காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   (ல ள ழ), பிழைகள் இல்லாமல் பயன்படுத்த சில குறிப்புக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=74212)

rojaraja 29-12-20 05:54 PM

(ல ள ழ), பிழைகள் இல்லாமல் பயன்படுத்த சில குறிப்புக்கள்
 
(ல ள ழ), எப்படி ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் வார்த்தைகளில் பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்

அவற்றின் பெயர்களை பார்ப்போம்

ல - ஒற்றல் லகரம் (இதை சின்ன "ல" என்றும் சொல்வதும் உண்டு)
ள - பொது அல்லது வருடல் ளகரம் (இதை பெரிய "ள" என்றும் சொல்வதும் உண்டு)
ழ - சிறப்பு ழகரம்

இந்த எழுத்துக்கள் பயன்படுத்த அதன் உச்சரிப்பை சரியாக தெரிந்து இருந்தால் அதை பயன்படுத்துவது எளிது. "ல" தனி லகரம் நாக்கின் நுனி வைத்து உச்சரிக்கவேண்டும், "ள" - பொது ளகரம் லேசாக நாக்கை கொஞ்சமாக பின்னுக்கு வளைத்து உச்சரிக்கவேண்டும், ழ - சிறப்பு ழகரம் நாவை நன்றாக பின்னுக்கு வளைத்து உச்சரிக்கவேண்டும் இவ்வாறு பழகி கொண்டால் அதன் பயன்பாடு வரும் சொற்கள் உச்சரித்து நாம் சரியான "ல ள ழ" எழுத்துகளை பயன்படுத்திவிடலாம்

சில குறிப்புக்கள் வைத்து பிழைகளை தவிர்க்கலாம், முதலில் "ள" பற்றி பார்ப்போம்
ள - அதிகம் பன்மையை குறிக்கும் சொல்லோடு தொடர்புடையது, பெண்பால் குறிக்கும் சொற்கள் மற்றும் அதிகம் "கள்" என்று வரக்கூடிய சொற்கள்
ஊ.த: ஆடுகள், மாடுகள், வாருங்கள், அவள், இவள், வருகிறாள், பார்த்தாள்

ழ - பெரும்பாலும் "ள"வா என்ற சந்தேகம் வரும் இது "ள" வை காட்டிலும் கொஞ்சம் நீட்டி ஒலிக்ககூடியது இது பெரும்பாலும் உச்சரித்து மற்றும் சொல்லின் பொருள் கொண்டு திருத்திக்கொள்ளவேண்டும்

ல - பொதுவாக ஆல், யில், லாம், லை, லும் (in, if, may, by, but ) என்று வரக்கூடிய சொற்களோடு தொடர்புடையது, மேலே கொடுக்கப்பட்ட இரு குறிப்புக்குள் அடங்காத வார்த்தைகள் இதில் அடங்கும்.

ஆல் (என்றால், if) - ஊ.த: வந்தால் -> வந்து + ஆல், நின்றால் -> நின்று + ஆல்
யில் (உள்ளே, in) - ஊ.த: மேஜையில் ->மேஜை + யில் , பையில் -> பை + யில்
லாம் (கூடும் may) - ஊ.த: வந்துயிருக்கலாம், சென்றிருக்கலாம்
லை (கொண்டு, by) - பாலை கொண்டு,
லும் (ஆனாலும் , but) - பாலினாலும்
க்கு (ஆக, for) - பாலுக்கு மாற்றாக

ஒற்று ஏழுத்து "ள்ள" "ல்ல" ஒரே எழுத்தாக தான் வரும் இது கலந்து வராது

சிறப்பு ழகரம் "ழ" எழுத்து ஒற்று எழுத்தாக வராது

ASTK 29-12-20 06:34 PM

உபயோகமான தகவல் இதைப் பதிவிட்டதற்கு நன்றிகளும் பாராட்டுகளும்!

rojaraja 30-12-20 01:47 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1528677)
உபயோகமான தகவல் இதைப் பதிவிட்டதற்கு நன்றிகளும் பாராட்டுகளும்!

நன்றி நண்பரே,

உங்கள் பாராட்டு உத்வேகத்தை கொடுக்கிறது, மேலும் ர, ற சரியாக எழுத குறிப்புக்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறேன் விரைவில் அதையும் எழுதி பதிக்கிறேன்

vjagan 30-12-20 05:00 PM

செம்மையான பாதையில் வழி காட்டும் பதிவு மிகவும் இலவசமாக படைத்து வெளியிட்ட அந்தப் பொல்லாத நண்பருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!

rojaraja 01-01-21 02:22 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1528747)
செம்மையான பாதையில் வழி காட்டும் பதிவு மிகவும் இலவசமாக படைத்து வெளியிட்ட அந்தப் பொல்லாத நண்பருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!

நன்றி நண்பரே, உங்கள் பாராட்டுகள் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது!

NamiXXX 20-08-22 08:07 PM

மிகவும் பயனுள்ள தகவல், தமிழை பிழை இன்றி
எழுத இது நிச்சயம் உதவும்
இதைப் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி!

rook 21-08-22 07:15 AM

நான் எழுதும் பல கதைகளுக்கும், நீங்கள் மேலே குறிப்பிட்ட பிழைகள் அதிகம் வருவதுண்டு . ஆகையால்
புதிதாய் மற்றும் பழைய உறுப்பிர்களுக்கும் உங்கள் தகவல் மிகவும் உதவியாய் இருக்கும் நண்பா. நன்றி.


All times are GMT +5.5. The time now is 12:54 AM.

Powered by Kamalogam members