் நன்றி.

நமது xxxGuy சொன்னது போல் இது நம்முடைய பழைய குழுக்கதைகள் தான்.

இந்த .mrt கதைகளை முன்பு உபயோகித்த முரசு அஞ்சல் என்கிற மென்பொருளை என் கணணியில் இப்போது மீண்டும் லோட் செய்து படிக்க முயற்சித்தேன்.

xxxGuy அவர்கள் திஸ்கி V1.7, V1.6 பற்றி கூறுவது எனக்கு புரிகிறது. முரசு அஞ்சலில் "Character set" -ஐ மாற்றிப்பார்த்தேன். இருந்தும் "இ" எழுத்து தெரியவில்லை.

உதாரணம்:
"இந்த" என்று தெரியவேண்டிய வார்த்தை "ந்த" என்று தெரிகிறது.

உதவியை எதிர்பார்க்கும்,

வித்யா

xxxGuy 16-06-07 12:31 PM

Quote:

Originally Posted by shrividya_22 (Post 519801)
முரசு அஞ்சலில் "Character set" -ஐ மாற்றிப்பார்த்தேன். இருந்தும் "இ" எழுத்து தெரியவில்லை.

உதாரணம்:
"இந்த" என்று தெரியவேண்டிய வார்த்தை "ந்த" என்று தெரிகிறது.

உதவியை எதிர்பார்க்கும்,

வித்யா

Character Set-ஐ மாற்றினால் போதாது. இதற்கு முரசு அஞ்சலிலேயே Converter வசதி கொடுத்துள்ளார்கள் அதை உபயோகித்து Tscii 1.6 to Tscii 1.7-க்கு மாற்ற வேண்டும்.

waaraan70 19-07-07 03:24 PM

உங்கள் உதவிக்கு நன்றி

bronze 21-06-08 12:34 PM

Quote:

இதற்கு முரசு அஞ்சலிலேயே Converter வசதி கொடுத்துள்ளார்கள் அதை உபயோகித்து Tscii 1.6 to Tscii 1.7-க்கு மாற்ற வேண்டும்.
அப்படியா? இது தெரியாமல் நான் ஒவ்வொரு 'இ'யையும் விரட்டிப் பிடித்துத் அடித்துக் கொண்டிருந்தேன்.:D


All times are GMT +5.5. The time now is 07:41 PM.

Powered by Kamalogam members